home-vayusutha: ஸ்லோகம் கோவில்கள் கட்டுரைகள்
boat

துல்யா மாருதி மந்திர், கணேஷ் பேட், புனே, மகாராஷ்டிரா


துல்யா மாருதி மந்திர், கணேஷ் பேட், புனே, மகாராஷ்டிரா

ஜீகே கௌசிக்


முந்தைய கால பூனே

இன்று புனே இந்தியாவின் சிறந்த நகரங்களில் ஒன்றாகும். இது மகாராஷ்டிராவின் கலாச்சார தலைநகரம் என்றும் அழைக்கப்படுகிறது. மனிதர்கள் எப்போதும் ஒரு நதியை ஒட்டியே குடியேறுவார்கள், பழங்காலத்திலிருந்தே இது பழக்கத்தில் இருக்கிறது. இதே வழியில் முத்தா நதிக்கரையில் ஒரு குடியேற்றம் இருந்தது. முத்தா நதியும் மூலா நதியுடன் சங்கமிக்கின்ற இடத்தின் அருகில் முத்தாவின் வலது கரையில் அமைந்துள்ளது இக்குகுடியேற்றம். இதுவே இன்றைய பூனேவின் விதைப்பு அல்லது தொடக்கமாகும். இந்த குடியேற்ற பகுதி தற்போது கசாபே என்று அழைக்கப்படுகிறது.

சிவாஜியின் தாத்தாவான மாலோஜி போன்ஸ்லேவை இரண்டாம் பகதூர் நிஜாம் (1596-1599), 1595 ஆம் ஆண்டு கௌரவித்தார். அவர் போன்ஸ்லேவுக்கு பூனா மற்றும் சூப்பாவை கோட்டைகளுடன் கொடுத்தார். அவர் சிவ்னர் மற்றும் சக்கன் மாவட்டங்களையும் அவருக்கு வழங்கினார். மாலோஜி பூனேவில் உள்ள கசாபேயில் [இராணுவ முகாம்] குடியேறினார்.

1630 ஆம் ஆண்டில் ஏழாவது பிஜாப்பூர் மன்னர் மெஹமூத்தின் படை தளபதி-மந்திரி முரார் ஜக்தேவினால் கசாபே முற்றிலுமாக அழிக்கப்பட்டது. 1635 ஆம் ஆண்டில் பிஜாப்பூரின் அதே மெஹமூத், பிஜாப்பூர் சேவையில் இருந்த சந்தர்ப்பத்தில், மாலோஜி போன்ஸ்லேவின் மகன் ஷாஹாஜி போன்ஸ்லேக்கு அவரது தந்தையின் பூனா மற்றும் சூப்பாவை வழங்கி உறுதிப்படுத்தியது. ஷாஹாஜி போன்ஸ்லே சிவாஜியின் தந்தை என்பது குறிப்பிடத்தக்கது.

இது சிவாஜி மகாராஜின் காலத்தில், நகரம் புனேவின் கசாபே மீண்டும் நிர்மாணிக்கப்பட்டது. கசாபே கணபதி கோயில் மற்றும் சிவாஜியின் தாயார் வசிக்க லால் மஹால் பூனேவில் உருவாக்கப்பட்டு பூனே மீண்டும் வசிப்பிடமாக மாறியது.

பாஜிராவ் பேஷ்வா பூனேவை தனது நிர்வாகத்திற்கான தலைமை மையமாக கொண்டு குடியேறியதும் புனேவின் உண்மையான வளர்ச்சி தொடங்கியது. புதிய பகுதிகள் உருவாக்கப்பட்டு பேட் என்று அழைக்கப்பட்டன. பேட் அடிப்படையில் ஒரு வணிக இருப்பிடம். [பெங்களூரு கூட பல பேட்கள் உருவாக்கப்பட்டது என்பதை நாம் காண முடியும்.] புதிய பேட்டைகள் ஒன்று அதை உருவாக்கிய நபரின் பெயரால் பெயரிடப்பட்டது அல்லது அது வாரத்தின் ஒரு நாளின் பெயரால் அழைக்கப்பட்டது.

பெயர் பூனே

துல்யா மாருதி மந்திரி, கணேஷ் பேட், புனே, மகாராஷ்டிரா வரலாற்றாசிரியர்களின் கூற்றுப்படி, புனேவில் முத்தா நதிக்கரையில் ஒரு பூனேஷ்வர் சிவன் கோயில் இருந்தது. பூனேஷ்வருடன் நாராயணேஸ்வர் என்ற மற்றொரு கோயிலும் இருந்தது. பதின்மூன்றாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பூனேஷ்வர் கோயில் இடிக்கப்பட்டு தற்போது "இளைய ஷேக் சல்லா தர்கா" என்று அழைக்கப்படும் தர்காவாக மாற்றப்பட்டு, இது இன்றுவரை அதே இடத்தில் உள்ளது.

