home-vayusutha: ஸ்லோகம் கோவில்கள் கட்டுரைகள்
boat

ஶ்ரீ பிரதாப வீர ஹனுமார் [மூலை ஆஞ்சநேயர்] கோயில், தஞ்சாவூர், தமிழ்நாடு

ஜீகே கௌசிக்


தஞ்சாவூர்**

தென்னிந்தியாவின் நெற்களஞ்சியம் என்றழைக்கப்படும் காவேரியின் டெல்டா பகுதியிலுள்ள தஞ்சாவூர் தமிழகத்தின் கலாசார பெட்டகம் என்றும் அழைக்கப்படுகிறது. சோழர்களுக்கும், கில்ஜிக்கும், தில்லி சுல்தானுக்கும், நாயகர்களுக்கும், மராட்டியர்களுக்கும் அரசியல் தலைநகராம இருந்திருக்கிறது. மாற்றார்களின் ஆட்சியாலும், படையிடுப்பாலும், உள் குழப்பங்களினாலும் தஞ்சையில் கலாசாரம் அழியாமல் இருந்தது அம்மண்ணின் மக்களை பெருமையை பறைசாற்றுகிறது. சோழர்களின் காலத்தில் வர்த்தகமும், கலாசாரமும் உச்சியில் இருந்தது குறிப்பிட தக்கது.

தஞ்சாவூர் பெயர் காரணம்

தஞ்சன் என்னும் அரக்கன் சிவனின் வரம் பெற்று அகங்காரத்தில் இருந்தான். அவ்வரக்கனின் ஆணவம் அடக்க சிவன் [தஞ்சபுரீஸ்வரர்] ஶ்ரீநீலமேக பெருமாளை தஞ்சனை அழிக்க அழைத்தார். பெருமாளும் தஞ்சனை அழித்தார், அரக்கனின் வேண்டுகோளுக்கு இணங்கி இவ்வூருக்கு ’தஞ்சாவூர்’ என பெயர் வந்தது.

தஞ்சாவூர் மராட்டியர்களும் ஶ்ரீ ஆஞ்சநேயரும்

விஜயநகர சாம்ராஜ்ய பற்றுடனிருந்த தஞ்சை நாயகர்களுக்கும் மதுரை நாயகர்களுக்கும் பகமையிருந்தது, மதுரை அழகிரியிடமிருந்து தஞ்சையை மராட்டியர்கள் வெங்கோஜி [அ] எக்கோஜி கைபற்றினர்கள்.

விஜயநகர சாம்ராஜ்ய பற்றுடனிருந்த தஞ்சை நாயகர்கள் ஶ்ரீ வியாசராஜரின் தாக்கத்தினால் ஆஞ்சநேயர் பக்தர்களாக இருந்தனர். தஞ்சையை மராட்டியர்கள் ஶ்ரீ சமர்த்த ராமதாஸின் தாககத்தினால் ஆஞ்சநேயர் பக்தர்களாக இருந்தனர். இவ்விரு பரம்பரைகளின் ஆட்சி காலத்தில் ஶ்ரீ ஆஞ்சநேயருக்கு தஞ்சையிலும், சுற்றும் பல கோயில்கள் கட்டப்பட்டன. *** பங்க் ஆஞ்சநேயர் கோயில், ஶ்ரீ ஜய வீர ஆஞ்சநேயர்-புன்னைநல்லூர், பாவாசாமி அக்ரஹாரம், புது அக்ரஹாரம் என பல கோயில்களை பார்த்துள்ளோம்.

