home-vayusutha: ஸ்லோகம் கோவில்கள் கட்டுரைகள்
boat

வாயு சுத:          இவ்விணைய தளத்தைப் பற்றி


மாதம் தோறும் விரிவடையும் வலை

வாயு சுத:    வாயு பகவானின் புதல்வர்
ஆஞ்சநேய ஸ்வாமியின் புகழ் உலக தமிழர்களை
சென்றடைய வரும் இணைய தளம்.


ஆஞ்சநேயர், சஞ்சீவி ராயன், ஹனுமந்தன் என்று பல பெயர்களில் பிரபலமான, இராமயண கதாபாத்திரம் இவர். இராமயண கதாநாயகன் இராமனின் செயலில் குறை கண்டவர் உள்ளனர். இராமயணத்தில் குறையில்லா குணமுடையவராக ஆஞ்சநேயரின் கதாபாத்திரத்தை சித்தரித்தவர் வால்மீகி. அதுவும் அவரை குரங்கின் உருவமாக்கி சுந்தரனாக்கியுள்ளார். குரங்கினையும் சுந்தரமாக்கிக் குணத்தின் பேருருவாய்ச் செய்து, அறிவில் பெருங்கடலாய்ச் செய்து, பக்தியின் ப்ரவாகமாய் செய்து அந்த கதாபாத்திரத்திற்குத் தெய்வத்துவம் கொடுத்த வால்மீகியின் கருணை பெரிது. அப்படிப்பட்ட ஸ்ரீஆஞ்சநேய மஹாப்ரபுவின் குணப்ரவாகங்களை பலர் தங்கள் தங்கள் மொழிகளில் கீர்த்தனங்களாகச் செய்துள்ளனர். (கீர்த்தனங்கள் என்பது கீர்த்தியை சொல்லும் பாடல்கள்). முடிந்த வரை அவைகளை தொகுத்து இவ்விணைய தளத்தில் கொடுக்க முயற்சி செய்துள்ளோம்.

ஸம்ஸ்கிருத மொழியில் உள்ளவைகளை 'ஸ்லோகங்கள்' என்ற தலைப்பிலும்

தமிழ் மொழியில் உள்ளவைகளை 'துதிகள்' என்ற தலைப்பிலும்

இதர மொழிகளில் உள்ளவைகளை 'ஸ்துதிகள்' என்ற தலைப்பிலும் தொகுத்துள்ளோம்.

பல மகான்கள் ஸ்ரீ ஆஞ்சநேயரை, அவரின் வீரத்தை, ஞானத்தை, வாக்குவன்மையை, உறுதிப்பாட்டை, அஞ்சாநெஞ்சத்தை, விழிப்புணர்ச்சியை, ஸ்ரீ இராம பக்தியை பற்றி, கூறியதை  'கட்டுரைகள்' என்ற தலைப்பில் தொகுத்துள்ளோம்.

ஸ்ரீ காஞ்சி காமகோடி ஜகத் குரு ஸ்ரீ சங்கராசாரிய ஸ்வாமிகள் மூவரும்   வாயுசுத: ஸ்ரீ ஆஞ்சநேய ஸ்வாமியைப் பற்றிய ஏடுகள்
  ஸ்ரீ காஞ்சி காமகோடி ஜகத் குரு ஸ்ரீ சங்கராசாரிய ஸ்வாமிகளுக்கு அர்ப்பணம்

  வீமனும்அனுமானும் காற்றின் மக்கள் என்று புராணங்கள் கூறும்.
  உயிருடையனவெல்லாம் காற்றின் மக்களே என்பது வேதம்.

                   -மகாகவி பாரதி

ஒரு காலகட்டத்தில் பக்தி மார்க்கம் - பகவானை துதிப்பதின் மூலமே அவனின் திருவருளை பெறமுடியும் என்ற நம்பிக்கை பெருகியது. பிரதேச மொழிகளில் பகவானின் கீர்த்திகளை பல மகான்கள் பாடினார்கள். ஞான தேவர், துகாராம், ஏகநாதர், நாமதேவர் தெற்கில் வியாஸராஜா, புரந்தரதாஸர், கனகதாஸர் முதலியவர்கள் தங்கள் பக்திப்பாடல்களால் மக்களை கவர்ந்தனர். மக்கள் பக்தி மார்க்கம் - பாகவத தர்மம் என்றும் கூறுவர் - நடைமுறையில் கடைப்பிடித்தனர்.

