home-vayusutha: ஸ்லோகம் கோவில்கள் கட்டுரைகள்
boat

குவாலியர் ஜெய் விலாஸ் அரண்மனை வளாகத்திற்கு செல்லும் கேட். சங்கட மோசன் மாருதி மந்திருக்கு எதிரில் உள்ளது.


ஶ்ரீ சங்கட மோசன ஹனுமான் மந்திர், அரண்மனை வளாகம், குவாலியர், மத்திய பிரதேசம்

ஶ்ரீ பகன் சிங் சவுஹான், குவாலியர்


குவாலியர்

எட்டாம் நூற்றாண்டில் ஶ்ரீசூரஜ் சென் என்னும் படை தளபதி வினோதமன நோயினால் அவதிப்பட்டார். மருந்துகள் வேலை செய்யாத போது ஶ்ரீகுவாலிபா என்னும் சாது அவரது தவ வலிமையால் தளபதியின் நோயினை குணப்படுத்தினார். சாது இருந்த இடத்திற்கு அவரது பெயரையே தளபதி முன் மொழித்தார். அதனால் இவ்விடம் குவாலியர் என்று அழைக்கப்படுகிறது. அதன் பின் பல மரபினை சேர்ந்த மன்னர்கள் இவ்விடத்தை ஆண்டார்கள். அவர்ரவர் காலத்தின் சின்னமாக பல மாறுதல்கள் செய்யப்பட்டு செவ்வனே வளர்ந்தது குவாலியர்.

சுமார் இரண்டரை கிலோமீட்டர் நீளமும் ஒரு கிலோமீட்டர் அகலமும் சுமார் நூறு மீட்டர் உயரமும் கொண்ட பெரிய மலையும் அதன் மேல் மிக பெரிய கோட்டையும் அமைந்துள்ளது. இதனை மைய்யமாக கொண்டு குவாலியர் நகரம் அமைந்துள்ளது. தற்போதய குவாலியரை பொதுவாக மூன்று பகுதிகளாக குறிப்பிடுகிறார்கள். மொரார், லஸ்கர், பழைய குவாலியர். இதில் லஸ்கர் என்ற பாரசிக மொழி சொல் - படைகள் தங்கும் இடம் என்பதை குறிக்கும்.

மொரார், லஸ்கர், மற்றும் பழைய நகரம்

பழைய நகரின் கிழக்கில் அமைந்துள்ளது மொரார் என்னும் டவுன். மொராரில் இருந்த படையை ஜான்சிக்கு மாற்றிய பிறகு ஆங்கிலேயர்கள் 1886ஆம் ஆண்டு இதனை சிந்தியா அவர்களுக்கு கொடுத்தனர். மத்திய இந்தியாவில் 1857ல் நடந்த ’முதல் சுதந்திர புரட்சி’யில் மொரார் முக்கிய பங்கு வகித்தது.

லஸ்கர் என்னும் சொல் ’படைகள் தங்கும் இடம்’ என்று பொருள் படும். குவாலியர் சிந்தியாவின் ஆட்சிக்கு வந்த பிறகு லஸ்கர் செல்வாக்கு பெற்றது. ஜீவாஜி சதுக்கம் என்பது லஸ்கரின் நடு மையமாகவும் முக்கிய இடமாகவும் உள்ளது.

ஶ்ரீராம் தர்பார், சங்கட மோசன் மாருதி மந்திர், குவாலியர் ஜெய் விலாஸ் அரண்மனை வளாகம் மலையின் கிழக்கில் அமைந்துள்ள பழய நகரம் மிக பெரிய பரப்புடையது. அக்பர் சக்ரவர்த்தியின் அரசபையின் நவரத்னம் என்று அழைக்கப்பட்ட ஓன்பது கலைஞர்களில் ’மைன் தான்சென்’ முக்கியமானவர். அவரின் பாடும் திறமை உலக பிரசித்தம். அவரின் சமாதி இங்கு தான் அமைந்துள்ளது. மையப்பகுதியில் பிரான்ஸ் நாட்டின் அரண்மனையை ’மாடலாக’ கொண்டு கட்டப்பட்ட மிக அழகான ’ஜய விலாஸ்’ அரண்மனை அமைந்துள்ளது.

