home-vayusutha: ஸ்லோகம் கோவில்கள் கட்டுரைகள் சமீபத்திய சேர்க்கை
boat

குன்றின் உச்சியில் அரச மர நிழலில் கிடைக்கப்பெற்ற ஸ்ரீ ஹனுமான்

பஹாடி ஸ்ரீ ஹனுமான் கோவில், துக்காராம் கேட், செகந்திராபாத்

ஸ்ரீ ஹரி சுந்தர்

பஹாடி ஸ்ரீ ஹனுமான் கோவில், துக்காராம் கேட், செகந்திராபாத்

ஹைதராபாத்தில் குடியேறியவர்கள்

பஹாடி ஸ்ரீ ஹனுமான் கோவில், துக்காராம் கேட், செகந்திராபாத் போர் என்பதையே வேலையாக இருந்த அந்தக் காலத்தில் வழக்கமாக ஆட்சியாளர்களின் படைகள் ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு நகர்ந்து கொண்டிருந்தது . இதனால் இந்தியாவின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மக்கள் போரிடும் படைகள் அடையயிருக்கும் அதிர்ஷ்டத்தை நம்பிப் படையினை பின்தொடர்ந்தனர். அல்லது குழுவின் ஒரு பகுதியாகவோ தங்கள் பிரதேசத்தை விட்டு வெளிவந்தனர். போரைக் கண்ட ஒரு இடங்களில் ஹைதராபாத்தும் ஒன்று. இந்தியாவின் பிற பகுதிகளிலிருந்து சில குடியேறிகளைத் தக்கவைத்துக் கொண்டது. வேறு பிரதேசங்களில் இருந்து வந்தவர்கள் குழுமங்களாக இங்கு வசிக்கலாயினர். இதனால், அக்குழுமங்கங்கள் வசிக்கும் பகுதி, அந்த இடம் அவர்களின் வேலை அல்லது அவர்கள் பேசும் மொழி போன்றவற்றால் அழைக்கப்பட்டது. இங்கு ரயில்வே வளர்ச்சியுடன் மராட்டியர்கள், ராஜஸ்தானியர்கள், தமிழர்கள் என்று பலர் இடம்பெயர்ந்து இங்கு வந்தனர்.

இரண்டாவதாக, நீண்ட காலமாக ஹைதராபாத் ஒரு வர்த்தக மையமாக இருந்தது, மேலும் பல வர்த்தகர்களையும் ஈர்த்தது. இந்தியா முழுவதிலுமிருந்து வர்த்தகத்துடன் தொடர்புடைய பலர் இங்கு வந்தனர். அவர்களில் சிலர் ஹைதராபாத்தில் குடியேறினர். அப்படி குடியேரியவர்களில் ராஜஸ்தானின் மார்வாரைச் சேர்ந்த சிலர் அந்த நாட்களில் ஹைதராபாத் நிஜாமால் அழைக்கப்பட்டு ஆதரவளிக்கப்பட்டனர். அவர்களில் சில உயரடுக்கினருக்கு நிஜாமின் நிர்வாகத்தின் நிதி கையாளும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. வளர்ச்சி நடவடிக்கைகள் இங்கு அதிகமாகவே, இந்தியாவின் பிற பகுதிகளிலிருந்து அனைத்து தொழில்கள் மற்றும் திறன்களைச் சேர்ந்த மக்கள் அதிகமான இங்கு குடியேறத் தொடங்கினர். சுமார் நூற்று ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு நடந்த வளர்ச்சி நடவடிக்கைகளில் ஒன்று ரயில்வே ஆகும்.

ராஜஸ்தானில் இருந்து குடியேறியவர்களில் பலர் ராம்ஷே, விஷ்ணோய் மற்றும் ராமநந்தி அல்லது ராம்வத் பிரிவைப் பின்பற்றுபவர்கள், அவர்களுக்கு ஸ்ரீ விஷ்ணு முக்கிய தெய்வம். மராத்தியர்களில் பலர் சமர்த்தரைப் பின்பற்றுபவர்கள், மேலும் ஸ்ரீ ராமர் முக்கிய தெய்வம்.

