home-vayusutha: ஸ்லோகம் கோவில்கள் கட்டுரைகள்
    மின்னஞ்சல் விருந்தினர் ஏடு
boat

ஶ்ரீ வீர ஆஞ்சநேய ஸ்வாமி கோயில், கடலூர், தமிழ் நாடு

ஶ்ரீ வீர ஆஞ்சநேய ஸ்வாமி கோயில், கடலூர், தமிழ் நாடு

திரு. கோவிந்த ராஜன், புதுச்சேரி


திவ்ய தேசம்

ஶ்ரீ விஷ்ணுவின் புகழ் பாடியவர்கள் பலர். மஹா புருஷர்களான ஆழ்வார்கள், ஶ்ரீ விஷ்ணுவை சில க்ஷேத்திரங்களில் புகழ்ந்து பக்தியுடன் பாடியுள்ளார்கள். அப்படி அவர்களால் துதிக்கப்பட்ட க்ஷேத்திரங்கள் திவ்யதேசம் என அழைக்கப் படுகிறது. 108 திவ்ய க்ஷேத்திரங்களில் அதிகம் தமிழ்நாட்டில் உள்ளது.


அப்படிப்பட்ட திவ்ய தேசங்களில் ஒன்று திருவந்திபுரம். கடலூரிலிருந்து ஐந்து கிலோமீட்டர் துலைவில் உள்ளது. ஶ்ரீஆஞ்சநேயரின் பிரபாவம் உள்ள க்ஷேத்திரம் இது. ஶ்ரீ ஆஞ்ச‘னேயரின் கையிலிருந்த சஞ்சீவி மலையிலிருந்து விழுந்த ’ஔசதி மலைக்கும், புனித நதியான கருட நதிக்கும் இடையில் அமைந்துள்ளது. கருட நதிக்கு கடிலா நதி என்றும் பெயர் உண்டு. பல புராணங்களின் வாயிலாக இந்த திவ்ய க்ஷேத்திரத்தை பற்றி பல விவரங்கள் அறிய முடிகிறது.

கடலூர்

புனித நதியான கடிலாநதி [கருட நதி] திருவந்திபுரம் அருகிலுள்ள கடலூர் டவுன் வழியாக செல்கிறது. கடலூருக்கு திருபாதிரிபுலியூர் என்று பெயர் உண்டு. கடலூரின் மேற்கு எல்லையில் தென் நேக்கி செல்கிறது கடிலா நதி, பின் வங்க கடலில் கலக்கிறது. கூடல் என்பதால் கடலூர். ஶ்ரீ ஆஞ்சநேயரின் பிரபாவம் இவ்வூருக்கும் உண்டு.

திருபாதிரிபுலியூர் ஶ்ரீஆஞ்சநேயர்

ஶ்ரீ வீர ஆஞ்சநேய ஸ்வாமி கோயில், கடலூர், தமிழ் நாடு திருபாதிரிபுலியூர் இரயில் நிலயத்தில் சுமார் நூற்று இருபது வருடம் முன்பு ஶ்ரீநிவாச அய்யர் என்பவர் குமாஸ்தாவாக பணிபுரிந்து வந்தார். அக்காலத்தில் கடிலா நதியில் இரு கரைகளிலும் புதர் மண்டி கிடந்த்து.

ஶ்ரீராம பக்தரான ஶ்ரீநிவாச அய்யர் அவர்களுக்கு ஶ்ரீராமர் கனவில் தோன்றி ஶ்ரீஆஞ்சநேயரின் விக்ரஹம் கடிலா நதியில் இருப்பதாகவும், அதை தேடி கண்டுபிடிக்கவும் என சொன்னார். நண்பர்களின் உதவியுடன் கடிலா நதியையிலும் நதிகரையிலும் ஶ்ரீஆஞ்சநேயரின் சிலைக்காக தேடல் நடைப்பெற்றது. இறுதியில் நதியின் மேற்கு கரையில் ஶ்ரீஆஞ்சநேயர் கண்டுபிடிக்கப் பட்டார்.

ஶ்ரீஆஞ்சநேயருக்கு கோயில்

அருகில் மண்டியிருந்த புதரை அப்புறப் படுத்திவிட்டு, ஶ்ரீஆஞ்சநேயரை அங்கேயே பிரதிஷ்டை செய்துவிட்டனர். ஆகம பண்டிதர்கள் சிலையினை பார்த்து ’வீர ஆஞ்சநேயர்’ என பெயரிட்டனர். ஶ்ரீநிவாசன் அவர்கள் நண்பர்களின் உதவியுடன் சிறிய கொட்டகை அமைத்தார். தெரிந்தவர்களிடமிருந்து எல்லாம் கால்-அணா வீதம் வாங்கி ஶ்ரீஆஞ்சநேருக்கு கோயில் கட்டினார் அவர் என்பார்கள். [ஒரு அணா என்பது தற்போதைய பைசாவில் ஆறு பைசா].

