தஞ்சாவூர் நகரில் அமைந்துள்ள மானம்புச்சாவடி, தஞ்சாவூர் நகராட்சியின் கீழ் உள்ள ஒரு வார்டு ஆகும். 1925 ஆம் ஆண்டு சென்னை தொல்பொருள் துறையால் வெளியிடப்பட்ட பி.வி. ஜெகதீச ஐயர் எழுதிய 'தஞ்சாவூர் மாவட்ட வரலாறு' என்ற புத்தகத்தில் குறிப்பின் படி இந்த இடம் நகரத்தின் புறநகர்ப் பகுதியாக ஐரோப்பியர்கள் குடியிருப்பாக ஆங்கிலேயர்கள் காலத்தில் இருந்ததது.
தஞ்சாவூர் கலாச்சார நடவடிக்கைகளுக்கு பிரபலமானது, குறிப்பாக பாகவத மேளாவிற்கு பிரபலமானது. மானம்புச்சாவடியில் சௌராஷ்டிர மக்கள் அதிக எண்ணிக்கையில் வாழ்கின்றனர். வித்வான் பிரம்மஸ்ரீ வந்தவாசி ராமஸ்வாமி பாகவதர் எழுதிய நாடகங்கள் பாகவத மேளாவில் சௌராஷ்டிர சமூகத்தைச் சேர்ந்த கலைஞர்களால் இங்கு நிகழ்த்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடதக்கது.
மகர்நோன்புச்சாவடி என்ற பெயர், காலப்போக்கில், பேச்சுவழக்கில் மானம்புச்சாவடி என்று மாறியது.
தமிழ் நாட்காட்டியின் புரட்டாசி மாதத்தில் சந்திரனின் வளர்பிறையில், தேவிக்கு ஒன்பது நாள் விரதம்/விழா அனுசரிக்கப்படுகிறது. இந்த கொண்டாட்டம் 'நவராத்திரி' என்று அழைக்கப்படுகிறது. முதல் மூன்று நாட்கள் ஸ்ரீ பார்வதிக்கும், அடுத்த மூன்று நாட்கள் ஸ்ரீ லட்சுமிக்கும், கடைசி மூன்று நாட்கள் ஸ்ரீ சரஸ்வதிக்கும் விரதம்/விழா அர்ப்பணிக்கப்படுகிறது. இந்த ஒன்பது நாட்களில் குடும்பம் மற்றும் சமூகத்தின் நலனுக்காக பக்தர்கள் விரதம் கடைபிடிப்பது வழக்கம்.
விரதம் கடைபிடிக்கும் பக்தர்கள் இந்த நோக்கத்திற்காக ஒரு பொதுவான இடத்தில் கூடுவார்கள். மகா நவமியின் போது தஞ்சாவூரில் பக்தர்கள் கூடிய பொதுவான இடம் மகர்நோன்புச்சாவடி என்று அழைக்கப்பட்டது. தமிழில் 'நோன்பு' என்ற சொல்லுக்கு விரதம்/தவம் என்று பொருள். தமிழ் அகராதியின் (1985) படி, 'சாவடி' என்றால் வழிப்போக்கர்/பொதுமக்கள் தங்கும்/கூடும் இடம் என்று பொருள். எனவே இந்த இடம் மகர்னோன்புச்சாவடி என்று அழைக்கப்பட்டது.
தஞ்சாவூர் மராட்டிய ஆட்சியின் கீழ் 'சத்திரம்', 'சாவடி' மற்றும் 'தண்ணீர் பந்தல்' பற்றி மேலும் அறிய, 'ஹனுமார் கோயில், மோதிரப்பா சாவடி' என்ற கட்டுரையைப் படியுங்கள்.
விமானத்தில், ஸ்ரீ விஷ்ணு தெற்கு நோக்கி ஸ்ரீ நரசிம்மராகவும், மேற்கு நோக்கி ஸ்ரீ வராஹராகவும், வடக்கு நோக்கி பாற்கடல் விஷ்ணுவாகவும் காட்சி தருகிறார். ஸ்ரீதேவி மற்றும் பூதேவி ஆகிய இரு மனைவியருடன் எல்லா விஷ்ணுவும் காணப்படுகிறார்கள். ஸ்ரீ நரசிம்மரையும் மற்றும் ஸ்ரீ வராஹரையும் அவர்களின் இரு மனைவியருடன் காண்பது என்பது மிக அரிதான காட்சி.
