home-vayusutha: ஸ்லோகம் கோவில்கள் கட்டுரைகள்
boat

ஶ்ரீ கும்பேஸ்வரர் கோயிலும் பொற்றாமரை குளமும், கும்பகோணம், தமிழ் நாடு


ஶ்ரீஆஞ்சநேய சுவாமி திருக்கோயில், பஜார் தெரு, கும்பகோணம், தமிழ் நாடு

ஜி.கே.கௌசிக்


கும்பகோணம் என்னும் குடந்தை

ஶ்ரீசக்ரபாணி திருக்கோயிலிலும் பொற்றாமரை குளமும், கும்பகோணம், தமிழ் நாடு நமது நம்பிக்கையின் அடிபடையில் உலகம் ஒருகாலத்தில் அழிந்து, மறுபடி உருவாக்கப்படுகிறது. அழிவுக்கு காரணமாக பிரளயம் வரும் என்பதும் நமது நம்பிக்கை. உலகம் அழிந்த பின் பிரம்மா உலகத்தை திரும்பவும் உருவாக்குவார். தற்போதய உலகத்தையும் பிரம்மனே உருவாக்கியுள்ளார். சென்ற பிரளயத்திற்கு [போரழிவு] பின் உலகத்தை உருவாக்குவதற்கு பிரம்மன் ஒவ்வொரு இனத்தின் தாதுக்களை அமிர்தத்துடன் ஒரு கும்பத்தினுள் வைத்திருந்தார். சென்ற பிரளயத்திற்கு முன் கும்பத்தினை பிரளயத்திற்கு பின் பிரம்மாவால் அப்படி பாதுகாக்கப் பட்ட பூர்ண கும்பம், இமையத்திலிருந்து மிதந்து வந்து தற்போதய தமிழ்நாட்டில் ஓர் இடத்தில் நிலையானது. ஜீவன்கள் உருவானது. அப்படி கும்பம் நிலையான இடம் இப்பொழுது கும்பகோணம் என்றும் தமிழில் குடந்தை என்றும் அறியப்படுகிறது.

தல புராணம்

சிவ பெருமாள் வேடனாக வந்து கும்பத்தை அம்பு எய்தி உடைத்தார் என்பது புராணம். அப்படி உடைந்த கும்பத்திலிருந்து வெளியான அமிருதம் தங்கிய இடம் ’மாகாமக குளம்’ என்று அறியப்படுகிறது. பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை மாசிமாதம், மகம் நட்சத்திரம் கூடும் நேரத்தில் இக்குளத்தில் நீராடுவது புண்ணியமாக கருதப்படுகிறது. இந்தியாவின் பல பாகங்களிலிருந்து மக்கள் இவ்வைபவத்திற்கு வருகை தருகின்றனர்.

கும்பம் நிலை பெற்ற இடமும், சிவ பெருமாள் இவ்வுலகம் உருவாக்கி உயிரினங்களை பிரம்மன் படைக்க காரணமான இருந்த இடத்தில் தற்பொழுது ஶ்ரீகும்பேஸ்வரன் கோயில்

சற்றே மாறுதலாக அமிர்தம் மகாமகம் குளத்திலும், பொற்றாமரை குளத்திலும் விழுந்ததாக கூறுவார்கள். பொற்றாமரை குளம் கும்பேஸ்வரன் கோயிலின் முன்னும் சாரங்கபாணி கோயிலின் பின்புறமும் அமைந்துள்ளது. சிவபெருமாளை முக்கிய கடவுளாக பின்பற்றும் சைவர்களும், விஷ்ணுவை முக்கிய கடவுளாக பின்பற்றும் வைணவர்களும் பொற்றாமரை குளத்தினை உரிமை கொண்டாடுவார்கள். இவ்வருமையான பொற்றாமரை குளக்கரையில் ஶ்ரீஆஞ்சநேயருக்கு இரண்டு கேயில்கள் உள்ளன. இக்கோயில்களின் பின்னணி மிகவும் சுவாரஸ்யமானது.

கும்பேஸ்வரர் திருக்கோயிலை சுற்றியுள்ள கோயில்கள்

கும்பேஸ்வரர் கோயிலில் அருள்மிகு கும்பேஸ்வரரும், அருளும் நாயகியாயாம் மங்களாம்பிகையும் அருளாட்சி செய்கிறார்கள். கும்பகோணம் நகரமே இத்திருக்கோயிலை சுற்றி தான் வளர்ந்துள்ளது. சுற்றும் ஆன்மிக, கலாசார, சமூக, வியாபார நிகழ்ச்சிகள் நிரம்பியுள்ள இடம் இது. கோயில்கள் மிகுதியாக உள்ள ஸ்தலம் என்பதால் கும்பகோணத்தை மக்கள் ’கோயில் மிகு கும்பகோணம்’ என்று அழைப்பார்கள். அனேகமாக எல்லா கோயில்களும் மகாமகம் குளத்தையோ அல்லது பொற்றாமரை குளத்தை ஒட்டியோ தான் அமைந்துள்ளது. இக்கோயிலுக்கு கிழக்கில் பொற்றாமரை குளம் அமைந்துள்ளது. சந்நிதி தெருவுக்கு செங்குத்தாக அமைந்துள்ள தெரு பஜார் தெரு என்றழைக்கப் படுகிறது.

