home-vayusutha: ஸ்லோகம் கோவில்கள் கட்டுரைகள்
boat

ஶ்ரீபிரஸன்ன வெங்கடேஸ்வர ஸ்வாமி கோயிலும், நாலு கால் மண்டபம் ஶ்ரீ ஆஞ்சநேயர் கோயிலும், தஞ்சாவூர்


ஶ்ரீ ஆஞ்சநேயர், நாலு கால் மண்டபம், தஞ்சாவூர், தமிழ் நாடு

ஜீகே கௌசிக்


குற்றாலம் அருவி

ஆனந்த விகடன் வார இதழில் வெளியாகியிருந்த ஓர் நேர்காணலில் குற்றாலத்தில் உள்ள கண்ணன் என்பவர் கூறிய நிகழ்ச்சி மிகவும் அதிசயமாக இருந்தது. குற்றாலம் அருவியி குளிக்க வருபவர்கள் சில சமயம் தவறி விழுந்து விடுவார்கள். அவர்களை ஆழ்ந்த நீரிலிருந்து வெளிக்கொண்டு வருவது தான் அவர் செய்யும் காரியம். பல சம்யங்களில் அவர்களின் சடலத்தையும் மீட்க வேண்டிவரும். அவர் சொன்ன நிகழ்வு திரு கல்யாண சுந்தரம் என்பவரை பற்றியது. கல்யாண்சுந்தரம் குற்றாலம் அருவியில் குளிக்கும் போது தவறி விழுந்து விட்டார். கண்ணன் அவரை மூன்று நாட்கள் விடாமல் நீரின் ஆழம் வரை சென்று தேடினார். ஆனால் கிடைக்கவில்லை. அனேகமாக முயற்சிகள் கைவிட்ட நிலையில், நான்காம் நாளும் கண்ணன் அவரை தேட ஆழ் நீரின் முழுகி தேடத் தொடங்கினார். அப்பொழுது ஆச்சரியமான நிகழ்வு நடந்தது. கல்யாண சுந்தரம் கிடைத்தது மட்டுமல்லாமல் உயிருடனும் இருந்தார். தற்பொழுது அவருக்கு திருமணமாகி அமெரிக்காவில் இருக்கிறார்.

பாரத நாட்டின் ஸித்த புருஷர்கள்

நாலு கால் மண்டபம் ஶ்ரீ ஆஞ்சநேயர் கோயில், தஞ்சாவூர் இதை படித்ததும் நம் பாரத நாட்டில் வாழ்ந்த ஸித்த புருஷர்கள் செயதவை நினைவுக்கு வந்தது, அதுவும் ஶ்ரீ சதாசிவ பிரம்மேந்திரா அவர்கள் வாழ்க்கையில் நடந்த ஓர் சம்பவம். அவதூத புருஷரான ஶ்ரீ சதாசிவ பிரம்மேந்திரா, அத்வைத வேதாந்தத்தை பின் பற்றுவவர். சுமார் இருநூறு ஆண்டுகள் வாழ்ந்துளார். ஶ்ரீ காஞ்சி காமகோடி பீடத்தின் 57வது பீடாதிபதியாக இருந்த ஶ்ரீ பரமசிவேந்திர ஸரஸ்வதி [1578-86] அவர்களின் சீடர் ஶ்ரீசதாசிவம். இறைவனை துதித்து பாடுவதில் வல்லவராக் இருந்தாலும் வேதாந்த கருத்துகள் அதில் இருக்கும். ஶ்ரீசதாசிவம் புத்திசாலியான இவர் சிறிய தூண்டுதலுக்கு [சீண்டுதலுக்கு] உட்பட்டு தன் சகாக்களுடன் தர்க்கத்தில் இறங்கிவிட்டார். இதை கவனித்த குரு இவரை மௌனம் காக்க கூறினாலும், ’மௌனம் காக்க’ என்ற குருவின் ஆசியை ஜ்ஞான உபதேசமாகக் கொண்டு வாழ்நாளில் மௌனம் காக்க ஆரம்பித்தார். அவர் குரு அவரை ’சதாசிவ பிரம்மேந்திரா’ என்று அழ்த்து அவருடைய பட்டப் பெயராகவே நிலைத்தது.

ஶ்ரீ சதாசிவ பிரம்மேந்திரா

ஶ்ரீ சதாசிவ பிரம்மேந்திரா என்னும் இந்த மௌன யோகி, அவதூத மஹாபுருஷர் வாழ்க்கையில் நடந்த ஆச்சரியமான் பிரமிக்க தக்க நிகழ்ச்சிகள் பல உண்டு. மேலே கூறிய ஆனந்த விகடன் கட்டுரையை படிக்கும் போது நினைவுக்கு வந்த நிகழ்வு கொடுமுடி நதியில் வெள்ளம் வ்ந்த பொழுது நடந்தது. ஶ்ரீ பிரம்மேந்திரா அவர்கள் கோடுமுடி ந்தி வறண்டு இருக்கும் போது நதியின் நடுவில் மணலில் அமர்ந்து யோக நிலையை அடைந்தார். நதியில் நீர் வரத்தொடங்கி அது வெள்ளமாகவும் மாறியது. மக்கள் பார்த்துக் கொண்டிருக்கும் பொழுதே ஶ்ரீ பிரம்மேந்தரர் நீரில் முழுகி விட்டார். மூன்று மாதங்களில் நீர் வடிய ஆரம்பித்தது, மக்கள் அதே யோக நிலையில் ஶ்ரீ பிரம்மேந்திரா இருப்பதை கண்டு ஆச்சரியப்பட்டனர். யோக நிலை கலைந்து எழுந்து நடந்து சென்று விட்டதை மேலும் ஆச்சரியப் பட்டனர்.

