ஶ்ரீராம-ராவண யுத்ததிற்கு ஈடு இணையில்லை என்பார்கள். அனல் பறக்க நடைபெற்ற அந்த யுத்ததில் எதிரியின் பெயரே பயத்தை உண்தாக்குவதாக இருந்தது. இருதரப்பிலும் சேனைகள் காயமுற்றனர், மாண்டனர். இலங்கையில் நடந்த இப்போரில் இராவணனின் மகன் இந்திரஜித் தன்து மாய கணையினை எய்தி இளவள் லக்ஷ்மணனை மூர்ச்சையாக்கினான். ஆனால் இறந்துவிட்டதாக நினைத்து அரண்மனை திரும்பினான் இந்திரஜித். யுத்த களத்தில் மூர்ச்சையாகதவர் மூவர் ஜாம்பவான், விபீஷணன், ஆஞ்சநேயர்.
ஜாம்பவான் கூறினார்: ஹிமாலய பகுதியில் நான்கு மூலிகைகள் கிடைக்கும். மிருத ஸஞ்ஞீவினி, வைக்ஷல்யகரணி, ஸ்வர்ணகரணி, ஸந்தானி என்பன அவை. ஒளிவீசி பிரகாசிக்கும் இம்மூலிகைகள் விடியும் முன் நமக்கு கிடைக்குமானல் எல்லோரையும் பிழைக்க வைக்க முடியும். வைத்தியர் கூறிய இம்மூலிகைகளை விடியும் முன் கொண்டு வர வேண்டும். இவ்வளவு சீக்கிரம் அம்மூலிகைகளை ஆஞ்சநேயர் ஒருவரால் தான் முடியும்.
இதை கேட்ட மாத்திரத்தில் ஆஞ்சநேயர் ஆகாய மார்க்கமாக ஹிமாலய மலை பகுதியை அடைந்தார். ஆனால் அவரால் ஜாம்பவான் கூறிய மூலிகைகளை தேர்ந்தெடுக்க முடியவில்லை. அம்மூலிகைகள் தங்களை மறைத்துக் கொண்டுள்ளன என்பதனை புரிந்துக் கொண்ட ஆஞ்சநேயர், அம்மூலிகைகள் உள்ள மலை ’ஔஷதி பர்வதம்’ முழுவதையும் பெயர்த்து எடுத்துக் கொண்டு இலங்கை நோக்கி புறப்பட்டார். வானோரும் புகழும் நிகழ்ச்சியானது இது.
தனது திருகரத்தில் ஔஷதாதி மலையினை ஏந்தியவண்ணம் இலங்கை நோக்கி ஆகாச
மார்க்கமாக ஆஞ்சநேயர் சென்று கொண்டிருந்தார். பொதிகை மலை மீது பறக்கும் போது தாகமாக இருந்தது.
இருந்தும் பயணத்தை தொடர்ந்தார். பொதிகை மலையில் தேவயானையுடன் அப்பொழுது இருந்த முருகப்
பெருமாள் ஆஞ்சநேயரின் தாகத்தை அறிந்து தன் வேலினை மலையில் செலுத்த நீரூற்று தோன்ற அதிலிருந்து
நீர் பெருக்கு ஆகாயம் வரை பாய்ந்தது. ஆஞ்சநேயர் சற்றே தாழ்ந்து பறந்து நீரினை பருகினார். தாகம் தீர்ந்த
நிலையில் தனது பயணத்தை தொடர்ந்தார்.
இன்றும் முருகப்பெருமானால் ஆஞ்சநேயரின் தாகம் தீர்க்க வரவழிக்கப் பட்ட ஊற்றினை காணமுடியும். இன்று அங்கிருந்து வரும் நீர் சிறிய தொட்டியில் சேமிக்கப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது. கோயம்பத்தூர் அருகில் உள்ளது இந்த அனுவாவி ஊற்று. அனு என்பது அனுமாரையும் வாவி என்பது ஊற்றினையும் குறிக்கும். கோயம்பத்தூரிலிருந்து இருபத்தி இரண்டு கிலோமீட்டர் தொலைவிலுள்ள இவ்விடத்தின் பெயரே அனுவாவி தான். பெரிய தடாகம் கிராமத்தில் அமைந்துள்ளது இவ்விடம்.
மிக அழகிய சூழலில் அமைந்திருக்கும் கோயிலுக்கு நெடுஞ்சாலையிலேயே பெரிய நுழைவாயில் கட்டியுள்ளார்கள். ஒருபுறம் கணபதியும் மறுபுறம் ஆஞ்சநேயரும் அலங்கரிக்கும் நுழைவாயில் கோயிலுக்கு வழிகாட்டுகிறது. 550 படிகள் ஏறினால் மலை உச்சியில் உள்ள கோயில் வளாகத்தை அடையலாம். கணபதிக்கான சிறிய கோயில் ஏறும் வழியில் காணலாம். ஶ்ரீமுருகன், தேவயானை வள்ளி இவர்களுக்கான மூலகோயில் உள்ளது. ஶ்ரீமுருகன் சன்னதிக்கு அருகிலேயே ஆஞ்சநேயர் சன்னதி உள்ளது. மேல் வளாகத்திலேயே சுவாமி புறப்பாடு நடந்து சிறிய அழகிய ரதம் ஒன்று உள்ளது. ஆஞ்சநேய சன்னதியை அடுத்துள்ள படிகளில் ஏறினால் முருகப் பெருமாள் ஆஞ்சநேயருக்காக வரவழித்த ஊற்றினை காணலாம். ஊற்றின் நீரை பிரசாதமாக பெற்று வரலாம்.
முருகக்கடவுளுக்கான தை பூசம், பங்குனி உத்திரம், வைகாசி விசாகம் போன்ற எல்லா விழாக்களும் சிறப்பாக நடத்தப்படுகிறது. மார்கழி மாதம் ஶ்ரீஹனுமத் ஜயந்தி மிக சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
அனுபவம்
அனுமாரின் தாகம் தீர்த்த சுணை நீரினை பருகி
ஶ்ரீஅனுமரின் அன்பையும் ஶ்ரீமுருகரின் கருணையும் அனுபவித்து, வாழ்வில் தெளிவு பெருவோம்.
தமிழாக்கம் :திருமதி. ஸ்ரீமதி
முதல் பதிப்பு: மே 2015
திருத்தப்பட்ட பதிப்பு: செப்டம்பர் 2020