home-vayusutha: ஸ்லோகம் கோவில்கள் கட்டுரைகள்
    மின்னஞ்சல் விருந்தினர் ஏடு
boat

ஸ்ரீ ஆஞ்சநேய சுவாமி திருக்கோயில், கோத்தபேட்டை, குண்டூர், ஆந்திரப் பிரதேசம்

ஜீ.கே.கௌசிக்


குண்டூர்

ஸ்ரீ ஆஞ்சநேய சுவாமி திருக்கோயில், கோத்தபேட்டை, குண்டூர், ஆந்திரப் பிரதேசம் Sri Anjaneya temple, Kothepete, Guntur, Andhra Pradesh குண்டூர், ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள ஒரு நகரம். இவ்வூர் அதன் சிவப்பு மிளகாய் மற்றும் புகையிலைக்கு பிரபலமானது. இவை உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இது கிருஷ்ணா நதியின் வளமான சமவெளிகளில் அமைந்திருக்கும் பழமையான நகரமாகும். ஆந்திர மாநிலத்தின் தலைநகரான அமராவதிக்கு குண்டூரின் அருகாமையும் மிகவும் முக்கிய நகரமாக உள்ளது.

இந்த பழமையான இடம் குண்டூர், இந்தியாவில் மனித நாகரிகத்தின் இரண்டாவது பழமையான இடமாக கருதப்படுகிறது, இதற்கு ஆதாரமாக இங்கு கிடைத்த ’பலேலிலிதிக்’ கருவிகளேயாகும். கி.மு. 5 ஆம் நூற்றாண்டில் ஆட்சி செய்த சலா மன்னர்களின் காலத்திற்கும் முந்திய வரலாறு இந்நகரத்திற்கு உள்ளது. இன்றைய இந்நகரின் பெயர் குறிப்பு முதல் முதலாக வேங்கை சாளுக்கைய அரசர் முதலாம் அமர்ராஜா (கி,பி. 922-929) சமயத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. கி.பி 1147 மற்றும் கி.பி. 1158 ஆண்டு குறிப்பிட்ட கல்வெட்டுகளிலும் குண்டூரின் பெயர் உள்ளது. ஸம்ஸ்கிருதத்தில் குண்டூரை ’கிரந்தபுரி’ என்றும், பிரெஞ்சு ஆக்கிரமிப்பின் போது ’டேந்க் கிராமம்’ [tank village] என்றும் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.

பண்டைய குண்டூர்

குண்டூருக்கான அசல் சமஸ்கிருத பெயர் (பண்டைய வேதக் கலாச்சாரம் / பாரம்பரியம்) க்ரந்தபுரி என்பதாகும். பழைய குண்டூர் நகரத்தில் உள்ள "அகஸ்தீஸ்வர சிவாலயம்" பழமையான கோயிலாகும். திரேதாயுகத்தில் அறியப்பட்ட சுயம்பு லிங்கத்தினை அகத்திய மாமுனிவர் பூஜை செய்துள்ளதாக கருதப்படுகிறது. ஆகையால் இந்த ஆலயம் அகஸ்தீஸ்வர சிவாலயம் என பெயரிடப்பட்டது.

பண்டைய மற்றும் இடைக்கால காலங்களில் சதவஹானர்கள், ஆந்திர இக்ஷ்வாகு, பல்லவர்கள், ஆனந்த கோத்ரர்கள், விஷ்ணுகுண்டினா, கோட்டா வம்சர்கள், சாளுக்கியர்கள், சோழர்கள், காகத்தியர்கள், விஜயநகர பேரரசு, மற்றும் குதுப் ஷாஹி போன்ற பிரபலமான வம்சத்தினர் குண்டூரை ஆட்சி புரிந்துள்ளனர். 1180 ஆம் ஆண்டில் குண்டூர் மாவட்டத்தில் நடந்த ’பல்னாடு’ போர், இலக்கியத்தில் புகழ்பெற்ற ’பல்னாடு யுத்தம்’ என்ற காவியத்தால் பிரபலம்.

