home-vayusutha: ஸ்லோகம் கோவில்கள் கட்டுரைகள்
    மின்னஞ்சல் விருந்தினர் ஏடு
boat

 நவபிருந்தாவனம், சென்பாக்கம், வேலூர், தமிழ்நாடு


ஶ்ரீவியாச பிரதிஷ்ட ஹனுமான், நவபிருந்தாவனம், சென்பாக்கம், வேலூர், தமிழ்நாடு

ஜீ கே கௌசிக்


சென்பாக்கம்

வேலூர் நகரத்தின் மிக அருகில் அமைந்துள்ளது சென்பாக்கம். சென்னையிலிருந்து செல்லும் போது ரயில்வே மேம்பாலம் வரும், அதிலிருந்து இறங்கியதும் அருகில் வரும் சர்வீஸ் லேன்னை எடுத்துக்கொள்ளவும், பின் வலது புறம் திரும்பவும். பிள்ளையார் கோயில் தெருவில் செல்லவும், மூன்றவது குறுக்கு பாதையில் நவபிருந்தாவனம் செல்ல வழிகாட்டி பலகை தெரியும். நவபிருந்தாவனம் வந்தடையாம். வழி விசாரிக்க உள்ளூரில் ஶ்ரீராகவேந்திர மடம் என்று விசாரிக்கவும்.

நவபிருந்தாவனம் பாலாறை ஒட்டி அமைந்துள்ளது. ஶ்ரீகணேசர் - பிள்ளையார் இங்கு சுயம்பூவாக தோன்றியதால் இவ்விடம் சுயம்பாக்கம் என்று முன்காலத்தில் அழைக்கப்பட்டது. இவ்விடம் முதலில் மனம் மிக்க சண்பகப்பூ அடர்த்தியாக வளர்ந்திருந்ததால் இவ்விடம் சண்பகவனம் என்று அழைக்கப்பட்டது.

சென்பாக்கத்தின் மகிமை

ஶ்ரீமாத்வாசாரியார் அவர்கள் இந்த க்ஷேத்திரத்திற்கு வருகை தந்துள்ளார்.
ஶ்ரீராகவேந்திரரின் முன் பிறவியில் இருந்த ஶ்ரீவியாசராசர் க்ஷேத்திரத்தில் முக்கிய ப்ராணரை [ஶ்ரீ ஹனுமார்] பிரதிஷ்டை செய்துள்ளார்.
ஶ்ரீராகவேந்திரர் இந்த க்ஷேத்திரத்தில் பதினான்கு நாட்கள் தங்கி தவம் செய்துள்ளார்.

குரு ஶ்ரீராகவேந்திர மடம்

இன்று சென்பாக்கம், சுயம்பூ வினாயகருக்கும் நவபிருந்தாவனத்தில் அமைந்திருக்கும் ஶ்ரீராகவேந்திர மடத்திற்கும் பிரபலம். த்வைத சித்தாந்தத்தை சார்ந்த எட்டு குருமார்கள் இச்க்ஷேத்திரத்தில் முக்தி அடைந்து பிருந்தாவனம் ஏற்றுள்ளார்கள். ஒன்பதாவது பிருந்தாவனம் குரு ஶ்ரீராகவேந்திரரின் மிருத்திகா பிருந்தாவனமாகும். மொத்தம் ஒன்பது பிருந்தாவனம் இருப்பதால் இவ்விடத்தை "நவ பிருந்தாவனம்" என்று அழைக்கிறார்கள். துங்கபத்ரா நதிகரையில் அமைந்துள்ள "நவ பிருந்தாவனம்" என்பது இந்த "நவ பிருந்தாவன"த்திலிருந்து வேறுப்பட்டது என்பதை வாசகர்கள் கவனத்தில் கொள்ளவும். இதனால் இவ்விடத்தை "தக்ஷிண நவ பிருந்தாவனம்" என்று அழைக்கிறார்கள்.

