home-vayusutha: ஸ்லோகம் கோவில்கள் கட்டுரைகள்
boat

சோம்நாத் திருக்கோயில், சோம்நாத், குஜராத்


ஸ்ரீ காஷ்ட நிவரண ஹனுமான் மந்திர், சோம்நாத், குஜராத்

ஜீ.கே.கௌசிக்


சோம்நாத் என்ற பெயரின் பின்னணியில் உள்ள புராணக்கதை

சோம்நாத் திருக்கோயில், சோம்நாத், குஜராத் தட்ச பிரஜாபதிக்கு இருபத்தேழு மகள்கள் இருந்தனர், அவர் தனது மகள்கள் அனைவரையும் சந்திரக்கு திருமணம் செய்து கொண்டார். சந்திரன் தனது எல்லா மனைவிகளிலும், ரோகிணி மீது அதிக கவனத்தையும் அன்பையும் காட்டினார், மற்றவர்களை புறக்கணித்தார். அவரது மற்ற மனைவிகள் சந்திராவின் அணுகுமுறையால் வேதனையடைந்து, அவர்களின் தந்தை தட்ச பிரஜாபதியிடம் புகார் செய்தனர். இதைக் கேள்விப்பட்ட தட்ச பிரஜாபதி சந்திரனிடம் கோபமடைந்தார். சந்திரன் தனது காந்தத்தை இழந்து, பயங்கரமான தோல் நோயால் அவதிப்படும்படி தட்ச பிரஜாபதி சாபமிட்டார். இந்த நோயின் விளைவாக, சந்திரனனின் காந்தம் ஒவ்வொரு நாளும் குறையத் தொடங்கி, கிட்டத்தட்ட அவரது பிரகாசத்தையும் மகிமையையும் இழந்தார். பிரம்மாவின் ஆலோசனையின் பேரில், சந்திரன் கடுமையான தவம் செய்து சிவபெருமானிடம் பிரார்த்தனை செய்து, தட்ச பிரஜாபதியின் சாபத்தைத் தடுக்க சிவபெருமானின் ஆசீர்வாதம் கோரினார். அவர் தனது தவத்திற்காக மேற்கு கடற்கரையில் சோம்நாத்தின் புனித க்ஷேத்திரத்தை [சிவபெருமானின் 12 ஜோதிர் லிங்கங்களில் ஒன்று] தேர்ந்தெடுத்தார்.

சந்திரனின் தவத்தால் மகிழ்ச்சி அடைந்த சிவன், ஜோதி வடிவத்தில் அவருக்கு முன் தோன்றி, சந்திரன் அவதிப்பட்டு வந்த நோயிலிருந்து ஓரளவு நிவாரணம் அவருக்கு அளித்தார். முதல் சாபத்தின் விளைவைச் செயலிழக்க முடியாது ஆதலால், சிவபெருமானால் வழங்கப்பட்ட நிவாரணம் சந்திரனை பதினைந்து நாட்களுக்கு படிப்படியாக பிரகாசமாக இருக்க வழிவகுக்கிறது. இக்காலத்தினை வளர்பிறை அல்லது சுக்ல பக்ஷம் என்று அழைக்கிறோம். இந்த பதினைந்து நாட்கள் முடிவில் அவர் முழு பிரகாசத்தை அடைகிறார், அதனை பூர்ணிமா என்று அழைக்கிறோம். பின்னர், தட்ச பிராஜாபதியின் சாபத்தின் காரணமாக பதினைந்து நாட்கள் சிறிது சிறிதாக அவரது ஒளி குறைந்து வரும் முடிவில் கிட்டத்தட்ட இருட்டாகிவிடும். அதனை அமாவாசை என்று அழைக்கிறோம். ஒளி குறைந்து வரும் காலம் - கிருஷ்ண பக்ஷம் என்று அழைக்கப்படுகிறது.

சந்திரன் தனது கடுமையான தவத்தால் தனது காந்தத்தை (பிரபா) மீட்டெடுத்ததால், இந்த புனித இடம் பிரபாஶ க்ஷேத்திரம் (பிரபாஸ் பட்டிணம்) என்று அறியப்பட்டது. இந்த க்ஷேத்திரத்தில் உள்ள சிவன் சோமநாதீஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார் - சோமன் என்று அழைக்கப்படும் சந்திரனை ஆசீர்வதித்ததினால் சோமநாதர் என்று அழைக்கப்படுகிறார். இந்த க்ஷேத்திரத்தில் உள்ள சிவலிங்கம் ஆதி ஜோதிர்லிங்கமாக கருதப்படுகிறது.