துக்காராம் கேட்

துக்காராம் கேட் [வாயில்] என்பது செகந்திராபாத் ரயில் நிலையத்திற்கு அருகில் அமைந்துள்ள ஒரு இடத்தின் பெயர். செகந்திராபாத் நிலையம் 1870 இல் நடைமுறைக்கு வந்தது. பல ஆண்டுகளாக நிஜாம் மாநிலத்தின் பிற பகுதிகளுடன் இணைக்க பல ரயில் பாதைகள் அமைக்கப்பட்டன. செகந்திராபாத்திலிருந்து மல்காஜிகிரி வழியாக மன்மாட் செல்லும் ஒரு பாதை உள்ளது. செகந்திராபாத்திலிருந்து மௌலா அலி வழியாக வாரங்கலுக்கு மற்றொரு பாதை செல்கிறது. இந்த இரண்டு பாதைகளும் துக்காராம் வாயிலுக்கு அருகில் கிளைக்கின்றன. பல ரயில்வே நிறுவனங்கள் மற்றும் லோகோ ஷெட் ரயில்வே குடியிருப்புகள் துக்காராம் வாயிலுக்கு அருகில் அமைந்துள்ளன. இரண்டு பாதைகள் பிரிந்து செல்வது, பல ரயில்வே தொழில் பட்டறைகள் இருந்ததால், இந்த துக்காராம் கேட் ரயில்வே கிராசிங் மிகவும் பரபரப்பாக இருந்தது.

இந்த ரயில் கேட்டுக்கு எப்படி 'துக்காராம் வாயில்' என்று பெயர் வந்தது என்பது தெரியவில்லை. மல்கஜிகிரியில் வசிக்கும் பழங்கால இரயில்வே ஊழியர்களின் கூற்றுப்படி, அந்த பெயரில் யாரோ ஒருவர் இந்த குறிப்பிட்ட ரயில் கேட்டை நீண்ட காலமாக கையாண்டிருக்கலாம், எனவே இது 'துக்காராம் கேட்' என்று அழைக்கப்படுகிறது.

தற்போதைய ரயில்வே மைதானத்திற்கு அருகிலுள்ள மலைப்பகுதி

பஹாடி ஸ்ரீ ஹனுமான் கோவில், துக்காராம் கேட், செகந்திராபாத் தற்போதைய செகந்திராபாத் ரயில் நிலையத்தைச் சுற்றியுள்ள பகுதி பாறைகளால் சூழப்பட்டுள்ளது, அங்கு பல பெரிய பாறைகள் காணப்பட்டன. அந்த இடத்தில் ரயில் நிலையம் வருவதற்கு முன்பே இந்த பகுதி நீண்ட காலமாக மக்கள் வசித்து வந்தனர். ரயில்வே வருவதற்கு முன்பே பலர் அந்த இடங்களில் குடியேறினர். அவர்களில் பெரும்பாலோர் இந்தியாவின் பிற பகுதிகளிலிருந்து குடிபெயர்ந்தவர்கள். ரயில் நிலையத்திற்கு அருகில் ஸ்ரீ ஹனுமானுக்கு கோவிலை நிறுவிய அத்தகைய ஒரு குழுவைப் பற்றி நாம் பார்த்தோம். இதைப் பற்றிய கூடுதல் விவரங்களுக்கு, எங்கள் தளத்தில் "ஸ்ரீ பஞ்சமுகி ஹனுமான் கோயில், காஸ்மண்டி சாலை, செகந்திராபாத்" என்பதைப் படியுங்கள்.

துக்காராம் கேட் அருகில் வசித்து வந்த/ குடியேறிய குழுமத்தில் மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஜோஷி என்ற குடும்பப்பெயருடன் கூடிய பிராமணர்கள் குழுவும் ஒன்று. அவர்களில் ஒருவர் லல்லகுடாவில் உள்ள ஒரு கோவிலில் பூசாரியாக இருந்தார். அவர் தனது வீட்டிலிருந்து ஒரு குறுக்குவழிப் பாதை வழியாக நடந்து கோயிலுக்குச் செல்வது வழக்கம். வழியில், பாறைகளும் பெரும் பாறைகளும் அதிகம் இருந்தன, அவற்றில் ஒன்று மிகப்பெரியதாகவும், கிட்டத்தட்ட ஒரு குன்றைப் போலவும் இருந்தது. இது இந்த பூசாரியின் கவனத்தை ஈர்த்தது, ஒரு நல்ல நாள் அவர் குன்றின் மேல் ஏறத் துணிந்தார்.

