home-vayusutha: ஸ்லோகம் கோவில்கள் கட்டுரைகள்
boat

ஸ்ரீ சர்குணேஸ்வரர் திருக்கோவில், கருவேலி, குடவாசல் தாலுக்கா, திருவாரூர் மாவட்டம், தமிழ் நாடு


ஸ்ரீ ஆஞ்சநேயர் கோவில், கருவேலி, குடவாசல் தாலுக்கா, திருவாரூர் மாவட்டம், தமிழ் நாடு

ஜீ.கே.கௌசிக்


கருவேலி கிராமம்

தமிழ்நாட்டில் ஶ்ரீசர்வாங்க சுந்தரி உடனுறை ஸ்ரீ சற்குணேஸ்வரர் திருதலம் கொட்டிட்டை ஊர் "கரு விலி" என்று பாடல் பெற்றது. தற்பொழுது ஊர் கருவேலி என்று பெயரில் அறியப்படுகிறது. திரு திருநாவுக்கரசர் சுவாமிகளால் பாடல் பெற்ற தேவார தலம் இது. பூந்தோட்டம் மற்றும் நாச்சியார் கோயில் ஆகிய இடங்களுக்கு நடுவில் இந்த கோஷ்டம் அமைந்துள்ளது.

’கரு விலி’ என்ற பெயர் காரணம்

'கரு' என்பது கருவுருவாகும் கற்ப பை என்பதை குறிக்கும். கரு விலி என்றால் கருவற்ற நிலையை குறிக்கும். ஸ்ரீ சற்குணேஸ்வரரை துதிக்கும் சிவனடியாருக்கு பிறப்பு அற்ற நிலை அதாவது பிறப்பு/இறப்பு அற்று வீடு கிட்டும் என்பது பொருள்.

இத்திருதலத்தின் தீர்த்தம் ’யம தீர்த்தம்’ என்று அழைக்கப்படுவது இக்காரணத்தினால் தான். இந்த புனித தீர்த்ததில் நீராடி பின் அருள் மிகு சற்குணேஸ்வரரை தரிசித்தால் அச்சிவனடியாருக்கு மறுபிறப்பு இல்லாத நிலை கிட்டும். இந்த புனித திருதலம் முன்பு தழைத்து இருந்தது. ஆனால் பின் காலத்தில் அப்படியில்லாமல், சற்றே அழிய தொடங்கியது.

புகழ் திரும்பியது

ஆனால் அது அப்படியே இருக்கவே இல்லை. BHEL, மாருதி, ஸ்டீல் அதாரடி ஆகிய நிறுவனங்களுக்கு தலைவராக இருந்த டாக்டர் ஸ்ரீ வி.கிருஷ்ணமூர்த்தி அவர்களுடன் அவரது சகோதரர் இத்திருக்கோயிலுக்கு வந்திருந்தனர். இவர்களுடைய மூதாதயர்கள் இத்திருக்கோயிலுக்கு பரம்பரை அறங்காவலர்களாக இருந்தவர்கள். இச்சகோதரர்கள் இத்திருக்கோயிலுக்கு வந்து சற்குணேஸ்வரரை தர்சித்த பின் இக்கோயிலை புதுபிக்க முடிவெடுத்தனர்.

இச்சகோதரர்கள் எப்படி தங்கள் கிராமத்திற்கு திரும்பி வந்தார்கள் என்பதையும், அவர்களின் முன்னோர்களால் ஒருகாலத்தில் பராமரிக்கப்பட்ட திரு சற்குணேஸ்வரர் திருக்கோயில் எப்படி இத்தலைமுறையினரால் புதிப்பிக்கப்பட்டது என்பதும் சற்று சுவாரசியமான சம்பவம்.

