home-vayusutha: ஸ்லோகம் கோவில்கள் கட்டுரைகள்
    மின்னஞ்சல் விருந்தினர் ஏடு
boat

அருள்மிகு கும்பேஸ்வரர் திருக்கோயிலிலும் பொற்றாமரை குளமும், கும்பகோணம், தமிழ் நாடு


ஶ்ரீஆஞ்சநேயர் திருக்கோயில், வடக்குக்கரை, பொற்றாமறை குளம், கும்பகோணம், தமிழ் நாடு

ஜி.கே.கௌசிக்


கும்பகோணம் என்னும் குடந்தை

ஶ்ரீசக்ரபாணி திருக்கோயிலிலும் பொற்றாமரை குளமும், கும்பகோணம், தமிழ் நாடு நமது நம்பிக்கையின் அடிபடையில் உலகம் ஒருகாலத்தில் அழிந்து, மறுபடி உருவாக்கப்படுகிறது. அழிவுக்கு காரணமாக பிரளயம் வரும் என்பதும் நமது நம்பிக்கை. உலகம் அழிந்த பின் பிரம்மா உலகத்தை திரும்பவும் உருவாக்குவார். தற்போதய உலகத்தையும் பிரம்மனே உருவாக்கியுள்ளார். சென்ற பிரளயத்திற்கு [போரழிவு] பின் உலகத்தை உருவாக்குவதற்கு பிரம்மன் ஒவ்வொரு இனத்தின் தாதுக்களை அமிர்தத்துடன் ஒரு கும்பத்தினுள் வைத்திருந்தார். சென்ற பிரளயத்திற்கு முன் கும்பத்தினை பிரளயத்திற்கு பின் பிரம்மாவால் அப்படி பாதுகாக்கப் பட்ட பூர்ண கும்பம், இமையத்திலிருந்து மிதந்து வந்து தற்போதய தமிழ்நாட்டில் ஓர் இடத்தில் நிலையானது. ஜீவன்கள் உருவானது. அப்படி கும்பம் நிலையான இடம் இப்பொழுது கும்பகோணம் என்றும் தமிழில் குடந்தை என்றும் அறியப்படுகிறது.

தல புராணம்

சிவ பெருமாள் வேடனாக வந்து கும்பத்தை அம்பு எய்தி உடைத்தார் என்பது புராணம். அப்படி உடைந்த கும்பத்திலிருந்து வெளியான அமிருதம் தங்கிய இடம் ’மாகாமக குளம்’ என்று அறியப்படுகிறது. பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை மாசிமாதம், மகம் நட்சத்திரம் கூடும் நேரத்தில் இக்குளத்தில் நீராடுவது புண்ணியமாக கருதப்படுகிறது. இந்தியாவின் பல பாகங்களிலிருந்து மக்கள் இவ்வைபவத்திற்கு வருகை தருகின்றனர்.

கும்பம் நிலை பெற்ற இடமும், சிவ பெருமாள் இவ்வுலகம் உருவாக்கி உயிரினங்களை பிரம்மன் படைக்க காரணமான இருந்த இடத்தில் தற்பொழுது ஶ்ரீகும்பேஸ்வரன் கோயில்

சற்றே மாறுதலாக அமிர்தம் மகாமகம் குளத்திலும், பொற்றாமரை குளத்திலும் விழுந்ததாக கூறுவார்கள். பொற்றாமரை குளம் கும்பேஸ்வரன் கோயிலின் முன்னும் சாரங்கபாணி கோயிலின் பின்புறமும் அமைந்துள்ளது. சிவபெருமாளை முக்கிய கடவுளாக பின்பற்றும் சைவர்களும், விஷ்ணுவை முக்கிய கடவுளாக பின்பற்றும் வைணவர்களும் பொற்றாமரை குளத்தினை உரிமை கொண்டாடுவார்கள். இவ்வருமையான பொற்றாமரை குளக்கரையில் ஶ்ரீஆஞ்சநேயருக்கு இரண்டு கோயில்கள் உள்ளன. இக்கோயில்களின் பின்னணி மிகவும் சுவாரஸ்யமானது.

