home-vayusutha: ஸ்லோகம் கோவில்கள் கட்டுரைகள்
    மின்னஞ்சல் விருந்தினர் ஏடு
boat

ஶ்ரீஜய ஆஞ்சநேயர் கோயில், லாலாபேட்டை, கரூர், தமிழ் நாடு

ஜி.கே.கௌசிக்


லாலாபேட்டை

லாலாபேட்டை கிராமம் கரூர் மாவட்டம் குளிதலை அருகில் இருக்கிறது. காவேரி கரையோரம் அமைந்திருக்கும் கிராமம். கொள்ளை அழகு. பசுமையான வயல், வாழைத் தோட்டம், தென்னை என்று எங்கு நோக்கினும் பசுமை, அழகுக்கு மேலும் அழகு சேர்க்கும் அமைதியான சூழல்.

ஶ்ரீவரதராஜ பெருமாள் கோயில்

இவ்வழகிய கிராமத்தின் மத்தியில் ஶ்ரீவரதராஜ பெருமாளுக்கு ஒரு கோயில் இருந்தது. அருகாமையில் இருக்கும் மக்கள் இக்கோயிலுக்கு வந்து தங்கள் நேர்த்தியினை நிறைவேற்றுவார்கள். ஆனால் காவேரியில் வெள்ளம் வந்தால் லாலாபேட்டைக்கு வருவது மிக கடினம். இது சுமார் முன்னூற்று ஐம்பது வருடம் முன். மக்கள் ஒன்று சேர்ந்து அப்பொழுது தீர்மானித்தார்கள், பெருமாள் கோயிலை காவேரிக்கு அக்கரையிலுள்ள கல்லாபள்ளிக்கு கிராமத்திற்கு மாற்றுவது என்று.

கோயிலை கல்லாபள்ளிக்கு மாற்றும் வேலை தொடங்கியது. அநேகமாக எல்லாவற்றையும் புதிய கிராமத்தில் மாற்றிய நிலையில், பெருமாள் கோயில் புதிய கிராமத்தில் களை கட்டியது. இன்னும் கொடி மரம் தான் மாற்றப்பட வேண்டும்.

கோயிலின் கொடி மரம்

லாலாபேட்டையிலிருந்த பெருமாள் கோயிலின் கொடி மரம் பாறாங்கல்லால் ஆனது. விஜய நகர பிரதிநிதிகளுக்கு ஆளுகைக்கு உட்பட்ட இடங்களில் அவர்களின் கோயில் கட்டும் பாணியின் தாக்கம் இது. கோயில் கல்லாலன கொடி மரத்தை பெயர்த்து எடுக்க செய்யப்பட்ட முயற்சி தோல்வி அடைந்தது. அதை அடுத்து கொடிமரத்தினை சுற்றி பள்ளம் நோண்டி அதனை பெயர்ப்பது என்று முடிவு செய்தனர். அப்படியே மக்கள் கூடி கொடி மரத்தின் அடியில் தோண்ட ஆரம்பித்த உடன், பூமியிலிருந்து சிகப்பு நிறத்தில் திராவகம் வெளிப்பட்டது. அதனை கண்ட மக்கள், கொடி மரத்தினை அங்கேயே விட்டு விடுவது என்று தீர்மானித்தார்.

ஶ்ரீ ஆஞ்சநேய ஸ்வாமி விருப்பம்

அன்று இரவு கிராம முதியவர் ஒருவர் கனவில் ஶ்ரீ ஆஞ்சநேய ஸ்வாமி பிரத்திக்ஷம் ஆகி, கொடி மரத்தின் அடியில் தான் இருப்பதால் அதனை நகர்த்த வேண்டாம் என உத்திரவிட்டார். இதை அறிந்த கிராமத்து மக்கள் கொடி மரத்தின் அடியிலே ஶ்ரீ ஆஞ்சநேயரை பிரதிஷ்ட்டைச் செய்தன்ர். நாளடைவில் கருவறையும் கட்டப்பட்டது. தெற்கு நோக்கி இருக்கும் அவருக்கு ஶ்ரீ ஜய ஆஞ்சநேயர் என்று திருநாமம். 1940லும் 1984லும் இக்கோயிலுக்கு கும்பாபிஷேகம் நிறைவெற்றப்பட்டது.

