home-vayusutha: ஸ்லோகம் கோவில்கள் கட்டுரைகள் சமீபத்திய சேர்க்கை
boat

இந்த கோயில் மும்பையில் உள்ள மிகப் பழமையான ஹனுமான் கோயில்.

அல்பேலா ஸ்ரீ ஹனுமான் மந்திர், வடலா, மும்பை

ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி

அல்பேலா ஸ்ரீ ஹனுமான் மந்திர், வடலா, மும்பை


ஹனுமானுக்கும் ராமருக்கும் இடையிலான தெய்வீக தொடர்பு: வடலாவுக்கு ஒரு பயணம்


பக்தவத்சலம்

நாமாவளி பக்தவத்சல: என்று ஒன்று உள்ளது; இந்த நாமாவளி, சதாரணமாக மொழிபெயர்க்கப்பட்டால், 'தன் பக்தர்களிடம் அன்பும் கருணையும் கொண்டவர்' என்று பொருள்படும். கிட்டத்தட்ட அனைத்து தெய்வங்களின் நாமாவளிகளிலும், இந்த நாமாவளியைக் காணலாம். இந்த நாமாவளி 'ஸ்ரீ ஹனுமத் அஷ்டோத்திரத்திலும்' காணப்படுகிறது, மேலும் ஹனுமான் தனது பக்தர்களிடம் அன்பும் கருணையும் கொண்டவர் என்பதை நாம் அறிவோம். அவர் ஸ்ரீ ராமரின் புகழ்பெற்ற உன்னதமான பக்தர் என்பதையும் நாம் அறிவோம்.

ராமரின் நாமாவளியில், அவரது பக்தர்களுக்கான சுவாரஸ்யமாக இரண்டு நாமங்கள் காணப்படுகின்றன, முதலாவது 'பக்த ஜன பிரியா,' இரண்டாவது 'பக்த பிரியா.' எனவே, ராமர் தனது பக்தர்களிடம் கருணையுடன் இருப்பதில் ஆச்சரியமில்லை. ஸ்ரீ ராமரின் சிறந்த மற்றும் முதன்மையான பக்தர் ஸ்ரீ ஹனுமான். எனவே, ஸ்ரீ ராமர் எந்த நேரத்திலும் ஸ்ரீ ஹனுமானை இயல்பாகவே அழைப்பார்.

வடலா ஸ்ரீ ராம் மந்திர்

மும்பையில் நடந்த ஒரு சம்பவம், ஸ்ரீ ராமர் தனது பக்தரான ஸ்ரீ ஹனுமான் மீது கொண்டிருந்த அன்பை வெளிப்படுத்தியது.

19 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில், ஸ்ரீ சமஸ்தான கோகர்ன் பரதகாலி ஜீவோத்தம் மடத்தின் சீடர்களான மும்பையிலுள்ள கவுட சரஸ்வத் பிராமண சமூக மக்கள், மும்பையில் ஸ்ரீ ராமருக்கு கோயில் கட்டுவதற்கு ஏற்ற இடத்தைத் தேடினர். கவனமான தேடலுக்குப் பிறகு, அவர்கள் வடலாவில் உள்ள ஒரு இடத்தைத் தேர்ந்தெடுத்தனர்.