டாக்டர் ஸ்ரீ வி.கிருஷ்ணமூர்த்தி மற்றும் அவரது சகோதரர் அவர்கள் இருவரையும் அவர்களது பூர்வீக கிராமத்திற்கு அழைத்து வந்து பராமரிப்பு அற்ற நிலையிலிருந்த சிவ தலத்தை புனரமைக்க செய்ததில் ஶ்ரீ ஆஞ்சநேயரின் பங்கு மிகவும் முக்கியம் என்றால் மிகையாகாது.

ஸ்ரீ ஆஞ்சநேயர் மற்றும் ஸ்ரீ சர்குணேஸ்வரரின் ஒற்றுமை

'சர்வ ரோக ஹரா:’ ஸ்ரீ ஆஞ்சநேயரின் அஷ்டோத்திர சத நாமாவளியில் ஒரு நாமாவாகும். 'ரோக' என்றால் நோய், 'ஹரா' என்றால் ’நீக்குதல், அழித்தல்’ என்று பொருள். ஸ்ரீ ஆஞ்சநேயர் தனது பக்தரின் அனைத்து நோய்களையும் அகற்றுவதற்கான திறன்களைக் கொண்டிருக்கிறார் என்பதை கூறுகிறது இந்த நாமா. மருந்து மலைப் பகுதிகளைச் சுமந்தவர் நோயுற்ற அனைத்தையும் குணமாக்குவது நிச்சயம். 'சர்வ' என்பது எல்லா வகை நோய்கள். எனவே இந்நாமாவளி அவர் 'அனைத்து நோய்களையும்' குணப்படுத்த கூடியவர் என்பது இங்கே காணப்படுகிறது. ஆனால் உடல் உள்ளவர்களுக்கு ஏதாவது வியாதி இருந்து கொண்டே தான் இருக்கும். ஆகையால் 'சர்வரோகஹரா:’ என்பது ஸ்ரீ ஆஞ்சநேயர் பிறப்பு / மறுபிறப்பிலிருந்து விடுவித்து அவரது பக்தர்களை 'மோட்சம்' வழங்குபவர் என்பது உறுதியாகிறது.

ஆஞ்சநேயர், ஸ்ரீ சற்குணேஸ்வரர் இருவரும் நம்மை மறுபிறப்பிலிருந்து விடுவிப்பவர்கள். கரு விலி [இறப்பு-பிறப்பு அற்று வீடு பயப்பது].

பழமை மிகு கருவேலி ஆஞ்சநேயர் கோயில்

ஸ்ரீ சர்குணேஸ்வரர் திருக்கோவில், கருவேலி, குடவாசல் தாலுக்கா, திருவாரூர் மாவட்டம், தமிழ் நாடு கருவேலி கிராமத்தின் மையத்தில் ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு ஒரு சிறிய கோயில் உள்ளது. இந்த கோயில் ஒரு பாழடைந்த நிலையில் சீர்மைக்க வேண்டி இருந்தது. கிராமம் ஒதுக்குப்புறமான இடமாக இருப்பதால், கிராம மக்களிடம் அதிகம் நிதி வசதி கிடையாது. இக்காரணங்களினால் ஶ்ரீ ஆஞ்சநேயரின் கோயிலை சீர் அமைக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தாலும் பண வசதியில்லா காரணத்தால் கோயிலை பழுது பார்க்க முடியவில்லை. ஒருமுறை இந்த கோவிலில் உள்ள ஆஞ்சநேயரின் பக்தர் ஒருவர், டாக்டர் ஸ்ரீ வி.கிருஷ்ணமூர்த்தியின் சகோதரரை சென்னையில் சந்தித்தார். அப்பொழுது ஸ்ரீ ஆஞ்சநேயர் கோவில் பழுது பார்த்து சீரமைக்கும் தேவையை பற்றி அவரிடம் கூறினார். அவரும் தேவையான அளவு பக்தரிடம் வழங்கி கோயிலை செப்பனிட கூறினார்.

