home-vayusutha: ஸ்லோகம் கோவில்கள் கட்டுரைகள்
boat

கோதண்ட ராமர் கோயில், செங்கல்பட்டு

ஸ்ரீ வீர ஆஞ்சநேய ஸ்வாமி சன்னதி, கோதண்ட ராமர் கோயில், செங்கல்பட்டு

ஜீகே கௌசிக்


செங்கல்பட்டு பெருமாள் கோயில்

ஸ்ரீ வீர1 ஆஞ்சநேய ஸ்வாமி சன்னதி, கோதண்ட ராமர் கோயில், செங்கல்பட்டு. Hanuman temple Chengulput செங்கல்பட்டின் நடுவில் அமைந்துள்ள அந்த அழகிய கோயிலின் உள் நுழைந்தவுடன் தேவலோகத்தின் உள் நுழைந்ந ப்ரமை உண்டாகிறது. அழகிய பசுமையான மலையை பின் திரையாக கொண்டு அமைக்கப்பட்டுள்ளது இந்த அருள்மிகு கோதண்டராமசாமி திருக்கோயில். இந்த கோயில் 'அருள்மிகு கோதண்டராமசாமி'யின் பெயரில் இருந்தாலும் மூலவர் ஸ்ரீபட்டாபிராமரேயாவார். மூலவர் ஸ்ரீ பட்டாபிராமர் 'வைதேஹி ஸகிதம்' ஸ்லோகத்தில் உள்ள மாதரி வீராஸனத்தில் ஞான முத்திரையுடன் அருகில் வைதேஹியிடன் அமர்ந்துள்ளார். அருகில் லக்ஷ்மணர் நிற்க, பரதனும் சத்ருக்னனும் ப்ரபஞ்சனசுதனாகாய ஆஞ்சநேய ஸ்வாமியுடன் கீழே அமர்ந்துள்ளனர். ஞானோபதேசம் பெரும் ஆஞ்சநேயன் அஞ்சலிஹஸ்தனாக உள்ளான். பகவானின் தீர்க கடாக்க்ஷமான இக்காட்சி கிடைக்க இன்றெல்லாம் பார்த்துக் கொண்டிருக்கலாம். இக்கோயிலில் ஸ்ரீ ராமபிரான் கோதண்டராமராக உற்சவ திருமேனி கொண்டுள்ளார்.

ஶ்ரீ வரதராஜ ஸ்வாமி சன்னிதி

ஸ்ரீ ராமர் சன்னதிக்கு இடதுபுறம் அமைந்துள்ள சன்னதியில், தெற்கு நோக்கி வலது கையில் 'பிரயோக சுதர்ஸனத்துடன்' ஸ்ரீ வரதராஜ பெருமாள் எழுந்தருளியுள்ளார். இக்கோயிலின் முதல்வர் ஸ்ரீ வரதராஜ பெருமாள் தான். செங்கல்பட்டில் இன்றும் இக்கோயில் பெருமாள் கோயில் என்று தான் பிரசுத்தம். கி.பி.1041 ல் கட்டப்பட்டது இந்த ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோயில். தாயார் ஸ்ரீ பெருந்தேவிக்கு தனி சன்னதியுள்ளது.

ஶ்ரீ திம்ம ராஜா ஜமின்தார்

ஸ்ரீ பட்டாபிராமர் செங்கல்பட்டு கோட்டையில் அப்பொழுது கோயில் கொண்டிருந்தார். பதினேட்டாம் நூற்றாண்டின் பொழுது நடந்த அன்னியர் தாக்குதலுக்கு ஸ்ரீ பட்டாபிராமர் கோயில் உட்பட்டது. ஸ்ரீ திம்ம ராஜ ஜமீன்தார் அவர்களால் அக் கோயில் கி.பி.1768ம் ஆண்டு ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோயில் இருக்கும் இடத்திற்கு மாற்றப்பட்டது. ஸ்ரீசெங்கல்வராயரின் பெயரால் தான் செங்கல்பட்டு என்று இவ்வூரின் பெயர் வழங்கப்படுகிறது. ஸ்ரீ திம்ம ராஜ ஜமீன்தார், ஸ்ரீசெங்கல்வராயரின் தந்தையாவார்.