தக்ஷிண நவ பிருந்தாவனம்

தக்ஷிண நவ பிருந்தாவனம், சென்பாக்கம், வேலூர், தமிழ்நாடு வேலூரில் உள்ள தக்ஷிண நவ பிருந்தாவனத்தில் இருக்கும் ஒன்பது பிருந்தாவனவாசிகள்:

1. ஶ்ரீ வித்யாபதி தீர்த்தர் - உத்திராதி மடம்
2. ஶ்ரீ சத்யதீரஜரூ - உத்திராதி மடம்
3. ஶ்ரீ கேசவ உடையார் - சன்யாசி சீடர்
4. ஶ்ரீ கோவிந்த மாதவ உடையார் - சன்யாசி சீடர்
5. ஶ்ரீ பூவராஹ உடையார் - சன்யாசி சீடர்
6. ஶ்ரீ ரகுநாத உடையார் - சன்யாசி சீடர்
7. ஶ்ரீ ஶ்ரீபதி தீர்த்தர் - வியாசராஜா மடம்
8. ஶ்ரீ கம்பாலுரு ராமசந்திர தீர்த்தர் - வியாசராஜா மடம்
9. மிருத்திகா பிருந்தாவனம் - ஶ்ரீ ராகவேந்திரர்

வேலூர் கோட்டை சின்ன பொம்மை நாயக் மற்றும் திம்ம ரெட்டி நாயக் அவர்களால் 1566ஆம் ஆண்டு கட்டப்பட்டது. இவர்கள் விஜயநகர சாம்ராஜ்யத்தின் மன்னர் சதாசிவ ராயாரின் பிரநிதிகளாக இருந்து இங்கு ஆண்டவர்கள். தளிகேட்டா போருக்கு பிறகு விஜயநகர அரசு சந்திரகிரியை தலைநகரமாக கொண்டு அரசாண்டப் பொழுது வேலூர் கோட்டையின் முக்கியத்வம் மேலும் அதிகரித்தது.

ஶ்ரீ வித்யாபதி தீர்த்தர் - உத்திராதி மடம்

திருகோயிலூரில் பிருந்தாவனம் கொண்டுள்ள ஶ்ரீரகோத்தம தீர்த்தரின் பரம்பரையில் இரண்டாவதாவார் இவர். த்வைத சித்தாந்தத்தில் புலமை மிக்க இவர் தர்க்கத்தில் நிபுணர், பல கிரந்தங்கள் படைத்துள்ளார். ஜேஷ்ட பகுள சர்வ ஏகாதசியில் முத்தியடைந்தார்.

ஶ்ரீ சத்யதீரஜரூ - உத்திராதி மடம்

தக்ஷிண நவ பிருந்தாவனம், சென்பாக்கம், வேலூர், தமிழ்நாடு ஶ்ரீ சத்யதீரஜரூ த்வைத சித்தாந்தத்தில் வலிமையானவர், சிறந்த தர்க்கவாதி, சொற்பொழிவாளர். பல தர்க்கங்களில் அவர் வெற்றி கண்டு பல தங்கம், விலையுயர் மாணிக்கங்கள் பரிசாகப் பெற்று தனது குருநாதருக்கு காணிக்கையாக சமர்ப்பித்தார். பத்துநாட்கள் தொடர்ந்து ஶ்ரீராமரை குறித்து தவமிருந்து, பூஜை செய்து அவர் பரமபதம் அடைந்தார். வேலூர் அன்றைய ஆட்சியாளர் கோட்டை கட்டும் போது ஏற்பட்ட தடங்கல்களை இவர் கூறிய யோசனைபடி கோட்டை மதில்களில் இடையிடையே துளசி மாடம் கட்டச்சொன்னார். இம்மகான் கூறியபடி கோட்டை மதில் துளசி மாடங்களுடன் கூடிய வடிவுடன் வடிவமைக்கப்பட்டது. அதன் பின் கோட்டையை எளிதில் கட்டி முடித்தார்கள் என்பது பிரசுத்தம். இம்மாகானின் நான்கு சன்யாசி சீடர்கள் இச்க்ஷேத்திரத்திலேயே முக்தி அடைந்தனர்கள். இம்மகான் ஆஷாட சுத்த நவமி அன்று முக்தியடைந்தார்.

