home-vayusutha: ஸ்லோகம் கோவில்கள் கட்டுரைகள்
boat

விஸ்வரூப ஆஞ்சநேய ஸ்வாமி கோயில், நெருள், மும்பை

வி.ஜி. சுப்ரமணியம், நெருள்


நெருள், நவி மும்பை

ஸவ்த் இந்தியன் எஜுகேஷனல் ஸொஸைடி நிர்வாக குழு, மும்பையின் புதிய விஸ்தரிப்பான நெருள் பகுதியில் கல்வி நிலையங்கள் துவங்கினர்கள். தங்கள் கல்வி நிலயங்கள் இருக்கும் இடத்தில் சிறிய கோயில் கட்ட தீர்மானித்தார்கள். ஆனால் இதற்கான விவரங்களில் விவாதம் நடந்த போது, முடிவு வேறுவிதமாக அமைந்தது.

அனுமானுக்கு கோயில்

விஸ்வரூப ஆஞ்சநேய ஸ்வாமி, நெருள், மும்பை புத்தி, வலிமை, புகழ், உறுதிப்பாடு, அஞ்சாநெஞ்சம், நோய்யின்மை, விழிப்புணர்ச்சி [ஜடத்தன்மையின்மை], மற்றும் வாக்கு வன்மை இவை எல்லாம் நிறைந்திருக்கும் ஹனுமானுக்கு கோயில் எழுப்புவது என தீர்மானித்தார்கள். இன்றைய இளைஞர்களுக்கு தேவையான எல்லாம் உள்ள இவருக்கு பெரிய திருஉருவம் அமைத்தால் அவரை கண்ட மாத்திரத்தில் மாணவனுக்கு ஊக்கம் வரும் என்று நினைத்தனர்.

அனுமான் நமது புராணங்களில் மிக பெரிய கதாபாத்திரம். ஆஞ்சநேயர், ஹனுமான், பஞ்ரங்பலி என பல பெயர்களில் பல்லாயிரம் மக்கள் அவரை அனுதினமும் துதித்து, தங்கள் முயற்சியில் வெற்றிப் பெருகிறார்கள். இளஞர்கள் சாதனைகள் பல செய்ய இவரை உதாரணமாக கொள்கிறார்கள்.

இந்தியாவிலேயே மிக பெரிய மூர்த்தி

முப்பத்துமூன்று அடி உயரமுள்ள "விஸ்வரூப ஆஞ்சநேய ஸ்வாமி" கற்சிலை ஒரே கருங்கல்லில் வடிக்கப்பட்டது. சில்ப கலாநிதி ஶ்ரீ எம்.முத்தயா ஸ்தபதி அவர்கள், ஶ்ரீகாஞ்சி ஆசார்யர்களின் ஆசியுடன் மூர்த்தியை வடிப்பதற்காக பிரத்யேகமான கருங்கல்லை தேர்ந்தெடுத்தார். சிற்ப சாஸ்திரத்தில் வல்லுனரான ஸ்தபதி அவர்கள் இம்மூர்த்தியினை வடிக்க சுமார் ஒரு வருடம் பிடித்தது.

ஐம்பது டன் எடையுடைய இம்மூர்த்தி சென்னை அருகில் வடிவமைக்கப்பட்டு மும்பைக்கு லாரியில் எடுத்து வரப்பட்டது. தாமரை பீடத்தில் கைகூப்பி நின்ற வண்ணம் இருப்பதாக சிற்பம் அமைக்கப்பட்டது. கைகூப்பி கண்கள் தியானத்தில் உள்ளது போலுள்ளதால் ஶ்ரீ ஆஞ்சநேயர் அமைதியையும் நிதானத்தையும் கொடுப்பராக அமைந்துள்ளார்.

அவரது வால் தாமரையொத்த திருபாதங்களின் அருகில் இருப்பது, எத்தனையோ விதத்தில் வல்லவரானாலும் அமைதிகாட்டும் குணத்தை கற்பிக்கும் முறையில் அமைந்துள்ளது.

ஶ்ரீ விஸ்வரூப ஆஞ்சநேயர்

எல்லாவிதமான அலங்காரங்களுடனும் இருக்கும் ஶ்ரீ விஸ்வரூப ஆஞ்சநேயர், இன்றைய இளஞசர்களுக்கு வேண்டிய எல்லாவற்றையும் அளிப்பவராக அமைந்திருப்பது கல்விகூடத்தில் உள்ள மாணவர்களுக்கு கொடுப்பனையே.

அமைதிகாக்கும் இவ்வாஞ்சநேயர், அமைதியான சூழ்நிலையில், மலைகள் பின்னனியாக அமைய நெடித்து நின்று எல்லோருக்கும் எல்லா நன்மைகளும் அடைய ஆசிகூறும் வண்ணம் உள்ளார்.

முப்பதுமூன்று அடி உயரமுள்ள "விஸ்வரூப ஆஞ்சநேய ஸ்வாமி’ சிலையை ஶ்ரீகாஞ்சி சங்கராசாரியார் அவர்கள் ஸ்தாபனம் செய்தார்கள்.

சமீப சேர்க்கை

சமீபத்தில் ஶ்ரீராமருக்காக சந்நதி கட்டப்பட்டுள்ளது. இதுவரை வானம் பார்த்த மூர்த்திக்கு அவர் உயரத்துக்கு பெரிய மண்டபம் கட்டப்பட்டுள்ளது.

மஹா அதிருத்திரம் மற்றும் சண்டி ஹோமம் முதலியன நடத்தப்பட்டன. ஆஞ்சநேயருக்கு வெள்ளி கவசம் செய்து சாத்தப்பட்டது.

 

திருக்கோயில் இருப்பிடம் :     "விஸ்வரூப ஆஞ்சநேய ஸ்வாமி கோயில், நெருள், மும்பை"

 

அனுபவம்
ஒருமுறை இவ்விஸ்வரூப ஆஞ்சநேயரை தரிசித்தால், நம்முள் இருக்கும் அகம்பாவம் அழிந்து, அமைதி நம்மை ஆட்கொண்டு, நம் உண்மை சக்தி நமக்கு தெரியவரும் என்பது தின்னம்.

தமிழாக்கம் :திருமதி. ஸ்ரீமதி
முதல் பதிப்பு: மார்ச் 2016
திருத்தப்பட்ட பதிப்பு: செப்டம்பர் 2020


 

 

ஆஞ்சநேய ஸ்வாமி புகழ் வாழ்க

காற்று ஈன்ற காவியமே எம்மை காத்தருள்வாய்
நம்பினோம் நாவரசை நாங்களே
+