home-vayusutha: ஸ்லோகம் கோவில்கள் கட்டுரைகள்
    மின்னஞ்சல் விருந்தினர் ஏடு
boat

ஶ்ரீ ஆஞ்சநேயர் கோயில், கல்லுகுழி, திருச்சி, தமிழ் நாடு

டாக்டர். ஜய சங்கர்


திருச்சி

ஆன்மீக சுற்று பயணம் செய்ய தஞ்சாவூர் மாவட்டம் ஒரு சிறப்பான இடம். அனேக கோயில்கள் உள்ள மாவட்டம் இது. சுற்றி பார்க்க நேரம் தான் வேண்டும். இதை அடுத்துள்ள மாவட்டம் திருச்சி மாவட்டம். திருச்சிராபள்ளி என்ற பெயர் உள்ள ஊரே, மாவட்டத்திற்கு தலைமை, ஆனால் இவ்வூர் திருச்சி என்றே பிரபலம். திருச்சி என்ற உடன் மலைகோட்டை உச்சி பிள்ளையார் கோயிலும் அருகாமையில் உள்ள ஶ்ரீரங்கநாதரு கோயிலும், திருவானை காவலில் உள்ள ஶ்ரீஜம்புநாத ஸ்வாமி கோயிலும் நினைவுக்கு வரும்.


இந்நகரம் நாயகர்கள் காலத்தில் உருவானது. பின்பு இதனை மய்யமாகக் கொண்டு பதினெட்டாம் நூற்றாண்டில் நடைப்பெற்றது ’கர்நாடக யுத்தம்’. ஆங்கிலேயருக்கும் பிரஞ்சுகாரர்களுக்கும் இடையே நடைபெற்றுது. இந்தியாவில் தங்கள் ஆட்சியை நிலை நிறுத்த நடைப் பெற்ற போர் என்பதால் சரித்திர முக்யத்வம் வாய்ந்தது.

மலைகோட்டை

மலைகோட்டையை மய்யமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட நகரம் திருச்சி. எண்பத்தி மூன்று மீட்டர் உயரம் உள்ள மலைகோட்டை நகரத்தில் எங்கிருந்து பார்த்தாலும் தெரியும். மலையின் உச்சியில் பிள்ளையார் கோயில் கொண்டுள்ளார். மலையின் நடுவில் மிக அருமையான கோயில் சிவ பெருமானுக்காக உள்ளது. இங்கு கோயில் கொண்டுள்ள ஈஸ்வரன் தனது பக்தைக்காக பிரசவம் பார்க்க சென்றார். தாயின் கடமையை ஆற்றி ’தாயுமானவர்’ என்று பெயர் கொண்டார். ஶ்ரீபிரம்மா, ஶ்ரீவிபிஷணன், ஶ்ரீஆஞ்சநேயர் ஆகியோர் இவ்வீஸ்வரரை வழிபட்டுள்ளனர்.

ஆங்கிலேயர்களும் இரயில்வேயும்

ஶ்ரீ ஆஞ்சநேயர் கோயில், கல்லுகுழி, திருச்சி வியாபார நோக்குடன் ஆங்கிலேயர் காலத்தில் இரயில்வே லையன்கள் போடப்பட்டன. திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட மேம்பாட்டிற்காக தனியார் இரயில் கம்பெனிகளை ஆங்கிலேயர்கள் நடத்தினர். அப்படி உருவானதே ’சதர்ன் இந்தியா இரயில்வே கம்பெனி’. திருச்சியின் முக்யத்வம் அதிகமாவதை உணர்ந்த ஆங்கிலேயர்கள் திருச்சியில் இரயில் பாதை அமைக்க நினைதனர்.. அப்படி இரயில் சந்திப்பு நிலையம் அமைப்பதற்காக திருச்சியில் தேர்தெடுக்கப்பட்ட இடத்தில் ஒரு சிறிய ஆஞ்சநேயர் கோயில் கொண்டிருந்தார். உருவாக்கப்பட்ட இரயில் சந்திப்பின் இரண்டாவது நடை மேடையின் கிழக்கு கோடியில் அமைதியான அவ்வாஞ்சநேயர் கோயில் அப்படியே மாற்றமில்லாமல் தொடர்ந்தது. [இவ்வாஞ்சநேயர் சிலை, திருச்சி இரயில் நிலையம் முதல் முதல் அமைக்கும் பொழுது கிடைத்து, கோயில் கட்டியதாகவும் சொல்வார்கள்]

திருச்சி சந்திப்பு முக்கியத்வம்

திருச்சியை சென்னையிலிருந்து இரண்டு வழிகளில் வந்தடையலாம். தஞ்சாவூர் வழியாக செல்லும் இரயில் பாதையை ’மெயின் லைன்’ என்பர். விருத்தாசலம், அரியலூர் வழி பாதையை ’கார்ட் லைன்’ என்பர். திருச்சியை தென் பகுதியுடன் இணைக்கும் முக்கிய சந்திப்பாக உருவாக்க வேண்டிய தகுதியிளை கம்பெனி நோக்கியது. தென் பகுதியிலிருந்து தானியங்கள் முக்கியமாக அரிசி நாட்டின் பல இடங்களுக்கு எடுத்து செல்ல இது அவசியமாயிற்று. தஞ்சாவூரை தமிழ் நாட்டின் நெற்களஞ்சியம் என்பர். தஞ்சை அருகில் உள்ள சாலியமங்கலம் பெரிய நெற்கொள்முதல் இடமாகியிருந்தது. வியாபாரிகள் சாலியமங்கலத்தையோ அல்லது வெளிநாட்டுக்கு அனுப்புவர்கள் நாகபட்டிணத்திற்கோ தங்கள் விளை நெல்லை அரிசியை எடுத்துச் சென்றனர். இதை உணர்ந ரயில் கம்பெனி நாகபட்டிணத்தையும் திருச்சியையும் இணைக்க/வலுப்படுத்த திட்டமிட்டனர்.