பூனேவாடி

இந்த இடத்திற்கு பூனேஷ்வரில் இருந்து பூனே என்ற பெயர் வந்திருக்கலாம். பூனேவின் அசல் குடியேற்றம் பூனேவாடி என்று அழைக்கப்பட்டது. பூனேவாடி என்பது வடக்கே முத்தா நதி, மேற்கில் அம்பில் நீரோடை மற்றும் கிழக்கில் நாக்சரி நீரோடை ஆகியவற்றுக்கு இடையில் அமைந்துள்ள இடமாகும். குடியேற்றங்கள் நாக்சரி நீரோடை மற்றும் அம்பில் நீரோடையை ஒட்டியே பல குடியிருப்புகள் வரத்தொடங்கின. இந்த குடியிருப்புகளின் ஊடே பல்வேறு கோயில்கள் பரவியிருந்தன. ஶ்ரீநாராயணேஸ்வர், ஶ்ரீபூனேஷ்வர், ஶ்ரீகேதரேஷ்வர் மற்றும் கசாபா ஶ்ரீகணபதி ஆகிய கோயில்களை குறிப்பிடலாம்.

நாகசாரி நீரோடை

நாகசாரி நீரோடை கரையில் பல கோயில்கள் வரிசையாக அமைந்துள்ளது, இந்நீரோடை "நாகதீர்த்" என்றும் அழைக்கப்படுகிறது, இது அந்த நாட்களில் மக்களிடம் ஒரு புனித நதியாக கருதப்பட்டதை காட்டுகிறது. ஸ்ரீ நாமதேவ் இந்த நதியைப் பற்றி தனது படைப்பில் குறிப்பிட்டுள்ளது இதை காட்டுகிறது. இந்த ஓடையிலுள்ள பல கோயில்களில், ஸ்ரீ மாருதிக்கு அர்ப்பணிக்கப்பட்ட கோவிலைப் பார்ப்போம்.

கணேஷ், மாசோபா மற்றும் மாருதி மந்திர்

ஒவ்வொரு கிராமத்தின் எல்லையிலும் ஸ்ரீ விநாயகர் மற்றும் ஸ்ரீ மாருதிக்கு ஒரு கோயில் இருப்பது வழக்கம். இந்த நடைமுறையை இன்றைய ஆந்திரா, கர்நாடகா மற்றும் மகாராஷ்டிராவில் இருப்பதை காணலாம். இந்த இரண்டு தெய்வங்களைத் தவிர, மகாராஷ்டிராவின் பல கிராமங்களிலும் ஸ்ரீ மசோபாவுக்கான கோயில் உள்ளது. இந்த கோயில்கள் அனைத்தும் கிராமத்தின் எல்லையில் காணப்பட்டன, மேலும் அவை எல்லா தடைகளையும் நீக்கி கிராமத்தைக் காத்து நல்ல செழிப்பைக் கொடுக்கும் என்று நம்பப்பட்டது.

பூனே இந்த நடைமுறைக்கு விதிவிலக்கல்ல. ஒவ்வொரு முறையும் ஒரு புதிய பேட் உருவாக்கப்படும்போதும் அல்லது இருக்கும் பேட்டின் எல்லை மாற்றியமைக்கப்பட்டாலும், எல்லையைக் குறிக்க வரும் இக்கோயில்கள் அமைக்கப்படும்.

