home-vayusutha: ஸ்லோகம் கோவில்கள் கட்டுரைகள்
    மின்னஞ்சல் விருந்தினர் ஏடு
boat

ஶ்ரீவீர ஆஞ்சநேய சுவாமி திருக்கோயில், காக்களூர், திருவள்ளூர், தமிழ்நாடு


ஶ்ரீவியாசராஜா பிரதிஷ்டை செய்த ஶ்ரீஹனுமார்

ஶ்ரீவீர ஆஞ்சநேய சுவாமி திருக்கோயில், காக்களூர், திருவள்ளூர், தமிழ்நாடு

திரு எல்.பாலகிருஷ்ணன், சென்னை


திருவள்ளூர்

திருவள்ளூர் என்னும் தலம் மாவட்டத்திற்கு தனது பெயரையையும் கொடுத்துள்ளது. கோயில் நகரமான இதில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றான ஶ்ரீவீர இராகவன் திருக்கோயில் மிகவும் பிரசுத்தம். கூவம் நதிகரையில் அமைந்துள்ள இச்க்ஷேத்திரம் சென்னையிலிருந்து நாற்பது கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. பல்லவர்கள் ஆட்சியிலிருந்து ஆரம்பித்து இதனை பலர் ஆண்டுள்ளனர். இந்நகரமும் சுற்றிலும் உள்ள கிராமங்களும் கர்நாடகா போர் நடந்துள்ளது.

திருவள்ளூர் பெயர் காரணம்

மாமுனிவர் சாலிஹோத்திரா அவர்கள் இங்கு தனது குடிலில் தவம் எய்தியிருந்தார். ஓர் இரவு ஶ்ரீமஹாவிஷ்ணு அவரது குடிலில் வயோதிகர் ரூபத்தில் வந்து தனக்கு இரவு தங்க வேண்டியுள்ளதாகவும் இடம் கிடைக்குமா என்றும், இக்குடிலை பார்த்தவண்ணம் "எவ்வுள்?" என்று கேட்டார். முனிவர் "இவ்வுள்" என்று தனது குடிலை காட்டி பதில் அளித்தார். ஶ்ரீமஹாவிஷ்ணு இங்கு திருவுளம் கொண்டு தங்கியமையால் இவ்வூர் எவ்வுள், இவ்வுள், திருஎவ்வுள், திருவள்ளூர் என்று பெயர் பெற்றது. இங்கு ஶ்ரீமஹாவிஷ்ணுவிற்கு ஶ்ரீவீர இராகவ சுவாமி என்று பெயர்.

வரலாறு

ஶ்ரீவீர ஆஞ்சநேய சுவாமி திருக்கோயிலும் ஶ்ரீகணபதி திருக்கோயிலும், காக்களூர் தொண்டைமண்டலம் என்னும் பழைமயான பகுதியில் இன்றைய திருவள்ளூர், திருவண்ணாமலை, வேலூர், காஞ்சீபுரம், இவைகள் அடக்கம். படைவீடு என்பதை தலைநகரமாக கொண்டு இப்பகுதியிலை சாம்புவராயர் ஆட்சி புரிந்திருக்கிறார். இதன் முன் இப்பகுதி ஶ்ரீவிஜயநகர சாம்ராஜ்ஜியத்தின் நிர்வாகத்தில் இருந்திருக்கிறது. இந்த இரண்டு ஆட்சியாளர்களும் தங்கள் ராஜ்ஜியத்திற்கு ஶ்ரீஹனுமாரை காவல் தெய்வமக கொண்டாடினவர்கள். ஒவ்வொரு கிராமத்திற்கும் எல்லையில் ஶ்ரீஹனுமாருக்கான கோயில் கட்டுவது என்பது இவர்கள் காலத்தில் ஏற்ப்பட்ட மரபு. இப்பகுதிகளில் இருக்கும் கோயில் கட்டிடக்கலையை நோக்கும் பொழுது, விஜயநகரத்து சாம்ராஜ்ஜிய கட்டிட கலையின் தாக்கத்தை பார்க்க முடிகிறது. படைவீடு, வேலூர் முதலிய இடங்களில் இருக்கும் ஶ்ரீஹனுமார் கோயில்களை பார்க்கும் பொழுது சம்புவராயன் காலத்திலும் இது தொடர்ந்திருக்கிறது என்பது விளங்கும்.

