home-vayusutha: ஸ்லோகம் கோவில்கள் கட்டுரைகள்
boat

வாயு சுத:          அனுமனை பற்றிய தமிழ் துதிகள்


அகர வரிசை ஆஞ்சநேய அஷ்டோத்திரம்

 

ஸ்ரீ ஆஞ்சநேயர் 108 போற்றி

அகார உகார மகாரமாகிய மூன்று அக்ஷரங்களும் தனக்குள்ளே அடக்கிக் கொண்டுள்ள ஓர் அக்ஷரம் 'ஓம்' எனும் ப்ரணவ மந்திரம். இதனை பகவானுடைய ஒவ்வொரு நாமாவளிக்கு முன்னும், 'போற்றி' என்று முடிவிலும் சேர்த்துச் சொல்வது விசேஷம்.

உருவாக[1-7] அருவாக[8-14] அகமாக[15-24] அண்டமாக[25-35] அவதாரனாக[36-47] சுந்தர காண்ட நாயகனாக[48-80] அருளாளனாக[81-90] ஆராதனைக்குரியோனாக[91-108] ஆஞ்சநேயரின் இந்த 108 போற்றி அமைந்துள்ளது.

உடல் சுந்தியுடனும் நாமாவளியால் துதித்துத் தொழ; ஆயின அருள்வான் ஆஞ்சநேயன்.

அருளே
அருளானந்தனே
ஆனந்த வடிவே
அருட்பெருஞ்ஜோதியே
ஆகாச சஞ்சாரியே
அனுமனே
அஞ்சனைப் புதல்வனே 7
ஆதி அந்தம் அல்லானே
அந்தாதியே
ஆக்கு அழிவு அற்றோனே
அவினாசியே
அரூபியே
அசரீரியே
ஆனந்தனே 14
அறிவே
அறலோனே
அமைதியே
அடக்கமே
அமலனே
அறம்பாவம் அற்றோனே
அப்பனே
அம்மையே
அஞ்சினை வென்றவனே
அஞ்சினைச் செல்வனே 24
ஆனந்த ஜோதியே
ஆதாரமே
அணுவே
அணுவின் அணுவே
அணுவின் ஆகர்ஷணமே
அண்டத்தின் ஆதாரமே
ஆண்டத்தின் காவலனே
ஆகுதியே
அறிவுக் கனலே
அருட்புனலே
அகிலாண்ட நாயகனே 35
அசங்கும் குண்டலதாரியே
ஆவினன் அவதாரா
அஞ்சு வண்ண நாயகா
ஆதித்தன் சீடனே
ஆசையிலாச் சீலனே
அடக்கத்தின் அமைதியே
அறத்தின் வடிவே
அமிர்தவாணனே
அருட்கவிதைச் சொல் வடிவே
அறிவுச் சதுரனே
அங்கத ப்ரியனே
அனந்த புச்சனே 47
ஆணைப் பணிவோனே
ஆற்றலின் உறைவிடமே
அமர ஜாம்பவான் ப்ரியனே
அச்சமற்ற வீரனே
அலைக்கடல் கடந்தோனே
ஆற்றலின் பேருருவே
அரியின் சேவகனே
அப்பொன்மலை வந்தித்த அருட்செல்வா
ஆசானே
அரக்கிவாய் அணுவாக நுழைந்தோனே
அற்புதம் செய் விந்தனே
அந்நிழலரக்கியை மாய்த்தோனே
அருந்தவசிகள் வாழ்த்தப் பெற்றோனே
அரக்கி இலங்கிணியை ஒடுக்கியவா
அஞ்சா நெஞ்சனே
அட்டமா சித்திக்கு அதிபதியே
அன்னையிடம் மோதிரம் அளித்த அன்பனே
அன்னை சோகம் களைந்தோனே
அளவிலா வடிவம் கொண்டோனே
அசோகவனம் அழித்தோனே
அசுரன் நமனே
அக்சனை வதைத்தவா
அயனாயுதத்திற்குக் கட்டுண்டவா
அரக்கர்கோ ஆணவம் அடக்கியவா
அத்தீவிற்குத் தீயிட்டவா
அளப்பரியா ஆற்றலே
ஆழி தாவிய தூதனே
அண்ணலிடம் சூடாமணி ஒப்பித்தவா
அல்லல் தீர்க்கும் அன்பனே
அளவற்ற அன்பே
ஆராதனைத் தெய்வமே
அமர வாழ்வு பெற்றோனே
அயனாகும் அரசே 80
அபயம் அருள்வோனே
அல்லல் களைவோனே
அரும் பொருளே
அயோத்தி நிவாஸனே
ஆபத் பாந்தவனே
அனாத இரட்சகனே
அபார கருணாமூர்த்தியே
அபய வரதனே
அருட் குடையே
அணுகுவோர் துயர்துடைப்போனே 90
அபிஷேக ப்ரியனே
ஆயிரம் நாமம் கொண்டோ னே
அன்பர்க்கு அருள்வோனே
அஞ்சு முகத்தோனே
அற்புதம் நின்ற கவியே
ஆராதனையின் ஆணிவேரே
அமரனே
அமுத நிலை அருள்வோனே
அருளும் திருவடியே
அரியின் வாகனமானவனே
அரியின் அடியோனே
அஞ்சலி அந்தணனே
ஆன்மாவின் உட்பொருளே
அகமெலாம் நிறைந்திருக்கும் அமுதே
அமுதாகி இனிக்கும் அற்புதமே
அனுபூதியே
அருளும் தெய்வமே அனுமனே
அண்ணலின் அரியணை அடி அமர்ந்தோனே ஆஞ்சநேயனே. 108

 

 

ஆஞ்சநேய ஸ்வாமி புகழ் வாழ்க

காற்று ஈன்ற காவியமே எம்மை காத்தருள்வாய்
நம்பினோம் நாவரசை நாங்களே
+