கோயிலின் வளர்ச்சி

கோயில் கால போக்கில் கடலூர் டவுனின் வளர்ச்சியுடன் இக்கோயிலும் வளர்ச்சியைக் கண்டது. கோயில் ஒரு தனியாரின் குடும்பத்திற்கு சொந்தமான நிலத்திலிருந்த்து. 1982-ம் ஆண்டு அக்குடும்பதினரிடமிருந்து கோயிலுக்காக 1.05 ஏக்கர் நிலத்தினை கோயில் டிரஸ்ட் வாங்கியது. எண்பத்தி ஐந்து அடி கிழக்கு மேற்காவும் ஐம்பதடி அகலமும் உள்ள நிலம். சிறுக சிறுக தனிதனியாக கோயில் வளாகம் கட்டப்பட்டதால், கோர்வையாக இருக்கும்படி முறைப்படி வளாகத்தை திரும்ப கட்டினார்கள். அப்படி மாற்றி முறைப்படி கட்டிய போதும் ஶ்ரீஆஞ்சநேயரின் கருவறையை இடம் மாற்றவில்லை.

ஶ்ரீ வீர ஆஞ்சநேய ஸ்வாமி உத்ஸவர், கடலூர், தமிழ் நாடு 1990-ல் ஆரம்பிக்கப்பட்ட இவ்வேலை 1992-ல் முடிவடைந்த்து. தற்பொழுது கடிலா நதியின் மேல் உள்ள பாலத்தினை அடுத்து பெரிய தோரண வாயில் கோயிலுக்கு வழி காட்டுகிறது. தோரண வாயிலிலிருந்து இரண்டு நிமிட நடை தாங்களை கோயில் வாசலுக்கு அழைத்து வரும். கம்பீரமான விமானம் தாங்களை வரவொற்கும். கிழக்கிலிருந்து நுழைந்தால் ஶ்ரீ வீர ஆஞ்சநேயரை தரிசிக்கலாம்.

கடலூர் ஶ்ரீ வீர ஆஞ்சநேயர்

புடைப்பு சிலையாக உள்ள ஶ்ரீ வீர ஆஞ்சநேயர் கிழக்கு நோக்கி பிரதிஷ்டை. வடக்கு நோக்கி செல்வது போல் இருக்கும் ஶ்ரீஆஞ்சநேயரின் வலது திருகரத்தினால் பக்தர்களுக்கு அபயம் அளிக்கிறார். அவரது இடது திருகரத்தினை இடையில் ஊன்றியுள்ளார்.

உத்ஸவமூர்த்தி நின்ற திருக்கோலத்தில், இடது திருகரத்தில் கதையுடனும், வலது திருகரத்தில் ’அபய முத்திரை’யும் தரித்துள்ளார்.

கோயில் விசேடங்கள்

30.08.1992 அன்று கோயிலுக்கு புனர் அமைப்புக்கு பின் கும்பாபிஷேகம் நடந்தது. ’பஞ்சாராத்திரா’ ஆகம முறைப்படி இக்கோயிலில் பூஜைகள் செய்யப் படுகின்றன. மார்கழி அம்மாவாசை அன்று ஶ்ரீஹனுமத் ஜயந்தி சிறப்பாக கொண்டாடப்படுகிறது. உத்ஸவமூர்த்தி எல்லா அம்மாவாசைகளிலும் கோயில் வளாகத்தில் உலா வருகிறார். ஶ்ரீராம நவமி பெரிய விழாவாக பதிமூன்று நாட்களுக்கு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. பௌர்ணமி அன்று ஶ்ரீஆஞ்சநேய உத்ஸவத்துடன் நிறைவு பெருகிறது.

எங்கும் இல்லாது, இக்கோயிலில் தமிழ் புத்தாண்டு [சித்திரை மாத பிறப்பு] அன்று ஒரு லட்சம் தீபங்கள் கோயில் வளாகத்தை பிரகாசிக்கச் செய்யும். காண கண் கொள்ளா காட்சியாக அமையும் இந்நிகழ்ச்சி.

 

திருக்கோயில் இருப்பிடம் :     "ஶ்ரீ வீர ஆஞ்சநேய ஸ்வாமி கோயில், கடலூர்,"

 

அனுபவம்
சிறிய கோயிலில் வீற்றிருக்கும் ஶ்ரீ வீர ஆஞ்சநேயரின் தரிசனம் மனதிற்கு நிம்மதியும் அமைதியும் அளிப்பது திண்ணம்.

தமிழாக்கம் :திருமதி. ஸ்ரீமதி
முதல் பதிப்பு ஜனவரி 2015
திருத்தப்பட்ட பதிப்பு: செப்டம்பர் 2020


 

 

ஆஞ்சநேய ஸ்வாமி புகழ் வாழ்க

காற்று ஈன்ற காவியமே எம்மை காத்தருள்வாய்
நம்பினோம் நாவரசை நாங்களே
+