சௌராஷ்டிர சமூகத்தைச் சேர்ந்த மக்கள் மானம்புச்சாவடியில் அதிக எண்ணிக்கையில் வாழ்கின்றனர். அவர்கள் பாரம்பரியமாக நெசவாளர்கள். இந்தப் பகுதி பிரிட்டிஷ் சமூகத்தின் புறநகர்ப் பகுதியாக இருந்ததாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலும், தெருப் பெயர்களிலிருந்து வரும் சான்றுகள் ஒரு நெசவு சமூகம் இருந்ததைக் குறிக்கின்றன. மேலும், பழமையான மற்றும் சில மிக பழமையான கோயில்களையும் நாம் இங்கு காணலாம்.
இப்பகுதியில் உள்ள கோயில்களில் சில சௌராஷ்டிர சமூகத்தைச் சேர்ந்தவை. சௌராஷ்டிரர்களால் பராமரிக்கப்படும் இங்குள்ள ஸ்ரீ கிருஷ்ணர் கோயில் தஞ்சாவூரில் உள்ள பிரபலமான கோயில்களில் ஒன்றாகும். இதைச் சுற்றியுள்ள பல சாலைகள் இந்த கோயில் அல்லது நெசவு தொடர்பானவையாகவே காணப்படுகிறது. இந்தக் கோயிலிலிருந்து வெகு அருகாமையில் இந்த சமூக மக்களால் பராமரிக்கப்படும் கிட்டத்தட்ட இருநூறு ஆண்டுகள் பழமையான ஸ்ரீ ஆஞ்சநேயருக்கான மற்றொரு கோயில் உள்ளது. ஸ்ரீஆஞ்சநேயரின் சிலையை முதலில் நிறுவியவரின் பெயர் ஸ்ரீ 'பாவுகர கிருஷ்ண பிள்ளை'. தமிழில் 'பாவு' என்ற வார்த்தைக்கு நெசவில் பயன்படுத்தப்படும் வார்ப் மற்றும் வெஃப்ட் சொருகும் கருவி என்று பொருள். கோயில் சாலைக்கு அவரது பெயரால் 'பாவுகர கிருஷ்ண பிள்ளை தெரு' என்று பெயரிடப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டின் சௌராஷ்டிர சமூகத்தைப் பற்றி மேலும் அறிய 'ஸ்ரீ ஆஞ்சநேயர், சீதாராம ஆஞ்சநேயர் மடாலயம், அலங்கார் தியேட்டருக்குப் பின்னால், மதுரை' என்ற எங்கள் மற்றொரு கட்டுரையைப் பார்க்கவும்.
இந்த ஆஞ்சநேயர் கோயில் 'ஸ்ரீ சஞ்சீவி ஆஞ்சநேயர் கோயில்' என்று அழைக்கப்படுகிறது. கோயில் கிழக்கு நோக்கி உள்ளது, மேலும் மூன்று நிலை கோபுரம் பக்தர்களை வரவேற்கிறது. கோயில் வளாகம் மிகவும் பெரியதாகவும், மிகவும் நேர்த்தியாகவும் பராமரிக்கப்படுகிறது. பக்தர் கோயிலுக்குள் நுழையும்போது, நீளமான ஒரு மண்டபம் வருகிறது. கர்ப்பகிரகம் மையத்தில், பிரதான நுழைவாயிலை நோக்கி உள்ளது. கர்ப்பகிரகத்திற்கு முன்பு சிறிய முன் மண்டபம் காணப்படுகிறது. பக்தர்கள் இறைவனைச் சுற்றி வருவதற்கான ஒரு பரந்த பாதையும் காணப்படுகிறது. விமானம் விஷ்ணு மற்றும் அவரது அவதாரங்களின் அழகிய சுண்ணாம்பு கலவை உருவங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. தெற்கு நோக்கிய ஸ்ரீ நரசிம்மராக ஸ்ரீ விஷ்ணுவும், மேற்கு நோக்கிய ஸ்ரீ வராஹர் மற்றும் வடக்கு நோக்கிய பாற்கடல் விஷ்ணுவும், இரு மனைவியரும் ஸ்ரீதேவி மற்றும் பூதேவி ஆகியோருடன் அனைத்து உருவங்களிலும் காணப்படுகிறார்கள். ஸ்ரீ நரசிம்மரை மற்றும் ஸ்ரீ வராஹர் தங்கள் இரு மனைவியருடன் காண்பது ஒரு அரிய காட்சி. ஸ்ரீ சீதா மாதா மற்றும் ஸ்ரீ லட்சுமணருடன் ஸ்ரீ ராமர் மற்றும் ஸ்ரீ ராமரின் தாமரை பாதங்களுக்கு அருகில் தாஸ பாவத்தில் ஸ்ரீ ஹனுமான் ஆகியோர் விமானத்தின் கிழக்குப் பக்கத்தில் காணப்படுகிறார்கள்.