சிறிது காலத்திற்குப் பிறகு, சகோதரர்களின் உறவினர் அந்த கிராமத்திற்கு விஜயம் செய்தார். சென்னையில் கிடைத்தப் பணத்தில் ஶ்ரீ ஆஞ்சநேயர் கோயிலை முழுவதும் பழுதுபார்க்க முடியாது என்பதனை கிராம மக்கள் அவரிடம் எடுத்து கூறினார்கள். அவர்கள் கொடுத்த பணம் ஸ்ரீ ஹனுமான் பக்தரின் பாதுகாப்பில் வைத்திருப்பதாகவும், கிராமத்தினர் அனைவரும் எடுத்துச் சொன்னார்கள். அவரை அவர்களின் முன்னோற்கள் வாழ்ந்த கிராமம் முழுவது சுற்றி காண்பித்தார்கள். பாடல் பெற்ற சிவாலயத்தின் நிலையை கண்டவர் வருத்தப்பட்டார்.

சீர்மிகு பழமை மிகு சிவாலயத்தினை ஶ்ரீஆஞ்சநேயர் புனரமைக்கிறார்

அந்த உறவினர் சென்னை திரும்பியபோது, ​​கருவேலி கிராமம் மற்றும் ஸ்ரீ சற்குணேஸ்வரர் ஆலயம் இருக்கும் நிலையை அவர் வர்ணித்தார், திருக்கோயில் அரசாங்க பராமரிப்பின் கீழ் போகும் முன் இது அவர்களின் மூதாதயர்கள் பரம்பரை அறங்காவலர்களாக இருந்தவர்கள் என்பதனையும் நினைவு கூறினார்.

இதனால் தூண்டப்பட்ட டாக்டர் ஸ்ரீ வி.கிருஷ்ணமூர்த்தி மற்றும் அவரது சகோதரர் கருவேலி கிராமத்திற்கு வருகை தந்தனர். இத்திரு தலத்திற்கு வந்து ஶ்ரீசர்வாங்க சுந்தரி உடனுறை ஸ்ரீ சற்குணேஸ்வரர் திருகோயிலையும் கிராமம் இருக்கும் நிலையும் கண்டு, திருகோயிலை புதுபிக்க முடிவு செய்தனர்.

ஸ்ரீ ஆஞ்சநேயர் சன்னிதி, ஸ்ரீ சர்குணேஸ்வரர் திருக்கோவில், கருவேலி, குடவாசல் தாலுக்கா, திருவாரூர் மாவட்டம், தமிழ் நாடு கருவேலி கோயிலின் ஸ்ரீ ஆஞ்சநேயர், சகோதரர்களை அவர்களின் பூர்வீகத்தினை அறிமுக படுத்தினார். கூடவே புனிதமான மாபெரும் திருக்கோயிலுக்கு புனருத்தாரனம் என்னும் பெரிய கைகரியத்தையும் செய்ய வைத்தார்.

அவர் எங்கே இருந்தாலும் அவர் ஒரு தாசர், பணிவான பெரிய பக்தன்.

இத்திருதலத்துடன் ஸ்ரீ ராமருடைய தொடர்பு

இத்திருதலத்திற்கு ஶ்ரீ ராமருடன் மற்றொறு தொடர்பு உண்டு. ஸ்ரீ ராம கிருஷ்ண சர்மா என்ற பெயரில் அவர்களது மூதாதையர்களில் ஒருவர் மிக பெரிய ஸ்ரீராம பக்தர். 'சங்கர்ஷணா மந்திரத்தை’ அவருக்கு ஸ்ரீ லக்ஷ்மணனே உபதேசித்து அவர் ஆசீர்வதிக்கப்பட்டார். ஶ்ரீமத் ராமாயணத்தை ’நவாஹம்’ முறையில் திருக்கோவிலில் பாராயணம் செய்வது அவரது வழக்கம். ஒரு முறை அப்படி இராமாயணத்தில் பால காண்டத்தில் வாமனா அவதாரத்தை பாராயணம் செய்யும் போது, வால்மீகி கூறிய வர்ணனையை ஒத்த ஶ்ரீவாமனர் அவருக்கு காட்சி தந்தார். ஶ்ரீவாமனர் அருகில் இருந்த தூணில் மெல்ல ஒன்றிணைந்து மறைவதையும் கண்டார்.