புனேவின் பேட்டைகள்

அதிக மக்கள் வரவாலும் ஆட்சியாளர்களின் பெரிய நடவடிக்கைகளாலும் புனேவாடி விரிவடையத் தொடங்கியது. மக்கள் குடியேற புதிய பகுதிகள் சேர்க்கப்பட்டன. ஒவ்வொரு முறையும் ஒரு புதிய பகுதி சேர்க்கப்படும் பொழுது புதிய பகுதியின் எல்லையானது எல்லையில் ஒரு கோயிலுடன் வரையறுக்கப்படுத்தப் பட்டது. ஶ்ரீமாருதி பாதுகாவலராக கருதப்படுவதால் வழக்கமாக இது ஸ்ரீ மாருதியின் கோயிலாகதான் இருக்கும். . இந்த விரிவாக்கங்கள் ஒவ்வொரு ஆட்சியாளரின் கீழும் தொடர்ந்து நடந்தது; எனவே இந்த காலங்களில் புதிய பேட்டைகள் உருவாகி கொண்டிருந்தன. பேட்டைகள் பெரும்பாலும் பேட்டையை நிறுவனர் அல்லது திட்டமிடுபவர் பெயரை தாங்கி நின்றது. அல்லது வாரத்தின் வரும் நாட்களின் பெயரிடப்பட்டது. சில நேரங்களில் முந்தைய பேட்டையை மாற்றியமைப்பதன் மூலம் புதிய பேட்டைகள் உருவாக்கப்பட்டன. இருந்தும் இந்த பேட்டைகள் அனைத்தும் ஸ்ரீ மாருதி மந்திரைக் கொண்டிருந்தன.

மாருதி மந்திர்

துல்யா மாருதி மந்திர், கணேஷ் பெத், புனே, மகாராஷ்டிரா சிவாஜி மகாராஜ் தனது குருவாக ஏற்றுக்கொண்ட ஸ்ரீ சமர்த ராம்தாஸ் சுவாமி [1608 - 1681] ஸ்ரீ ராமரின் சிறந்த பக்தர் மற்றும் ஹனுமான் மறுபிறப்பாக கருதப்படுகிறவர். அவர் இந்த நகரத்திற்கு விஜயம் செய்தபோது நாக்தீர்த்தின் கரையில் ஒரு மாருதியை பிரதிஷ்டை செய்தார்.

புனேவின் வளர்ச்சியின் ஒரு கட்டத்தில், சர்தார் ஜீவாஜிபந்த் காஸ்கிவாலே இந்த பகுதியை உருவாக்கி, 1775 ஆம் ஆண்டில் விநாயகர் பெயராக கணேஷ் பேட் என்று பெயரிட்டார். மாருதிக்கா சமர்த ராமதாஸ் அவர்கள் கட்டிய திருக்கோயில் தற்போது ஜக்தாப் சாலை மற்றும் லட்சுமி சாலை சந்திப்பில் 260, லக்ஷ்மி சாலை, ராஜே வாடி, நியூ நானா பேட், கணேஷ் பேட், புனே இது அமைந்துள்ளது.

பரத கண்டத்தில் மராட்டியர்களின் எழுச்சி

பாரத மக்கள் தங்களை தாங்களே ஆள முடியும் என்று சத்ரபதி சிவாஜி மீண்டும் நிரூபித்த பின்னர்; மராட்டிய ஆட்சி விரிவடையத் தொடங்கியது. இந்த படைகளின் தலைவர்கள் மராட்டியர்கள், இந்த ஆட்சியின் விரிவாக்கம் தெற்கே தஞ்சாவூரிலிருந்து பாரதத்தின் வடக்கு திக்கு வரை பரவியிருந்தது. இந்த மராட்டியர்களின் சக்தியின் வலிமையை "பானிபட் மூன்றாம் போர்" மூலம் நிரூபணம் செய்ய வேண்டி சவாலாக அமைந்தது.

பானிபட் மூன்றாவது போர்

மூன்றாவது பானிபட் போர் 1761 ஜனவரி 14 அன்று பானிபட்டில், மராட்டிய பேரரசின் வடக்குப் படை மற்றும் ஆப்கானிஸ்தான் மன்னர் அஹ்மத் ஷா அப்தாலியின் படைகளுக்கு இடையில் நடந்தது, ஆப்கானிய மன்னருக்கு இரண்டு இந்திய முஸ்லீம் கூட்டாளிகளாக ரோஹில்லா ஆப்கானி மற்றும் அவத் நவாப் ஷுஜா-உத்துல்லா போரில் இறங்கினார்கள்.

பஞ்சாப்பில் சட்லெஜ் ஆற்றின் வடக்கு வரை மராட்டியர்கள் ஆப்கானியர்களிடம் அதிகாரத்தை இழந்தனர். அஹ்மத் ஷா துரானி போருக்குப் பிறகு விரைவில் டெல்லியை விட்டு வெளியேறினார். மராட்டியர்களின் விரிவாக்கம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

இந்த போரின் விளைவாக, போரில் சுமார் 30,000-40,000 போராளிகள் கொல்லப்பட்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இது ஒன்றும் பெரிய விஷயமல்ல, ஆனால் போரைத் தொடர்ந்து மற்றொரு 40,000–70,000 போராளி அல்லாதவர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

