home-vayusutha: ஸ்லோகம் கோவில்கள் கட்டுரைகள்
boat

சித்பலி திருக்கோயில், கோட்த்வார், உத்தரகண்ட், by Sweta Rawat - Wiki Commons, Public Domain


ஸ்ரீ சித்பலி திருக்கோயில், கோட்த்வார், உத்தரகண்ட்

டாக்டர் கௌசல்யா


கோட்த்வார்

முசோரியில் ஒரு டாக்டர்கள் கருத்தரங்கில் கலந்துகொள்ள நாங்கள் சென்று கொண்டிருந்தோம். நாங்கள் டெல்லியில் இருந்து கோட்த்வார் வரை “முசோரி எக்ஸ்பிரஸ்” மூலம் சென்றோம், அங்கிருந்து நாங்கள் முசோரிக்கு காரில் செல்ல வேண்டியிருந்தது. டெல்லியில் இருந்து முசோரிக்கு காரில் செல்வது அயர்வாக இருந்திருக்கும் என்பதால் நாங்கள் இந்த வழியை தேர்தெடுத்தோம்.

நாங்கள் கோட்த்வார் ரயில் நிலையத்தை அடைந்ததும், எங்களுக்கு ஒரு இன்பமான அதிர்ச்சி. அவ்விடத்தின் பருவநிலை மிகவும் நன்றாக அனுபவிக்க தக்கதாக, நாவல்களில் விவரிக்கபடும் இனிமையான சூழ்நிலைக்கு அழைத்துச்சென்றது. நாங்கள் அங்கிருந்து முசோரிக்கு பயணம் மேற்கொள்வதற்கு முன்பு குளித்துவிட்டு காலை உணவை எடுத்துக் கொண்டோம். ரயில் நிலையத்தில் சித்பலி கோயிலுக்கு செல்ல இருக்கும் ஏராளமான யாத்ரீகர்கள் இருந்தனர்.

சித்பலி கோயில் பற்றி விசாரித்தபோது, ​​கோயில் ஸ்ரீ அனுமனின் கோவில் என்று எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டது. கோயிலுக்குச் சென்று ஸ்ரீ ஹனுமன்ஜீயை தரிசனம் செய்ததற்கு நாங்கள் பாக்கியவான்கள் தான்.

கோட்த்வார் பற்றி

இமயமலைப் பிராந்தியத்தின் நுழைவாயில், உத்தராகண்டின் இந்த கோட்த்வார், இங்கு கோஃ நதி இருப்பதால் இவ்விடம் இந்நதியின் பெயரால் கோட்த்வார் என்னும் பெயரைப் பெற்றது [த்வார் என்றால் நுழைவாயில்]. 1890 ஆம் ஆண்டில் பிரிட்டிஷ்களால் நிறுவப்பட்ட கோட்த்வார் ரயில் நிலையம் நாட்டின் பழமையான ரயில் நிலையங்களில் ஒன்றாகும். கோஃ என்பது ராம்கங்கா நதியின் துணை நதியாகும், ராம்கங்கா கங்கையின் துணை நதியாகும். கோட்த்வார் மலைகளால் சூழப்பட்ட இடம், எங்கு நோக்கினும் பசுமை நீங்கள் சொர்க்கத்தின் நடுவில் இருப்பதைப் போல உணர்வீர்கள்.

சித்பலி மந்திர்

சித்பலி என்ற பெயரில், சித் என்றால் சித்தர் மற்றும் பலி என்றால் பலவான் என்று பொருள். இங்குள்ள ஸ்ரீ ஹனுமான்ஜி இந்த பெயரில் கொண்டாடப்படுகிறார். அவர் சித்தரும் மற்றும் பலசாலியும் ஆவார். கோட்த்வார் ரயில் நிலையத்திலிருந்து நான்கு முதல் ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் இந்த திருக்கோயில் உள்ளது. இது கோஃ நதியின் மறு கரையில் அமைந்துள்ளது. ஆற்றில் அகலமான பாலம் யாத்ரீகர்கள் கோயிலுக்குச் செல்வதற்குப் பயன்படுத்தப்படுகிறது. இங்கிருந்து கோயிலின் பின்னணியில் மலையும் காடுகளும் கொண்ட ஒரு சிறிய குன்றின் மேல் அமைந்திருப்பதைப் பார்ப்பது ஒரு இனிமையான காட்சி. கோஃ நதி ஒரு "U" வளைவுவை எடுத்து ஸ்ரீ ஹனுமன்ஜி வசிக்கும் இந்த மலையை பிரதக்ஷணம் செய்வது மிகவும் சுவாரசியமான விசேடம்.