எனவே ஸ்ரீ ராம பக்தன் ஹனுமான் கோயிலும் கிராமமும் இழந்த பெருமையையும் புகழையும் திரும்பவும் நிலைநாட்டினார் என்பதில் ஆச்சரியமில்லை.

ஸ்ரீ ஆஞ்சநேய கோயில் [புனரமைப்புக்கு பின்] கருவேலி, குடவாசல் தாலுக்கா, திருவாரூர் மாவட்டம், தமிழ் நாடு இந்த சிவாலயத்தின் சீரமைப்புக்குப்பின், ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு மேற்கு நோக்கி புதியதாக ஒரு சன்னிதி கட்டப்பட்டது. ஸ்ரீ ஆஞ்சநேயர் இங்கு சஞ்சீவிராயன் என்று அழைக்கப்படுகிறார். அவரது இடது கையில் சஞ்சீவி மலையை வைத்திருக்கிரார், வலது கையில் கதை வைத்திருக்கிறார். ஒற்றை வெள்ளை பளிங்குக் கல்லில் செய்யப்பட்ட முழுமையான மூர்த்தம் நமது கண்களுக்கு ஒரு விருந்து.

ஸ்ரீ ஆஞ்சநேய கோயில்

கிராமத்தின் மையத்தில் இருக்கும் ஶ்ரீஆஞ்சநேயர் திருக்கோயில் கிழக்கு முகமாக அமைந்துள்ளது. முன்பு கர்ப கிருஹமும் முன் மண்டபமும் மட்டுமே இருந்தது. மறுசீரமைப்புக்குப் பிறகு முன் மண்டபத்திற்கு முன் மற்றொரு மண்டபம் மண்டபமும் சேர்க்கப்பட்டுள்ளது. பக்தர்கள் பகவானுக்கு சிறப்பு பூஜை செய்யும் போதும், பஜனை முதலிய ஏற்பாடு செய்ய வசதியாக இது அமைந்ததுள்ளது.

இந்த கோவிலின் ஸ்ரீ ஆஞ்சநேயர் இரண்டு அடி உயரமும், கூப்பிய கரத்துடனும் காட்சி தருகிறார். ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு பின்னால் ஸ்ரீ ராமர் தன் பரிவாரத்துடன் இருக்கிறார். இந்த கிராமத்தினை சிறப்பிக்க அதிசயம் நடத்திய ஸ்ரீ ஆஞ்சநேயர் மிகவும் எளிமையாக காட்சி தருகிறார்.

 

திருக்கோயில் இருப்பிடம் :     ஸ்ரீ ஆஞ்சநேய கோயில், கருவேலி

 

அனுபவம்
இந்த 'சர்வ ரோக ஹரன்' ஸ்ரீ ஆஞ்சநேயர் மற்றும் ஸ்ரீ சற்குணேஸ்வரர் ஆகியோரை பிரார்த்தனை செய்தால், பக்தர்கள் மறுபிறப்பு இன்றி இன்மை பெற்று இருக்க ஆசிகள் கிட்டும்.

தமிழாக்கம் :திருமதி. ஸ்ரீமதி :: முதல் பதிப்பு: மார்ச் 2019
திருத்தப்பட்ட பதிப்பு: செப்டம்பர் 2020
தகவல் மூல நூல்: நலம் தரும் கருவேலி.


 

 

ஆஞ்சநேய ஸ்வாமி புகழ் வாழ்க

காற்று ஈன்ற காவியமே எம்மை காத்தருள்வாய்
நம்பினோம் நாவரசை நாங்களே
+