ஸ்ரீ ஆஞ்சநேய சுவாமி திருக்கோயில், கோத்தபேட்டை, குண்டூர், ஆந்திரப் பிரதேசம் Sri Anjaneya temple, Kothepete, Guntur, Andhra Pradesh கோல்கொண்டாவின் குதுப் ஷாஹி சுல்தானின் கீழும், பின் 1687 ஆம் ஆண்டில் முகலாய சாம்ராஜ்யத்தின் கீழும், பின் 1724லில் இருந்து ஹைத்ராபாத் சுல்தான் கீழும் குண்டூர் ஒரு பகுதியாக இருந்தது. 1750 ஆம் ஆண்டுகளில் இந்த இடம் பிரெஞ்சுகாரர்களால் ஆக்கிரமிக்கப்பட்டது. கிருஷ்ணா நதியின் குறுக்கே கிருஷ்ணா மாவட்டத்திலுள்ள சிந்தபள்ளி நகரிலிருந்து அமராவதிக்கு ராஜா வாசுரடி வெங்கடத்ரி நாயுடு (1783-1816) தனது தலை நகரை மாற்றினார். குண்டூர் பகுதியில் பல கோயில்களை அவர் கட்டியுள்ளார். 1788 ஆம் ஆண்டில் குண்டூர் பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனியின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டது, பின்பு சென்னை மாகாணத்தின் ஒரு பகுதியாக மாறியது.

படைப்பாளிகள் நிறைந்த குண்டூர்

குண்டூரின் அருகாமையில் சுமார் கி.மு.200 யில் தொன்மையான பல்கலைக்கழகம் இருந்தற்கான சான்றுகள் உள்ளது. தற்போதய காலத்திலும் ஸ்ரீசாந்த் நன்னாயபத்தா, வேமனா, குராம் ஜஷுவா, தலாவஜுல சிவசங்கர சாஸ்திரம், திதானா, பஜில்பள்ளி, லக்ஷ்மிகாந்தம், மடபூசி வேடந்தம் நரசிம்சரிலூல், ஆச்சார்யா நாகார்ஜூனா, களாபபூர்ணா தும்மலா, சீதா ராம மூர்த்தி சௌதாரி, கருணா ஸ்ரீ "ஜன்ஹையப்பா பாபாய்யா சாஸ்திரி", ராயப்பிரல் சுப்பா ராவ் முதலிய படைப்பாளிகள் குண்டூருக்கு பெருமை சேர்த்துள்ளனர்.

குண்டூர் யாத்ரீகர்கள் நகரம்

தென் இந்தியாவிலிருந்து வட இந்தியாவிற்கும் வடக்கிலிருந்து தெற்கு பயணித்த அறிஞர்கள் மற்றும் யாத்ரீகர்களுக்கு ஓர் அருமையான இடமாக குண்டூர் செயல்பட்டு வந்திருகிறது. வடக்கில் காசி [வாரணாசி] மற்றும் தென் இந்தியாவில் ராமேஸ்வரம் வருகைக்காக வட இந்தியாவிலுள்ள யாத்ரீகர்கள் வருகை தருவது பொதுவானது. இந்த நகரத்தின் மக்கள் இந்த யாத்ரீகர்களுக்கு சிறந்த விருந்தினராக இருந்தனர்.