ஶ்ரீ பிரதாப சிம்மனும் ஶ்ரீதுளஜா 2வும்

1739முதல் 1763 வரை தஞ்சாவூர் பிரதாப சிம்மனும் பின் அவரது மகன் இரண்டாம் துளஜா அட்சியிலிருந்தது. ஆர்காடு நவாபிடமிருந்து தொல்லைகள் அதிகமிருந்த காலமிது. இருந்தும் பிரதாப சிம்மன் தஞ்சாவூரை விரிவு படுத்துவதின் கவனமாக இருந்தான். தனது ஆட்சியின் கீழிருந்த இடங்களிலிருந்த கோயில்களை புனரமைப்பதும், புதிய கோயில்கள், சத்திரங்கள் கட்டுவதும் நற்காரியங்கள் பல நடத்தி வந்தான். அவர்களுக்கு ஶ்ரீ சேதுபாவா என்பவர் குருவாக இருந்தார். மதங்களுக்கு அபாற்பட்டு சமூகத்தை முதற்மை படுத்தி நாகூர் தர்காவில் ஸ்தூபி, மெலட்டூர் பாகவத மேளா போன்ற பல நற்காரியங்கள் செய்தார்கள்.

ஶ்ரீ அனுமாருக்கு கோயில்
பிரதாப வீர அனுமார் [அ] மூலை ஆஞ்சநேயர் கோயில்

ஶ்ரீ பிரதாப வீர ஹனுமார் [மூலை ஆஞ்சநேயர்] கோயில், தஞ்சாவூர், தமிழ்நாடு பிரதாப சிம்மன் தனது குரு ஶ்ரீ சேது பாவா ஸ்வாமிகளின் அருளாசியுடன் தஞ்சாவூரில் அனுமாருக்காக தனி கோயில் கட்டினார். சாதாரணமாக அனுமாருக்கு கோயில்கள் சிறிதாக இருக்கும், கொடி மரமோ அல்லது இராஜ கோபுரமோ இருப்பதில்லை. இவைகளுக்கு விதிவிலக்காக அமைந்தது இக்கோயில். இக்கோயிலுக்கு மூன்றடுக்கு இராஜகோபுரம், கொடிமரம் உண்டு, மற்றும் பதினெட்டு தூண்கள் கொண்ட அலங்கார மண்டபமும் உண்டு. இது இரண்டாவதாக கட்டப்பட்ட பெரியா தனி அனுமார் கோயில் என்று சொல்லலாம். ****அய்யன்குளம், காஞ்சிபுரத்திலுள்ள ஶ்ரீசஞ்சீவிராயர் கோயில் இதற்கு முன் கட்டப்பட்ட அனுமாருக்கான தனிக்கோயில். பிரதாப சிம்மனால் கட்டப்பட்ட இக்கோயிலில் மூலவருக்கு ’ஶ்ரீ பிரதாப வீர ஹனுமார்’ என்பது பெயராகும். ஆனாலும் ’மூலை ஆஞ்சநேயர்" என்று தான் பிரபலம்.

ஶ்ரீ பிரதாப வீர ஹனுமார் கோயிலின் தனித்துவம்

அன்றைய தஞ்சாவூரின் வட-மேற்கு மூலையில் திட்டமிட்டு அழகாக கட்டப்பட்ட கோயிலிது. வாஸ்து சாத்திரத்தில் வட-மேற்கு கோணத்தை ’வாயுமூலை’ என்பார்கள். வாயுவின் மைந்தன் [வாயுசுதா] ஶ்ரீஆஞ்சநேயருக்கு வட-மேற்கில் கோயில் கட்டுவது பொருத்தமே. இதனால் இக்கோயிலுக்கு மூலை ஆஞ்சநேயர் கோயில் என்று பெயர் வந்தது.

ஜாதகத்தில் உள்ள முறையில் பன்னிரண்டு ராசி கட்டங்கள் அலங்கார மண்டபத்தின் மேற்கூறையில் உள்புறமாக கொடுக்கப்பட்டுள்ளது. அதற்கு நேர் கீழே பன்னிரண்டு ராசி கட்டங்கள் உள்ளன. மேற்கூறையில் உள்ள கட்டங்களில் ராசியாதிகளின் சின்னங்கள் உள்ளன. கீழே கட்டங்களில் ராசிகள் அதற்குறிய வர்ணங்கள் உள்ளது. பக்தர்கள் தங்களுக்கு உரிய ராசிகட்டத்தில் நின்று ஶ்ரீமூலை ஆஞ்சநேயரை பார்த்த வண்ணம் தங்கள் கோரிக்கைகளை சமர்பித்தால், அனுமார் அவைகளை அளித்து அருளுவார் என்பது தின்னமான நம்பிக்கை.

