home-vayusutha: ஸ்லோகம் கோவில்கள் கட்டுரைகள்
boat

ஶ்ரீ வீர விஜய அபய ஆஞ்சநேய சுவாமி திருக்கோயில், டி.பி. பாளையம், குடியாத்தம், வேலூர், தமிழ் நாடு


ஶ்ரீ வீர விஜய அபய ஆஞ்சநேய சுவாமி திருக்கோயில், டி.பி. பாளையம், குடியாத்தம், வேலூர், தமிழ் நாடு

ஶ்ரீ வி.பி.நரசிம்ம குப்தா, வேலூர்


தட்சன பாதபாளையம்

ஶ்ரீ வீர விஜய அபய ஆஞ்சநேய சுவாமி திருக்கோயில் :: டி.பி. பாளையம் :: குடியாத்தம் :: வேலூர் :: தமிழ் நாடு. விடுமுறை நாட்களில் தட்சன பாதபாளயத்திலுள்ள ஹனுமார் கோயிலுக்கு போவது என்பதில் எங்களுக்கு மிகவும் விருப்பம். டி.பி. பாளையம்என்று தான் வேலூரில் இது பிரபலம். எனது கல்லூரி நாட்களிலிருந்து சுமார் பதினைந்து ஆண்டுகளாக இந்த கோயிலுக்கு சென்று வருகிறேன். வேலூரிலிருந்து பரதராமி வழியாக டி.பி.பாளையம்அடைய சுமார் ஒரு மணி நேரமாகும். வேலூரிலிருந்து பரதராமிக்கு செல்ல பஸ் வசதி உள்ளது. அங்கிருந்து ஆட்டோவோ அல்லது ஸேர் ஆட்டோவிலோ டி.பி.பாளயத்தை அடையலாம். கோயில் அனேகமாக தினம் முழுவதும் திறந்திருக்கும்.

டி.பி.பாளாயம் செல்ல வழி

கிரி வலம், ஶ்ரீ ஆஞ்சநேயர் திருக்கோயில், டி.பி.பாளயம், தமிழ்நாடு வேலூரிலிருந்து மாநில நெடுஞ்சாலையில் பயணிப்பது மிகவும் சுகமாக இருக்கும். சாலையின் இருபக்கங்களிலும் மாந்தோப்புகளும், கோழி பண்ணைகளும், மலைகளும், குன்றுகளும் கண்ணுக்கு விருந்தாக இருக்கும். அதுவும் மழைகாலத்திற்கு பிறகு இந்த பாதையில் பயணிப்பது மிகவும் ரம்யமாக இருக்கும். மலைகளுக்கு நடுவில் அமைக்கப்பட்டுள்ள சாலை என்பதால் மேடும், பள்ளமும் மாரி மாரி வரும் போது மிகவும் நன்றாக இருக்கும். டி.பி.பாளையம்தமிழ்நாட்டில் இருந்தாலும், அண்டை மாநிலமான ஆந்திராவின் சித்தூரை ஒட்டி அமைந்துள்ளது. தாங்களின் உலாபேசி சில சமயம் ஆந்திராவில் உள்ள டாவரின் சிக்லலின் கீழ் வரும் போது ஆந்திரா உங்களை வரவேற்க்கும்.

அன்றய கோயில்

டி.பி.பாளையம்இன்றும் குன்றுகளால் சூழப்பட்டுள்ளது. சுமார் பதினைந்து ஆண்டுகள் முன் நான் முதல் முறை சென்ற பொழுது வானம் பார்த்த ஒரு பாறையில் ஶ்ரீஹனுமார் இருந்தார். பக்தர் வருவதை பார்த்து பூசாரி ஶ்ரீஹனுமாரிடம் வருவார். ஆனால் இன்று உள்ளூர் மக்களின் ஆதரவினாலும், ஹனுமாரின் மற்ற பக்தர்களின் முயற்சியினாலும் மிகவும் அருமையான திருக்கோயில் ஒன்று ஹனுமாருக்கு எழுப்பப்பட்டுள்ளது. பௌர்ணமி அன்று இங்கு வரும் பக்தர்கள் கூட்டம் கூட்டமாக அமைதியாக நாள் முழுவதும் வந்த வண்ணமே இருப்பார்கள். கார்த்திக் பௌர்ணமி அன்று மிகவும் சிறப்பாக ஆண்டின் மகோத்ஸவம் நடைபெருகிறது. வேலூர், சித்தூர், குடியாத்தம் முதலிய இடங்களிலிருந்து பக்தர்கள் அதிகம் வருகிறார்கள். பக்தர்கள் குழு பல்வேறு இடங்களிலிருந்து வந்து கிரி பிரதிக்ஷணம் செய்கிறார்கள்.