விசேஷ கல்

ஶ்ரீ ஜய ஆஞ்சநேயர் தனக்கு இங்கே கோயில் கட்டிக் கொண்ட விதம் மட்டும் லாலாபேட்டையில் விசேஷமில்லை. இங்கு இருக்கும் ஒரு கல் மற்றொரு அதிசயம்.

இந்த கோயிலில் முட்டை வடிவில் [ஒவல் வடிவில்] ஒரு அதிசய கல இருக்கிறது. தட்டையாக உள்ள இக்கல் அனுமார். ஸஞ்சீவி மலையை எடுத்து செல்லும் பொழுது விழுந்திருக்க வேண்டும். அப்படி என்ன அதிசயம் இந்த கல்லில்?

அருகில் இருக்கும் கிணற்றில் இருந்து நீர் இறைத்து பக்தர்கள் ஸ்நானம் செய்து விட்டு ஈர துணியுடன் இக்கல்லின் மேல் அமர்ந்து கல்லின் அருகில் பூமியை தொட வேண்டும். பக்தர் தனது கோரிக்கையை ஶ்ரீ ஆஞ்சநேயரை நினைத்து, வேண்டி அவரிடம் சம்ர்ப்பிக்க வேண்டும்.

அதிசயம்

அப்பொழுது தான் அந்த அதிசயம் நடைப்பெறுகிறது. அதிசய கல் நகர ஆரம்பிக்கிறது. பக்தர் நினைத்த காரியத்திற்கு ஶ்ரீ ஆஞ்சநேயரின் ஆசிகள் உண்டென்றால் கல் பிரதக்ஷணமாகவும் [வலமாகவும்], காரியம் நிறைவேறாதெனில் அப்பிரதக்ஷ்ணமாகவும் [இடமாகவும்] சுழல ஆரம்பிக்கிறது. அப்படி சுழல ஆரம்பித்த உடன் பக்தரும் அதே திசையில் சுழல வேண்டும், அதே சமயம் பூமியிலிருந்து கையை எடுக்கவும் கூடாது. பக்தரின் வேண்டுகோள் நியாயமற்றதானால் அதிசய கல் நகரவே ஆரம்பிக்காது.

ஏகாதசி [அம்மாவசை அல்லது பௌர்ணமியிலிருந்து பதினொறாவது நாள்], வியாழன், சனி, ஞாயிறு கிழமைகளில் காலை வேளை இதற்கு உகந்ததாக கருதப்படுகிறது.

மூன்று காஞ்சி ஆசாரியர்களும் இத்க்ஷேத்திரத்திற்கு வருகை தந்துள்ளனர்கள்.


 

திருக்கோயில் இருப்பிடம் :     "ஶ்ரீஜய ஆஞ்சநேயர் கோயில், லாலாபேட்டை, கரூர்"

 

அனுபவம்
நல் நினைவுகளுடன் ஶ்ரீஆஞ்சநேயரை இக்கோயிலில் வணங்க நன்மைகள் பல நடக்க, வெற்றிகள் அடைய, ஆசிகள் அள்ளி தருபவர் ஶ்ரீஜய ஆஞ்சநேயர்.

தமிழாக்கம் :திருமதி. ஸ்ரீமதி
முதல் பதிப்பு நவம்பர் 2014
திருத்தப்பட்ட பதிப்பு: செப்டம்பர் 2020


 

 

ஆஞ்சநேய ஸ்வாமி புகழ் வாழ்க

காற்று ஈன்ற காவியமே எம்மை காத்தருள்வாய்
நம்பினோம் நாவரசை நாங்களே
+