ஶ்ரீஆஞ்சநேயரின் சிறுவயது அனுபத்தை நினைவுருத்தும் வகையில் மேற்கூறையில் ராகு சூரியனை பிடிக்க போகும் காட்சி காண்பிக்கப்பட்டுள்ளது.

தூண்ணில் இரண்டு நாகங்கள் சிவனை வழிபடுவது போலும், வடக்கு சுவரில் இருசிறிய பிறைகளில் யோக ஆஞ்சநேயர் மலைமீது இருப்பது போல் சிலை. மலையில் மரங்களும், மிருகங்களும் காண்பிக்கப் பட்டுள்ளது. யோக ஆஞ்சநேயரின் நான்கு திருகரங்களில் சங்கு, சக்கரம், அபய முத்திரை, வரதமுத்திரை அலங்கரிக்கிறது. வீர பிரதாப சிம்மன் ஒரு யோக ஆஞ்சநேயரையும், மற்றதை அவர் மகன் இரண்டாம் துளஜா துதிப்பது போலுள்ளது. வடக்கு நோக்கியிருக்கும் யோக ஆஞ்சநேயரை துதிப்பதால் சித்திகள் பெறலாம் என்பது தின்னம்.

சரித்திர சூழல்

சனாதன தர்மத்தை சேர்ந்த கோயில்களின் விக்ரகங்களும் ஆபரணங்களும் சூறையாடப்பட்ட கால கட்டத்தில், அந்தந்த கோயில் பக்தர்கள் உத்ஸவ மூர்த்திகளை பாதுகாப்பான இடங்களுக்கு எடுத்து சென்றார்கள். இடம் மாறினாலும் பூஜைகள் அம்மூர்த்திகளுக்கு தினமும் நடத்தப்பட்டது. விஜயநகர சாம்ராஜ்யத்தின் வீழ்ச்சிக்கு பிறகு தென்னிந்தியாவில் சனாதன தர்மத்தை சேர்ந்த மன்னர்கள் மிகவும் குறைவாகவே இருந்தனர். அப்படிப்பட்ட காலகட்டத்தில் தஞ்சாவூர் மராட்டியர்கள் ஆட்சியில் இருந்தது.

இப்படி கொண்டு வரப்பட்ட பல கோயில்களின் உத்ஸவ மூர்த்திகளுக்கு உடையார் பாளயம் சிவன் கோயிலிலும், பெருமாள் கோயிலிலும் புகலிடமாயிற்று. இப்படி காஞ்சிபுரத்திலிருந்து ஶ்ரீகாமாட்சி கோயில் உத்ஸவ மூர்த்தி பங்காரு காமாட்சியும் உடையார் பாளயம் வந்து சேர்ந்தாள். அச்சமயம் உடையார் பாளயம் தஞ்சாவூர் ஆட்சிக்கு [பிரதாப சிம்மன்} உட்பட்டிருந்தது.