சிந்தியா பரம்பரையின் குவாலியர்

சிந்தியா என்பவர்கள் தற்போதய மஹராஷ்ட்ராவில் இருக்கும் சதாரா அருகிலுள்ள கன்ஹர்கேடா என்ற இடத்தை பூர்வீகமாக கொண்டவர்கள். இவர்கள் சத்திரபதி சிவாஜி, ராஜாராம் ஆகியோர்களின் படையில் பணிபுரிந்து பல போர்களில் முக்கிய பங்கு வகித்திருக்கிறார்கள். அப்படி இருந்த பரம்பரையில் ரானொஜி சிந்தியா என்பருக்கு மரட்டியர்களுக்கு ஆட்சிக்குட்பட்ட சில பிரதேசங்களை மால்வா பகுதியை ஆள அதிகாரம் கொடுக்கப்பட்டது. 1738ஆம் ஆண்டு குவாலியரில் இருந்த கொடுரமான மௌகல் சிறைசாலையை அவர் கைப்பற்றினார். முதன் முறையாக மௌகலாயர்கள் தேல்வியை தழுவினார்கள்.

ரானொஜி சிந்தியா முதலில் 1731ல் உஜ்ஜயினை தலைநகரமாக கொண்டு ஆட்சி புரிய தொடங்கினார். சிந்தியாகளுக்கு அதுவே 1810 வரை தலைநகரமாக இருந்தது. மஹத்ஜீ சிந்தியா 1765ஆம் ஆண்டு கோஹ்ட் அரசிடமிருந்து குவாலியரை வெற்றி கண்டார். தவுலத் ராவ் சிந்தியா தலைநகரை உஜ்ஜயினியிலிருந்து குவாலியரில் லஸ்கருக்கு மாற்றி அமைத்தார். சிந்தியாகள் வெள்ளையர்களுடன் மரட்டா படையிற்காக போர் புரிந்தனர். அஜ்மீரை வெற்றி கொண்டனர். இருந்தும் 1818ஆம் ஆண்டு சிந்தியாக்கள் ஆங்கிலேயருக்கு உட்பட்ட ராஜ்யமாக ஆகவேண்டிய கட்டாயம் ஆயிற்று. பின் சுதந்திர இந்தியாவில் பாரத அரசாங்கத்திற்கு உட்பட்டவர்களானார்கள்.

மாருதியை பூசிக்கும் பாரம்பரியம்

ஶ்ரீ சங்கட மோசன ஹனுமான் மந்திர், அரண்மனை வளாகம், குவாலியர், மத்திய பிரதேசம் சிந்தியாக்கள் மராத்திய பாரம்பரியத்தை கொண்டவர்கள். சத்ரபதி வீர சிவாஜிக்கு படை தளபதிகளாக இருந்தவர்கள். அதனால் குரு ஶ்ரீ சமர்த்த ராமதாஸரின் பாரம்பரியமான பகவான் ஶ்ரீ மாருதியை முதல் கடவுளாக பூஜை செய்வதை வழக்கமாக கொண்டவர்கள்.

