home-vayusutha: ஸ்லோகம் கோவில்கள் கட்டுரைகள்
boat

வாயு சுத:          அனுமனை பற்றிய தமிழ் துதிகள்


பாராயணத்திற்கான கம்பராமாயணப் பாடல்கள்

 

உலகம் யாவையும் தாமுளவாக் கலும்
நிலைபெறுத்தலும் நீக்கலும் நீங்கலா
அலகி லாவிளை யாட்டுடை யாரவர்
தலைவ ரன்னவர்க் கேசரண் நாங்களே

அஞ்சிலே ஒன்று பெற்றான் அஞ்சிலே ஒன்றைத்தாவி
அஞ்சிலே ஒன்றாறாக ஆருயிர்காக ஏகி
அஞ்சிலே ஒன்றுபெற்ற அணங்கைக் கண்டு அயலார் ஊரில்
அஞ்சிலே ஒன்றைவைத்தான் அவனைம்மை அளித்துக் காப்பான்

அஞ்சனை மைந்தா போற்றி ! அஞ்சினை வென்றாய் போற்றி !
வெஞ்சினைக்கதிர்பின் சென்று பிழுமறையுணர்ந்தாய் போற்றி !
மஞ்சன மேனிராமன் மலர்ப்பதம் மறவாய் போற்றி !
எஞ்சலில் ஊழியெல்லாம் இன்றென் விருப்பாய் ! போற்றி !

அஞ்சனைப் பெற்றெடுத்த அருந்தவப் புதல்வன் செல்வன்
செஞ்சுடர் குலத்துதித்த சிலையணி ராமன் தூதன்
வஞ்சகர் தமையடக்கி வணங்கிடும் அன்பர்க்கென்றும்
அஞ்ச லென்றருளும் வீரன் அனுமனைப் போற்றுவோமே

வால்விசைத் தெடுத்து வன்றாண் மடக்கிமார்பொடுக்கி மானத்
தோள்விசைத்துணைகள்பொங்கக் கழுத்தினைச் சுருக்கித் தூண்டு
கால் விசைத்தடக்கை நீட்டிக் கட்புலங் கதுவாவண்ணம்
மேல்விசைத் தெழுந்தானுச்சி விரிஞ்சனாடுரிஞ்ச வீரன்

சுந்தர வில்லியேவ சூழ்கடல் இலங்கை மேவி
அந்தமில் வீடுநல்கும் ஆயிழை தன்னைக் கண்டு
வந்தவெல் வரக்கர் சிந்தி வளையெரி மடுத்து மீண்ட
நந்தலில் லாததூதன் நம்மையும் அளித்துக் காப்பான்

அன்னைகை மோதிரத்தை அளித்தலும் மணியைத் தந்து
இன்னெடும் கடலைநீயும் எங்ஙனம் கடந்தாய், என்ன
உன்னத நெடியமாலாய் உயர்ந்தெழுந் தடங்கி நின்று
மன்னுதாய் ஆசி பெற்ற மாருதி பாதம் போற்றி

சொல்லுரம் பெற்ற சோர்விலா தூயவீரன்
வல்லவன் ராமன் சீதை வாயுறை பெற்ற அன்பன்
அல்லலைப் போக்கிக் காக்கும் அனுமனைப் பாடும்காலை
கல்லினைப் பெண்ணாய்ச் செய்தான் கழலிணைப் போற்றுவோமே

 

 

ஆஞ்சநேய ஸ்வாமி புகழ் வாழ்க

காற்று ஈன்ற காவியமே எம்மை காத்தருள்வாய்
நம்பினோம் நாவரசை நாங்களே
+