home-vayusutha: ஸ்லோகம் கோவில்கள் கட்டுரைகள்
    மின்னஞ்சல் விருந்தினர் ஏடு
boat

வாயு சுத:          வாயுசுத: என்ற வலைத்தளத்தின் சுயசரிதை


வாயுசுத: என்ற வலைத்தளத்தின் சுயசரிதை

நடந்தது வந்த பாதை - பகுதி- ஒன்று

[பதிப்பு: செப்டம்பர் 2012(ஆங்) ஜூலை 2020 (தமிழ்)]


தளத்தின் ஸ்கிரீன் ஷாட் - வாயுசுத:-தமிழ் ஜியோசிட்டீஸ் [Geocities] 1994 இல் தொடங்கியது. இந்த இணையதள சேவை முதல் மாபெரும் சமூக வலைப்பின்னல் தளம் ஆகும், இது 27.10.2009 அன்று மூடப்படும் வரை இது உலகின் மிக முக்கியமான வலைத்தளங்களில் ஒன்றாக இருந்தது. இதில் பதிக்கப்பட்ட பல பக்கங்கள் தரமானதாகவும் தனித்துவமானதுமாக இருந்தன, பல விஞ்ஞான ஆதாரங்கள் அல்லது பெரும் பொது நலன் கொண்டவைகளாக இருந்தன. அவற்றில் பல வரலாற்று ரீதியாக சுவாரஸ்யமானவை ஆகும் 1990 களின் வலைத்தள கலாச்சாரம் மற்றும் பாணியைக் குறிக்கும் அறிய உதவியது.

ஆகஸ்ட் 2000 முதல் அக்டோபர் 2009 வரை எங்கள் ஜியோசிட்டீஸ் வலைத் தளத்தில் எங்கள் பக்கங்களை இலவசமாக வழங்கிய யாஹூவுக்கு வாயுசுத: நன்றியை தெரிவித்துக் கொள்ளுகிறது.

சுவாரஸ்யமாக இணைய பயனர்கள் வழங்கிய பல தமிழ் வலைப்பக்கங்கள் ஜியோசிட்டிகளில் இருந்தன. தமிழ் வலைப்பக்கங்கள் எண்ணிக்கையில், வடிவமைப்பின் தரம், அடங்கிய பொருளின் தரம் என்று எல்லா பரிமாணங்களிலும் வளரத் தொடங்கியது. தமிழ் இணைய பக்கங்கள் டாக்டர் கல்யாணராமனின் பங்களிப்பான ASCII வடிவமைப்பை அடிப்படையாகக் கொண்ட "மயிலை" என்னும் எழுத்துருவை உபயோகித்து தான் வளர்ந்தன.

அப்போதுதான் எங்கள் தமிழ் பக்கங்களை “http://geocities.com/ vhayusudha” இல் 27.08.2000 அன்று மயிலை எழுத்துருவைப் பயன்படுத்தி தொடங்கினோம். பக்கங்களை சரியாக பார்க்க பார்வையாளர் மயிலை எழுத்துருவைப் பதிவிறக்கம் செய்து கணினியில் நிறுவ வேண்டும். ஒவ்வொரு உலாவிகளும் [browsers] தமிழ் பக்கங்களை வித்யாசமாக காட்டும், ஆதலால் நாம் பக்கங்களை திரும்ப திரும்ப மறுவடிவமைக்க வேண்டி இருந்தது. பிழைகள் அற்ற சோதிக்கப்பட்ட வலை வடிவமைப்பையும், மற்றும் யுனிகோட் எழுத்துருவும் இன்று இலவசமாக பிளாகர்களுக்கு கிடைக்கும் இந்த நாட்களைப் போலல்லாமல் இருந்த நாட்கள் அவை. இது சவாலானது தான்.நடந்தது வந்த பாதை - பகுதி- இரண்டு

[பதிப்பு: அக்டோபர் 2012 (ஆங்) ஆகஸ்ட் 2020 (தமிழ்) ]


தளத்திற்கான விருந்தினர் புத்தகத்தின் ஸ்கிரீன் ஷாட் - வாயுசுத: தமிழில் எங்கள் வலைத்தளம் 27.08.2000 அன்று மயிலை எழுத்துருவைப் பயன்படுத்தி ஸ்ரீ காஞ்சி காமகோட்டி ஸ்ரீ சங்கராச்சாரியார் சுவாமிகலின் ஆசீகளுடன் தமிழ் மொழி தெரிந்த ஸ்ரீ ஹனுமத் பக்தர்களின் விருப்பத்தைப் பூர்த்தி செய்யத் தொடங்கப்பட்டது. தேடுபொறிகள் [search engines] தமிழ் எழுத்துருவை அடையாளம் காண முடியாததால், நாங்கள் மின்னஞ்சல் மூலமாக தொடர்பு கொள்ளக்கூடிய நபர்களும், மேலும் அவர்களின் தொடர்புகளாலும் மட்டுமே எங்களது இந்த தளத்தினை காணமுடிந்தது. இதன் பிறகு தேடுபொறிகளுக்கு வசதியாக ஆங்கிலத்தில் தலைப்பிடப்பட்ட பக்கங்கள், மற்றும் ஆங்கிலத்தில் குறிப்பிடப்பட்ட முக்கிய சொற்கள் கொடுப்பது என ஆரம்பித்தோம். ஆனால் பின்னர் தமிழ் சொற்களை ஆங்கிலத்தில் உச்சரிப்பது சீராக இருப்பதில்லாமல் இருக்கும் குறைபாட்டினை கண்டோம். பின்னும் தேடுபொறி அனைத்து பக்கங்களையும் அறிய, கணிக்க முடியவில்லை. பல பார்வையாளர்களை சென்றடைவதற்கான முன்னேற்றம் மிகவும் மெதுவாக இருந்தது.

