home-vayusutha: ஸ்லோகம் கோவில்கள் கட்டுரைகள்
boat

ஶ்ரீ ஆஞ்சநேயர், சீதாராம ஆஞ்சநேய மடாலயம், அலங்கார் திரையரங்கம் பின்புறம், மதுரை, தமிழ் நாடு


ஶ்ரீ ஆஞ்சநேயர், சீதாராம ஆஞ்சநேய மடாலயம், மதுரை, தமிழ் நாடு

ஜீ.கே.கௌசிக்


சௌராஷ்ட்ரா

சீதாராம ஆஞ்சநேய மடாலயம், அலங்கார் திரையரங்கம் பின்புறம், மதுரை தெற்கிலும், தென்மேற்கிலும் அரேபிய கடலையும், வடமேற்கில் கட்ச் வளைகுடாவும் கிழக்கில் கம்பாட் வளைகிடாவும் எல்லையாக கொண்ட பிரதேசம் சௌராஷ்ட்ரா. சமஸ்கிருத வார்த்தையான "சௌராஷ்ட்ரா" என்பதற்கு சிறப்பான பிரதேசம் என்பது பொருள். அதற்கு முன்பு கத்தி என்பவர்கள் அங்கு வாழ்ந்துவந்ததால் இவ்விடம் கத்தாவாட் என்று அழைக்கப்பட்டு வந்தது.

மிகவும் வேறுப்பட்ட நிலப்பரப்பு தன்மையும், சீதோஷ்ண நிலையும் உள்ள பிரதேசமாக சௌராஷ்ட்ரம் இருந்தது. நிலத்தின் தன்மை சில இடங்களில் பாறைகள் நிறைந்ததாகவும் வேறுபட்டும் இருந்தது. ஜூனாகட், ராஜ்கோட், பவநகர் மாவட்டங்களை தவிர மற்ற பிரதேசங்களில் மழை குறைவாகவே இருந்தது. இதனாலேயே பல விதமான நிலதன்மைகளை இங்கு காணமுடிந்தது. பஞ்சு, ஜவ்வரிசி, பாஜ்ரா, மற்றும் வேற்கடலை, எள்ளு முதலியவை எண்ணை எடுக்க தகுதியானவையாகவும் அதிகமாகவும் மற்ற அரிசி, கோதுமை, கரும்பும் விவசாய பொருளாக விளைவிக்கப்பட்டன. கருப்பு மற்றும் வண்டல் மண்ணும் அதிகம் நிறைந்திருந்ததால் பஞ்சும், வேற்கடலையும் அதிகம் விளைக்க முடிந்தது. நிலத்தின் தன்மையினால் இங்கு விளையும் இவ்விரண்டு விளைபொருள்களுக்கும் தனி வரவேற்ப்பு உண்டு. இங்கு வளர்க்கப்படும் பருத்தி ஒரு பட்டு போன்ற மெல்லிய நூல்களை உருவாக்க ஏற்றது என்பதே இதன் காரணம்.

சுதந்திரத்திற்குப் பிறகு இந்த பகுதி சௌவுராஷ்டிரா மாநிலமாகவே இருந்தது, ஆனால் மாநில மறுசீரமைப்பின் போது இந்த பகுதி பம்பாயுடன் ஒன்றிணைந்து இறுதியாக குஜராத்தில் இணைந்தது.

சௌராஷ்ட்ரா மொழி

கஜனி முகமத் சோமநாத்தின் மீது பதினேழு முறை படையெடுத்து சௌராஷ்ட்ரா பிரதேசத்தையே அழித்து மக்களை அச்சுறுத்தி அங்குள்ள மக்கள் வேறு இடம் தேடி செல்லவேண்டிய நிலையை உருவாக்கினான். 1000 முதல் 1027வரை நடந்த இப்படையெடுப்பில் செல்வங்கள் அழிந்து ஏழ்மைக்கு தள்ளப்பட்ட சௌராஷ்ட்ர மக்கள் கூட்டம் கூட்டமாக இங்கிருந்து வெளியேறினார்கள். வேலை தேடி நல் வாழ்க்கையை தேடி பாதுகாப்பு தேடி வேறு இராஜ்ஜியங்களில் இவர்கள் குடியேற தொடங்கினர்கள். கஜனியின் படையெடுப்பால் ஒடுக்கப்பட்ட இவர்கள் பாதுகாப்பு அளிக்கும் பாரதத்தின் இதர இராஜ்ஜியங்களில் வசிக்க ஆரம்பித்தனர்கள்.