மாருதி துல்யா மாருதி ஆகிறார்

துல்யா மாருதி, கணேஷ் பேட், புனே, மகாராஷ்டிரா புனித நாக்தீர்த்த கரையில் ஸ்ரீ சமர்த ராமதாஸ் சுவாமிகளால் நிறுவப்பட்ட மாருதி தொலைதூர இடமான பானிபட்டில் நடக்கும் தர்மத்திற்கு புறம்பாக நடக்கும் காரியத்தை உணர்ந்தார். படுகொலை செய்யப்பட்டது கிட்டத்தட்ட ஒரு லட்சம் பேர்! மாருதியால் இதைத் தாங்க முடியவில்லை, துக்கம் அவரைக் கவ்வியது, அவர் கோபத்தில் திணறினார் அக்கோபத்தில் சிலை ஆடியது. மக்கள் இதைப் பார்த்து திகைத்தனர். அன்று முதல் இந்த மாருதியை "துல்யா மாருதி" என்று அழைக்கலாயினர். மராத்தியில் “துல்யா" என்றால் பக்கவாட்டில் ஆடுவது என்று பொருள்படும்.

ஸ்ரீ சமர்த ராமதாஸரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட இம்மாருதி தர்மத்தை நிலைநிறுத்தவும் விரிவாக்கப்பட வேண்டும் என கருதினார் போலும். தற்காலிகமாக தடைப்பட்ட தர்மத்தின் ஆட்சி மாருதி பகவானின் ஆசீர்வாதத்துடன் புதிய வீரியத்துடன் மீண்டும் எழுந்து பாரத தேசத்தையே உலுக்கியது.

பானிபட் போரில் உயிர் இழந்த மராட்டிய தளபதி ஸ்ரீ சதாஷிவ்ராவ் பாவின் நினைவாக 1769 ஆம் ஆண்டில் புனேவில் ஒரு புதிய பேட் "சதாஷிவ் பேட்" என்ற பெயரில் உருவாக்கப்பட்டது.

துல்யா மாருதி மந்திர்

மாருதிக்கான இந்த பெரிய கோயில் தற்போது ஜக்தாப் சாலை மற்றும் லட்சுமி சாலை சந்திப்பில் லக்ஷ்மி சாலை, ராஜே வாடி, நியூ நானா பேட், கணேஷ் பேட் இல் காணப்படுகிறது. கோயில் சாலையின் நடுவில் உள்ளது மற்றும் லட்சுமி சாலை இரண்டாகப் பிரிக்கப்பட்டு, மந்திரிக்குப் பிறகு சாலை மீண்டும் இணைகிறது.

துல்யா மாருதி மந்திர், கணேஷ் பெத், புனே, மகாராஷ்டிரா :: courtesy : கூகிள் மேப்- ஸ்ரீ அன்கித் ஆர்கேடே பழைய நகரத்தின் கிழக்கு எல்லையில் உள்ள நாக்த்ரீத் நீரோடை அருகே ஸ்ரீ ஸ்மர்த்த ராமதாஸால் பிரதிஷ்டை செய்யப்பட்ட மாருதி. இந்த மாருதியிற்கு கோயில் 1680 ஆம் ஆண்டில் நாரோ அனந்த் நாத்துவால் கட்டப்பட்டது, ரவிவார் பேட்டில் உள்ள சோமேஷ்வர் கோயிலையும் இவர் தான் கட்டினார். இந்த கட்டிடம் 1780 ஆம் ஆண்டில் ஸ்ரீமதி ரக்மபாய் ஜோஹாரி என்பவரால் பழுதுபார்க்கப்பட்டு விரிவாக்கப்பட்டது.

இதே சமயத்தில் மாருதியின் எதிரில் பாலாஜிக்கு இரண்டாவது கோயில் மக்னா என்பவரால் சேர்க்கப்பட்டது. 1830 ஆம் ஆண்டில், இரண்டு கோயில்களும் புதுப்பிக்கப்பட்டு, இந்த கோவில்களில் சேருக்கும் ஒரு புதிய கூரையிட்ட பாதை கட்டப்பட்டது. கணேஷ் பேட் மக்களிடையே நிதி திரட்டிய ரூ .1500 செலவில் இக்காரியம் செய்யப்பட்டது. இந்த கோவிலுக்கு மாதந்தோறும் பார்வதி கோயில் வருவாயிலிருந்து நான்கு ரூபாய் நன்கொடையாக வழங்கப்படுகிறது.