ஶ்ரீ விஜயேந்திர தீர்த்தர் [1490-1592]

ஶ்ரீ விஜயேந்திர தீர்த்தர் ஶ்ரீவியாசராஜர் 732 அனுமார் கோயில்களை கட்டினார் என்பது பலரும் அறிந்த விஷயம். அவரால் சன்யாசம் கொடுக்கப் பெற்றவர் "ஶ்ரீ விஷ்ணு தீர்த்தர்" என்னும் இளம் சன்யாசி. இவர் ஶ்ரீமாத்வாசாரியாரின் வித்யா குருவாகிய ஶ்ரீவிபுதேந்திரதின் மறு அவதாரம் என்பார்கள். அறுபத்துநான்கு கலைகளிலும் வல்லமை படைத்த இவர் தனது ராமேஸ்வரம் யாத்திரையை முடித்துக் கொண்டு திரும்பும் வழியில் கும்பகோணம் வந்தார்.

கும்பகோணம் மடம் அக்காலகட்டத்தில் ஶ்ரீசுரீந்திர தீர்த்தர் தலமையில் இயங்கி வந்தது. த்வைத சித்தாந்தத்தின் உயர்வை நிலைநிறுத்தும் விவாதத்தில் ஈடுபட்டு இருந்தார் ஶ்ரீசுரீந்திர தீர்த்தர். தனது த்வைத கொள்கையின் நிலைபாட்டை விவாதத்தில் அவரால் சற்றே வழுவில்லாமல் விளக்க முடியவில்லை. இறைவனிடம் தனது குறையினை முறையிட்டார். அன்றிரவு அவரின் வேண்டுகோளுக்கு, மறுநாள் புதிய சந்யாசி ஒருவர் வருவார் என்றும், புதியவர் விவாதத்தை தொடரட்டும் என்றும் விடைக்கிடைத்தது.

மறுநாள் ராமேஸ்வரத்தில் இருந்து திரும்பி கொண்டிருந்த ஶ்ரீவிஷ்ணு தீர்த்தர் கும்பகோணம் வந்தடைந்தார். அவரிடம் ஶ்ரீசுரீந்திர தீர்த்தர் தனக்கு இறைவனால் அளிக்கப்பட்ட ஆணையை கூறினார். அதன்படி அன்று ஶ்ரீவிஷ்ணு தீர்த்தர் விவாதத்தினை தொடர்ந்தார். த்வைத சித்தாத்தின் பெருமையையும் உயர்வையும் தெளிவாக எடுத்துறைத்து, விவாதத்தில் வெற்றி பெற்றார். இறைவனால் அனுப்பி வைக்கப்பட்ட ஶ்ரீவிஷ்ணு தீர்த்தர் அவர்களை ’ஶ்ரீவிஜயேந்திரர்’ என்று பட்டத்தினால் ஶ்ரீசுரீந்திர தீர்த்தர் அலங்கரித்தார். அன்று முதல் அவர் ஶ்ரீவிஜயேந்திரர் என்று அழைக்கப்பட்டார்.

ஶ்ரீசுரீந்திர தீர்த்தருக்கு ஶ்ரீவிஜயேந்திரரின் மீது அன்பும், மதிப்பும் அதிகரிக்கவே, கும்பகோணம் மடத்தை நிர்வாகிக்க அவர் தான் தகுதியானவர் என்னும் எண்ணமும் அதிகரித்தது. ஶ்ரீவியாச ராஜரின் சீடரான ஶ்ரீவிஷ்ணு தீர்த்தர் என்னும் ஶ்ரீவிஜயேந்தரை கும்பகோணம் மடத்திற்கு அனுப்ப ஶ்ரீவியாசராஜரிடம் விண்ணப்பித்தார். அவரது அனுமதியுடன் கும்பகோணம் மடத்தினை ஶ்ரீவிஜயேந்திரர் சுமார் ஐம்பது வருட காலம் நிர்வாகித்தார். த்வைத சித்தாந்தத்தை நிலைநிருத்துவதற்கு பெருதவியாக இருந்தார்.

