ஆலயத்தியூர் பெருங்கோவில் என்று அழைக்கப்படும் ஆஞ்சநேயர் கோயில்


ஆலயத்தியூரில் உள்ள ஆஞ்சநேயர் கோயில் "ஆலயத்தியூர் பெருங்கோவில்" என்று ப்ரபலம்

சரித்திர பிரசித்தமான ஆலயத்தியூர் பெருங்கோவில் என்று அழைக்கப்படும் ஆஞ்சநேயர் கோயில் சுமார் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வசிஷ்ட மாமுனிவரால் பிரதிஷ்டை செய்யப்பட்டதாக பரம்பரையான ஓலைச் சுவடிகள் மூலமாகவும் பெரியோர்கள் சொல் மூலமும் அறியப்படுகிறது.

முன்பு இந்த கோயிலானது நம்பூதிரிகள் பராமரிப்பில் இருந்தது. பின்பு இக் கோயிலின் பராமரிப்பு வெட்டத்து இராஜாவின் கை மாறியது. சில காலங்கள் பின் பராமரிப்பு கோழிக்கோடு (காலிகட்) அரசரின் வசம் மாற்றப்பட்டது. கோயில்கள் பொது உடமை ஆக்கப் பட்ட பின் ஆலயத்தியூர் பெருங்கோவிலின் பராமரிப்பு கேரள அரசின் பொறுப்பில் வந்தது, இப்பொழுதும் அரசின் பொறுப்பில் உள்ளது.

மலப்புறம் ஜில்லா திரூர் தாலுக்காவில் ஆலத்தியூர் கிராமம் உள்ளது. ஆஞ்சநேயர் கோயில் இக்கிராமத்தின் பிரதானமாக உள்ளது.

கோயிலின் பிரதான சன்னதியில் ஸ்ரீராமபிரான் வித்யாசமான முக பாவத்துடன் காணப்படுகிறார், அத்துடன் இல்லாமல் அருகில் ஸ்ரீசீதாபிராட்டியாரையும் காணோம். ஸ்ரீராமன் சீதையில்லாமல் தனி தோற்றத்தில் உள்ளார். சீதையின் பிரிவுக்கு பிறகு சீதையை தேடி செல்ல வானர படை நான்கு திசைகளிலும் அனுப்பப்படுகிறது. தெற்கு நோக்கி செல்லும் படையில் ஸ்ரீராமபிரானின் பக்தனான ஸ்ரீஆஞ்சநேயர் இருந்தார். ஸ்ரீராமபிரான் சீதாதேவியின் அடையாளங்களை ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு எடுத்து சொல்லுகிறார். இந்த இரகசியத்தை எடுத்துரைக்கும் கோலத்தில் அமைந்துள்ளது ஸ்ரீராமபிரானின் விக்கிரக வடிவத்தில், ஸ்ரீராமபிரானின் முக பாவங்கள் இந்த கோயிலில் உள்ளது போல் வேறு எங்கும் காண இயலாது.

ஸ்ரீராமபிரானின் சன்னதியை அடுத்து அமைந்துள்ளது அவருடைய உன்னத பக்தனான ஸ்ரீஆஞ்சநேயரின் சன்னதி. இங்கு ஸ்ரீஆஞ்சநேயரின் வடிவழகு ஸ்ரீராமபிரானின் செயலுக்கு பொருத்தமாக அமைந்துள்ளது. தனது ஆசான் கூறும் மொழிகளை உன்னிப்பாக கேட்கும் வண்ணம் சற்று முன் உந்திய நிலையில் கையில் தடியுடன் நிற்கிறார். முப்பத்தி முக்கோடி தேவர்களின் முழு ஆசியுடன் தெற்கு நோக்கி இலங்கை நேக்கி செல்ல தயார் நிலையில் உள்ளார். ஸ்ரீஆஞ்சநேயர். இக்காட்சியும் வேறு எந்த கோயிலிலும் காணமுடியாத ஒரு அற்புதமான காட்சி.

ஸ்ரீலஷ்மியின் அவதாரமான ஸ்ரீசீதாதேவியை கண்டுபிடித்துவர ஸ்ரீராமபிரான் அனுமானிடம் சீதாதேவியின் கடந்தகால ரகசியம் சொல்லும்போது அதை கேட்காமல் இருப்பதற்காக தம்பி லட்சுமணன் சிறிது தூரம் தள்ளி நிற்பது போல், பிராதான சன்னதியிலிருந்து சற்று தள்ளி லட்சுமணனுக்கு தனி சன்னதி அமைக்கப் பட்டுள்ளது.

முப்பத்தி முக்கோடி தேவர்களின் முழு ஆசியுடன் இலங்கை நேக்கி செல்ல தயார் நிலையில் உள்ளார் ஸ்ரீஆஞ்சநேயரை தவிர இந்த கோயிலில் மற்றுமொரு அற்புதம் உள்ளது. பெரிய மேடை ஒன்றும் அதன் கோடியில் ஒரு நீளமான பாராங்கல் ஒன்றும் உள்ளது. அப்பாராங்கல் கடலை குறிப்பாதவும் மேடையில் ஓடி வந்து பாராங்கல்லில் கால் படாமல் தாண்டினால் அப்பக்த்தனின் ஆயுள் கூடும், ஆரோக்கியமாக இருப்பார் என்பதும் ஐதீகம்.

இந்த புராதனக் கோயில் இப்பொழுது பழுது பார்க்க வேண்டிய நிலையில் உள்ளது. மணபுழா ராமன் நம்பூதரி, பரப்பனகாடி உன்னிகிருஷ்ண பணிக்கர், தானூர் பிரமன் பணிக்கர் ஆகிய புகழ் மிக்க ஜோதிட நிபுணர்கள் பிரசன்னம் மூலம் தெரிவித்துள்ள படி கோயிலை புதிப்பிக்க முடிவு எடுக்கப்பட்டது. வீழப்பரம்ப் பிரம்மதத்தன் நம்பூதிரி, கனிப்பயயூர் உன்னி நம்பூதரி ஆகிய பிரபல ஸ்தபதிகளின் மேற்பார்வையில் புனருத்ராணம் செய்யபட உள்ளது. பக்த ஜனங்கள் முன்னிருந்து இந்த நற்காரியத்தில் பங்கெடுத்து கொண்டு தங்களால் ஆன அன்பளிப்பை சமர்ப்பித்து ஸ்ரீஆஞ்சநேயருடைய அனுகிரகத்தை அடையவும்.


ஆஞ்சநேய ஸ்வாமி புகழ் வாழ்க.

காற்று ஈன்ற காவியமே எம்மை காத்தருள்வாய்
நம்பினோம் நாவரசை நாங்களே