


ஆஞ்சநேயர், சஞ்சீவி ராயன், ஹனுமந்தன் என்று பல பெயர்களில் பிரபலமான, இராமயண கதாபாத்திரம் இவர். இராமயண கதாநாயகன் இராமனின் செயலில் குறை கண்டவர் உள்ளனர். இராமயணத்தில் குறையில்லா குணமுடையவராக ஆஞ்சநேயரின் கதாபாத்திரத்தை சித்தரித்தவர் வால்மீகி. அதுவும் அவரை குரங்கின் உருவமாக்கி சுந்தரனாக்கியுள்ளார். குரங்கினையும் சுந்தரமாக்கிக் குணத்தின் பேருருவாய்ச் செய்து, அறிவில் பெருங்கடலாய்ச் செய்து, பக்தியின் ப்ரவாகமாய் செய்து அந்த கதாபாத்திரத்திற்குத் தெய்வத்துவம் கொடுத்த வால்மீகியின் கருணை பெரிது. அப்படிப்பட்ட ஸ்ரீஆஞ்சநேய மஹாப்ரபுவின் குணப்ரவாகங்களை பலர் தங்கள் தங்கள் மொழிகளில் கீர்த்தனங்களாகச் செய்துள்ளனர். (கீர்த்தனங்கள் என்பது கீர்த்தியை சொல்லும் பாடல்கள்). முடிந்த வரை அவைகளை தொகுத்து இவ்விணைய தளத்தில் கொடுக்க முயற்சி செய்துள்ளோம்.
ஸம்ஸ்கிருத மொழியில் உள்ள அனுமனின் கீர்த்தியை சொல்லும் பாடல்களை 'ஸ்லோகங்கள்' என்ற தலைப்பில் தொகுத்து கொடுத்துள்ளோம்.
தமிழ் மொழியில் உள்ள அனுமனின் கீர்த்தியை சொல்லும் பாடல்களை 'துதிகள்' என்ற தலைப்பில் தொகுத்து கொடுத்துள்ளோம்.
இதர மொழிகளில் உள்ள அனுமனின் கீர்த்தியை சொல்லும் பாடல்களை 'ஸ்துதிகள்' என்ற தலைப்பில் தொகுத்து கொடுத்துள்ளோம்.
பல மகான்கள் ஸ்ரீ ஆஞ்சநேயரின் வீரத்தை, ஞானத்தை, உறுதிப்பாட்டை, ஸ்ரீ இராம பக்தியை பற்றி, கூறியதை 'கட்டுரைகள்' என்ற தலைப்பில் தொகுத்துள்ளோம்.
ஒரு காலகட்டத்தில் பக்தி மார்க்கம் - பகவானை துதிப்பதின் மூலமே அவனின் திருவருளை பெறமுடியும் என்ற நம்பிக்கை பெருகியது. பிரதேச மொழிகளில் பகவானின் கீர்த்திகளை பல மகான்கள் பாடினார்கள். ஞான தேவர், துகாராம், ஏகநாதர், நாமதேவர் தெற்கில் வியாஸராஜா, புரந்தரதாஸர், கனகதாஸர் முதலியவர்கள் தங்கள் பக்திப்பாடல்களால் மக்களை கவர்ந்தனர். மக்கள் பக்தி மார்க்கம் - பாகவத தர்மம் என்றும் கூறுவர் - நடைமுறையில் கடைப்பிடித்தனர்.
இப்படி பக்தி மார்க்கத்தில் திளைத்த மக்களுக்கு, வடக்கில் ஸ்ரீ துளஸிதாஸர், மேற்கில் ஸமர்த்த ஸ்ரீ ராமதாஸர், தென்மேற்கிலும் தெற்கிலும் ஸ்ரீ வியாஸராஜா இவர்களின் செல்வாக்கினால், ஸ்ரீ ஆஞ்சநேயர் மீது பக்தி அதிகமாயிற்று. பண்டை காலம் முதல் ஸ்ரீ ஆஞ்சநேய ஸ்வாமிக்கு என்றே பல தனி கோயில்கள் இருந்து வருகிறது. அன்றைய சூழ்நிலைக்கு ஏற்ப மக்களுக்கு தைரியமும் விழிப்புணர்ச்சியும் ஊட்ட ஸ்ரீ ஆஞ்சநேய வழிபாட்டினை இவர்களின் காலகட்டத்தில் பெருக்கினார்கள். பக்தி மார்க்கம் நிலைத்துவிட்ட இக்கட்டத்தில் ஸ்ரீஆஞ்சநேயருக்கு என்றே பல கோயில்கள் கட்டப்பட்டன. இன்றும் பல தனி கோயில்கள் கட்டப்படுகின்றன.
பழமையான ஆஞ்சநேயர் திருக்கோயில் பற்றிய தலவரலாறு, இருப்பிடம் என்று அனைத்து விவரங்கள்
ஸ்ரீ ஆஞ்சநேயர் ஆலயங்களில் நடைபெறும் விழாக்கள் குறித்த தகவல்கள்; நமது இணைய தளத்தில் - இதுவரையிலான சேர்க்கைகள் விவரம்.
வாயுசுத: என்ற வலைத்தளத்தின் சுயசரிதை - இந்த கால் நூற்றாண்டு காலத்தில் நாங்கள் கடந்து வந்த பாதை
எங்கள் பதிப்பகம் - நாங்கள் ஸ்ரீ ஆஞ்சநேயரை மய்யப்படுத்தி வெளியிட்டுள்ள நூல்களின் விவரங்கள்
எங்கள் ஆங்கில இணைய தளத்தில் கட்டுரைகள், கோயில் விவரங்கள், ஜீகே கௌசிக் வரைந்த சித்திரங்கள் என்று பல விவரங்கள்
எங்கள் ஹிந்தி இணைய தளத்தில் கட்டுரைகள், கோயில் விவரங்கள், ஹிந்தி சாகித்தியங்கள் என்று பல விவரங்கள்
எங்கள் இணைய தளங்களைப் பற்றிய தாங்களின் மேன்மையான கருத்துகளைப் பதிக்க அழைக்கிறோம்