பொற்றாமரை குளத்திற்கு உரிமை

அருள்மிகு கும்பேஸ்வரர் திருக்கோயிலிலும் பொற்றாமரை குளமும், கும்பகோணம், தமிழ் நாடு பொற்றாமரை குளத்திற்கு சைவர்களும், வைணவர்களும் உரிமை கொண்டாடுவார்கள். ஶ்ரீவிஜயேந்த்திரரின் காலத்திலும் இச்சர்ச்சை இருந்து வந்தது. பொற்றாமரை குளம் ஶ்ரீஆதி கும்பேஸ்வரர் கோயிலுக்கு சொந்தமா அல்லது ஶ்ரீசாரங்கபாணி கோயிலுக்கு சொந்தமா என்பதில் சர்ச்சை இருந்தது.

சைவ சிந்தாந்தை பின்பற்றும் ஶ்ரீலிங்க ராஜேந்திரரின் சீடர்கள் குளம் ஆதி கும்பேஸ்வரர் கோயிலுக்கு சொந்தம் என்றும் பல சிவ சின்னங்கள் குளத்தினுள் இருப்பதாகவும் வைணவர்களின் கூற்று தவறு என்றும் வாதாடினார்கள். இவ்வாதத்தினால் ஊரே பரபரப்பானது, சிலர் இப்பக்கமும் சிலர் அப்பக்கமும் தங்களுக்குள் விவாதிக்க தொடங்கினர். ஶ்ரீவிஜயேந்திரரை மத்யஸ்தம் செய்ய பலர் வேண்டினர். இதற்கு முன்பே ஶ்ரீலிங்க ராஜேந்திரரை தர்க்கத்தில் ஶ்ரீவிஜயேந்திரர் தோற்கடித்திருந்ததால் இச்சர்ச்சையை எப்படி முடிப்பது என்பது என்பதில் முடிவெடுக்க முடியவில்லை. கடைசியாக சிவ சின்னங்கள் குளத்தில் கிடைக்கும் பட்சத்தில் குளம் ஆதி கும்பேஸ்வரர் கோயிலுக்கும், அப்படி சின்னங்கள் கிடைக்கவில்லை என்றால் ஶ்ரீசக்ரபாணி கோயிலுக்கும் சொந்தம் என்றும் ஒப்புக்கொள்ளப்பட்டது.

ஶ்ரீவிஜயேந்திர தீர்த்தரின் திருவிளயாடல்

போட்டியில் எப்படியும் வெற்றிக்கொண்டு குளத்தை ஆதி கும்பேஸ்வர் ஆலயத்திற்கு சொந்தமாக்க வேண்டும் என்பதற்காக சில லிங்களையும், சில நந்தி சிலைகளையும், குளத்தில் முந்தின தினம் இரவிலேயே சில சைவர்கள் வைத்துவிட்டனர். மறுநாள் கும்பகோணம் ஊரே முடிவு தெரிந்து கொள்ள குளத்தருகே கூடிவிட்டது. குளத்தில் இறங்கி பார்க்க நடுநிலமையான diverகள் வந்தனர். நடுவராக ஶ்ரீவிஜயேந்திரர் வந்து diverகளுக்கு ஆசி கூறிய பிறகு diverகள் குளத்தில் இறங்கினர்கள். சில நேரங்களுக்கு பின் diverகள் சில சாலிகிராமங்களையும், சில ஆஞ்சநேயர் சிலைகளையும் குளத்திலிருந்து வெளி கொணர்ந்தனர்கள். சைவ சீடர்கள் இரவில் தாங்கள் குளத்தில் இறக்கிய லிங்கங்களும், நந்திகளும் diverகளுக்கு கிடைக்காதது வியப்பாக இருந்தது. அவர்கள் இன்னும் தேட வேண்டும் என்று வற்புறுத்தினர். தேடல் தொடர்ந்தது. இன்னும் சில நேரங்களுக்கு பின் diverகள் இன்னும் சில சாலிகிராமங்களையும், ஆஞ்சநேயர் சிலைகளையும் குளத்திலிருந்து வெளி கொணர்ந்தனர்கள். சர்ச்சைக்கு முடிவாக பொற்றாமரை குளம் ஶ்ரீசாரங்கபாணி கோயிலுக்கு சொந்தம் என முடிவானது.