ஸ்ரீ ஹனுமாரை கண்டார்

அவர் குன்றின் உச்சியை அடைந்ததும், அருகிலுள்ள பாறைக்கு நிழல் தரும் அளவுக்கு அதிகமாக பரவியிருந்த ஒரு அரச மரத்தினைக் கண்டார். அரச மரம் இந்திய துணைக்கண்டம், தென்மேற்கு சீனா மற்றும் இந்தோசீனாவை மட்டுமே பூர்வீகமாகக் கொண்ட ஒரு அத்தி இனமாகும். இந்த மரம் போதி மரம், அஸ்வத்த மரம் போன்ற பிற பெயர்களிலும் அழைக்கப்படுகிறது, மேலும் தமிழில், இது அரச மரம் என்றும் அழைக்கப்படுகிறது.

ஜோஷி உச்சியை அடைந்ததும், அரச மரத்தினைக் கண்டார், அதன் கிளைகள் அருகிலுள்ள பாறைக்கு நிழல் தரும் அளவுக்குப் பரவியிருந்தன. அவர் அந்த இடத்தைக் கடந்து சென்றபோது, அரச மரத்தால் கொடுக்கப்பட்ட நிழலின் கீழ், பாறையில் அனுமனின் புடைப்புச் சிலை இருப்பதைக் கண்டு அவர் ஆச்சரியப்பட்டார். இன்று பக்தர்கள் முதலில் அரச மரத்திற்கு தங்கள் பிரார்த்தனையைச் செய்து, பின்னர் அனுமனுக்கு தங்கள் பிரார்த்தனைகளைச் செய்கிறார்கள்.

பாரதத்தில், சாதுக்கள் [துறவிகள்] மறுபிறப்பு சுழற்சியிலிருந்து தங்களை விடுவித்துக் கொள்ள புனித அரச மரங்களின் கீழ் தியானம் செய்வது வழக்கம். இந்த மரத்தின் வேரில் பிரம்மாவும், உடற்பகுதியில் விஷ்ணுவும், மேல் பகுதியில் சிவனும் வசிப்பதாகவும், எனவே 'விர்க்ஷ ராஜா' என்று அழைக்கப்படுகிறது, அதாவது 'மரங்களின் ராஜா' என்று அழைக்கப்படுகிறது. தமிழில், இது 'அரச மரம்' என்று அழைக்கப்படுகிறது, அதாவது 'மரங்களின் ராஜா'.

காற்று வீசிக் கொண்டிருந்த நிலையில், குன்றின் உச்சியில் இருந்த அரச மரத்தின் அடியில் இருந்த இடம், கடவுளுக்கு பிரார்த்தனை செய்வதற்கு ஒரு இனிய உகந்த இடமாக பூசாரி ஜோஷி உணர்ந்தார். அவர் அந்த இடத்தின் வழியாகச் சென்றபோது, அரச மரத்தின் நிழலின் கீழ், பாறையில் அனுமனின் உருவம் புடைப்புச் சித்திரமாக செதுக்கப்பட்டிருப்பதைக் கண்டு ஆச்சரியப்பட்டார்.

பூசாரியின் வழக்க மாற்றம்

லல்லகுடா பூசாரி ஜோஷி, குன்றின் உச்சியில் பாறையில் ஸ்ரீ ஹனுமான் சிலையைப் பார்த்த பிறகு, அவரை பிரார்த்தனை செய்ய முடிவு செய்தார். லல்லகுடா கோவிலுக்குச் செல்வதற்கு முன்பு, குன்றின் மேல் ஏறி அனுமனுக்கு பிரார்த்தனை செய்வதை அவர் தனது தினசரி வழக்கமாகக் கொண்டார். காலப்போக்கில், குன்றின் உச்சியில் ஸ்ரீ ஹனுமான் சிலை இருக்கும் செய்தி மக்களிடையே பரவியது. பக்தர்களின் எண்ணிக்கை மெதுவாக அதிகரித்தது. அவர்கள் முதலில் அரச மரத்திற்கு பிரார்த்தனை செய்து, பின்னர் அனுமனுக்கு பிரார்த்தனை செய்யும் வழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டனர்.