நான்கு உடையார்கள்

சன்யாசம் வாங்கிக் கொண்டு தனது குருவிற்கு பணிவிடை செய்வதையும், அவரின் கொள்கையை பின்பற்றுவதையுமே தங்கள் தர்மமாக கொண்டுள்ளவர்கள் ’பிடி சன்யாசி’ என்று அழைக்கப்படுகின்றனர். இவர்களை உடையார் பட்டத்துடன் அழைப்பது வழக்கம். அப்படி நான்கு பிடி சன்யாசிகள் இங்கு முக்தி அடைந்துள்ளனர்.

1. ஶ்ரீ கேசவ உடையார் - சன்யாசி சீடர்
2. ஶ்ரீ கோவிந்த மாதவ உடையார் - சன்யாசி சீடர்
3. ஶ்ரீ பூவராஹ உடையார் - சன்யாசி சீடர்
4. ஶ்ரீ ரகுநாத உடையார் - சன்யாசி சீடர்

ஶ்ரீ ஶ்ரீபதி தீர்த்தர் - வியாசராஜா மடம்

இவர் ஶ்ரீவியாசராஜ மடத்தின் பதினாறாவது மடாதிபதி ஆவார். 1598 முதல் 1612 வரையிலான காலத்தில் மடாதிபதியாக இருந்தவர். அன்றய ஆட்சியாளர்களால் இந்த இடம் மடத்திற்கு தானமாக கொடுக்கப்பட்டது. இவர் இச்க்ஷேத்திரத்தில் சாதுர்மாஸ்ய விரதம் அனுஷ்டித்திருக்கிறார். இவர் ஆஷாட சுத்த துவாதசி அன்று முக்தி அடைந்தார்.

ஶ்ரீ கம்பாலுரு ராமசந்திர தீர்த்தர் - வியாசராஜா மடம்

பேனுகொண்டாவின் புகழ்பெற்ற ஸ்ரீ லட்சுமிகாந்த தீர்த்தர் என்பவர் மகான் வியாசராஜாவின் இரண்டாவது மாணவர் என்று புகழ் பெற்றவர். ஶ்ரீ லட்சுமிகாந்த தீர்த்தரின் சீடர் கம்பாலுரு ஶ்ரீராமசந்திர தீர்த்தர். இவர் மடத்தில் ஸ்ரீ வியாசராஜாவுக்குப் பிறகு ஐந்தாவது மடாதிபதியாவார் கி.பி 1612 இல் ஸ்ரீ 108 ஸ்ரீபதி தீர்த்தத்திற்குப் பிறகு இவர் பட்டத்திற்கு வந்தார். கி.பி 1632 வரை 20 ஆண்டுகள் மடாதிபதியாக இருந்தார்.

