home-vayusutha: ஸ்லோகம் கோவில்கள் கட்டுரைகள்
    மின்னஞ்சல் விருந்தினர் ஏடு
boat

மே 1944-இல் நிலவிய ஸ்ரீ ஜெயமங்கள அஞ்சநேயா கோயில், இடுகம்பாளையம், சிறுமுகை, கோயம்புத்தூர்


ஸ்ரீ ஜெயமங்கள ஆஞ்சநேயர் கோயில், இடுகம்பாளையம், சிறுமுகை, கோவை

ஜீகே கௌசிக்


சிறுமுகை

நுழைவு வளைவு, ஸ்ரீ ஜெயமங்கள ஆஞ்சநேயர் கோயில், இடுகம்பாளையம், சிறுமுகை, கோவை கோவை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள் மதுரை சுல்தான்களின் ஆட்சியில் இருந்தன. விஜயநகர் பேரரசர் 1378 ஆம் ஆண்டில் மதுரை சுல்தானை வென்றார், அதன் பின் சுல்தானின் ஆட்சியின் கீழ் இருந்த அனைத்து பகுதிகளும் விஜயநகர் சாம்ராஜ்யத்தின் புக்கா -1 இன் கீழ் வந்தது. விஜயநகர் பின்னர் அவர்களின் மகா நாயக்கிற்கு தன்னாட்சி அதிகாரத்தை வழங்கி, மதுரையை தலைநகராக கொண்ட சுதந்திர ஆட்சியை உருவாக்க வழி வகுத்தார். இந்த வம்சம் மதுரை நாயக்கர்கள் என்று அழைக்கப்படுகிறது. திருமலை நாயக்கர் மற்றும் ராணி மங்கம்மா ஆகியோர் இவ்வம்சத்தில் பிரபலமானவர்கள்.

பின்னர் 18 ஆம் நூற்றாண்டில் கோயம்புத்தூர் மைசூர் ஆட்சியாளர்களின் கீழ் வந்தது. மைசூரு அருகே இருக்கும் ஸ்ரீரங்கப்பட்டணத்தை தலைநகரமாக கொண்டு ஆட்சி செலுத்திய மைசூர் மகாராஜாக்கள், அனுமனின் பக்தர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

கோயம்புத்தூருக்கு வடக்கே நாற்பத்தைந்து கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள சிறுமுகை, மேட்டுப்பாளையம் செல்லும் வழியில் உள்ளது. இன்று சிறுமுகை இங்கு தயாரிக்கப்படும் மிகச்சிறந்த பட்டு புடவைகளுக்கு பெயர் பெற்றது. கோயம்புத்தூரில் தயாரிக்கப்படும் சிறந்த நூற்கள் கிடைப்பதால், இங்கு பலரும் நெசவுத் தொழிலை சிறந்த முறையில் செய்யமுடிகிறது. நெசவை முக்கிய தொழிலாக கொண்ட பலர் பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே இங்கு குடியேறியுள்ளனர். அருகில் பவானி நதி ஓடுவதும் காரணம். 18 ஆம் நூற்றாண்டின் போது இந்த பகுதி ஆட்சியாளர்களின் பிரதிநிதிகளான பாளையகாரரால் நிர்வகிக்கப்பட்டது.

இடுகம்பாளையம்

கொடிமரம், ஸ்ரீ ஜெயமங்கள ஆஞ்சநேயர் கோயில், இடுகம்பாளையம், சிறுமுகை, கோவை முன்னர் இராணுவ முகாம்கள் அமைக்கப்பட்டால், அந்த குறிப்பிட்ட இடம் "பாளையம்" என்ற பின்னொட்டுடன் அழைக்கப்படும். சிருமுகை அருகே பாளையகாரர் அவர்களின் இராணுவ முகாம் இருந்தபோது, ​​இடுகம் என்னும் இடம் இடுகம்பாளையம் ஆனது. இந்த இடம் சிறுமுகைக்கு அருகில் உள்ளது, ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.

பாளையத்தைச் சேர்ந்த அனுமன்

பாளையகாரார் இராணுவ முகாம் அமைப்பதற்கு முன்பே, இந்த இடத்தில் ஸ்ரீ ஹனுமனுக்கான கோயில் இருந்திருக்க வேண்டும். ஶ்ரீஹனுமான் விஜயநகர், மதுரை நாயக்கர்கள் மற்றும் மைசூர் மகாராஜாக்கள் ஆகியோரால் ஆராதிக்கப்படுபவர் ஆவார். எனவே இந்த ஆட்சியாளர்களில் யாராவது ஸ்ரீ ஹனுமனுக்காக இந்த கோவிலை நிறுவியிருக்கலாம். ஸ்ரீ ஹனுமான் கோயில் இருப்பதைப் பற்றி கிராம மக்களுக்கு வெளியே பல ஆண்டுகளாக தெரியும்.