பொற்றாமரை குளம் வடக்கு கரை ஶ்ரீஆஞ்சநேயர் திருக்கோயில்

பொற்றாமரை குளம் வடக்கு கரை ஶ்ரீஆஞ்சநேயர் திருக்கோயில், கும்பகோணம், தமிழ் நாடு அப்படி பொற்றாமரை குளத்தில் கண்டெடுக்கப்பட்ட ஶ்ரீஆஞ்சநேயர் சிலை குளத்தின் வடக்கு கரையில் ஶ்ரீவிஜயேந்திரரால் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. கும்பகோணம் பக்தர்கள் அக்காலத்திலிருந்து இவ்வாஞ்சநேயரை பக்தர்கள் கொண்டாடி வருகின்றனர்.

ஶ்ரீவிஜயேந்திர தீர்த்தரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட குளக்கரை ஶ்ரீஆஞ்சநேயருக்கு தற்பொழுது கோயில் எழுப்பியுள்ளார்கள். ஶ்ரீசக்ரபாணி செட்டியார், ஶ்ரீஅனந்த பத்மநாப செட்டியார் போன்றவர்கள் இக்கைங்கரியத்தை செவ்வனே செய்துள்ளார்கள். இன்று இக்கோயிலில் ஶ்ரீஆஞ்சநேயருடன் ஶ்ரீசீதா, இராமர், லக்ஷ்மணர் ஆகியோரும் குடி கொண்டுள்ள்ர்.

பொற்றாமரை குளம் வடக்கு கரை ஶ்ரீஆஞ்சநேயர்

ஶ்ரீஆஞ்சநேயர் தனது தூக்கிய வலது திருகைகளால் பக்தர்களுக்கு அபயம் அளிக்கிறார். அவரது இடுப்பில் ஒண்டியிருக்கும் இடது திருகரத்தில் சௌகந்திகா புஷ்பத்தை வைத்துள்ளார். ஓங்கி உயர்ந்த வால் பக்தர்களுக்கு தைரியத்தை அளிக்கிறது. ஒளிரும் கண்களின் பார்வையால் அவர் பக்தர்களுக்கு தனது பரிபூர்ண ஆசிகளை அள்ளி அளிக்கிறார்.

 

திருக்கோயில் இருப்பிடம் :     "வடக்கு கரை ஶ்ரீஆஞ்சநேயர் திருக்கோயில், கும்பகோணம்"

 

அனுபவம்
மூர்த்தி சிறிதானாலும் குளக்கரை ஆஞ்சநேயர் நிச்சயமாக தனது பக்தர்களுக்கு பெரிய சக்தியினை அருளி உலகில் வெற்றியை பெற்றுதருவார் என்பது தின்னம்.

தமிழாக்கம் :திருமதி. ஸ்ரீமதி
முதல் பதிப்பு: நவம்பர் 2016
திருத்தப்பட்ட பதிப்பு: செப்டம்பர் 2020


 

 

ஆஞ்சநேய ஸ்வாமி புகழ் வாழ்க

காற்று ஈன்ற காவியமே எம்மை காத்தருள்வாய்
நம்பினோம் நாவரசை நாங்களே
+