அவர் த்வைத தத்துவத்தில் ஒரு சிறந்த மற்றும் ஏற்றுக்கொள்ளப்பட்ட பண்டிதராக இருந்தார். மேலும் அவரது அறிவார்ந்த தன்மைக்காக அவருக்கு என்றும் தனி மதிப்பு உண்டு. அவருக்கு ஸ்ரீ ஹரியின் ஆசீர்வாதம் இருப்பதைக் காட்டும் விதத்தில் சில அற்புதங்கள் அவரது வாழ்க்கையில் நிகழ்ந்தன. ஒருமுறை, ஸ்ரீ ஏழுமலையானின் தரிசனத்திற்காக திருப்பதிக்குச் சென்றிருந்தார். பெரும் கூட்டம் மற்றும் சில சலுகை பெற்ற நபர்களின் வருகை காரணமாக, நீண்ட நேரம் காத்திருந்தபோதும் அவரால் தரிசனம் செய்ய முடியவில்லை, ஏமாற்றத்துடன் திரும்ப வேண்டியிருந்தது. அவர் ஒரு ஸ்லோகாவை இயற்றினார் “ஐஸ்வர்யா மதமத்தோசி இடானீம் மாம் உபேக்யஸ், வதீனம் கலஹே பிரப்தே அஹமேவா காதிஸ்தவா” மற்றும் அதை உத்சவ மூர்த்தி எடுக்கும் பாதையில் எழுதினார். ஸ்லோகத்தின் பொருள் என்ன என்றால் “ஓ, சீனிவாசா, நீங்கள் இப்போது உங்கள் செல்வத்தின் காரணமாக கர்வப்படுகிறீர்கள், எனவே என்னை புறக்கணிக்கிறீர்கள். ஆனால் சர்ச்சைக்குரியவர்களிடையே விவாதத்திற்கு நீங்கள் உட்படுத்தப்படும்போது, ​​நான் மட்டுமே உங்களைப் பாதுகாக்க வேண்டும்.” இறைவன் உடனடியாக தனது சிறப்பு பக்தரை உள்ளே அனுமதிக்குமாறு மகாந்திற்கு அறிவுறுத்தி அவருக்கு தரிசனம் கொடுத்தார். ஸ்ரீ ஹரி மீதான அவரது உறுதியான நம்பிக்கை இதுதான்.

ஒருமுறை அவரது பயணத்தின்போது, ​​சிலர் அவரை எதிர்த்தனர், விவாதத்தில் அவரை தோற்கடிக்க முடியவில்லை, அவரது பரிவாரங்கள் கடந்து செல்லும்போது அவரது தலையில் ஒரு பெரிய கல்லைக் கைவிட்டு அவரைக் கொல்ல ஏற்பாடு செய்திருந்தனர். அவர்கள் திட்டமிட்டபடி இந்த முயற்சியை மேற்கொண்ட போதிலும், அந்த முயற்சியை உணர்ந்த ஸ்ரீ கம்பலூரு ராமச்சந்திர தீர்த்தர், அந்தக் கல்லைக் கட்டளையிட்டார்: “அந்தராலே திஸ்டா” - அந்தரத்தில் தங்கி விடு என்று பொருள் - கல் விழுந்து ஆனால் மகான் சந்நியாசியை காயப்படுத்தவில்லை. அதைத் தொடர்ந்து, கல்லை தன்னுடன் எடுத்துச் செல்லும்படி சீடர்களிடம் கட்டளையிட்டார், கடைசியில் அதை தனது பிருந்தாவனத்தில் வைக்க வேண்டும் என்று கட்டளையிட்டார். இன்றும் கூட சென்பக்கத்தில் அவரது பிருந்தாவன் மீது வைக்கப்பட்டுள்ள கல்லைக் காணலாம். இந்த சம்பவம் ஒரு கற்றறிந்த அறிஞராக அவரது சிறந்த குணங்களுக்கு மேலதிகமாக, அவர் ஒரு அபரோக்ஷ ஞானியாகவும் இருந்தார், மேலும் இறைவனை தியானித்து பல யோக சக்திகள் உடையவராக இருந்தார் என்பது தெளிவாகிறது. இவர் மார்கழி சுக்ல திரிதிகையில் முக்தி அடைந்தார்.