பஜார் தெருவின் இரு முனையிலும் இரு அருமையான கோயில்கள் அமைந்துள்ளது. தென்முனையில் ஶ்ரீஇராமசுவாமி உடன் ஶ்ரீசீதாதேவியும் ஶ்ரீஇராமசுவாமி கோயிலிலும், வடமுனையில் ஶ்ரீசக்ரபாணி சமேத ஶ்ரீவிஜயவல்லியும் ஶ்ரீசக்ரபாணி கோயிலிலும் உள்ளன. பொற்றாமரை குளத்தின் கிழக்கில் ஶ்ரீஅரவாமுதன் [ஶ்ரீசாரங்கபாணி-உத்ஸவர்] சமேத ஶ்ரீகோமளவல்லியும் ஶ்ரீசாரங்கபாணி கோயிலிலும் உள்ளனர். இந்நான்கு திருக்கோயில்களும் மிகவும் கும்பகோணத்தின் முக்கியமான கோயில்கள்.

பஜார் தெரு ஶ்ரீஆஞ்சநேயர் கோயில்

ஶ்ரீஆஞ்சநேய சுவாமி திருக்கோயில், பஜார் தெரு, கும்பகோணம், தமிழ் நாடு இக்கோயில்கள் தவிர பஜார் தெருவில் பொற்றாமரை குளத்தின் மேற்கு கரையில் ஶ்ரீஆஞ்சநேயருக்கு கிழக்கு நோக்கிய தனிக் கோயில் ஒன்றுள்ளது. கும்பகோணம் வாசிகளுக்கு மேலே கூறிய கோயில்கள் எத்தனை பிரபலமோ இக்கோயிலும் அத்தனை பிரபலம்.

இவ்வாஞ்சநேய சுவாமி திருக்கோயிலுக்கு முன் கூறிய மூன்று திருக்கோயில்களுடன் விசேட உறவு உண்டு. கோயிலின் கிழக்கில் இருக்கும் ஶ்ரீசாரங்கபாணி கோயில் பிரம்மோத்ஸவத்தில் இக்கோயில் ஶ்ரீஆஞ்சநேய சுவாமி பங்கு கொள்கிறார். தென் திசையில் உள்ள ஶ்ரீஇராமசாமி கோயில் உத்ஸவர் வீதியுலா வரும் போது, இக்கோயிலுக்கு வருகை தந்து ஶ்ரீஆஞ்சநேயரை கௌரவிப்பார். வட திசையிலுள்ள ஶ்ரீசக்ரபாணி சுவாமியும் இதே முறையில் வீதியுலா வரும் போது, இக்கோயிலுக்கு வருகை தந்து ஶ்ரீஆஞ்சநேயரை கௌரவிப்பார். இக்கோயிலின் குடிகொண்டுள்ள ஶ்ரீஆஞ்சநேயருக்கு இவை பெருமை தரும் விசேடங்களே.

பஜார் தெரு ஶ்ரீஆஞ்சநேயர்

கோயில் மிக சிறியது. இத்திருக்கோயிலிலுள்ள ஶ்ரீஆஞ்சநேயர் கிழக்கு நோக்கியுள்ளார். பஜார் தெருவிலிருந்தே ஶ்ரீஆஞ்சநேயரை தரிசனம் செய்யலாம். புடைப்பு சிலையாக வடிக்கப்பட்டுள்ள சுமார் ஆறடி உயரமுள்ள ஶ்ரீஆஞ்சநேயர் வடக்கு திசையை நோக்கி நடப்பது போல் அமைந்துள்ளார். இரு திருப்பாதங்களிலும் உள்ள தண்டை, நூபூரம் முதலிய அணிகலங்கள் திருப்பாதத்திற்கு அழகு சேர்க்கிறது. அபய முத்திரை காட்டும் வலது திருக்கரம் பக்தர்களுக்கு ஆசிகள் வழங்குகிறது. இடையில் ஊன்றியிருக்கும் இடது திருக்கரத்தில் சௌகந்திகா மலரினை வைத்துள்ளார். அகன்ற மார்பினை முப்புரி நூலும், மற்றும் சில மணிமாலைகளும் அலங்கரிக்கின்றன. மலர்ந்த முக மண்டலத்தில் கனிந்த கன்னங்கள், நீண்ட செவிகள் அதனை அலங்கரிக்கும் அழகிய குண்டலம், வாரி சுருட்டி முடிச்சிட்ட அழகிய கூந்தல், கருணை மிகு கண்கள், மேலும் மலர்ந்த நிலையில் காண்பிக்கிறது.

தொடர்புக்கு : ஶ்ரீ எஸ்.கண்ணன் பட்டாசாரியார் (0435) 2420749

 

திருக்கோயில் இருப்பிடம் :     "ஶ்ரீஆஞ்சநேய சுவாமி திருக்கோயில், பஜார் தெரு, கும்பகோணம்"

 

அனுபவம்
முப்பெரும் மூர்த்திகளினால் கௌரவிக்கப்பட்ட ஶ்ரீஆஞ்சநேயரின் தரிசனம் பக்தர்களுக்கு அனேக ஆசிகளை பெற்றுதரும். வாழ்வில் நிறைவை தரும் தரிசனம் இது.

தமிழாக்கம் :திருமதி. ஸ்ரீமதி
முதல் பதிப்பு: ஆகஸ்ட் 2016
திருத்தப்பட்ட பதிப்பு: செப்டம்பர் 2020


 

 

ஆஞ்சநேய ஸ்வாமி புகழ் வாழ்க

காற்று ஈன்ற காவியமே எம்மை காத்தருள்வாய்
நம்பினோம் நாவரசை நாங்களே
+