திருச்சி சந்திப்பு விரிவாக்கம்

ஶ்ரீ ஆஞ்சநேயர், கல்லுகுழி, திருச்சி 1928ம் ஆண்டு திருச்சி சந்திப்பு விரிவு படுத்தப் படுவதற்கான வேலைகள் தொடங்கின. பல புதிய இரயில் வழி தொடர்புகளும் அதற்கான நடை மேடைகள் புதியதாக கட்டப்பட இருந்தது. இதுவரை இரண்டாவது நடை மேடையின் கிழக்கு கோடியிலிருந்த ஆஞ்சநேயர் கோயிலை அகற்றாமல் இருக்க முடியாது என்ற நிலை இப்பொழுது வந்தது. அதனால் அக்கோயிலை இடித்து அப்புறபடுத்த வேலையாட்கள் அனுப்பபட்டனர். சாதாரணமாக தெரிந்த இவ்வேலையை, வேலையாடகளால் அவ்வளவு சீக்கிரம் செய்ய முடியவில்லை. அதிக தாமதம் ஆக தொடங்கியது.

ஏஜண்ட் கண்ட கனவு

ஆனால் அன்று இரவே இரயில்வே ஏஜண்ட் [தற்போதய நிலய மேற்பார்வையாளர்] இரண்டு இரயில் இன்ஜின்கள் தடம் புரள்வது போல் கனவு கண்டார். மறுநாள் அவர் கண்ட கனவு உண்மையாகவே நடந்து விட்டது. பொறியாளருக்கும், இரயில்வே ஏஜண்ட்க்கும் இது அதிர்ச்சியாக இருந்தது.

ஶ்ரீஆஞ்சநேயருக்கு மாற்று இடம்

நீண்ட ஆலோசனைக்கு பின், இது தெய்வ குற்றம் என்பதை அவர்கள் உணர்ந்தனர். ஶ்ரீஆஞ்சநேயருக்கு மாற்று இடம் திருச்சி சந்திப்புக்கு அருகாமையிலேயே கொடுப்பது எனவும், அங்கு கோயில் கட்ட ரூ.800/- ரயில்வே கம்பெனியிலிருந்து கொடுப்பது எனவும் தீர்மானிக்க பட்டது. அதன் பிறகு வேலை விறுவிறுப்பாக நடந்தது. ஶ்ரீஆஞ்சநேய ஸ்வாமியை கல்லுகுழி என்றழைக்க படும் புதிய இடத்தில் ’புனர் பிரதிஷ்டை’ செய்தார்கள்.

கல்லுகுழி ஆஞ்சநேய ஸ்வாமி திரு கோயில்

கல்லுகுழி ஆஞ்சநேய ஸ்வாமி திரு கோயில் திருச்சி சந்திப்பின் மிக அருகாமையில் இருந்தாலும், சத்தமில்லாமல் அமைதியான இடத்திலுள்ளது. மிக எளிமையாக உள்ள கோயிலின் மூன்று அடுக்கு ராஜகோபுரம் நம்மை தூரத்திலிருந்தே அழைக்கிறது. கோயில் நுழைவாயிலிலிருந்தே ஶ்ரீஆஞ்சநேயரை பக்தர்கள் தரிசிக்கலாம். தமிழ்நாட்டிலிலுள்ள மற்ற க்ஷேத்திரங்களிலுள்ள ஶ்ரீஆஞ்சநேயரின் உருவங்கள் வரையப்பட்ட மண்டபம் ராஜகோபுரதிற்கும் கருவறைக்கும் இடைப்பட்ட பகுதியில் உள்ளது.

கல்லுகுழி ஆஞ்சநேய ஸ்வாமி

புடைப்பு சிற்பமாக உள்ளார் ஆஞ்சநேயர். வலது திருகரத்தினால் அபயம் அளிக்கும் ஸ்வாமியின் இடது திருக்கரத்தில் சஞ்சீவி மலை உள்ளது. கிழக்கு நோக்கிய கருவறையில் ஶ்ரீஆஞ்சநேய ஸ்வாமி வடக்கு நோக்கி அமைந்துள்ளார். லக்ஷ்மணனின் சிகிச்சைக்கு பின் சஞ்சீவி மலையை அதன் இடத்திற்கு அனுப்புவது போல் அமைந்துள்ளது இக்காட்சி.

 

திருக்கோயில் இருப்பிடம் :     "ஶ்ரீ ஆஞ்சநேயர் கோயில், கல்லுகுழி"

 

அனுபவம்
இங்கு வரும் பக்தர்கள் கல்லுகுழி ஶ்ரீஆஞ்சநேய ஸ்வாமி எப்படி தங்கள் கஷ்டங்களை நீக்கினார் என்று கூறும் ஒவ்வொரு நிகழ்ச்சிகளும் பக்தர்கள் இவர் மீது கொண்டுள்ள அசைக்க முடியா பக்தியை காண்பிக்கிறது.

தமிழாக்கம் :திருமதி. ஸ்ரீமதி
முதல் பதிப்பு டிசம்பர் 2014
திருத்தப்பட்ட பதிப்பு: செப்டம்பர் 2020


 

 

ஆஞ்சநேய ஸ்வாமி புகழ் வாழ்க

காற்று ஈன்ற காவியமே எம்மை காத்தருள்வாய்
நம்பினோம் நாவரசை நாங்களே
+