அதற்குள் எழுத்துரு மற்றும் ‘எழுத்து வரைபடம்’ தரநிலைப்படுத்தல் மற்றும் இணையத்தில் தமிழ் பக்கங்களை முறையாகப் பார்ப்பதற்கான திட்டங்கள் குறித்து நிறைய பேச்சு இருந்தது. டி.எஸ்.சி.ஐ.ஐ தரமும் திட்டமும் [TSCII standard and scheme] பல தமிழ் இணைய பயனர்கள் மற்றும் தகவல் தொழில்நுட்ப வல்லுநர்களால் இந்த துறையில் பயன்படுத்தப்பட்டது. காட்சி தெளிவாக இல்லை. தமிழக அரசு வேறு ஏதோ ஒரு திட்டத்தை தரப்படுத்த முயன்றது. இந்த திட்டங்களில் உருவாக்கப்படும் இணைய பக்கங்களை காண நீங்கள் எழுத்துருவை கணினியில் நிறுவ வேண்டும்.

எங்கள் இவ்விணைய தளத்தில் ஆங்கிலத்தில் ஒரு பக்கம் இருந்தது, இதில் வெவ்வேறு உலாவிகள் மற்றும் எழுத்துருக்களில் தமிழ் வலைப்பக்கங்களைப் பார்ப்பதற்கான வசதிகளை பற்றி “உதவி” என்ற தலைப்பில் விவரித்திருந்தோம். இது எங்கள் தமிழ் வலைத்தளத்தின் மிகவும் விரும்பப்பட்ட பக்கமாகும். இது அதிகமான தமிழ் பார்வையாளர்களை எவ்வாறு அடைவது என்ற யோசனையை எங்களுக்குக் கொடுத்தது.

மேலும் அதிக ஸ்ரீ ஹனுமத் பக்தர்களை முடிந்தவரை அடைய, 30.11.2000 அன்று எங்கள் வலைப்பக்கங்களின் ஆங்கில பதிப்பை அறிமுகப்படுத்தினோம். இந்த ஆங்கில பக்கங்களின் மூலம் ஒருவர் நம் தமிழ் பக்கங்களுக்குள் செல்ல வசதி செய்தோம். எங்களின் ஆங்கில தளத்திற்கு புதிய முகவரி இருந்தது: http://in.geocities.com/vayusutha ஆகும். யாகூ, அவர்களின் அனைத்து சேவைகளுக்கும் இந்தியாவிலிருந்தே நடத்தத் தொடங்கியதால் இப்புதிய முகவரியில் "in." என்னும் எழுத்துகள் சேர்க்கப்பட்டன.

பின்பு அவ்வருட ஸ்ரீ ஹனுமத் ஜெயந்தியிடமிருந்து ஆங்கில தளம் முழு வடிவத்தில் செயல்படுத்தப் பட்டது. 

ஆஞ்சநேய ஸ்வாமி புகழ் வாழ்க

காற்று ஈன்ற காவியமே எம்மை காத்தருள்வாய்
நம்பினோம் நாவரசை நாங்களே

பல மகான்கள் ஸ்ரீ ஆஞ்சநேயரை, அவரின் வீரத்தை, ஞானத்தை, உறுதிப்பாட்டை, வாக்குவன்மையை, அஞ்சாநெஞ்சத்தை, விழிப்புணர்ச்சியை, ஸ்ரீ இராம பக்தியை பற்றி, கூறியதை 'கட்டுரை'யிலும், பாடி பரவசமானதை 'ஸ்லோக'ங்களிலும், 'துதி'களிலும், 'ஸ்துதி'களிலும், அவர் அருள்பாலிக்கும் க்ஷேத்திரங்களை 'கோயில்'களிலும் தொகுத்து அளித்துள்ளோம்.

நல்வரவு

காற்றின் மகன் - அனுமனின் புகழ் பாடும் இவ்விணைய தளம் தாங்களை எதிர்கொண்டு வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறது. ஆஞ்சநேய ஸ்வாமியின் புகழ் உலக தமிழர்களை சென்றடைய வரும் இணைய தளம்.

ஸ்ரீ ஆஞ்சநேய ஸ்வாமி

அனுமன் வித்தியாசமாக - வேகமாக - முன்னோக்கி சிந்திப்பவர். செயலில் வீரன். வினையத்தின் உச்சம் அவர்

பக்தர்களின் வல்வினை தீர்த்து மங்களம் அனைத்தும் அளிக்கும் அனுமனின் பதம் பணிவோம். பக்தர்களின் துர்சிந்தனைகளையும், தீய செயல்களையும் வேருடன் அறுத்து, அவர் தம் நினைவிலும் சொல்லிலும் செயலிலும் தூய்மை புகட்டுபவர். அவ்வனுமனின் தாள் சரணம்.

+