இப்படி புலம்பெயர்ந்த சமூகத்தினரின் சிறப்பு அம்சம் என்னவென்றால் அவர்கள் தொடர்ந்து தங்கள் மொழியைப் பேசி வந்ததேயாகும். முகமதியர்களின் ஆக்ரமிப்பு வடக்கிலிருந்து தொடர்ந்து வந்ததினால், இவர்கள் பல இடங்கள் பார்க்க வேண்டி வந்தது. விஜயநகர சாம்ராஜ்யம் நிறுவிய பிறகு பாரதத்தின் தென் பகுதியில் அமைதி திரும்ப நிலை நிறுத்தப்பட்டது. தங்கள் பிராந்தியத்திலிருந்து புறப்பட்ட சௌராஷ்ட்ரா மக்கள் பாரதத்தின் தெற்கு பகுதியில் குடியேற தொடங்கினார்கள். இவர்களின் இந்த எழுநூறு வருட பயண வரலாற்றை அவர்களின் மொழியை கொண்டுதான் ஆராய முடியும்.

மதுரை சௌராஷ்ட்ரா சமூகம்

சீதாராம ஆஞ்சநேய மடாலயம், அலங்கார் திரையரங்கம் பின்புறம், மதுரை தாங்கள் பிராந்தியத்திலிருந்து ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் பயணித்த இவர்கள் தங்கள் வாழ்க்கையில் பெரும் கொந்தளிப்புக்கு ஆளானார்கள். அவர்களின் வாழ்வாதாரத்திற்காக எந்தவொரு தொழிலையும் மேற்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. பருத்தியிலிருந்து பட்டு போன்ற மெல்லிய நூல்களை உருவாக்கும் கலையில் வல்லவர்களான அவர்கள் மெல்லிய நூல் தயாரிப்பதும், அம்மெல்லிய நூல்களில் அழகிய பட்டு போன்ற துணிகள் நெய்வதும் சுலபமாக கைவந்த கலையாக வளர்த்துக் கொண்டனர். புலம் பெயர்ந்த இடமெல்லாம் இவர்கள் இத்தொழிலையே செய்து வந்ததால், இவர்கள் தமிழகத்தில் "பட்டுநூல்காரர்கள்" என்றே பிரபலமானார்கள். சிறந்த கைவண்ணக்காரர்கள் என்பதால் பல மன்னர்கள் இவர்களை ஆதரித்தனர். அப்படி ஆதரித்தவர்களில் மதுரையை ஆண்டவர்களும் ஒரு வம்சம், அதனால் மதுரையிலும் இவர்கள் குடியேறினார்கள்.

புலம் பெயர்ந்து குடியேறிய இடங்களில் இவர்கள் பல திருக்கோயில்கள் நிறுவியுள்ளனர். அப்படி இவர்கள் மதுரையிலும் பல திருக்கோயில்கள் நிறுவியுள்ளனர், அவைகளில் ஶ்ரீஆஞ்சநேயருக்கான கோயில்களும் பல உண்டு.

ஶ்ரீ சீதாராம ஆஞ்சநேயர் திருக்கோயில்

மிகவும் பழமை வாய்ந்த ஶ்ரீஆஞ்சநேயருக்கான சிறிய அழகான திருக்கோயில் மதுரை அலங்கார் தியேட்டரின் பின்புறம் உள்ள மகாலிங்கம் சேர்வை சந்தில் அமைந்துள்ளது. சௌராஷ்ட்ரா சமூகத்தினர்களின் பராமரிப்பில் உள்ள திருக்கோயில் இது.

கோயிலின் வரலாறு

ஶ்ரீமாத்வாசாரியாரால் நிறுவப்பட்ட த்வைத தத்துவம் பலரால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. விஜயநகர் சாம்ராஜ்யத்தின் ஆட்சியின் போது பல மன்னர்கள் இத்தத்துவத்தை பின்பற்றினர். அப்படி தழைத்த காலத்தில் இத்தத்துவத்தை சார்ந்த மடாதிபதிகளும், யோகிகளும் இராஜ்ஜியத்தின் பல இடங்களுக்கு விஜயம் செய்தனர், தங்கள் கொள்கையை பரப்பினர். மாதவ மடங்கள் என்று பல அமைப்புகள் இருந்தன, அவர்கள் த்வைத தத்துவத்தின் நடைமுறையை பிரசாரம் செய்தனர்கள். அத்தகைய மடங்களில் கோலார் அருகே தம்பள்ளியை தலைமையகமாகக் கொண்ட ஸ்ரீ மாதவ தீர்த்த மடமும் ஒன்று. இம்மடத்தினை ஶ்ரீமாதவ தீர்த்த மடம் என்றோ அல்லது தம்பள்ளி மடம் என்றோ அல்லது மஸ்ஜிஜிஹல்லி மடம் என்றோ அழைப்பார்கள். ஶ்ரீமதுஹரி தீர்த்தர் என்பவரால் ஸ்தாபனம் செய்யப்பட்ட இம்மடத்தின் பதிமூன்றாம் மடாதிபதியாக இருந்த ஶ்ரீராம மாதவ தீர்த்தர் 1720ஆம் ஆண்டு மதுரைக்கு விஜயம் செய்தார். அப்படி அவர் விஜயம் செய்த சமயத்தில் பல சௌராஷ்ட்ரர்கள் த்வைத தத்துவத்தால் ஈர்க்கப்பட்டு மாத்வ தீக்ஷை எடுத்துக் கொண்டு மாத்வர்களாக மாறினார்கள்.

