ஸம்ஸ்கிருத ஸ்லோகங்கள் தமிழ் எழுத்தில்

ஸ்ரீ ஹநுமத் த்வாதச நாம ஸ்தோத்ரம் IIஹநுமாரின் பன்னிரண்டு நாமாக்களை கொண்ட ஸ்தோத்திரங்கள் இரண்டுள்ளன.
இது இரண்டாவது

இந்தப் பன்னிரண்டு நாமாக்கள் அடங்கிய ஸ்லோகத்தை இரவில் தூங்கப் போகும்போதும், காலையில் எழுந்த உடனும் ராமதூத ஹநுமாரை தியானித்து சொல்வதால் எவற்றிலும் பயமற்று செயல்புரிந்து வெற்றியடைவோம்.

ஸர்வாரிஷ்ட-நிவாரகம் சு’ப’கரம் பிங்காக்ஷமக்ஷாபஹம்
ஸீதாந்வேஷணதத்பரம் கபிவரம் கோடீந்து-ஸூர்யப்ரபம் |
லங்காத்வீப-ப’யங்கரம் ஸகலதம் ஸுக்ரீவ-ஸம்மாநிதம்
தேவேந்த்ராதி-ஸமஸ்ததேவ-விநுதம் காகுத்ஸ்த-தூதம் பஜே ||

ஏவம் த்வாச நாமாநி ராமதூதஸ்ய: படேத் |
ஸ்வாபகாலே ப்ரபோதேச நிர்பயோ விஜயீ பவேத்

ஆஞ்சநேய ஸ்வாமி புகழ் வாழ்க.

காற்று ஈன்ற காவியமே எம்மை காத்தருள்வாய்
நம்பினோம் நாவரசை நாங்களே