ஶ்ரீ ஆஞ்சநேயர் சன்னிதி

இந்த புராதன கோயிலில் வாயுமூலையில் உள்ள தனி சன்னதியில் குடிகொண்டுள்ளவர் வீர ஆஞ்சநேய ஸ்வாமி ஆவார். அவரது திருகோலம் மிகச் சிறப்பு வாய்ந்த ஒன்று, வலது கரம் அபயம் என்கிறது, இடது கரத்தில் அமைதியை குறிக்கும் தாமரை, அவர் காலடியில் காகம் போன்ற முகமுள்ள ஒருவர்.

ஶ்ரீ ஆஞ்சநேயரும் சனி பகவானும்

இந்த அபூர்வமான கோலம் ஸ்ரீஆஞ்சநேய ஸ்வாமி ஏன் தரித்தார் என்பது மிக சுவாரஸ்யமான ஒரு விஷயம்.

ஸ்ரீ ஆஞ்சநேய ஸ்வாமி மஹேந்திர மலையில் இலங்கை செல்ல தயாராக இருந்தார், அப்போழுது அங்கு வந்து சேர்ந்த ஸ்ரீசனிபகவான் "ஆஞ்சநேயா, தாங்களுடன் ஏழரை ஆண்டு காலம் இருக்க வேண்டிய காலம் வந்துவிட்டது." என்றார். "சூர்ய புத்திரரே, நான் சூர்ய வம்ச ரகுகுல திலகன் ராமபிரானின் கார்யமாக செல்கிறேன், அதலலால் நான் இலங்கையிலிருந்து திரும்பிய உடன் என்னை பிடித்துக் கொள்ளவும், நானே தாங்களிடம் வருகிறேன்" என்று ஆஞ்சநேயர் கூறினார். சனி பகவான் ஒப்புதலுடன் அவர் இலங்கை நேக்கி ஆகாய மார்க்கமாக செல்லலானார்.

ஸ்ரீ ராமகார்யத்தில் ஈடுபட்டிருந்த ஸ்ரீ ஆஞ்சநேயர் இலங்கையில் தேவியை தர்சித்தார். ஸ்ரீ ராமனுக்கு உதவியாக இராவணனை அழிக்க இலங்கை செல்ல சேதுகரையில் வானரங்களுடன் இருந்த போழுது சனிபகவான் அங்கு வந்து "ஆஞ்சநேயா, நீ என்னை ஏமாற்றிவிட்டாய்." என்றார். "பகவானே மன்னிக்கவும், ராமகார்யத்தில் இருந்ததால் மறந்துவிட்டேன். இங்கு பாருங்கள் சின்ன அணில் கூட தன்னால் ஆன கைங்கரியத்தை ஸ்ரீராமபிரானுக்காக செய்கிறது. அது போல் தாங்கள் ராமகைங்கரியம் செய்த வண்ணமே தாங்கள் கடமையும் செய்யலாம். மலைபிஞ்சுகளை எடுத்துக் கொண்டு என் தலையில் ஏறிக் கொள்ளுங்கள். என்னிடம் தாங்கள் வாசத்தை இப்பொழுதே தொடங்கலாம்" என்றார் ஆஞ்சநேயர். சனியும் சில மலைபிஞ்சுகளுடன் ஆஞ்சநேயரின் தலையில் ஏறி அமர்ந்தார். அதனால் ஆஞ்சநேயருக்கு எந்த பாதிப்பும் வரவில்லை. ஆஞ்சநேயர் மேலும் சில மலைகளை எடுத்து தன் தலையில் இருந்த சனியின் மேல் வைத்துக் கொண்டு ராமநாமத்தை பாடிய வண்ணம் கடல் நோக்கி ஓடினார். மலைகளின் நடுவில் மாட்டிக் கொண்ட சனியின் பாடு திண்டாட்டமானது. "பகவானே, என்ன செய்கிறீர்கள்? நான் இங்கு நசுங்கிவிடுவேன்" என்று அலறினார்.