சோம்நாத் கோயிலின் புராணக்கதை

இந்த கோயில் பழங்காலத்தில் இருந்து வருகிறது. இந்த க்ஷேத்திரத்தின் மகிமை ரிக்வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது என்பது பாரம்பரியம். இவ்விடத்தின் மகிமையும் சிவனின் மகிமையும் ஸ்கந்த புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

’பிரம்மாசிலா’ என்று அழைக்கப்படும் கல்லில் சந்திரன் சிவனை லிங்க ரூபத்தில் ’பிராண பிரதிஷ்டை செய்து வழிப்பட்டார். சுற்றி பொன்னால் கூறை, சுவருகள் வெய்தார். பின்னர் இராவணேஸ்வரன் இக்கோயிலை மீண்டும் வெள்ளியினால் கட்டினான். ஸ்ரீ கிருஷ்ணரின் காலத்தில், அவர் கோயிலை சந்தன மரத்தினால் புதுப்பித்ததாக நம்பப்படுகிறது. கலியுகத்தின் ஆரம்பத்தில் ஶ்ரீகிருஷ்ணர் வேடுவனின் அம்பினால் தற்செயலாக தாக்கப்பட்டதால், பூமியில் தனது அவதாரத்தை சோமநாத க்ஷேத்திரத்தில் உள்ள ’பாலிக தீர்த்தத்தி’ல் முடித்துக்கொண்டார்.

இந்த கோயிலின் செழுமையும் செல்வமும் இஸ்லாமிய படையெடுப்பாளர்களின் கவனத்தை ஈர்த்தது. இத்திருக்கோயில் அதன் செல்வத்திற்காக பல முறை இவர்களால் கொள்ளையடிக்கப்பட்டது. இத்திருக்கோயிலின் செழுமையின் விவரங்கள் பிரிட்டிஷ் வரலாற்றாசிரியரால் பெஞ்சமின் வாக்கர் எழுதியுள்ள புத்தகம் “இந்து உலகம் - இந்து மதத்தின் ஒரு கலைக்களஞ்சியம்” இல் விவரிக்கப்பட்டுள்ளது.

அப்பொழுதைய கோயிலின் கட்டிடக்கலை

பதிமூன்றாம் நூற்றாண்டின் அரபு புவியியலாளர் ஜகாரியா அல்-கஸ்வினி கோயிலைப் பற்றி எழுதும்போது பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்: “சோம்நாத்: இந்தியாவின் புகழ்பெற்ற நகரம், கடலின் கரையில் அமைந்துள்ளது, அது அலைகளால் கழுவப்பட்டது. அந்த இடத்தின் அதிசயங்களில் சோம்நாத் என்ற சிலை வைக்கப்பட்ட கோயில் இருந்தது. இந்த சிலை கோயிலின் நடுவில் கீழிருந்தோ அல்லது மோலிருந்தோ எந்தவித ஆதாரமும் இல்லாமல் அந்தரங்கத்தில் இருக்கிறது. இந்துக்களிடையே மிக உயர்ந்த கௌரவமான இடத்தில் வைக்கப்பட்டுள்ளது சோமநாதர். மேலும் பார்ப்பவர் ஒரு முசல்மான் அல்லது காஃபிர் என்று பாகுபாடுயில்லாமல் அது காற்றில் மிதப்பதைக் கண்ட எவரும் வியப்படைந்தனர், . இந்துக்கள் - பல்லாயிரக்கணக்கானோர் - சந்திரனின் கிரகணம் ஏற்படும் போதெல்லாம் இந்நகரத்திற்கு யாத்திரை செய்கிறார்கள்.”