கோயில் இன்று

ஶ்ரீ வீர விஜய அபய ஆஞ்சநேய சுவாமி திருக்கோயில் :: டி.பி. பாளையம்:: குடியாத்தம் :: வேலூர் :: தமிழ் நாடு. பிராதன சாலையில் மிக பெரிய நுழைவளைவு தாங்களுக்கு கோயிலுக்கு வழி காட்டும். அங்கு இருந்தே கோயிலின் இராஜ கோபுரத்தினை காணலாம். கிழக்கு நோக்கி அமைந்துள்ள திருக்கோயிலுள்ளே நுழைந்தவுடன் மிகவும் நேர்த்தியான கம்பீரமான விளக்கு தூண் உள்ளது. இவ்விளக்கு தூணின் கீழ் பாகத்தில் ஆஞ்சநேயரின் உருவ சிலை செதுக்கப்பட்டுள்ளது. தூணுக்கு சற்று முன்பாக ஆஞ்சநேயரின் வாகனமான ஒட்டகம் மிகவும் அழகாக அமைக்கப்பட்டுள்ளது. கர்பகிரஹத்தினை நேக்கியவாறு உள்ள ஒட்டகம் அமர்ந்திருப்பது போல் இருந்தாலும், கிளம்ப தயாராக உள்ள மாதரி இருப்பது ஆச்சரியமே. பின் மிக பெரிய மண்டபம். அதற்கு மகுடம் போல் ஶ்ரீஇராம பரிவாரம் சுதை சிற்பமாக அமைக்கப்பட்டுள்ளது. பஞ்சமுக ஹனுமாரும், வீர ஹனுமாரும் இரு பக்கமும் சுதையில் அலங்கரிக்கிறார்கள். இந்த மண்டபத்தின் மேற்கு பக்கம் கர்பகிரஹம் அமைந்துள்ளது. கர்பகிரஹத்தினை சுற்றி வர வசதியாக சுமார் பத்தடி அகலத்தில் பிரகாரம் அமைக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு மூலையில் வலம்புரி வினாயகருக்கான சன்னிதி உள்ளது. வடமேற்கு மூலையில் ஶ்ரீஇராமருக்கான சன்னிதி உள்ளது.

ஶ்ரீ வீர விஜய அபய ஆஞ்சநேய சுவாமி

ஶ்ரீ வீர விஜய அபய ஆஞ்சநேய சுவாமி :: டி.பி. பாளையம்:: குடியாத்தம் :: வேலூர் :: தமிழ் நாடு. குன்றின் ஒரு பகுதி பாறையில் இந்த க்ஷேத்திரத்தின் ஶ்ரீஆஞ்சநேய சுவாமியின் சிலா ரூபம் உள்ளது. அவர் புடைப்பு சிலா வடிவில் அமைந்துள்ளார். தண்டையும் நூபூரமும் அலங்கரிக்கும் அவரது வலது திருப்பாதம் வடக்கு நோக்கி செல்வதுப்போல் இருக்கிறது. தண்டையும் நூபூரமும் அலங்கரிக்கும் அவரது இடது திருபாதம் பூமியிலிருந்து சற்றே தூக்கிய நிலையில் உள்ளது. கங்கணங்கள் அலங்கரிக்கும் அவரது இடது திருகரத்தில் சௌகந்திகா புஷ்பத்தினை வைத்துள்ளார். புஷ்பத்தின் தண்டினை தனது இடுப்பில் உள்ள கையில் பிடித்துள்ளார். புஷ்பம் மேல் வரை ஏறி அவரது இடது தோளுக்கு மேல் தெரிகிறது. அபய முத்திரை காட்டும் அவரது வலது திருக்கரத்தினால் அவர் பக்தர்களுக்கு அபயம் அளித்து ஆசிகள் வழங்குகிறார். அவரது அகண்ட, பரந்த மார்பைனை மாலைகள் அலங்கரிக்கின்றன. வளைந்த நுனியுடன் உள்ள வால் அவரது சிரத்தின் மேல் தெரிகிறது. அடர்ந்து இருக்கும் முடியினை லாவகமாக கட்டி வைத்துள்ளார். காதில் குண்டலம் அவரது காதிற்கு அழகு சேர்க்கிறது. பிரகாசமான கண்களில் காருண்யம் மிளிருகிறது. அவரின் இந்த காருண்யமான கடாக்ஷம் கிடைக்க பக்தர்கள் மனம் நிறைகிறது.

 

திருக்கோயில் இருப்பிடம் :     ஶ்ரீஆஞ்சநேய சுவாமி திருக்கோயில், டி.பி. பாளையம்

 

அனுபவம்
இந்த க்ஷேத்திரத்தில் உள்ள ஶ்ரீஆஞ்சநேயரை தரிசித்தால் நிச்சயமாக பயம் அகலும் [அபய] தைரியம் கூடும் [வீர] வெற்றி கிட்டும் [விஜய] என்பதில் சிறிதேனும் ஐயம் வேண்டாம்.

தமிழாக்கம் :திருமதி. ஸ்ரீமதி
முதல் பதிப்பு: அக்டோபர் 2017
திருத்தப்பட்ட பதிப்பு: செப்டம்பர் 2020


 

 

ஆஞ்சநேய ஸ்வாமி புகழ் வாழ்க

காற்று ஈன்ற காவியமே எம்மை காத்தருள்வாய்
நம்பினோம் நாவரசை நாங்களே
+