தென் இந்தியாவில் பைராகிகள் மடம்

ஸ்ரீ ஆஞ்சநேய சுவாமி திருக்கோயில், கோத்தபேட்டை, குண்டூர், ஆந்திரப் பிரதேசம் Sri Anjaneya temple, Kothepete, Guntur, Andhra Pradesh இந்த சாதாரண யாத்ரீகர்களைத் தவிர, தங்கள் விருப்பப்படி புனித யாத்திரை மேற்கொண்ட புனிதர்களாகிய பைராகிகள் என்ற குழுவும் உண்டு. பைராஹி என்பது வேராகி என்ற வார்த்தையிலிருந்து பெறப்பட்ட ஒரு சொல், அதாவது 'ஒரு விரதத்துடன் வாழும் மக்கள்'. இது 'மோட்சத்தை' அடையும் ஒரே நோக்கத்துடன் தங்கள் வாழ்க்கையை வழிநடத்தும் நபர்களை குறிக்கிறது. இந்த பைராகிகள் எந்த வழியிலும் மோட்சத்தை அடைவதே இலக்காக கொண்டவர்கள். அப்படி சில பைராகிகள் புனித க்ஷேத்திரங்களுக்கு பயணிப்பது வழக்கம். இந்த புனித பயணத்தின் ஒரு பகுதியாக தென்னிந்தியாவுக்கு பயணம் செய்த இந்த துறவிகளில் சிலர் தென்னிந்தியாவின் பல்வேறு இடங்களில் தங்கிவிட முடிவு செய்திருந்தனர். அப்படி அவர்கள் தங்கிய இடங்களில், தங்கள் ஊரிலிருந்து வருபவர்களுக்கு தங்கும் வசதிகளை செய்து வைத்தனர். அப்படி அவர்களால் பராமரிக்கபட்ட இடங்கள் ’பைராகி மடம்’ அல்லது ’பைராகி சத்திரம்’ என்று அழைக்கப்படலானது. அப்படி ஏற்ப்பட்ட பைராகி மடங்களில் தங்களுக்கு பிடித்தமான தெய்வத்தின் திருவுருவையும் நிருவி தொழுது வந்தனர்.

குண்டூரில் பைராகிகள் மடம்

சுமார் முன்னூறு ஆண்டுகளுக்கு முன் அயோத்தியில் இருந்து பல சாதுக்கள் தென் இந்தியாவுக்கு புனித யாத்திரை மேற்கொண்டனர். ஸ்ரீ ஜெயகாந்த் தாஸ் பாபாஜி மற்றும் ஸ்ரீ ஷியாம்லா தாஸ் பாபாஜி மற்றும் ஸ்ரீ பகவன் தாஸ் பாபாஜி ஆகியவர்களும் அப்புனித பயணத்தில் இருந்தனர். பயணம் முடிந்து திரும்பி செல்கையில் இம்மூவரும் குண்டூரில் தங்கிவிட்டனர். இவர்கள் குண்டூரில் தன் ஊரிலிருந்து வருபவர்களுக்கு உதவ மடம் ஒன்றை 1717 ஆம் ஆண்டில் நிறுவினார்கள். அவர்கள் குண்டூரில் உள்ள லாலாப்பேட்டை பகுதியில் மூன்று மடங்களை ஏற்படுத்திக் கொண்டனர். பைரகிகளின் பழக்கவழக்கத்தை ஒட்டி அவர்கள் ஸ்ரீ பத்மாவதி மற்றும் ஆண்டாள் சமேதா ஸ்ரீ வெங்கடேஸ்வர ஸ்வாமி, ஸ்ரீ ஜகந்நாத ஸ்வாமி, ஸ்ரீ ஆஞ்சநேய சுவாமி ஆகிய தெயவ திருவுருவை தங்கள் மூன்று மடத்திலும் ஸ்தாபித்து பூஜை செய்தனர்.

அவர்கள் வரும் யாத்ரீகளுக்கு தங்குவதற்கு வசதியையும், பக்தர்களுக்கு உணவையும் அளித்தனர். பக்தர்களிடமிருந்து அவர்கள் இதற்காக பணம் பெறவில்லை. யாத்ரீகர்கள் தானாக வழங்கிய நன்கொடையில் மடம் செயல்பட்டு வந்தது.

கோத்த பேட்டை மடம்

’குண்டா’ மைதானத்திற்கு எதிரே கோத்தபேட்டையில் அவர்களால் பராமரிக்கப்பட்ட மடத்தில் ஸ்ரீ ஆஞ்சநேய ஸ்வாமி பிரதிஷ்டை செய்தனர். 1795 ஆம் ஆண்டில் ஸ்ரீ வாசி ரெட்டி வெங்கடாத்ரி நாயுடு என்ற பெயருடைய பக்தர் இந்த மடத்திற்கு விஜயம் செய்தார். அவர் மடத்தின் செயல்பாட்டினால் ஈர்க்கப்பட்டார் மற்றும் இந்த மூன்று மடத்திற்க்கும் 300 ஏக்கர் நிலம் நன்கொடையாக அளித்தார். நிலத்திலிருந்து ஈட்டப்பட்ட வருவாய் பூஜை மற்றும் வருடாந்திர உத்ஸவங்களுக்கு பயன்படுத்தப்பட்டது.