கோவிலில் உள்ள கல்வெட்டுகள் மற்றும் ஒரு 'மீன்' சின்னம் இருப்பது, சிவா பார்வதியின் சன்னிதியில் பாண்டிய வம்சத்தின் அரச அடையாளம், இது ஒரு கோவில் வளாகமாக இருந்திருக்கலாம் என்று கூறுகிறது. இந்து கோவில்கள் கொள்ளையடிக்கப்பட்டபோது இந்த பொக்கிஷங்கள் இழந்திருக்கலாம். ஆனால் ஸ்ரீ ஹனுமான் தாண்டி மீண்டும் வெளி வந்துள்ளார்.

அனுமனுக்கான கோயில்

ஸ்ரீ ஜெயமங்கள ஆஞ்சநேயர், இடுகம்பாளையம், சிறுமுகை, கோவை 90 களின் முற்பகுதி வரை ஸ்ரீ ஹனுமான் வான் நோக்கி திறந்தவெளியில் நின்று கொண்டிருந்தார், உள்ளூர்வாசிகள் தங்கள் பூஜைகளையும் பிரசாதங்களையும் தங்களுக்கே உள்ள எளிமையான வழியில் வழங்கினர்கள். 90 களின் நடுப்பகுதியில் கிராமவாசிகள் ஒன்று கூடி தங்கள் இறைவனுக்காக ஒரு சிறிய எளிமையான கோவிலைக் கட்டி, "ஸ்ரீ ஹனுமந்த ராயன் கோயில்" என்று அவ்வட்டார வழக்கில் அழைக்கலாயினர். நேர்மையுடனும் நம்பிக்கையுடனும் மக்கள் பூஜை செய்ததால் அவர்களின் வேண்டுகோள் ஹனுமந்தராயரால் நிறைவேற்றி வைக்கப்பட்டது. ஹனுமந்தராயரின் புகழ் சுற்று வட்டாரங்களுக்கு பரவியது. இன்று பக்தர்களின் பங்கேற்பால் கோயில் வளாகத்தை புதியதாகவும் பெரிதாகவும் புனருத்தாரணம் செய்துள்ளனர். கர்பகிரகம் பதினாறு அடி அகலமும் பதினாறு அடி நீளமும் உள்ளது, கர்பகிரகத்தின் முன் அர்த்த மண்டபம் பின்னர் ஒரு மகா மண்டபம் என்று விஸ்தாரமாக உள்ளது.

ஸ்ரீ ஹனுமந்தராயர்

ஹனுமந்தராயரின் சிலை சுமார் ஆறரை அடி உயரமும் ஐந்து அடி அகலமும் இருக்கலாம். மற்ற க்ஷேத்திரங்களைப் போலல்லாமல் இறைவன் 'யதுர் முகி', அதாவது அவருடைய பக்தர்கள் அவருடைய முழு முகத்தையும் தரிசனம் செய்ய முடியும். இறைவனின் வலது திருக்கரம் 'அபய முத்திரை' காட்டுவதன் மூலம் பக்தர்களுக்கு ஆசீகள் அளிக்கிறார். பிரபுவின் உள்ளங்கையில் ஒரு சிறிய 'சக்கரத்தையும்' காணலாம். இறைவனின் இடது திருக்கரத்தில் சௌகந்திகா மலாரை ​​வைத்திருக்கிறார். இன்னும் பூக்காத மலர் அவரது இடது தோள்பட்டைக்கு மேலே காணப்படுகிறது. அவர் தனது மார்பை அலங்கரிக்கும் ஆபரணங்களை அணிந்துள்ளார். இறைவனின் வால் வலது திருக்கரத்தின் பின்னால் காணப்படுகிறது. மற்றும் அவரது தலைக்கு மேலே எழும்பி ஒரு சிறிய வளைவுடன் முடியும் வாலின் முடிவில் அலங்காரமாக சிறிய மணி ஒன்று இதுக்கிறது.

அவரது ஒளிரும் கண்கள் இரண்டும் பக்தர்களை நேராகப் பார்க்கின்றன. வசீகரிக்கும் இப்பார்வை பக்தர்களை மயக்குவதில் வியப்பில்லை.

 

திருக்கோயில் இருப்பிடம் :     ஸ்ரீ ஜெயமங்கள ஆஞ்சநேயர் கோயில், சிறுமுகை, கோவை

 

அனுபவம்
இந்த க்ஷேத்திரத்தின் இறைவனின் தரிசனம் செய்யுங்கள். பக்தரை அடிமைப்படுத்தி, எல்லா ஏக்கங்களிலிருந்தும், எந்தக் கவலைகளிலிருந்தும் விடுவிப்பது உறுதி.

தமிழாக்கம் :திருமதி. ஸ்ரீமதி
முதல் பதிப்பு: மே 2020
திருத்தப்பட்ட பதிப்பு: செப்டம்பர் 2020


 

 

ஆஞ்சநேய ஸ்வாமி புகழ் வாழ்க

காற்று ஈன்ற காவியமே எம்மை காத்தருள்வாய்
நம்பினோம் நாவரசை நாங்களே
+