அஷ்டாங்க ஆயுர்வேதம் திறமையான எட்டு குடும்பங்களால் பின்பற்றப்பட்டு, பயிற்சி செய்யப்பட்டு, பிரச்சாரம் செய்யப்பட்டது, பின்னர் அவர்கள் "அஷ்ட வைத்தியர்கள்" என்று அறியப்பட்டனர். இந்த எட்டு குடும்பங்களில் ஆலத்தியூர் நம்பி, புலமந்தோல் மூசு, திருச்சூர் தைக்கட்டு மூசு [பஜனெல்லிப்புரத்து தைக்கட்டு மூசு], குட்டஞ்சேரி மூசு, வயஸ்கரா மூசு, வெலுத்து மூசு, மற்றும் சிரத்தமான் மூசு ஆகியோர் அடங்குவர். இப்போது ஏழு அஷ்ட மருத்துவ குடும்பங்கள் உள்ளன.
அஷ்ட மருத்துவர்களில் ஒருவரான ஆலத்தியூர் நம்பி, மலப்புரம் மாவட்டம் திரூர் அருகே ஆலத்தியூர் நகரைச் சேர்ந்தவர். அஸ்வினி தேவர்களின் [தேவர்களின் ஆயுர்வேத மருத்துவர்கள் -இரட்டையர்கள்] ஆசிகளும், அவர்களது குடும்ப தெய்வத்தின் ஆசீகளும் பெற்றவர்கள் ஆலத்தியூர் நம்பிகள். ஆலத்தியூர் நம்பியின் குடும்ப தெய்வம் அலத்தியூரின் இறைவன் ஹனுமான் ஆவார். லட்சுமணனின் உயிர்ப்பிப்பதற்காக இமயமலை மூலிகைகளை இலங்கைக்கு கொண்டு வந்தவர் இவர். ஹனுமான் அனைத்து நோய்களையும் குணப்படுத்துபவர் என்று பொருள்படும் "சர்வா ரோக ஹரன்" என்றும், உயிர் கொடுப்பவர் என்று பொருள்படும் "லட்சுமண பிராண தாதா" என்றும் ஹனுமாரை அழைக்கிறோம். ஆதலால் ஒரு மருத்துவருக்கு சிறந்த வழிகாட்டியாக இவர் இருப்பது வியப்பில்லை!
ஆலயத்தியூரில் உள்ள ஆஞ்சநேயர் கோயில் "ஆலயத்தியூர் பெருங்கோவில்" என்று ப்ரபலம்
சரித்திர பிரசித்தமான ஆலயத்தியூர் பெருங்கோவில் என்று அழைக்கப்படும் ஆஞ்சநேயர் கோயில் சுமார் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வசிஷ்ட மாமுனிவரால் பிரதிஷ்டை செய்யப்பட்டதாக பரம்பரையான ஓலைச் சுவடிகள் மூலமாகவும் பெரியோர்கள் சொல் மூலமும் அறியப்படுகிறது.
அருகில் ஸ்ரீசீதாபிராட்டி இல்லாமல் சன்னதியில் ஸ்ரீராமபிரான் சீதாதேவியின் அடையாள இரகசியத்தை எடுத்துரைக்கும் கோலத்தில் அமைந்துள்ளது ஸ்ரீராமபிரானின் விக்கிரக வடிவம், ஸ்ரீராமபிரானின் முக பாவங்கள் இந்த கோயிலில் உள்ளது போல் வேறு எங்கும் காண இயலாது. . ஸ்ரீ சீதையைக் கண்டுபிடிக்கும் பணியைத் தொடங்கிய ஹனுமனுக்கான கோயில்.