தல புராணம்

பல ஆண்டுகளாக தபஸ் செய்வதற்காக பல புனிதர்களையும் சாதுக்களையும் இந்த இடம் ஈர்த்தது. அப்படி தவம் எய்திய துறவிகளில் ஒருவர் ஸ்ரீ ஹனுமாரிடம் குறித்து தவம் செய்து இந்த குன்றின் உச்சியில் அநுபூதி பெற்றார். அந்த சித்த புருஷரின் சக்தி இங்கு வியாபித்து இருப்பதை பின்னர் பலர் உணர்ந்தனர்.

சமீப காலங்களில், இந்த புனித ஸ்தலத்தில் நடந்த ஒரு சம்பவம் இந்த இடம் புனிதமானது என்ற உண்மையை மீண்டும் நிலை நிறுத்தியது. பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் பணிபுரியும் ஒரு முஸ்லீம் அதிகாரி இந்த புனித இடம் வழியாக வேறு ஏதோ ஒரு இடத்திற்கு சென்று கொண்டிருந்தார். அவர் இவ்விடத்தை கடக்கும் போது திடீர் என்று மயக்கமடைந்தார். நீண்ட நேரத்திற்கு பிறகு நினைவு திரும்பிய அவர் அவ்விடத்தில் ஹனுமாருக்கும் சித்தருக்கும் கர்பகிரஹம் கட்ட சென்னதான விவரத்தை கூடியிருந்த மக்களிடம் எடுத்துரைத்தார். காலப்போக்கில் பின் வந்த பக்தர்கள்/சித்தர்கள் இரண்டு சிறு கற்களை அங்கு வைத்து [பிண்டி என்று இங்கு சொல்வார்கள்] ஒன்றில் ஶ்ரீஹனுமாரையும் மற்றதில் அந்த சித்த புருஷரையும் ஆவாகனம் செய்தனர். குரு ஸ்ரீ கோரக்நாத் அவர்களும் இங்கு தவம் செய்ததாகக் கூறப்படுகிறது. இதன் மூலம் அந்த இடம் சித்தர் + பலி - சித்பலி என்று அறியப்படுகிறது.

இவ்வாறு சித்பலி திருக்கோயில் வந்தது.

தற்போதைய சித்பலி கோயில்

பக்தர்கள் மலையின் உச்சியில் உள்ள கோயிலுக்கு சுமார் நூற்று ஐம்பது படிகள் ஏற வேண்டிம். இந்த கோயிலின் முக்கிய தெய்வங்கள் கர்பகிரகத்தில் வைக்கப்பட்டுள்ள இரண்டு பிண்டிகள் என்பதை வருகை தரும் பக்தர்கள் தயவுசெய்து கவனத்தில் கொள்ள வேண்டும். மாதா வைஷ்ணவ தேவி திருக்கோயிலிலும் இப்படி தான் மூன்று பிண்டிகள் உள்ளன என்பதை நினைவில் கொள்ளவும். மையத்தில் உள்ள பஜரங்பலியின் பிரமாண்ட சிலை சமீபத்தில் நிறுவப்பட்டது.

குன்றின் உச்சியை அடைந்ததும், தரிசனத்திற்காக வருகை தரும் பக்தர்களை ஒழுங்குபடுத்துவதற்காக தடுப்பு கம்பிகள் போட்டிருக்கும் திறந்தவெளியை பார்க்கலாம். இங்கிருந்து மலைகள், காடு மற்றும் நதி என்று சுற்றிலும் காட்சி பக்தர்களை மயக்கும் பின் மனதில் உள்ள அனைத்து எண்ணங்கள், கவலைகள் அகன்று தூய புதிய மனதுடன் சித்பலியின் தரிசனத்திற்கு தயாராகிவிடும்.

ஸ்ரீ பஜரங்பலியின் இருபுறமும் நிறுவப்பட்ட அந்த இரண்டு பிண்டிகளில் சித்தபுருஷ் மற்றும் ஹனுமன்ஜீயின் தரிசனம் செய்யுங்கள்.

 

திருக்கோயில் இருப்பிடம் :     " சித்பலி கோயில், கோட்வார், உத்தரகண்ட்"

 

அனுபவம்
சித்பலியின் தரிசனம் செய்யுங்கள், தாங்களின் உற்சாகம் மற்றும் வைராக்கியம் ஆகியவை அதிகரிக்கும், அதை தாங்களால் உணர முடியும்.

தமிழாக்கம் : திருமதி. ஸ்ரீமதி
பதிப்பு: ஆகஸ்ட் 2020


 

 

ஆஞ்சநேய ஸ்வாமி புகழ் வாழ்க

காற்று ஈன்ற காவியமே எம்மை காத்தருள்வாய்
நம்பினோம் நாவரசை நாங்களே
+