திருவள்ளூர் அருகில் ஶ்ரீஹனுமார் திருக்கோயில்

தொண்டைமண்டலத்தின் பகுதியான திருவள்ளூர் அருகில் இரண்டு பிரபலமான ஶ்ரீஹனுமார் திருக்கோயில்கள் உள்ளன. முதலாவது மூன்று கிலோமீட்டர் தொலைவில் உள்ள காக்களூர் என்னும் கிராமத்தில் உள்ளது. ஶ்ரீவியாசராஜா அவர்களால் பிரதிஷ்டை செய்யப்பட்டது இது என்பதால் பல பாரம்பரிய ஶ்ரீஹனுமார் பக்தர்கள் இக்கோயிலுக்கு தரிசனத்திற்கு வருகிறார்கள். இரண்டாவது திருக்கோயில் மற்றொன்று பக்கம் மூன்று கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. அண்மையில் கட்டப்பட்ட இத்திருக்கோயில் ஶ்ரீமந்திர மூர்த்தி அவர்களின் சீடரான ஶ்ரீ வெங்கடேச பட்டாசாரியார் என்னும் மகானால் பிரதிஷ்ட்டை செய்யப்பட்டது. நாற்பது அடி உயரத்தில், மிகவும் அற்புதமாகவும் பிரம்மாண்டமாகவும் சிலாரூபமாக இருக்கும் பஞ்சமுக ஆஞ்சநேயரை இங்கு தர்சிக்கலாம்.

காக்களூர்

காக்களூர் என்னும் சிறிய அழகிய கிராமம் திருவள்ளூரிலிருந்து மூன்று கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. சென்னையிலிருந்து மின்ரயிலில் வருவது மிக சுலபம். சுமார் ஒரு மணி நேரத்தில் திருவள்ளூருக்கு முந்திய நிறுத்தமான புட்லூர் இரயில் நிறுத்ததில் இறங்கவும். "காக்களூர் ஶ்ரீவீர ஆஞ்சநேய சுவாமி கோயிலுக்கு இறங்கவும்" என்னும் அறிவிப்பு பலகையும் இருக்கிறது. இரயில் நிலையத்திற்கு செங்குத்தாக செல்லும் சாலையில் சுமார் முக்கால் கிலோமீட்டர் தொலைவில் ஆலயம் உள்ளது. ஆட்டோகளும் கிடைக்கும்.

ஶ்ரீஆஞ்சநேய சுவாமி திருக்கோயில்

ஶ்ரீவீர ஆஞ்சநேய சுவாமி திருக்கோயில், காக்களூர் ஶ்ரீஆஞ்சநேய சுவாமி திருக்கோயில் மிகவும் எளிமையாக இருக்கிறது. பக்தர்கள் மூலவரை சாலையிலிருந்தே தர்சிக்கலாம். திருக்கோயில் என்பது கர்ப்பகிரஹம் மற்றும் அதன் முன் பெரிய மண்டபம் அவ்வளவு தான். கோயிலை ஒட்டிய மாதரி சிறிய சமையலறை உள்ளது. இப்பொழுது நாம் காணும் கட்டிடம் சில ஆண்டுகளுக்கு முன்பே கட்டப்பட்டது. சென்னை பெரம்பூரில் உள்ள ஶ்ரீஇராகவேந்திரா மடம் தங்களாலான உதவியை செய்து இக்கோயிலை விரிவுபடுத்தியுள்ளனர். காக்களூர் ஶ்ரீஇராகவேந்திராசார், உள்ளூர்வாசிகளின் உதவியை கொண்டு இக்கோயிலை பராமரித்து வருகிறார்.

ஶ்ரீஆஞ்சநேயர் கோயிலை ஒட்டியே ஒரு புறம் ஶ்ரீகணபதிக்கு கோயில் உள்ளது. இங்கு பக்தர்கள் கணேசரையும்[ஆதி] ஆஞ்சநேயரையும் [அந்தம்] ஒரே சமயத்தில் தரிசனம் செய்து பலன் பல மடங்காக அடையலாம். இவ்விரு திருக்கோயிலுக்கும் முன் அரசமரமும், வேப்பைமரமும் சேர்ந்து வளர்ந்துள்ளது. ஶ்ரீஆஞ்சநேயருக்கு பக்தர்கள் இம்மரத்தின் கீழ் இருந்து தங்களது வழிபாட்டை செய்கிறார்கள், தனது வேண்டுகோளை ஶ்ரீஆஞ்சநேயர் நிறைவேற்றி வைக்கிறார்கள் என்கிறார்கள்.