கோயிலாக வளர்ச்சி

பஹாடி ஸ்ரீ ஹனுமான் கோவில், துக்காராம் கேட், செகந்திராபாத் ஜோஷியின் குடும்பத்தினர் தொடர்ந்து அனுமனின் பூசாரிகளாக இருந்தனர். காலம் செல்லச் செல்ல, இந்த இடத்தைச் சுற்றி ஏராளமான வளர்ச்சிப் பணிகள் நடந்தன. இந்த குன்றுக்கு அருகில் செகந்திராபாத் இரயில் நிலையம் மற்றும் ரயில்வே காலனி போன்றவை எழுந்ததே இதற்கு முக்கியக் காரணமாக இருக்கலாம். இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இருந்து, இந்த இடம் திருவிழாக்கள் மற்றும் கொண்டாட்டங்களால் துடிப்பாக மாறியது. முக்கியமாக பக்தர்கள் அருகிலுள்ள ரயில்வே ஊழியர்களாக இருந்தனர், மேலும் அவர்கள் கோவிலில் வசதிகளை மேம்படுத்துவதில் அதிக ஆர்வம் காட்டினர். அப்போது மார்வார் மக்களும், ராமானந்தி பிரிவைச் சேர்ந்தவர்களும் தெய்வத்திற்கு பூஜை செய்து கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. இருபதாம் நூற்றாண்டின் இறுதியில், கோயில் மிகவும் மேம்பட்டதால், அது அறக்கட்டளைத் துறையின் கவனத்தை ஈர்த்தது, மேலும் அந்தத் துறை கோயிலின் நிர்வாகத்தை எடுத்துக் கொண்டது. தற்போது கோயில் தெலுங்கானா அரசின் அறக்கட்டளைத் துறையின் கீழ் உள்ளது.

தற்போதைய கோயில்

குன்றின் உச்சியில் உள்ள கோயிலின் தோற்றம் சாலையிலிருந்து அற்புதமாகத் தெரிகிறது. குன்றும் கோயிலும் தெற்கு நோக்கி உள்ளன. படிகளில் ஏறி சென்றால், சதுர வடிவிலான சமவெளி வரும். அங்கு துவஜஸ்தம்பம் [கொடி கம்பம்] மற்றும் இடது கையில் ஒரு கதாயுததமும் வலது கை 'அபய முத்திரை'யுடன் உள்ள இருபது அடி உயரமுள்ள ஸ்ரீ ஹனுமானின் ஒரு பெரிய சிலையைக் காணலாம். இந்த சிமென்ட் சிலை தூரத்திலிருந்தே மிகவும் கம்பீரமாக உள்ளது. இதன் பின்புறம் பிரதான கோயிலின் நுழைவாயில் உள்ளது. நுழைவாயிலில் வளைவில் ஸ்ரீ ராமர், ஸ்ரீ சீதா, ஸ்ரீ லட்சுமணன் மற்றும் ஸ்ரீ ஹனுமான் ஆகியோரின் சுண்ணாம்பு கலவை உருவங்கள் உள்ளன. அந்த வளைவின் மேல் ஒரு சிறிய சிகரமும் காணப்படுகிறது. பின் படிகளில் ஏறினால் மேலே குறிப்பிடப்பட்ட அரச மரம் காணப்படும். மரம் ஒரு நீண்ட சமவெளியில் இருப்பதைக் காணலாம். மரத்தின் அடியில் சில நாகப் பிரதிஷ்டைகள் உள்ளன. மரத்தின் பின்னால் பிரதான கோயில் உள்ளது, சில படிகளில் ஏற வேண்டும்.

நடுவில் கர்ப்பகிரகம் கொண்ட தூண்கள் கொண்ட கல் கூரை மண்டபம் பக்தரை வரவேற்கிறது. நுழைவிடத்திலிருந்தே ஹனுமாரை பக்தர்கள் தரிசனம் செய்யலாம். பிரம்மாண்டமாக அற்புதமான ஹனுமாரை கண்டதும் அவர் பக்தரின் மனதில் வீற்றுவிடுவார் என்பதில் ஐயமில்லை.

