home-vayusutha: ஸ்லோகம் கோவில்கள் கட்டுரைகள்
boat

வாயு சுத: அனுமன் திருக்கோயில், சித்தபாரி, இமாசல பிரதேசம்

ஜீகே கௌசிக்


சித்தபாரி

ஸ்ரீ சின்மயானந்தா இனிமையான காட்சி, நீலமும் பச்சையும் குழைத்து அகண்ட தூறிகையால் வெண்மையான மலையை இலக்கியாக கொண்டு கண்ணுக்கு குளிர்ச்சியாய் இறைவனே வரைந்த படம் போல் இருக்கும் பிரதேசம் சித்தர்பாடி. நீல வானிலே வெண்மை பனியின் பின்னனியில் ஊர்ந்துச் செல்லும் மேகங்கள் நம் மனதை கொள்ளைக் கொள்வதில் அதிசயமில்லை. இப்படிப் பட்ட இடத்தில் மாமுனிகளும் தங்களை மறந்து தவம் புரிந்துளனர். இயற்கையின் எழில் நிறைந்த சித்தர்பாடியில் அடர்ந்து நெடித்தொங்கி நிற்க்கும் ’தேவதாரு’ என்று அழைக்கப் படும் தேக்கு மரங்கள் இமையதின் வெண்மைக்கு அழகு சேர்க்கிறது. இமாலய மலை தொடரில் தௌலாதர் என்னும் மலைத் தொடரில் காங்டா பள்ளத்தாக்கில் உள்ளது சித்தர்பாடி என்னும் இவ்விடம். சித்தர்கள் பலர் தவம் புரிந்த பகுதியாதலால் இவ்விடத்திற்க்கு சித்த(ர்)பாடி என்றுப் பெயர். பாடி என்றால் இடம் அல்லது வீடு என்று பொருள். இது இமாசல பிரதேசத்தில் உள்ள காங்டாவில் அன்னை சக்தியின் இருப்பிடமான் நாகர்கோட்க்கும் சாமுண்டி தேவியின் சாமுண்டா விற்கும் அருகில் உள்ளது இவ்விடம். காங்டாவிலிருந்து 17 கி.மீ. தொலைவில் உள்ளது சித்தபாடி.

ஸ்ரீ ராமருக்கு கோயில்

இவ்வளவு புனிதமான இடத்தில் ஸ்ரீ சின்மயானந்தா தனது குருகுலத்தை ஆரம்பிக்க நினைத்தில் வியப்பில்லை. பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் குரு ருஶி ஸ்ரீ சந்தீபனியின் பெயரையே குருகுலத்திற்கு சூட்டினார் அவர். ஆச்ரமத்தின் அருகாமையில் இருந்த மலைவாசிகளுக்காக ஸ்ரீ ராமருக்கு கோயில் கட்ட தீர்மானிக்கப் பட்டது. ஆனால் அந்த இடத்தில் காற்றின் வேகம் மிக மிக அதிகமாக இருந்ததால் கட்டுமானம் கடினமாக இருந்தது. அவ்விடத்தில் காற்றின் வேகம் அதிகமாக இருப்பதால் எந்த மரங்களும் கூட நிற்பதில்லை என்று மலைவாசிகள் கூறினர்.

வாயு புத்திரருக்கு முதலில் கோயில்

சித்தப்பாரி வாயுசுத அனுமன, sidhabari pavanputhra Hanuman ஸ்ரீ சின்ம்யானந்தா அவர்கள் ’இங்கு வாயு புத்திரரான அனுமனுக்கு கோயில் அமைப்போம். அவர் இங்கு அடிக்கும் காற்றின் வேகத்தை கட்டுப் படித்தி தருவார். அனுமனின் குரு ஸ்ரீ ராமருக்கு கோயில் கட்ட அவர் வசதி செய்து தருவார், நமது ஸங்கலபமும் (மலை வாசிகளுக்காக ஸ்ரீ ராமருக்கு கோயில் கட்டுவது) நிறைவேரும்’ என்று மொழித்தார்.

தந்தையை தழுவிய தனையன் அனுமன்

குரு ஸ்ரீ சின்ம்யானந்தாவின் சித்தபடி வாயு சுதன் அனுமனின் கோயில் வடிவமைக்கப் பட்டது. வாயு குமாரன் அனுமன் தனது தந்தை வாயுவை முட்டியட்டு அமர்ந்து வணங்கிய வண்ணம் திறந்த வெளியில் கோயில் கொண்டுள்ளார். தாமரையின் எட்டு இதழ்களாலான மேடையில் இருபத்தி இரண்டு அடி உயரமுள்ள மிக கம்பீரமான வாயு சுதன் அனுமனின் சுதை வடிவம் பார்க்க ப்ரிம்பாக உள்ளது. அவ்வெட்டு இதழ்களிலும் ஸ்ரீ துளஸி தாஸரின் ’ஸ்ரீ ராமசந்திர மானஸ்’ல் (துளஸி ஸ்ரீ ராமயணம்- ஹிந்தி) இருந்து தேர்தெடுக்கப் பட்ட எட்டு பாடல்கள் பொரிக்கப் பட்டுள்ளது. திறந்த வெளியில் மேகங்கள் வருடிக் கொடுக்க நீல வானம் பின் திரையாக இருக்க சுகந்தமான காற்று தழுவிக் கொடுக்க அந்த காற்று ஈன்ற காவியமான அனுமன் கோயில் கொண்டுள்ளார். அக்டோபர் 10ம் நாள் 1982ம் வருடம் ப்ராண ப்ரதிஷ்டை ஸ்ரீ சின்ம்யானந்தா முன்னிலையில் நடைப்பெற்றது.

அதன் பின், ஸ்ரீ சின்ம்யானந்தா அவர்களின் சித்தபடி ஸ்ரீ ராமருக்கு கோயில் எழுப்புவதில் எந்த இடையூரும் வரவில்லை. இன்று இவ்விடத்தில் மரங்களும் செடிகளும் பூத்து, காய்கின்றன. ஸ்ரீ ராமருக்கு கோயில் எழுப்ப தன் தந்தையை வணங்கி, காற்றின் திறனை அளவுடன் வீசச்செய்பவர் அனுமன் வாயுசுதன் அல்லவா?

 

திருக்கோயில் இருப்பிடம் :     " அனுமன் திருக்கோயில், சித்தபாரி. "

 

அனுபவம்
ஶ்ரீராமருக்காக எதையும், எல்லாமும் செய்பவர் அவர், ஆசிகள் பெற, மனம் அமைதி பெற, வாருங்கள்

தமிழாக்கம் :திருமதி. ஸ்ரீமதி
முதல் பதிப்பு ஜூலை 2010
திருத்தப்பட்ட பதிப்பு: செப்டம்பர் 2020


 

 

ஆஞ்சநேய ஸ்வாமி புகழ் வாழ்க

காற்று ஈன்ற காவியமே எம்மை காத்தருள்வாய்
நம்பினோம் நாவரசை நாங்களே
+