ஶ்ரீவியாசராஜாவும் கக்களூர் ஶ்ரீவீர ஆஞ்சநேயரும்

காக்களூர் க்ஷேத்திரத்தில் இருக்கும் மூலவர் ஶ்ரீஆஞ்சநேயரை ஶ்ரீவியாசராஜர் பிரதிஷ்டை செய்துள்ளார். அவர் திருப்பதி திருத்தணி முதலிய க்ஷேத்திரங்களுக்கு யாத்திரை வந்துள்ளார். விஜய நகர் சாம்ராஜ்ஜியத்தின் குடையின் கீழ் இருந்த பல க்ஷேத்திரங்களுக்கு விஜயம் செய்துள்ளார். அப்படி யாத்திரை செய்யும் பொழுது பல தலங்களில் ஶ்ரீஆஞ்சநேயரை பிரதிஷ்டை செய்துள்ளார். அப்படி பிரதிஷ்டை செய்யப்பட்ட ஒரு தலம் காக்களூராகும். ஶ்ரீஇராகவேந்திர சுவாமி அவர்களும் இத்தலத்திற்கு வந்து இம்மூலவரை பூஜை செய்துள்ளார்.

ஶ்ரீ வீர ஆஞ்சநேயசுவாமி

மிகவும் கம்பீரமாகவும் நெடிந்தும் காணப்படுகிறார் காக்களூர் ஶ்ரீஆஞ்சநேயர். மூர்த்தம் சுமார் பத்தடி உயரம் உருவிலுள்ளார். அவர் கம்பீரமாக நிற்கும் அழகு பக்தர்களுக்கு மனதில் நம்பிக்கையை அதிகரிக்கும். நின்ற கோலத்தில், வலது திருக்கரத்தினால் அபயம் அளிக்கிறார். இடது திருக்கரத்தில் சௌகந்திகா புஷ்பத்தை வைத்துள்ளார். இருகரங்களிலும் ’கேயூரமும், கங்கணமும் அணிந்துள்ளார். அவரது நீண்ட வால் தலைக்கு மேல் வளைந்து தெரிகிறது. அவரது கேசம் அழகாக முடியப்பட்டுள்ளது. மார்பினை மூன்று விதமான மாலைகள் அலங்கரிக்கின்றன. திருப்பாதங்கள் பக்தர்கள் கூப்பிட்ட குரலுக்கு வருவதற்கு தயாராக இருக்கும் நிலையில் காணப்படுகிறது. பகவானின் காருண்யமான கண்கள் பக்தர்களுக்கு வழங்கும் ஆசிகளை சொல்லிமுடியாது.

திருக்கோயில் பராமரிப்பு

இந்த க்ஷேத்திரத்தில் பூஜைகளும் பண்டிகைகளும் ஶ்ரீமாத்வ சம்பிரதாய விதிபடி செய்யப்படுகிறது. மிகவும் சுத்தமாகவும் நன்றாகவும் உள்ளூர் மாத்வர்கள், பக்தர்கள் கொடுக்கும் சிறிய காணிக்கையை கொண்டே இக்கோயிலை பராமரிக்கிறார்கள். இவர்களே பக்கத்தில் இருக்கும் ஶ்ரீகணபதி கோயிலையும் பராமரிக்கிறார்கள்.

 

திருக்கோயில் இருப்பிடம் :     "ஶ்ரீ வீர ஆஞ்சநேய சுவாமி திருக்கோயில், காக்களூர்"

 

அனுபவம்
கம்பீரமான காக்களூர் க்ஷேத்திர ஆஞ்சநேயரின் தர்சனம் பக்தருக்கு புத்துணர்ச்சியும், நம்பிக்கையும் கூட்டி வளமாக வாழ வழிச்சொல்லும்.

தமிழாக்கம் :திருமதி. ஸ்ரீமதி
முதல் பதிப்பு: ஜூன் 2018
திருத்தப்பட்ட பதிப்பு: செப்டம்பர் 2020


 

 

ஆஞ்சநேய ஸ்வாமி புகழ் வாழ்க

காற்று ஈன்ற காவியமே எம்மை காத்தருள்வாய்
நம்பினோம் நாவரசை நாங்களே
+