கோயிலுக்காக ஸ்ரீ ராமர், ஸ்ரீ லட்சுமணன், சீதா தேவி மற்றும் ஸ்ரீ ஹனுமான் விக்ரஹங்கள் செதுக்கப்பட்டன. சுவாரஸ்யமாக, கோயில் திறப்பு விழாவிற்கு சற்று முன்பு, பரமகுரு ஸ்ரீமத் துவாரகநாத தீர்த்தர் ஒரு தெய்வீக சிந்தனையை உணர்ந்தார். சாலையின் மறுபுறத்தில் ராம மந்திர் வடாலாவின் நேர் எதிரில் ஒரு பழங்கால ஹனுமான் கோயில் உள்ளது. எனவே, ஸ்ரீ ஹனுமானுக்கு நாம் புதிய கோயிலில் தனியாக சிலை நிறுவ வேண்டிய அவசியமில்லை என்று தெரிவித்தார். அவர் ஹனுமார் எப்பொழுதும் ஸ்ரீ ராமரை தரிசனம் செய்ய முடியும் என்பதை எடுத்துரைத்தார். அவர் கூறியபடி, ஸ்ரீ ராமர் கோயில் கட்டப்பட்ட பிறகு, ஸ்ரீ ராமர், ஸ்ரீ லட்சுமணன் மற்றும் சீதா தேவியின் சிலைகள் 1965 இல் பிரதிஷ்டை செய்யப்பட்டன.

சுவாரஸ்யமாக, ஸ்ரீ ஹனுமானுக்கு எப்போதும் தரிசனம் கொடுக்க ராமர் இந்த இடத்தைத் தேர்ந்தெடுத்திருக்கலாம் என்றும் யோசிக்கலாம்.

அந்தத் தீவின் ஆட்சியாளர் ஒரு விஜயத்தின் போது ஒரு பாறையைக் கண்டார், அதில் ஸ்ரீ மாருதியின் உருவம் இயற்கையாகவே உருவாகியிருந்தது. ஸ்ரீ மாருதியின் தீவிர பக்தரான அவர், தனது விருப்பமான இடத்தில் அவ்விக்ரஹத்தை நிறுவ விரும்பினார். அவர் பாறையை தனது விருப்பமான இடத்திற்கு கொண்டு செல்ல ஆயித்தமானார். ஆனால் நடந்ததோ வேறு, இறைவன் விருப்பம் வேறு விதமாக இருந்தது. இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்ட 'சுயம்பு' ஸ்ரீ மாருதி நகர்த்தப்பட்டபோது, ​​வாகனத் தொடரணி ஒரு குறிப்பிட்ட இடத்தில் சிக்கிக்கொண்டது.

அந்தத் தீவின் ஆட்சியாளர் ஒரு விஜயத்தின் போது ஒரு பாறையைக் கண்டார், அதில் ஸ்ரீ மாருதியின் உருவம் இயற்கையாகவே உருவாகியிருந்தது. ஸ்ரீ மாருதியின் தீவிர பக்தரான அவர், தனது விருப்பமான இடத்தில் அவ்விக்ரஹத்தை நிறுவ விரும்பினார். அவர் பாறையை தனது விருப்பமான இடத்திற்கு கொண்டு செல்ல ஆயித்தமானார். ஆனால் நடந்ததோ வேறு, இறைவன் விருப்பம் வேறு விதமாக இருந்தது. இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்ட 'சுயம்பு' ஸ்ரீ மாருதி நகர்த்தப்பட்டபோது, ​​வாகனத் தொடரணி ஒரு குறிப்பிட்ட இடத்தில் சிக்கிக்கொண்டது.

வடாலா

நவீன கால மும்பையை உருவாக்க இணைக்கப்பட்ட பம்பாயின் ஏழு தீவுகளில் ஒன்றான வடாலா கிராமம். இந்த தீவு முன்பு பரேல், மாதுங்கா, தாராவி அல்லது சியோன் என்று அழைக்கப்பட்டது.

வடாலா [வாடல்] என்பது புயல் அல்லது சூறாவளி என்று பொருள்படும் என்பதால், அப்போதைய தீவின் இந்தப் பகுதி காடு, தரிசு நிலம் அல்லது புதர்களின் காடாக இருந்திருக்கலாம் என்பதைக் குறிக்கிறது.

