home-vayusutha: ஸ்லோகம் கோவில்கள் கட்டுரைகள்
    மின்னஞ்சல் விருந்தினர் ஏடு
boat

ஶ்ரீ ஹனுமார் அம்பலம்,பய்யனூர், கேரளா

ஜி.கே.கௌசிக்


ஶ்ரீராகவபுரம்

சிறுதாழம் என்னும் பள்ளத்தாக்கில் எழிமலைக்கு எதிரில் பய்யநனூர் டவுனுக்கு அருகாமையில் அமைந்திருப்பது ஶ்ரீராகவபுரம் என்னும் அழகான ஊர். ஶ்ரீராகவபுரம் என்று பெயர் பெற்றிருந்தாலும் ஹனுமார் அம்பலம் என்றே பிரசுத்தம். சிறிய அழகிய கோயில் ஶ்ரீராமருக்காக உள்ளது. வட கேரளாவில் மிக பழமையான வைணவ ஸ்தலமாக இது கருதப்படுகிறது.

ஹனுமார் அம்பலம்

ஶ்ரீராமசந்திர மூர்த்தி, ஶ்ரீசீதா தேவி இவர்களின் அன்புக்கு பாத்திரமானவர் ஶ்ரீஹனுமார், அதே போல் இவருக்கு அவர்கள் பொருட்டு இருந்த அன்பும் குறைவில்லை. ஶ்ரீஹனுமாருக்கு செய்யப்படும் பூஜை ஶ்ரீராமரையும் ஶ்ரீசீதாதேவியையும் சென்றடையும் என்பது தின்னமான நம்பிக்கை. அதனால் இந்த க்ஷேத்திரத்தின் பெயரே ஹனுமார் அம்பலம் என்று ஆயிற்று.

ஶ்ரீகோயில்

மூக்ஷ்கா வம்சத்தினரால் முதல் கோயில் கட்டப்பட்டதாகவும் அதனை ஶ்ரீஉதய வர்மா கோலாத்ரி தனது ஆட்சியின் போது எட்டாம் நூற்றாண்டு புனருத்தாரணம் செய்துள்ளார். அவர் 237 ப்ராமண குடும்பங்களை [தற்போதய கர்நாடகத்தில் உள்ள] கோகர்ணத்திலிருந்து அழைத்து வந்து ஐந்து கிராமங்களில் குடியிருக்கச் செய்தார். சிறுதாழம், குன்னூரு, அர்த்தில் புரசேரி, குல்லபுரம் முதலிய கிராமங்கள். சிறுதாழம் கிராமத்தில் ஶ்ரீராகவபுரம், ஶ்ரீகிருஷ்ணபுரம், உதயபுரம் ஆகியவை அடங்கும்.

புராணம்

ஶ்ரீ ஹனுமார் அம்பலம்,பய்யனூர், கேரளா முதலில் கோயில் கிழக்கு நோக்கி இருந்தது. கோயிலின் முக்கிய தேவதையான ஶ்ரீராமர் இலங்கையின் யுத்தத்தின் போது இருந்தது போல் காணப்பட்டார். அக்காலத்தில் கோயில் கிழக்குபுறம் வசிக்கும் மக்களுக்கு இதனால் அதிக கஷ்டங்களை சந்திக்க நேர்ந்தது.

’பிரசனம்’ பார்த்தப்போது இது தெரிய வந்ததால் கிழக்கு திசையிலிருந்த கதவை மூடிவிடுவது என்றும் எழிமலையை நோக்கி மேற்கு வாசல் புதிதாக அமைப்பது எனவும் முடிவாயிற்று. ஶ்ரீராமர் தனித்தில்லாமல் ஶ்ரீசீதாதேவியுடனும் ஶ்ரீலக்ஷ்மணருடனும் ’புனர் பிரதிஷ்டை’ செய்யப்படுவது என்வும் முடிவாகி, முடிவுகளை நிறைவேற்றினார்கள்.

