இதர மொழிகளில் உள்ள ஸ்லோகங்கள் - "ஸ்துதிகள்" தமிழ் எழுத்தில்

ஸ்துதிகள் : பொருளடக்கம்ஹனுமான் சாலீஸா
ஸ்ரீ துளசிதாஸர் எழுதியருளியது. ஸ்ரீ ஆஞ்சநேய ஸ்வாமியின் பெருமையை, மஹிமையை நாற்பது ஈரடியில் அனுபவித்து படைத்துள்ளார். இது வெறும் ஸ்துதி அன்று. மாபெரும் 'ஸித்த க்ரந்தம்'. ஸ்ரீமத் இராமாயணம் மாபெரும் காவியம், இதிகாஸம். இராமாயணத்தைப் படிப்பதின் பலன் யாவரும் அறிந்த ஒன்று. இதை முழுவதும் எளியவரும் படிக்க முடியும் வகையில் 'ராம சரித்ர மானஸ்' என்ற காவியத்தை படைத்தவர் இவர். இன்றும் வடநாட்டில் இது பலரால் படிக்கப் பட்டு வருகிறது. ஸ்ரீதுளசிதாஸர் ஸ்ரீ ஆஞ்சநேய ஸ்வாமியின் உபாஸகர்.

ஹனுமான் சங்கட மோட்சன அஷ்டகம்
ஸ்ரீ துளசிதாஸர் எழுதியருளியது. ஹனுமான் சாலீஸா படித்தவுடன் சங்கடங்களை போக்கும் இந்த அஷ்டகத்தையும் படிப்பது வடநாட்டில் வழக்கத்தில் உள்ளது.

பீமரூபி
ஸ்ரீ ஆஞ்சநேய ஸ்வாமியின் அவதாரமான ஸ்ரீ ஸமர்த்த ராமதாஸர் அவர்களால் இயற்றப்பட்டது இந்த ஸ்துதி. மஹான் ஸ்ரீ ஸமர்த்த ராமதாஸர் அவர்களைப் பற்றி ஸ்ரீ காஞ்சி ஸ்ரீஸ்ரீபரமாச்சாரியார் கூறியதை நம் கட்டுரை பகுதியில் காண்க. அம் மஹான் 'த்ரயோதஸாக்ஷரி' என்ற 'ஸ்ரீ ராம் ஜயராம் ஜய ஜய ராம்' என்கின்ற மஹா மந்த்ரத்தை இவ்வுலகுக்கு அளித்தவர்.

பஜ்ரங் பாண்
ஸ்ரீ ஆஞ்சநேய ஸ்வாமியின் வஜ்ரங்க அம்பு. இந்த ஸ்துதியில் பீஜ மந்திரங்கள் உள்ளன. சரியான உச்சரிப்புடன் கூறப்படுமானால் வாழ்வில் எல்லா தடைகளையும் வெற்றி கொள்ள முடியும்.

ஸ்ரீ ஆஞ்ஜநேய சூர்ணிகா
பத்ராசலத்தில் ஸ்ரீராமருடைய ஆலயத்தை புதிப்பித்து, கடைசியில் கைகளில் சாமரங்கள் ஏந்தி ஸ்ரீ பத்ராசல ராமதாஸர் ஹநுமானை இக்கத்யத்தினால் பணிந்தார்:

ஸ்ரீ ஆஞ்ஜநேய தண்டகம்
ஸ்ரீ ஆஞ்சநேய தண்டகம் - தெலுங்கு மொழியில் ஸ்ரீ ஹநுமானை பற்றிய வர்ணனையுடன் கூடிய பணிவுறை:ஆஞ்சநேய ஸ்வாமி புகழ் வாழ்க.

காற்று ஈன்ற காவியமே எம்மை காத்தருள்வாய்
நம்பினோம் நாவரசை நாங்களே