ஜய விலாஸ் என்பது சிந்தியா பரம்பரையின் ராஜ தர்பார் மற்றும் அரண்மனை. தற்பொழுது ஜய விலாஸின் ஒரு பகுதி இவர்களின் வாழும் இடமாக உள்ளது. பிரன்ச் கட்டட கலை நிபுணர்களால் வடிவமைக்கப் பட்டுள்ளது இவ்வரண்மனை. அரண்மனை வளாகத்திற்கு மூன்று வாயில்கள் உள்ளன. மோதி மஹாலை நோக்கி மேற்கிலிருந்து கிழக்கு பக்கம் நடந்தால் நடுவில் ஜய விலாஸுக்கு உரிய மூன்று வாயில்கள் வரும். முதலில் ஜீவாஜி க்ளபின் எதிர்புறம் தெரியும் வாயில் வழி சென்றால் அரசர் காட்சிசாலை வரும். மேலும் நடந்தால் மோதி மஹால் வரும், அதனில் தற்பொழுது அரசாங்க அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. மேலும் நடந்தால் இரண்டாவது வாயில் ’ராணி மஹால் த்வார்’ என்பது வரும். தற்பொழுது சிந்தியாக்கள் தங்கள் இருப்பிடத்திற்கு இவ்வழியாக தான் ஜய விலாஸ் அரண்மனைக்கு செல்கிறார்கள். மேலும் சற்று நடந்தால் மிக அழகான கம்பீரமான கதவுகளுடன் கூடிய வாயில் வரும். இது முன்பு முக்கிய வாயிலாக உபயோகத்தில் இருந்தது. தற்பொழுது அதிகம் உபயோகத்தில் இல்லை, விசேட காலங்களில் மட்டும் உபயோகிக்கப்படுகிறது. இதன் எதிரில் மிக அருமையான விளயாட்டு மைதானம் இருக்கிறது, பழைய காலத்தில் கிரிக்கெட் விளையாடும் இடமாக இருந்தது. அங்கு அமைந்திருக்கும் பூங்காவிற்கு அருகில் அழகிய மாருதி கோயில் உள்ளது.

மாருதி மந்திர்

ஶ்ரீ சங்கட மோசன ஹனுமான் மந்திர், அரண்மனை வளாகம், குவாலியர், மத்திய பிரதேசம் இவ்மாருதிக்கான கோயில் 1779ஆம் ஆண்டு ஶ்ரீமஹத்ஜீ ராவ் சிந்தியா அவர்களால் கட்டப்பட்டது. ஶ்ரீ தவ்லத் ராவ் சிந்தியா அவர்கள் தன் காலத்தில் இக்கோயிலை மேலும் விரிவு படுத்தினார். மஹராஷ்ட்ரா அமராவதியில் உள்ள ஸுர்ஜீ அன்ஜன் கிராமத்தில் உள்ள தேவ்நாத் மடத்தை சேர்ந்த ஶ்ரீ ப்ரேம் மஹா ருத்ர் சத் குரு ஶ்ரீதேவ் நாத்ஜீ என்னும் மஹான் இக்கோயிலில் உள்ள மாருதி பிரிதிமையை ஸ்தாபனம் செய்தார். ப்ராண பிரிதிஷ்டையும் இம்மகான் செய்வித்தார். சிந்தியாக்கள் தங்களது அன்றாட அலுவல்களை தொடங்கும் முன் ஶ்ரீ மாருதியின் ஆசிகள் பெருவது வழக்கம். அதனாலேயே ஶ்ரீமாருதியின் இக்கோயில் முதல் துவாரத்திற்கு நேர் எதிரில் கட்டப்பட்டுள்ளது. தற்பொழுது சிந்தியாக்கள் தினம் இக்கோயிலுக்கு வருவதில்லை என்றாலும் அவர்களின் முக்கிய அலுவலுக்கு செல்லும் முன் ஶ்ரீ மாருதியின் ஆசி பெறுவது இன்றும் பழக்கத்தில் உள்ளது. ஶ்ரீமாதவ் ராவ் சிந்தியாவின் மறைவுக்கு பின் அவரது மகன் ஶ்ரீஜொதிராதித்ய சிந்தியா பதிமூன்று நாட்களுக்கு பின், 2001 அக்டோபர் 21ஆம் தேதி செய்த முதல் சுபகார்யாம் இக்கோயிலுக்கு வந்து சங்கட மோசன ஶ்ரீமாருதியிடம் ஆசி பெற்றது தான்.