ஶ்ரீ ஆஞ்சநேயர், சீதாராம ஆஞ்சநேய மடாலயம், அலங்கார் திரையரங்கம் பின்புறம், மதுரை இந்த வைபவத்தில் ஶ்ரீராம மாதவ தீர்த்தர் அவர்கள் ஶ்ரீமுக்கிய பிராணரை [ஶ்ரீ ஆஞ்சநேயரை] பிரதிஷ்டித்தார். பிரதிஷ்டை செய்யப்பட்ட சரியான நாள் தெரியவில்லை என்றாலும் ஶ்ரீராம மாதவ தீர்த்தர் மதுரையை சுற்றி பல இதங்களுக்கு விஜயம் செய்த 1720க்கும் 1740க்கும் இடைப்பட்ட நாட்களில் இத்திருக்கோயிலை ஸ்தாபனம் செய்துள்ளார். அதனால் இக்கோயில் சுமார் இருநூற்று எண்பது ஆண்டுகள் பழமையானது என்று சொல்லலாம். இத்திருக்கோயிலில் ஶ்ரீமுக்கிய ப்ராணர் பிரதிஷ்டை செய்யப்பட்ட நாள் முதல் சௌராஷ்ட்ரர்கள் மாத்வ சம்பிரதாயத்தின் படி பூஜைகள் செய்து வருகின்றனர்.

கோயில் பராமரிப்பு

ஶ்ரீமாதவ தீர்த்த மடத்தை பின்பற்றுபவர்கள் இத்திருக்கோயிலை முதலிலிருந்து பராமரித்து வந்துள்ளனர். பின்பு இவர்கள் ஒன்று கூடி "மதுரை வேதாத்யயன ஸபா" என்ற அறக்கட்டளையை 1924ஆம் ஆண்டு தொடங்கி அதன் கீழ் பராமரித்து வருகின்றனர். திருக்கோயிலை பராமரிப்பதை தவிர உருப்பினர்களுக்கு தேவையும், மற்ற வைதிக வசதிகளும் செய்துக் கொடுக்கின்றனர்.

ஶ்ரீஆஞ்சநேய சுவாமி

இந்த க்ஷேத்திரத்தின் ஸ்ரீ அஞ்சநேய சுவாமி நின்ற கோலத்தில் உள்ளர். அவரது வலது கால் முன் வைத்துள்ளார். திரு திருப்பாதங்களையும் தண்டை அலங்கரிக்கிறது. அவரது ஆடு தசையும் துடையும் அவரது வலிமையை எடுத்துச் சொல்லுகிறது. கௌபீனம் அணிந்துள்ளார், இடுப்பில் அரையணி உள்ளது. அவரது திருகரங்களை கூப்பிய வண்ணம் அஞ்சலி ஹஸ்தராக காணப்படுகிறார். பரந்த மார்பில் சர மணிமாலையும் முப்புரி நூலும் கழுத்தை ஒட்டி அட்டிகையும் காணப்படுகிறது. காதில் அணிந்துள்ள குண்டலம் அவரது தோள்களை தொடுகிறது. காதில் ’கர்ண புஷ்பம்’ என்னும் அணியும் காணப்படுகிறது. அழகாக சீவி வாரப்பட்ட அவரது கேசத்தை பிடித்திருக்கும் அணி சிறிய மகுடம் போன்று காணப்படுகிறது. பிரபுவின் கண்கள் பக்தர்களை அன்புடன் கருணையுடனும் ஆசீர்வதிக்கிறது.

 

திருக்கோயில் இருப்பிடம் :     ஶ்ரீ ஆஞ்சநேயர், சீதாராம ஆஞ்சநேய மடாலயம், மதுரை

 

அனுபவம்
ஒரு உயர்வான பீடத்தில் நிற்கும் பிரபுவை பக்தர்கள் ஒரு முறை பார்த்தாலே போதும், அவர்களுக்கு அமைதியையும் உணர்ச்சி பூர்வமான அன்பையும் தருகிறார், அது பக்தரின் எண்ணங்களை புதிய உயரத்திற்கு எடுத்துச் செல்வது நிச்சயம்.  

தமிழாக்கம் :திருமதி. ஸ்ரீமதி
பதிப்பு: நவம்பர் 2020


 

 

ஆஞ்சநேய ஸ்வாமி புகழ் வாழ்க

காற்று ஈன்ற காவியமே எம்மை காத்தருள்வாய்
நம்பினோம் நாவரசை நாங்களே
+