இடதுபுறத்தில், ஸ்ரீ கணேசரின் சன்னிதி மேற்கு நோக்கிக் காணப்படுகிறது. இந்த சன்னிதிக்குப் பின்னால், ஸ்ரீ ராமர், ஸ்ரீ சீதையின் சன்னிதி தெற்கு நோக்கி உள்ளது. பக்தர்கள் வளாகத்தை வலம் வருகையில், கர்ப்பகிரகத்தில் ஸ்ரீ ஹனுமார் காணப்படுகின்ற பெரிய பாறையின் பின்புறத்தைக் காண்பார்கள் [பாறையின் இந்தப் பகுதி வலையால் வேலி அமைக்கப்பட்டிருந்தது], பின்னர் நவகிரகங்கள் வருகின்றன. கர்ப்பகிரகத்தின் விமானம் உள்ளது, அதை வெளியில் இருந்து காணலாம்.

ஸ்ரீ ஹனுமார்

ஸ்ரீ ஹனுமான், பஹாடி ஸ்ரீ ஹனுமான் கோவில், துக்காராம் கேட், செகந்திராபாத் பாறை முகத்தில் காணப்படும் பிரபுவின் மூர்த்தி சுமார் ஆறு அடி உயரம் கொண்டது. இந்த சிற்பம் செதுக்கப்படவில்லை என்று தெரிகிறது. பிரபுவின் திருவாச்சியில் தசாவதாரம் பொறிக்கப்பட்டுள்ளது. ஊர்வல மூர்த்தியும் கர்ப்பகிரகத்தில் காணப்படுகிறார். ஊர்வல மூர்த்தி ஹனுமார் 'அஞ்சனாலி ஹஸ்தம்' உடன் நின்ற நிலையில் காணப்படுகிறார்.

பிரபு மேற்கு நோக்கி நடந்து செல்லும் பாவத்தில் காணலாம், இடது காலை முன்னோக்கி வைத்து வலது கால் தரையில் இருந்து உயர்த்தி, அடுத்த அடியை எடுக்கத் தயாராக உள்ளதாக காணப்படுகிறார். அவர் தனது இரு கால்களிலும் 'தண்டை' மற்றும் 'நுபூர்' அணிந்துள்ளார். இடது முழங்காலுக்குக் கீழே ஒரு ஆபரணம் காணப்படுகிறது. அவர் வேட்டி கச்சம் வைத்து அணிந்துள்ளார். இடது கையில் சௌகந்திகா மலரின் தண்டைப் பிடித்துள்ளார், அது அவரது இடது தொடையின் அருகில் உள்ளது. அந்த மலர் அவரது இடது தோளுக்கு மேலே காணப்படுகிறது. அவரது வலது கை அவரது உடலிலிருந்து சிறிது விலகி, முஷ்டியுடன் ஏதோ ஒன்றைப் பிடித்துள்ளார். அவரது அகன்ற மார்பில் முப்புரி நூல், மாலையும் காணப்படுகிறது. அவரது கழுத்துக்கு அருகில் ஒரு ஆபரணம் அணிந்துள்ளார். அவரது வால் உயர்ந்து தலைக்குப் பின்னால் முடிகிறது. அவர் துணியால் ஆன தலைக்கவசத்தை அணிந்துள்ளார். அவரது புருவங்கள் நீளமாக உள்ளன, அவரது கண்கள் பிரகாசமாகவும் பெரியதாகவும் உள்ளன. இறைவன் பக்கவாட்டில் இருப்பதால் வலது கண் மட்டுமே தெரிகிறது. பஞ்சுபோன்ற கன்னத்தில் நீண்ட மீசை பார்ப்பதற்கு அழகாக இருக்கிறது. காதில் இறைவன் அணிந்திருக்கும் குண்டலம் அவரது தோளைத் தொடுவது போல் காணப்படுகிறது.

 

திருக்கோயில் இருப்பிடம் :     "பஹாடி ஸ்ரீ ஹனுமான் கோவில், துக்காராம் கேட், செகந்திராபாத்"

 

அனுபவம்
இந்த க்ஷேத்திரத்தின் இறைவனை தரிசனம் செய்யுங்கள், முதல் பார்வையே உங்களை மெய்மறக்கச் செய்வார் என்பது திண்ணம், பக்தர்களே!       

தமிழாக்கம் : திரு. ::
பதிப்பு:  ஆகஸ்ட் 2025


 

 

ஆஞ்சநேய ஸ்வாமி புகழ் வாழ்க

காற்று ஈன்ற காவியமே எம்மை காத்தருள்வாய்
நம்பினோம் நாவரசை நாங்களே
+