முன்பு இந்த கோயிலானது ஆலத்தியூர் நம்பூதிரிகள் பராமரிப்பில் இருந்தது. பின்பு இக் கோயிலின் பராமரிப்பு வெட்டத்து இராஜாவின் கை மாறியது. சில காலங்கள் பின் பராமரிப்பு கோழிக்கோடு (காலிகட்) அரசரின் வசம் மாற்றப்பட்டது. கோயில்கள் பொது உடமை ஆக்கப் பட்ட பின் ஆலயத்தியூர் பெருங்கோவிலின் பராமரிப்பு கேரள அரசின் பொறுப்பில் வந்தது, இப்பொழுதும் அரசின் பொறுப்பில் உள்ளது.
மலப்புரம் ஜில்லா திரூர் தாலுக்காவில் ஆலத்தியூர் கிராமம் உள்ளது. ஆஞ்சநேயர் கோயில் இக்கிராமத்தின் பிரதானமாக உள்ளது.
கோயிலின் பிரதான சன்னதியில் ஸ்ரீராமபிரான் வித்யாசமான முக பாவத்துடன் காணப்படுகிறார், அத்துடன் இல்லாமல் அருகில் ஸ்ரீசீதாபிராட்டியாரையும் காணோம். ஸ்ரீராமன் சீதையில்லாமல் தனி தோற்றத்தில் உள்ளார். சீதையின் பிரிவுக்கு பிறகு சீதையை தேடி செல்ல வானர படை நான்கு திசைகளிலும் அனுப்பப்படுகிறது. தெற்கு நோக்கி செல்லும் படையில் ஸ்ரீராமபிரானின் பக்தனான ஸ்ரீஆஞ்சநேயர் இருந்தார். ஸ்ரீராமபிரான் சீதாதேவியின் அடையாளங்களை ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு எடுத்து சொல்லுகிறார். இந்த இரகசியத்தை எடுத்துரைக்கும் கோலத்தில் அமைந்துள்ளது ஸ்ரீராமபிரானின் விக்கிரக வடிவத்தில், ஸ்ரீராமபிரானின் முக பாவங்கள் இந்த கோயிலில் உள்ளது போல் வேறு எங்கும் காண இயலாது.
ஸ்ரீலஷ்மியின் அவதாரமான ஸ்ரீசீதாதேவியை கண்டுபிடித்துவர ஸ்ரீராமபிரான் அனுமானிடம் சீதாதேவியின் கடந்தகால ரகசியம் சொல்லும்போது அதை கேட்காமல் இருப்பதற்காக தம்பி லட்சுமணன் சிறிது தூரம் தள்ளி நிற்பது போல், பிராதான சன்னதியிலிருந்து சற்று தள்ளி லட்சுமணனுக்கு தனி சன்னதி அமைக்கப் பட்டுள்ளது.
ஸ்ரீராமபிரானின் சன்னதியை அடுத்து அமைந்துள்ளது அவருடைய உன்னத பக்தனான ஸ்ரீஆஞ்சநேயரின் சன்னதி. இங்கு ஸ்ரீஆஞ்சநேயரின் வடிவழகு ஸ்ரீராமபிரானின் செயலுக்கு பொருத்தமாக அமைந்துள்ளது. தனது ஆசான் கூறும் மொழிகளை உன்னிப்பாக கேட்கும் வண்ணம் சற்று முன் உந்திய நிலையில் கையில் தடியுடன் நிற்கிறார். முப்பத்தி முக்கோடி தேவர்களின் முழு ஆசியுடன் தெற்கு நோக்கி இலங்கை நேக்கி செல்ல தயார் நிலையில் உள்ளார். ஸ்ரீஆஞ்சநேயர். இக்காட்சியும் வேறு எந்த கோயிலிலும் காணமுடியாத ஒரு அற்புதமான காட்சி.
யதா2 ராக4வநிர்முக்த: ஶர: ஶ்வஸந விக்ரம:|
க3ச்சே2த் தத்3வத்3 க3மிஷ்யாமி லங்காம் ராவண பாலிதாம்||
(ராமர் அனுப்பிய அம்பு, காற்றை விட வேகமாக பயணிக்கிறதோ, [அது போல்] நான் இராவணனால் ஆளப்படும் லங்காவை ஊடுருவுவேன்.)