கோயில் வளாகம்

சிந்தியாகளால் கட்டப்பட்ட இக்கோயில் தெற்கு நோக்கி அமைந்துள்ளது. வளாகத்தின் இடப்புறம் [மேற்கு பக்கம்] கோயில் அமைந்துள்ளது. தென் நோக்கி இருக்கும் ஶ்ரீமாருதியை பார்த்த வண்ணம் ஶ்ரீராமரின் கோயில் அமைக்கப்பட்டுள்ளது. இவ்விரு கோயில்களுக்கு இடையில் நிறைய இடைவெளியுள்ளது. இங்கு பக்தர்கள் உட்கார்ந்து தங்களது பிரார்த்தனைகளை செய்கிறார்கள். ஶ்ரீராமர், ஶ்ரீசீதாதேவி, ஶ்ரீலக்ஷ்மணர் ஆகியோர் சங்கட மோசன ஶ்ரீ மாருதியை பார்த்த வண்ணம் உள்ளார்கள். ஶ்ரீராமர் சன்னிதியை அடுத்து ஶ்ரீ கிருஷ்ணர்-ராதை, ஶ்ரீவிஷ்ணு-லக்ஷ்மி, ஆகியோருக்கும் சன்னிதிகள் உள்ளன. அருகில் ஶ்ரீகணபதிக்கும் ஶ்ரீ காளி மாதாவிற்கும் தனி தனி சன்னிதி உள்ளது. இவை அனைத்தும் சமீபத்தில் ஐம்பது ஆண்டுகளில் வந்தவை.

சங்கட மோசன ஶ்ரீமாருதி

மஹான் ஶ்ரீ ப்ரேம் மஹா ருத்ர் சத் குரு ஶ்ரீதேவ் நாத்ஜீ அவர்களால் பிரதிஷ்டை செய்யப்பட்ட ஶ்ரீமாருதி சிற்பிகளால் செதுக்கப்பட்டது அல்ல, அவர் தான் தோன்றி [சுயம்பூ]. இங்கு ஶ்ரீமாருதி எதிர் முகமாக இருக்கிறார். [முழு முகமும் தெரியும்]. சங்கட மேசன ஶ்ரீமாருதி தனது கண்களால் பக்தர்களை பூர்ணமாக கடாக்ஷிக்கிறார். அவரது வலது திருக்கரம் பக்தர்களுக்கு அபயத்தை தருகிறது. அவரது இடது திருக்கரம் அவரது இடையில் இருக்கிறது. இம்மாருதி ’ருத்ராவதாரராக’ கருதப்படுகிறார்.

 

திருக்கோயில் இருப்பிடம் :     "ஶ்ரீ சங்கட மோசன ஹனுமான் மந்திர், குவாலியர்"

 

அனுபவம்
அடுத்த முறை குவாலியர் செல்லும் பொழுது ஜய விலாஸ் அரண்மனையில் மிகவும் சக்தி வாய்ந்தவராக வீற்றிருக்கும் ருத்ராவதார ஶ்ரீ சங்கட மோசன ஹனுமாரை தரிசித்து, வாழ்விற்கு வேண்டிய உறுதிபாட்டினை பெற்று, வாழ்வில் நலங்கள் பலவும் அடைய தயாராகுங்கள்.

தமிழாக்கம் :திருமதி. ஸ்ரீமதி
முதல் பதிப்பு: டிசம்பர் 2016
திருத்தப்பட்ட பதிப்பு: செப்டம்பர் 2020


 

 

ஆஞ்சநேய ஸ்வாமி புகழ் வாழ்க

காற்று ஈன்ற காவியமே எம்மை காத்தருள்வாய்
நம்பினோம் நாவரசை நாங்களே
+