இப்படி பக்தி மார்க்கத்தில் திளைத்த மக்களுக்கு, வடக்கில் ஸ்ரீ துளஸிதாஸர், மேற்கில் ஸமர்த்த ஸ்ரீ ராமதாஸர், தென்மேற்கிலும் தெற்கிலும் ஸ்ரீ வியாஸராஜா இவர்களின் செல்வாக்கினால், ஸ்ரீ ஆஞ்சநோயர் மீது பக்தி அதிகமாயிற்று. பண்டை காலம் முதல் ஸ்ரீ ஆஞ்சநோய ஸ்வாமிக்கு என்றே பல தனி கோயில்கள் இருந்து வருகிறது. அன்றைய சூழ்நிலைக்கு ஏற்ப மக்களுக்கு தைரியமும் விழிப்புணர்ச்சியும் ஊட்ட ஸ்ரீ ஆஞ்சநேய வழிபாட்டினை இவர்களின் காலகட்டத்தில் பெருகினார்கள். பக்தி மார்க்கம் நிலைத்துவிட்ட இக்கட்டத்தில் ஸ்ரீஆஞ்சநேயருக்கு என்றே பல கோயில்கள் கட்டப்பட்டன. இன்றும் பல தனி கோயில்கள் கட்டப்படுகின்றன.

இக்கோவில்களின் விவரங்கள் பற்றி ' கோவில்கள்' பகுதியில்.

உங்கள் ஊர் கோவில்களில் நடக்கும் விழாக்களின் விவரம் ' பலகை' பகுதியில்.

நாங்கள் கடந்து வந்த பாதையைப் பற்றி 'எங்களைப் பற்றி' பகுதியில்

புத்தகங்கள் பதிப்பு பற்றிய விவரங்கள் ' வெளியீடு' பகுதியில்

ஸ்ரீ ஆஞ்சநேயர் பற்றிய எங்கள் ஆங்கில இணைய தளம் செல்ல 'ஆங்கில தளம்' சொடுக்கவும்.

ஸ்ரீ ஆஞ்சநேயர் பற்றிய எங்கள் ஹிந்தி இணைய தளம் செல்ல 'ஹிந்தி தளம்' சொடுக்கவும்.

தாங்களின் மேலான கருத்துகளை 'விருந்தினர் ஏட்டில்' பதிவிடுங்கள்

ஆதரவும் தகவலும் தாங்கள் தாருங்கள்.

இந்த இணைய தளம் மூலம் ஸ்ரீ ஆஞ்சநேயரின் புகழை பரப்ப வாருங்கள்..


பல மகான்கள் ஸ்ரீ ஆஞ்சநேயரை, அவரின் வீரத்தை, ஞானத்தை, உறுதிப்பாட்டை, வாக்குவன்மையை, அஞ்சாநெஞ்சத்தை, விழிப்புணர்ச்சியை, ஸ்ரீ இராம பக்தியை பற்றி, கூறியதை 'கட்டுரை'யிலும், பாடி பரவசமானதை 'ஸ்லோக'ங்களிலும், 'துதி'களிலும், 'ஸ்துதி'களிலும், அவர் அருள்பாலிக்கும் க்ஷேத்திரங்களை 'கோயில்'களிலும் தொகுத்து அளித்துள்ளோம்.

நல்வரவு

காற்றின் மகன் - அனுமனின் புகழ் பாடும் இவ்விணைய தளம் தாங்களை எதிர்கொண்டு வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறது. ஆஞ்சநேய ஸ்வாமியின் புகழ் உலக தமிழர்களை சென்றடைய வரும் இணைய தளம்.

ஸ்ரீ ஆஞ்சநேய ஸ்வாமி

அனுமன் வித்தியாசமாக - வேகமாக - முன்னோக்கி சிந்திப்பவர். செயலில் வீரன். வினையத்தின் உச்சம் அவர்

பக்தர்களின் வல்வினை தீர்த்து மங்களம் அனைத்தும் அளிக்கும் அனுமனின் பதம் பணிவோம். பக்தர்களின் துர்சிந்தனைகளையும், தீய செயல்களையும் வேருடன் அறுத்து, அவர் தம் நினைவிலும் சொல்லிலும் செயலிலும் தூய்மை புகட்டுபவர். அவ்வனுமனின் தாள் சரணம்.

+