இப்போது கோவிலின் கட்டிடக்கலை

தற்போது கோயில் - சாளுக்கிய பாணியில் கட்டப்பட்டுள்ளது - மூலமுதலாக மற்றும் பண்டைய சோம்நாத் கோயில் நின்ற அதே இடத்தில் அமைந்துள்ளது. அப்போதைய இந்தியாவின் துணை பிரதம மந்திரி சர்தார் வல்லபாய் படேல் - ‘இந்தியாவின் இரும்பு மனிதர்’ என்று அன்பாக நினைவுகூரப்பட்டார் - இன்றைய கோவிலின் கட்டுமானத்திற்கு முதன்மையாக பொறுப்பேற்றார். ‘ஸ்ரீ சோம்நாத் டிரஸ்ட்’ என்ற பதாகையின் கீழ் தற்போதைய கோயில் பொதுமக்களிடமிருந்து திரட்டப்பட்ட நிதியுடன் புனரமைக்கப்பட்டது. அறக்கட்டளையின் தலைவராக ஸ்ரீ கே.எம்.முன்ஷி, சர்தார் மற்றும் பிறரின் விருப்பப்படி கோயில் கட்டுமான பணிகளை முடிக்கும் பணியை மேற்பார்வையிட்டார். தற்போதைய கோயில் ஆலயக் கட்டிடக்கலை அல்லது கைலாஷ் மகாமேரு பிரசாத் பாணியில் சாளுக்கிய பாணியில் கட்டப்பட்டுள்ளது மற்றும் குஜராத்தின் திறமைமிகு கற்தச்சர்களான ’சோம்புரா சாலட்டு’ களின் திறமையை பிரதிபலிக்கிறது.

இப்போது கூட அன்னை பார்வதி தேவிக்கான எழுப்பப்பட்ட பழைய கோயிலின் சில எச்சங்கள் தற்போதைய கோயிலின் பக்கத்திலேயே காணப்படுகின்றன.

கோயிலின் தனித்துவமான இடம்

அகல்யாபாய் மஹாதேவ் மந்திர் நுழைவு வாயில், சோம்நாத், குஜராத் இந்த கோயில் அத்தகைய அக்ஷாம்சா [அட்சரேகை] மற்றும் ரேகாம்சா [தீர்க்கரேகை] ஆகியவற்றில் அமைந்துள்ளது, அதாவது இது சோம்நாத் கடற்கரைக்கும் அண்டார்டிகாவிற்கும் இடையில் நேர் கோட்டில் நிலம் ஏதுமில்லை- ஒரு சிறிய தீவு கூட இல்லை. இச்செய்தியினை இத்திருக்கோயிலின் கடல் பாதுகாப்பு சுவரில் உள்ள ’பாண் ஸ்தம்பா’ என்னும் அம்பு-தூணில் சம்ஸ்கிருதத்தில் குறிப்பிட்டுள்ளனர். இது குறிப்பிட்ட தீர்க்கரேகையில் வடக்கிலிருந்து தென் துருவத்திற்கு செல்லும் போது வரும் முதல் நிலமாக இருக்கும்.

கோயில் வளாகத்தில் உள்ள மற்ற ஆலயங்கள்

சோம்நாத் மந்திர் வளாகத்திற்குள் அமைந்துள்ள மற்ற கோயில்கள் ஸ்ரீ கபார்டி விநாயகர் மற்றும் ஸ்ரீ ஹனுமான் கோயில். ஸ்ரீ கபார்டி விநாயகர் சன்னதி வளாகத்தின் வலது மூலையில் அமைந்துள்ளது. ஸ்ரீ சோம்நாத்தின் பிரதான சன்னதிக்குள் நுழைவதற்கு முன்பு ஸ்ரீ விநாயக்கரை முதலில் பிரார்த்தனை செய்வது வழக்கம். ஸ்ரீ சோமநாத் சன்னதிக்கு செல்லும் பிரதான பாதையின் வலது பக்கத்தில் ஸ்ரீ ஹனுமான் சன்னதி உள்ளது.