கோத்தபேட்டை ஸ்ரீ ஆஞ்சநேயர் கோயில்

ஸ்ரீ ஆஞ்சநேய சுவாமி, கோத்தபேட்டை, குண்டூர், ஆந்திரப் பிரதேசம் Sri Anjaneya, Kothepete, Guntur, Andhra Pradesh இன்று மடம், ஒரு சத்திரமாகவோ அல்லது மடமாகவோ காணப்படவில்லை, ஆனால் அவர்களால் நிறுவப்பட்ட கோயில்கள் தொடர்ந்து செயல்படுகின்றன. குண்டா மைதானத்திற்கு எதிரே உள்ள ஸ்ரீ ஆஞ்சநேயர் கோயில், குண்டூர் மாவட்டத்தில் இருந்து பெருமளவில் பக்தர்களை ஈர்க்கிறது. ’நாஸ்’ சதுக்கத்திற்கு அருகிலுள்ள இந்த கோயில் வடக்கு நோக்கி உள்ளது. மடத்தை நிறுவியவர்களின் வம்சாவளியினார் வைகான்ஸா ஆகமத்தில் உள்ள விதிகளின் படி பூஜைகள் நடத்தப்படுகிறது. பூஜைகள் மன நிறைவுடன் செய்யப்படுவதால் இறைவனின் அருள் இக்கோயிலில் பக்தர்களால் உணரப்படுகிறது.

கோத்த பேட்டை ஸ்ரீ ஆஞ்சநேயர்

வடக்கு நோக்கி இருக்கும் ஶ்ரீஆஞ்சநேயர் மேற்கு நோக்கி நடப்பதுப்போல் உள்ளது. அவரது தாமரை திருவடிகள் இரண்டிலும் தண்டை அணிந்துள்ளார். அவரது வலது திருகரத்தினால் அபய முத்திரை தரித்து பக்தர்களை ஆசீர்வதிக்கிறார். அவரது இடது திருகரத்தில் கதை வைத்திருக்கிறார். அவரது அகன்ற மார்பகத்தில் மூன்று மாலைகள் அணிந்துள்ளார். அவரது முப்புரி நூல் பிரகாசமாகக் காணப்படுகிறது. குண்டலம் என்று அழைக்கப்படும் காது வளையம் அவரது தோள்களைத் தழுவி கொண்டுள்ளது. அவரது சிகை அழகாக சீவி, கட்டப்பட்டுள்ளது. அவரது எழுச்சியான வால் அவரது தலைக்கு மேல் சென்று நுனியில் அழகாக வளைந்திருக்கிறது. பக்தர்களின் வேண்டுகோள்களை கேட்பதற்காக இறைவனின் காதுகள் விழிப்புடன் இருப்பதாகக் காணப்படுகிறது. அவரது பிரகாசமான விழிப்பான கண்கள் அனைத்து ஆசிகளை அள்ளி வழங்குகிறது.

 

திருக்கோயில் இருப்பிடம் :     ஸ்ரீ ஆஞ்சநேய சுவாமி திருக்கோயில், கோத்தபேட்டை

 

அனுபவம்
கோத்தபேட்டைக்கு வாருங்கள், குண்டூர் ஒரு பாரம்பரியமான புனித நகரம், ஆஞ்சநேயரின் ஆசீர்வாதத்தை பெறுங்கள். மேலும் பாரம்பரியமாக நடத்தப்படும் பூஜையின் புனிதமும் தெய்வீகமும் தாங்களை மெய் மறக்கச்செய்யும். ஆஞ்சநேயர் உங்கள் துயரங்களைக் கவனித்துக் கேட்பார், ஆசிகளால் துயர் துடைப்பார்.

தமிழாக்கம் :திருமதி. ஸ்ரீமதி
முதல் பதிப்பு: பிப்ரவரி 2018
திருத்தப்பட்ட பதிப்பு: செப்டம்பர் 2020


 

 

ஆஞ்சநேய ஸ்வாமி புகழ் வாழ்க

காற்று ஈன்ற காவியமே எம்மை காத்தருள்வாய்
நம்பினோம் நாவரசை நாங்களே
+