இவ்விடத்திற்கு ’தெய்வ சாந்தித்யம்’ இருப்பது ப்ரசன்த்தின் போது தெரிந்தது. திரோதாயுகத்தின் போழுதே இங்கு கோயில் இருப்பதாகவும் ஶ்ரீஹனுமார் சஞ்சீவி மலையை இலங்கைக்கு எடுத்துச் செல்லும் போது அதிலிருந்து விழுந்த ஒரு பாகமே எழிமலை என்றும் தெரிந்தது. அப்பொழுதிருந்தே ஶ்ரீஹனுமாரின், ஶ்ரீராமசந்திர மூர்த்தியின் ப்ரபாவம் இத்க்ஷேத்திரத்தில் இருந்ததாக காணப்பட்டது.

ஶ்ரீராமசந்திரர், ஶ்ரீசீதாதேவியுடன் ஶ்ரீலக்ஷ்மணருடனும் இக்கோயிலின் கருவறையில் இருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். மற்ற எங்கும் கணாமுடியாத காட்சியாக ஶ்ரீலக்ஷ்மணரும் ஶ்ரீராமரும் ஒரே மேடையில் இருக்கிறார்கள். இக்கோயிலின் காப்பாளணாக இருக்கும் ஶ்ரீஹனுமார் ஆசி வேண்டி பக்தர்கள் நெடு தூரத்திலிருந்தும் வருகிறார்கள்.

ஶ்ரீகோயில் ஹனுமார் அம்பலம்

நாலம்பலத்தின் உள் உள்ளது ஶ்ரீஹனுமாரின் கோயில். ஶ்ரீகோயிலின் வாயு மூலையில் இது அமைந்துள்ளது. நாலம்பலத்தின் சற்றே வெளியே மேற்கு நேக்கி சிவனுக்கான ஶ்ரீகோயில் உள்ளது. இவர் ’சாந்த சிவ பிரதிஷ்டை’ என்பது இங்கு விசேடம். அதற்கு மேற்கே ஶ்ரீதுர்க்கைக்கு ஶ்ரீகோயில் உள்ளது. முன்பு ஶ்ரீதுர்க்கைக்கு பீடம் இட்டு அதில் பிரதிஷ்டை செய்திருந்தார்கள், இப்பொழுது பிம்ப பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

விழாக்கள்

இக்கோயிலின் மஹோத்ஸவம் வருடம் தொரும் மகரமாதத்தில் [தமிழ் தை மாதம்] மிக விமர்சையாக கொண்டாடப்படுகிறது. வடக்கு கேரளத்தில் மிக பெரிய விழா இது. விழாவில் மிகவும் விசேடமாக ஶ்ரீபரமேஸ்வரன், ஶ்ரீராமசந்திரர், ஶ்ரீஹனுமார், ஶ்ரீதுர்க்கா இவர்கள் உத்ஸவ மூர்த்தியை பிராமண பண்டிதர்கள் சுமந்து ஊர்வலம் வருவார்கள். அவர்கள் தேவ விக்ரஹங்களுடன் ஆடும் நடனம் ’தித்தம்பு நிர்தியம்’ என அழைக்கப்படுகிறது. வேறு எங்கும் இல்லா ஓர் விழா இது. இதனை காண மற்ற ஊர்களிலிருந்து ஆயிரம் கணக்கான பக்தர்கள் வருவார்கள்.

 

திருக்கோயில் இருப்பிடம் :     "ஶ்ரீ ஹனுமார் அம்பலம்,பய்யனூர், கேரளா"

 

அனுபவம்
சதா சர்வ காலமும் ஶ்ரீராமரையே தியானித்துக் கொண்டுள்ளவர் ஶ்ரீஹனுமார், அவரின் தியானத்திற்கு இடையூரில்லாமல் மாலை வேளையில் பக்தர்கள் அவரை காணவும் பூஜிக்கவும் அருளாசி பெறவும் வருகிறார்கள். அங்கு வரும் பக்தர்கள் அவ்வேளையில் + ஶ்ரீஹனுமாருக்கு அவல் நிவேதயம் செய்து அருளாசி பெறுகின்றனர்.

தமிழாக்கம் :திருமதி. ஸ்ரீமதி
முதல் பதிப்பு அக்டோபர் 2014
திருத்தப்பட்ட பதிப்பு: செப்டம்பர் 2020


 

 

ஆஞ்சநேய ஸ்வாமி புகழ் வாழ்க

காற்று ஈன்ற காவியமே எம்மை காத்தருள்வாய்
நம்பினோம் நாவரசை நாங்களே
+