ஶ்ரீ ஶ்ரீ காஞ்சி காமகோடி பீடம் கொந்தளிக்கும் காஞ்சியிலிருந்து உடையார் பாளயம் மாறியது. தஞ்சாவூர் மன்னர் பிரதாப சிம்மன் காஞ்சி மடத்தினை தஞ்சாவூருக்கு மாற்றிக் கொள்ள விண்ணப்பித்தான். மன்னரின் விருப்பத்தை ஏற்று, 62வது பீடாதிபதியாக இருந்த ஶ்ரீசந்திர சேகர ஸ்வாமிகள் [நான்காவது] காவேரி ஆற்றங்கரையில் கும்பகோணத்தை மாற்றிக்கொண்டார்கள். ஶ்ரீ பங்காரு காமாட்சி தஞ்சாவூருக்கு பயணித்தாள். பிரதாப சிம்மன் ஶ்ரீகாமாட்சியை இராஜ உபசாரத்துடன் தஞ்சையில் வரவேற்றார். பிரதாப வீர ஆஞ்சநேயர் கோயிலில் முதலில் அம்பாள் வந்து இறங்கினாள். சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான சியாமா சாஸ்த்ரிகளால் அழியா புகழப்பெற்ற பங்காரு காமாட்சிக்கு, பின்பு தனிக்கோயில் இரண்டாம் துளஜாவால் கட்டப்பட்டது. இன்றும் ஶ்ரீபங்காரு காமாட்சியின் மகோத்ஸவத்தின் போது பிரதாப வீர ஆஞ்சநேயர் கோயிலில் இருந்து ஆரம்பிகிறது.

ஶ்ரீ சேதுபாவா ஸ்வாமிகள் அறிவுறையின் பெயரில் கட்டப்பட்ட இக்கோயில் அவரால் அங்கீகரிக்கப்பட்ட முறையில் பூஜைகள் செய்யப்பட்டு வந்தன. தற்போது வைகாஸன ஆகம விதியின் படி பூஜைகள் செய்யப்படுகிறது.

ஶ்ரீ பிரதாப வீர ஹனுமார்

ஶ்ரீ பிரதாப வீர ஹனுமார் [ஆஞ்சநேயர்] பிடைப்பு சிலையாக கிழக்கு நோக்கியுள்ளார். ஶ்ரீ ஆஞ்சநேயர் வடக்கு நோக்கி நடப்பது போலுள்ளார். தூக்கியிருக்கும் வலது திருகரங்களால் அபய முத்திரையால் பக்தர்களை அருள் புரிகிறார். தனது பொன்னான கண்களால் பக்தர்களுக்கு தன்னம்பிக்கையும், முயற்சியில் வெற்றியும் அள்ளி தருகிறார்.

                ** தஞ்சாவூர், அரண்மனை, கோட்டை பற்றிய விவரம் அறிய "பங்க் ஆஞ்சநேயர்" பக்கம் பார்க்கவும்
                *** பங்க் ஆஞ்சநேயர், புன்னைநல்லூர்-ஜய வீர ஆஞ்சநேயர்,
                      திருவையாரு-பாவாஸ்வாமி அக்ரஹாரம், புது அக்ரஹாரம்- தாஸ ஆஞ்சநேயர் பக்கங்கள் பார்க்கவும்
               ****காஞ்சிபுரம்-ஐயன்குளம் சஞ்சீவிராயன் கோயில் பக்கங்கள் பார்க்கவும்

 

திருக்கோயில் இருப்பிடம் :     "மூலை ஆஞ்சநேயர் கோயில், தஞ்சாவூர்"

 

அனுபவம்
அடுத்த முறை தஞ்சாவூர் சென்று இவ்வழகிய கோயிலை கண்டு வீரத்தையும் பிரதாபத்தையும் அள்ளி வழங்கும் அனுமாரிடமிருந்து அள்ளி வாருங்கள். தன்னம்பிக்கை பெருகட்டும், வெற்றிகள் கிட்டடும்.

தமிழாக்கம் :திருமதி. ஸ்ரீமதி
முதல் பதிப்பு: பிப்ரவரி 2016
திருத்தப்பட்ட பதிப்பு: செப்டம்பர் 2020


 

 

ஆஞ்சநேய ஸ்வாமி புகழ் வாழ்க

காற்று ஈன்ற காவியமே எம்மை காத்தருள்வாய்
நம்பினோம் நாவரசை நாங்களே
+