ஸ்ரீ அனுமனின் சன்னதி

ஸ்ரீ காஷ்ட நிவரண ஹனுமான் மந்திர், சோம்நாத், குஜராத் : புகைப்பட உபயம்: விக்கிபீடியா சோம்நாத் கோயில் இடிக்கப்பட்டு பின்னர் பல முறை புனரமைக்கப்பட்ட நீண்ட வரலாற்றைக் கொண்டுள்ளது. கோயில் சேதமடைந்த ஒவ்வொரு முறையும் புனரமைக்க பல இந்து மன்னர்கள் இருந்தனர். அவுரங்கசீப் தனது காலத்தில் கோயிலை மசூதியாக மாற்றினார். அதன்பிறகு புனேவின் பேஷ்வா, நாக்பூரின் ராஜா போன்ஸ்லே, கோலாப்பூரின் சத்ரபதி போன்ஸ்லே, இந்தூரின் ராணி அகல்யாபாய் ஹோல்கர் மற்றும் குவாலியரின் ஸ்ரீமந்த் பாட்டில்புவா ஷிண்டே ஆகியோரின் கூட்டு முயற்சியில் கி.பி 1783 இல் கோயிலை புனரமைத்தனர். அவுரங்கசீப்பின் மசூதியாக மாற்றப்பட்டு இடிக்கப்பட்ட கோயிலிக்கு அருகில் இக்கோயில் கட்டப்பட்டது. தற்போது இந்த கோயில் ‘சோம்நாத் மகாதேவ் மந்திர்’ என்று அழைக்கப்படுகிறது. இந்த கோவிலின் நுழைவாயிலை ‘மகாராணி அகல்யாபாய் நுழைவு’ என்று குறிக்கப்பட்டுள்ளது. இந்த நேரத்தில் இந்த புதிய கோயிலின் எல்லையில் பழைய கோயிலின் [மசூதிக்கும்] இடையில் ஸ்ரீ ஹனுமனுக்கான கோயிலும் கட்டப்பட்டதாக கருதப்படுகிறது.

அவர் மேற்கூறிய மன்னர்களுக்கு / ராணிக்கு எந்தவிதமான இடையூறும் இல்லாமல் சோம்நாத் கோவிலைக் கட்ட முடியும் என்ற தைரியத்தையும் நம்பிக்கையையும் கொடுத்தார் என்பதற்கு அங்கீகாரமாக ஸ்ரீ ஹனுமனுக்கான இந்த கோயில் கட்டப்பட்டதாக நம்பப்படுகிறது. இதனால் இவர் ’கஷ்ட நிவாரண / மோட்சன ஸ்ரீ ஹனுமான்’ என்ற பெயரைப் பெற்றார்.

ஸ்ரீ காஷ்ட நிவாரண ஹனுமான்

ஐந்து அடி உயரமுள்ள ஸ்ரீ ஹனுமான் சிலை உடல் முழுவதும் ‘சிந்தூர’த்துடன் காணப்படுகிறார். அவரது வலது திருக்கரம் உயர்ந்து யாரும் எதற்கும் அஞ்சத் தேவையில்லை என்று ’அபய முத்திரை’ காட்டுகிறது. அவர் கழுத்திலும் கைகளிலும் சில ஆபரணங்கள் அணிந்திருப்பதைக் காணலாம். அவரது கண்கள் மிகவும் பிரகாசமாகவும் விழிப்புடனும் உள்ளது. மற்றும் சன்னதி சிறிதாகவும் அழகாகவும் இருக்கிறது. ஸ்ரீ சோம்நாத் ஜோதிர்லிங்கத்தினை தரிசனம் செய்தபின் பக்தர்கள் தங்கள் பிராத்தனைகளை ‘ஸ்ரீ காஷ்ட நிவாரண ஹனுமனுக்கு’ சமர்ப்பிக்கின்றனர்.

 

திருக்கோயில் இருப்பிடம் :     சோம்நாத் திருக்கோயில், சோம்நாத்

 

அனுபவம்
அதிகாலையில் சோம்நாத் க்ஷேத்திரத்தில் உள்ள ஜோதிர்லிங்கத்தின் தரிசனம் செய்து, பின்னர் உங்கள் பிராத்தனைகளை ஸ்ரீ காஷ்ட நிவாரண் அனுமனுக்கு சமர்பிக்கவும். இறைவனின் ஒளிரும் கண்கள் பக்தர்களுக்கு தைரியத்தையும் வீரியத்தையும் அளிக்கும் என்பதில் எந்த ஐயப்பாடும் வேண்டாம்.

தமிழாக்கம் :திருமதி. ஸ்ரீமதி
முதல் பதிப்பு: அக்டோபர் 2019
திருத்தப்பட்ட பதிப்பு: செப்டம்பர் 2020


 

 

ஆஞ்சநேய ஸ்வாமி புகழ் வாழ்க

காற்று ஈன்ற காவியமே எம்மை காத்தருள்வாய்
நம்பினோம் நாவரசை நாங்களே
+