ஶ்ரீ ஆஞ்சநேயர் பிடியில் சனி

"அவரவர் கடமையை செய்கிறோம், இதில் என்ன கஷ்டம்" என்றார் ஆஞ்சநேயர். "பகவானே நான் உங்கள் காலை பிடித்துக் கொள்கிறேன், தலையிலிருந்து என்னை தயவு செய்து இறக்கி விட்டுவிடுங்கள்" என்று அலறினார் சனிபகவான். ஆஞ்சநேயர் காதில் விழாதது மாதரி ஸ்ரீராம கைங்கரியத்தில் ஈடுப்பட்டிருந்தார். சனிபகவானின் குரல் கேட்டு ஸ்ரீராமர், ஆஞ்சநேயரிடம் "ஆஞ்சநேயா, அவரும் சூரிய வம்சியப்பா, தலையிலிருந்து விடுவித்து விடு" என்று கூறிவிட்டுப் போய்விட்டார்.

Anjaneya of Chengulput,ஆஞ்சநேயர், செங்கல்பட்டு யோசித்தார் ஆஞ்சநேயர், பிறகு சனிபகவானிடம் "ஸ்ரீராமபிரானின் ஆணைப்படி தாங்களை தலையிலிருந்து இறக்கி விடுகிறேன், ஆனாலும் தாங்கள் கடமையை ஸ்ரீராமகைங்கரியத்துக்கு இடஞ்சலாக இருக்குமே, என்ன செய்ய" என்று கூறியவர் சனிபகவானை தலையிலிருந்து விடுவித்தார். இறங்கிய சனிபகவான் ஆஞ்சநேயரின் கால்களை பிடிக்க வந்தார். ஆஞ்சநேயர் அவரை ஒரே மிதியில் தன் கால்களுக்கு அடியில் மிதித்தார். தீனமான குரலில் "பகவானே, என்னை விட்டுவிடுங்கள், ஸ்ரீராமரிடைய நாமத்திற்க்கு என்ன பலம், ஸ்ரீராமபக்தனுக்கு என்ன பலம் என்பது புரிந்து விட்டது. ஸ்ரீராமா, உன் நாமாவையோ, ஆஞ்சநேயரின் நாமாவையோ, யார் கூறுகிறார்களோ அவர்களிடம் நான் ஒரு நொடி கூட இருக்க மாட்டேன்" என்று சனிபகவான் கூற ஆஞ்சநேயர் அவரை விடுவித்தார்.

யோ வக்திராம தே நாம மாருதே: அபிவா ஸ்வயம்
க்ஷணம் தத்ர ந திஷ்டேயம் ஸத்யம் ப்ரதி ஸ்ருணோமிதே

செங்கல்பட்டு கோதண்ட ராமர் கோயிலில் வாயுமூலையில் உள்ள வீர ஆஞ்சநேய ஸ்வாமி காலடியில் உள்ளவர் ஸ்ரீசனிபகவான். ஸ்ரீஆஞ்சநேய ஸ்வாமியின் மிக அபூர்வமான இந்த திருமேனியை வேறு எங்கும் காணமுடியாது. இந்த அபூர்வமான கோலம் ஸ்ரீஆஞ்சநேய ஸ்வாமி ஏன் தரித்தார் என்கிற மிக சுவாரஸ்யமான விஷயம் தான் மேலே கூறியது.

 

திருக்கோயில் இருப்பிடம் :     " கோதண்ட ராமர் கோயில், செங்கல்பட்டு "

 

அனுபவம்
இங்குள்ள ஆஞ்சநேய ஸ்வாமி நம் எல்லா சங்கடங்களையும் நிவர்திப்பவர் என்பதில் ஆஞ்சநேய பக்தர்களுக்கு சந்தேகமில்லை. வாருங்கள் அவரை தர்சிக்க நம் எல்லா சங்கடங்களையும் நிவர்திப்பார்.

தமிழாக்கம் : திருமதி. ஸ்ரீமதி
முதல் பதிப்பு ஜனவரி 2002
திருத்தப்பட்ட பதிப்பு: ஆகஸ்ட் 2020


 

 

ஆஞ்சநேய ஸ்வாமி புகழ் வாழ்க

காற்று ஈன்ற காவியமே எம்மை காத்தருள்வாய்
நம்பினோம் நாவரசை நாங்களே
+