மிருத்திகா பிருந்தாவனம் - ஶ்ரீ ராகவேந்திரர்

ஶ்ரீவியாசராசர் அவர்கள் பிரதிஷ்டை செய்துள்ள முக்கிய ப்ராணரை [ஶ்ரீ ஹனுமார்] திருக்கோயில் தயவு செய்து ஶ்ரீ ராகவேந்திர குருவை பற்றி நமது "ஹனுமார் பக்தர்கள்" பகுதியில் [ஆங்கிலத்தில்] பார்க்கவும். ஶ்ரீ குரு ராகவேந்திர சேவா சமிதி, வேலூர் அவர்களால் இங்கு ஶ்ரீராகவேந்திரர் மிருத்திகா பிருந்தாவனம் நிருவியுள்ளனர். வேலூர் மக்கள் மற்றும் பலரின் நன்கொடையால் இந்த க்ஷேத்திரம் நல்ல முறையில் பராமரிக்கப்படுகிறது. ஶ்ரீ குரு ராகவேந்திரரின் அருளாசியினால் மங்கியிருந்த இச்க்ஷேத்திரத்தின் மகிமை பிரகாசிக்க ஆரம்பித்துள்ளது.

ஶ்ரீவியாசராஜா பிரதிஷ்டை செய்த ஶ்ரீமுக்கியப்ராணர்

இப்பிருந்தாவன வளாகத்தின் அருகில் ஶ்ரீவியாசராஜா பிரதிஷ்டை செய்த ஶ்ரீமுக்கியப்ராணர் திருக்கோயில் உள்ளது. ஶ்ரீஆஞ்சநேயர் மூர்த்தம் சுமார் நான்கு அடி உயரம் இருக்கும். இவர் தனது பக்தர்களுக்கு தனது நேர் பார்வையால் கடாக்ஷிக்கிறார். இப்படிபட்ட வியாச பிரதிஷ்டை மிகவும் அபூர்வம். பிரபு சௌகந்திகா புஷ்பத்தை தனது இடது திருக்கரத்தில் வைத்துள்ளார். அவரது வலது திருக்கரம் சற்றே உயர்ந்து அபய முத்திரையை காண்பிப்பது பக்தர்களுக்கு பயமின்மையை அருளுகிறது. அழகாக சீவி வாரப்பட்ட சிகை அவரது வலது தோள்பட்டையில் தெரிகிறது.

இச்க்ஷேத்திரத்தின் மகிமை

த்வைத சிந்தாந்தத்தை ஸ்தாபனம் செய்த மகான் ஶ்ரீமாத்வாசாரியார் அவர்கள் இச்க்ஷேத்திரத்திற்கு விஜயம் செய்துள்ளார். ஶ்ரீராகவேந்திரரின் முன் பிறவியாக இருந்த ஶ்ரீவியாசராசர் அவர்கள் க்ஷேத்திரத்தில் முக்கிய ப்ராணரை [ஶ்ரீ ஹனுமார்] பிரதிஷ்டை செய்துள்ளார். ஶ்ரீராகவேந்திரர் இந்த க்ஷேத்திரத்தில் பதினான்கு நாட்கள் தங்கி தவம் செய்துள்ளார். ஶ்ரீ கம்பாலுரு ராமசந்திர தீர்த்தர் குரு ஶ்ரீராகவேந்திரரை இச்க்ஷேத்திரத்தில் சந்திதிருப்பார் என்பது நம்பிக்கை.

 

திருக்கோயில் இருப்பிடம் :     நவபிருந்தாவனம், சென்பாக்கம், வேலூர்

 

அனுபவம்
ஶ்ரீ வியாசராஜரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட ஶ்ரீமுக்கியப்ராணா இச்க்ஷேத்திரத்தில் நமக்கு மன‍அமைதியும், தன்னம்பிக்கையும், வாழ்க்கையில் வெற்றியும் அருளுவார் என்பது நிச்சயம்.  

தமிழாக்கம் :திருமதி. ஸ்ரீமதி
பதிப்பு: மார்ச் 2021


 

 

ஆஞ்சநேய ஸ்வாமி புகழ் வாழ்க

காற்று ஈன்ற காவியமே எம்மை காத்தருள்வாய்
நம்பினோம் நாவரசை நாங்களே
+