மேலே குறிப்பிட்ட இரண்டு கோயில்களும் ஒரே கோவிலாக மாற்றப்பட்டது. மாருதி சன்னதிக்கும் பாலாஜியின் சன்னதிக்கும் இடையில் இருக்கும் பகுதி சுமார் முப்பது அடி உயரத்தில் கூரை வேயப்பட்டுள்ளது. தற்போது இது இரு கோயில்களுக்கும் இடையில் ஒரு மண்டபம் போல் உள்ளது. மாருதி ஆலயமும் பாலாஜி சன்னதியும் தனித்தனி கோயில்களாக வடிவமைக்கப்பட்டுள்ளதால், சன்னிதிகளைச் சுற்றி [கர்பகிரஹம்] வலம்வர இடம் உள்ளது. சன்னிதி ஒவ்வொன்றும் தனித்தனி நுழைவாயில்களுடன் இருபது சதுரஅடி பரப்பில் உள்ளன. நடுவில் உள்ள மண்டபம் நாற்பது அடி நீளமும் முப்பது அடி அகலமும் கொண்டது.

துல்யா மாருதி

துல்யா மாருதி, கணேஷ் பெத், புனே, மகாராஷ்டிரா மாருதி சிலை கடினமான கருப்பு கிரானைட் கல்லில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த சிலை சுமார் ஐந்து அடி உயரமும் இரண்டரை முதல் மூன்று அடி அகலமும் கொண்டது. பிரபு மேற்கு நோக்கி இருக்கிறார். அவரது தாமரை திருவடிகளின் கீழ் ஒரு ராக்ஷஸன் காணப்படுகிறான். ராக்ஷஸன் தனது இடது கையில் ஒரு கதையைப் பிடித்திருப்பதைக் காணலாம். ரக்ஷஸன் தலை பிரபுவின் இடது காலின் கீழ் காணப்படுகையில், ரக்ஷஸனின் கால்கள் பிரபுவின் வலது காலின் கீழ் காணப்படுகின்றது. பிரபு கணுக்கால் வரை முழு வேஷ்டி அணிந்துள்ளார். வேஷ்டியை அவரது இடுப்பில் அலங்காரமான அணிகலத்தினால் உறுதியாக உள்ளது.

பிரபுவின் மார்பில் தொப்பிள் வரை தொங்கும் இரட்டை வடம் மணிமாலை அலங்கரிக்கிறது. பதக்கத்துடன் கூடிய மற்றொரு மாலையும் உள்ளது. அவரது மேல் கையில் அவர் கேயூரம் அணிந்துள்ளார், மணிக்கட்டில் ‘கங்கணம்’ காணப்படுகிறது. அவர் உயர்த்திய வலது கையால் ‘அபய முத்திரையைக் காட்டுகிறார், இடது கை அவரது இடுப்பில் இருக்கிறது. பிரபுவின் வால் அவரது தலைக்கு மேலே வளைவுடன் முடிவில் சுழன்று இருப்பது வாலுக்கு அழகு சேர்க்கிறது. அந்த நாளைய [சிவாஜி] மராட்டிய பாணியில் அவர் தலைப்பாகை அணிந்திருப்பதைக் காணலாம். அருளை அள்ளிக் கொட்டும் பிரமாண்டமான அழகிய, புகழ்பெற்ற கண்களைக் கொண்ட நேர் கொண்ட முகம், மொத்ததில் ஆண்டவர் ரம்யமானவர்.

 

திருக்கோயில் இருப்பிடம் :     துல்யா மாருதி மந்திர், கணேஷ் பேட், புனே, மகாராஷ்டிரா

 

அனுபவம்
ஸ்ரீ துல்யா மாருதியின் தரிசனத்திற்குப் பிறகு, அவரது பக்தர் இழந்த தன்னம்பிக்கையை மீண்டும் பெறுவார் மற்றும் எதிர்கால அனைத்து முயற்சிகளிலும் வெற்றியை அடைவார் என்பது உறுதி, ஏனெனில் இந்த க்ஷேத்திரத்தின் இறைவன் எப்போதும் எல்லோரிடமும் இரக்கமுடையவர்.

தமிழாக்கம் :திருமதி. ஸ்ரீமதி
முதல் பதிப்பு: ஜூன் 2020
திருத்தப்பட்ட பதிப்பு: செப்டம்பர் 2020


 

 

ஆஞ்சநேய ஸ்வாமி புகழ் வாழ்க

காற்று ஈன்ற காவியமே எம்மை காத்தருள்வாய்
நம்பினோம் நாவரசை நாங்களே
+