பஜனை சம்பரதாயம்

நாலு கால் மண்டபம் ஶ்ரீ ஆஞ்சநேயர், தஞ்சாவூர் தென் இந்தியாவில் பஜனை சம்பரதாயம் உருவாகிய காலம் அது. சங்கீதத்திலும் புலமை கொண்ட ஶ்ரீ பிரம்மேந்திரா அவர்கள் அத்வைத வேதாந்தம், ஆராதனா தெய்வங்களின் மேல் பாடிய கிருதிகள் பல. பல சங்கீத் வித்வான்களுக்கு இவருடைய கிருதிகள் மேல் மோகமுண்டு. அதே போல் பரம்பரை நாம சங்கீர்த்தனைகஇலும் இவருடைய இருதிகள் நெஞ்சை அள்ளும் விதம் இடம் பெருவதை இன்றும் கேட்கலாம். ’பஜரே கோபாலம்’ ஹின்தோளத்திலும் ’பஜரே யது நாதம்’ பீலுவிலும் ’பிபரே ராமரஸம்’ யமன் கல்யாணியிலும் மிக பிரபலமான இவருடைய கிருதிகளில் சில.

ஶ்ரீசதாசிவ பிரம்மேந்திராவின் பெயரில் இன்றும் பல இடங்களில் சங்கீத கச்சேரிகளோ அல்லது நாம சங்கீர்த்த பஜனையோ நடக்கிறது. அன்றய பெரிய பாடகரோ, பாகவதரோ அப்படி நடக்கும் நீகழ்ச்சிகளில் பங்கு கொள்வதை மிக பெரிய பேறு என்பர்.

நாலுகால் மண்டப சங்கீத விழா

தஞ்சாவூரில் ஶ்ரீபிரஸன்ன வெங்கடேஸ்வர ஸ்வாமி கோயில் அருகில் வருடம் தோரும் மிக பெரிய சங்கீத விழா நடைப்பெறுகிறது. இதற்கு நாலுகால் மண்டப ஆஞ்சநேய சங்கீத விழா என்றே பெயர்.

நாலுகால் மண்டப ஆஞ்சநேயர் கோயில்

ஶ்ரீ பிரசன்ன வெங்கடேஸ்வர கோயில் எதிரில் நாலுகால் மண்டபம் ஒன்று உள்ளது. கோயில் அருகில் தேர்முட்டி உள்ளது. உத்ஸவ மூர்த்தியை தேர்முட்டி மேடையிலிருந்து தேரில் ஏற்றுவது பழக்கம். ஆனால் இங்கு அப்படி செய்ய முடியவில்லை. தேர்முட்டியின் ஓரத்தில் ஓர் துவாரம் இருந்தது. எத்தனை முயன்றும் இதனை அடைக்க முடியவில்லை. ஶ்ரீசதாசிவ பிரம்மேந்திரா அவர்கள் கூறிய ஆசிபடி தேர்முட்டியின் ஓர் சிறிய பிறை கட்டி ஶ்ரீஆஞ்சநேயரை பிரதிஷ்ட்டை செய்தனர். பின் மேலே இருந்த துவாரத்தை அடைத்தனர். இப்பொழுது நாலு கால் மண்டபத்தின் எதிரில் இவ்வாஞ்சநேயர் இருப்பதால் இவ்வாஞ்சநேயருக்கு நாலு கால் மண்டப ஆஞ்சநேயர் என்றே பெயர்.

நாலுகால் மண்டப ஆஞ்சநேயர்

ஶ்ரீ பிரசன்ன வெங்கடேஸ்வரர் கோயில் சன்னதி தெருவில் நடுவில் நாலுகால் மண்டபம். வலபுறம் தேர்முட்டியும் அதன் கீழ் ஶ்ரீஆஞ்சநேயர் கோயிலும் உள்ளது. அவர் கோயில் கொண்டுள்ள பிறை என்றே சொல்ல வேண்டும். காலை முதல் மிகவும் சுறுசுறுப்பாக இருக்கும் வீதியில் ஶ்ரீஆஞ்சநேயரை வருவோரும் போவோரும் வணங்கிவிட்டு செல்வதை பார்க்கலாம். மத வேறுபாடுமில்லாமல் எல்லோரும் வணங்குகிறார்கள். அத்வைத வேதாந்தி ஶ்ரீ சதாசிவ பிரம்மேந்திராவை நினைவு படுத்தும் ஶ்ரீஆஞ்சநேயர் இரு திரு கரங்களையும் கூப்பிய வண்ணம் எல்லோருக்கும் ஆசிகளை வழங்குகிறார்.

 

திருக்கோயில் இருப்பிடம் :     "ஶ்ரீ ஆஞ்சநேயர், நாலு கால் மண்டபம், தஞ்சாவூர்"

 

அனுபவம்
அத்வைத வேதாந்தி ஶ்ரீ சதாசிவ பிரம்மேந்திரா அவர்களால் ஸ்தாபனம் செய்யப்பட்ட ஶ்ரீஆஞ்சநேயர் இரு திரு கரங்களாலும் ஆசிகளை வழங்க, பெற்றுக்கொள்ள வாருங்கள்.

தமிழாக்கம் :திருமதி. ஸ்ரீமதி
முதல் பதிப்பு: ஜூலை 2015
திருத்தப்பட்ட பதிப்பு: செப்டம்பர் 2020


 

 

ஆஞ்சநேய ஸ்வாமி புகழ் வாழ்க

காற்று ஈன்ற காவியமே எம்மை காத்தருள்வாய்
நம்பினோம் நாவரசை நாங்களே
+