வடக்குப் பக்கச் சுவரில் உள்ள பலகை, இந்தக் கோயில் 1840 மற்றும் 1896 ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் ஸ்ரீ சஞ்சீவி பிள்ளை அவர்களால் கட்டப்பட்டு கும்பாபிஷேகம் செய்யப்பட்டது என்பதைத் தெரிவிக்கிறது. ஸ்ரீ சஞ்சீவி பிள்ளையின் தந்தை ஸ்ரீ கிருஷ்ண பிள்ளை முதலில் ஸ்ரீ ஆஞ்சநேயரின் சிலையை நிறுவினார் என்றும் குறிப்பு சொல்கிறது. மற்றொரு பலகை 01.07.1993 அன்று மற்றொரு கும்பாபிஷேகம் செய்யப்பட்டதாகத் தெரிவிக்கிறது. மேலும் செப்டம்பர் 2019 இல், மற்றொரு கும்பாபிஷேகம் செய்யப்பட்டதாக எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டது.
பகவான் ஸ்ரீ சஞ்சீவி ஆஞ்சநேயரின் சிலை சுமார் நான்கு அடி உயரம் இருக்கும். கறுங்கல்லால் ஆனது.
இறைவன் கிழக்கு நோக்கி நின்ற நிலையில், வலது காலை இடதுபுறத்தில் இருந்து ஒரு அங்குலம் முன்னோக்கி வைத்தபடி காட்சித்தருகிறார். அவரது தாமரை பாதங்களில் தண்டை [கணுக்காலில்] மற்றும் நூபுர மணிகள் அலங்கரிக்கின்றன. அவரது வலுவான ஆடு தசை மற்றும் வலுவான தொடைகள் பார்ப்பவரை திகைக்க வைக்கின்றது. இறைவன் கோவணம் அணிந்துள்ளார், அதன் மேல் அவர் ஒரு இடுப்புத் துணியை அணிந்துள்ளார். அவரது கழுத்தில் ஒரு கழுத்தணியும் மற்றும் மார்பில் இரண்டு மாலையும் அலங்கரிக்கின்றன. அவரது மார்பின் குறுக்கே புனித முப்புரி நூல் காணப்படுகிறது. அவரது வலது கையில், அவர் சஞ்சீவி மலையை ஏந்தியுள்ளார், இடுப்பில் உள்ள அவரது இடது கை சௌகந்திகா மலரின் தண்டைப் பிடித்துள்ளது. இறைவனின் வால் பக்தருக்குத் தெரிவதில்லை. அவரது குண்டலம் காதணி பிரகாசிக்கிறது, மேலும் ஒரு அழகிய கிரீடத்தால் அலங்கரிக்கப்பட்டுள்ள சிரத்தின் கீழ் அவரது நேர்த்தியாக கட்டப்பட்ட முடி தெரிகிறது. இறைவனின் கண்கள் அன்புடனும், அக்கறையுடனும், கருணையுடனும், தனது பக்தர்களை நோக்குகின்றன.
அனுபவம்
பக்தரை தரிசனம் செய்வது நிச்சயமாக எந்தவொரு புதிய முயற்சியையும் மேற்கொள்ள நம்பிக்கையைத் தரும், ஏனெனில் இறைவன் அக்கறையையும் கருணையையும் அளிக்கிறார்.
தமிழாக்கம் : திரு. :: பதிப்பு: மே 2025