வால்மீகி முனிவரால் கூறியிருப்பது போல் முப்பத்தி முக்கோடி தேவர்களின் முழு ஆசியுடன் இலங்கை நேக்கி செல்ல தயார் நிலையில் ஶ்ரீ ஆஞ்சநேயர் உள்ளார்.
ஸ்ரீஆஞ்சநேயரை தவிர இந்த கோயிலில் மற்றுமொரு அற்புதம் உள்ளது. பெரிய மேடை ஒன்றும் அதன் கோடியில் ஒரு நீளமான பாராங்கல் ஒன்றும் உள்ளது. அப்பாராங்கல் கடலை குறிப்பாதவும் மேடையில் ஓடி வந்து பாராங்கல்லில் கால் படாமல் தாண்டினால் அப்பக்தனின் ஆயுள் கூடும், ஆரோக்கியமாக இருப்பார் என்பதும் ஐதீகம்.
இந்த கோவிலில் அனுமனுக்கு வழங்கப்படும் முக்கிய பிரசாதம் "பொதி அவல்" ஆகும். நூறு தேங்காய்கள், நூறு படி அவல், இருபத்தெட்டு கிலோ வெல்லம், பன்னிரெண்டு கிலோ நாட்டு சர்க்கரை, 750 கிராம் சுக்கு, 800 கிராம் ஜீரா ஆகியவற்றால் ஆனது. இந்த பிரசாதம். இவ்வனைத்து பொருட்கள் கலக்கப்பட்டு "போதி அவில்" செய்யப்படுகின்றது.
இந்த புராதனக் கோயில் இப்பொழுது பழுது பார்க்க வேண்டிய நிலையில் உள்ளது. மணபுழா ராமன் நம்பூதரி, பரப்பனகாடி உன்னிகிருஷ்ண பணிக்கர், தானூர் பிரமன் பணிக்கர் ஆகிய புகழ் மிக்க ஜோதிட நிபுணர்கள் பிரசன்னம் மூலம் தெரிவித்துள்ள படி கோயிலை புதிப்பிக்க முடிவு எடுக்கப்பட்டது. வீழப்பரம்ப் பிரம்மதத்தன் நம்பூதிரி, கனிப்பயயூர் உன்னி நம்பூதரி ஆகிய பிரபல ஸ்தபதிகளின் மேற்பார்வையில் புனருத்ராணம் செய்யபட உள்ளது. பக்த ஜனங்கள் முன்னிருந்து இந்த நற்காரியத்தில் பங்கெடுத்து கொண்டு தங்களால் ஆன அன்பளிப்பை சமர்ப்பித்து ஸ்ரீஆஞ்சநேயருடைய அனுகிரகத்தை அடையவும்.
இந்த புனிதமான உன்னத கைங்கரியத்தில் பங்களிக்க ஆர்வமுள்ள நபர்கள் தயவுசெய்து தொடர்பு கொள்ளவும்:
The Manager
A.P.Kovil Devaswam
(P.O.) Poilissery
Tirur-2
Malappuram District
அனுபவம்
கேரளா மற்றும் தமிழ்நாடு முழுவதிலுமிருந்து பக்தர்கள் இறைவனின் ஆசீர்வாதம் கோரி இக்கோயிலுக்கு வருகிறார்கள். "சர்வ ரோக ஹரன்", "லட்சுமண பிராண தாதா" இவர். "அஷ்டவைத்தியர்களில்" ஒருவருக்கு வழிகாட்டுபவர் இந்த க்ஷேத்திரத்தின் இறைவன், நமக்கு நல்ல ஆரோக்கியத்தையும் நீண்ட ஆயுளையும் வழங்க எப்போதும் தயாராக இருக்கிறார் என்பதில் ஐயமில்லை.
தமிழாக்கம் : திருமதி. ஸ்ரீமதி
முதல் பதிப்பு ஆகஸ்ட் 2002
திருத்தப்பட்ட பதிப்பு: செப்டம்பர் 2020