வடால ஹனுமானின் புராணக்கதை

அந்தத் தீவின் ஆட்சியாளர் ஒரு விஜயத்தின் போது ஒரு பாறையைக் கண்டார், அதில் ஸ்ரீ மாருதியின் உருவம் இயற்கையாகவே உருவாகியிருந்தது. ஸ்ரீ மாருதியின் தீவிர பக்தரான அவர், தனது விருப்பமான இடத்தில் அவ்விக்ரஹத்தை நிறுவ விரும்பினார். அவர் பாறையை தனது விருப்பமான இடத்திற்கு கொண்டு செல்ல ஆயித்தமானார். ஆனால் நடந்ததோ வேறு, இறைவன் விருப்பம் வேறு விதமாக இருந்தது. இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்ட 'சுயம்பு' ஸ்ரீ மாருதி நகர்த்தப்பட்டபோது, ​​வாகனத் தொடரணி ஒரு குறிப்பிட்ட இடத்தில் சிக்கிக்கொண்டது. விக்ரஹத்தை நகர்த்த ஆட்சியாளரின் முயற்சிகள் பலனளிக்கவில்லை. பின்னர் அந்த குறிப்பிட்ட இடத்தில் தான் மாருதி இருக்க விரும்புவதாக மன்னர் புரிந்துகொண்டார், பின்னர் அதே இடத்தில் 'சுயம்பு விக்ரஹத்தின்' 'பிரதிஷ்டை' செய்ய ஏற்பாடு செய்தார்.

வடாலா ஹனுமான் மந்திர்

மேலே விவரிக்கப்பட்ட புராணக்கதை பதினைந்தாம் நூற்றாண்டில் நடந்ததாகக் கூறப்படுகிறது. காலப்போக்கில் ஸ்ரீ மாருதிக்கே நன்கு தெரிந்த காரணங்களால் அவருக்கு பூஜைகள் தடைப்பட்டு விட்டன. பதினெட்டாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் சுயம்பு விக்ரஹம் மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டது. ஸ்ரீ மாருதி மீண்டும் தோன்றினார் அல்லது தனது பக்தர்களை ஆசீர்வதிக்க மீண்டும் தோன்றினார் என்று தான் கூற வேண்டும்.

கடந்த 150 ஆண்டுகளாக, அவருக்கு பூஜைகள் செய்யப்பட்டு வருகின்றன, சிறிது சிறிதாக ஸ்ரீ மாருதிக்கு கோயில் வடிவம் பெறத் தொடங்கியது. இன்று கோயிலில் ஸ்ரீ தத்தாத்ரேயர் மற்றும் ஸ்ரீ விநாயகர் உள்ளிட்ட பிற தெய்வங்களின் சிலைகள் உள்ளன. பிரதான மண்டபச் சுவர்களில் இறைவனின் வாழ்க்கையிலிருந்து பல்வேறு நிகழ்வுகளை சித்தரிக்கும் ஓவியங்கள் அலங்கரிக்கப்பட்டுள்ளன. ஸ்ரீ ராம பட்டாபிஷேகத்தின் பழைய ஓவியம், அங்கு முக்கியமாகக் காணப்படுகிறது. மகளிர்கள் இறைவனுக்கு ஆரத்தி செய்வது போல் உள்ளது என்பது குறிப்பிட வேண்டும்.

இந்தக் கோயில் மும்பையில் உள்ள மிகப் பழமையான ஹனுமான் கோயில் என்று கூறலாம். செவ்வாய் மற்றும் சனிக்கிழமைகளில் இது ஏராளமான பக்தர்களை ஈர்க்கிறது.

ஸ்ரீ ராமர் தனது தீவிர பக்தருக்கு எப்போதும் தரிசனம் கொடுக்கத் தேர்ந்தெடுத்து இங்கு வந்தது காணும் பொழுது, அலுபேலா ஸ்ரீ ஹனுமான் மற்றும் வடாலா க்ஷேத்திரத்தின் புனிதத்தன்மையை நன்கு ஊகிக்க முடியும்.

வடலா அல்பேலா ஹனுமான்

கோயிலின் பிரதான நுழைவாயிலுக்கு நேர் எதிரில் கர்ப்பகிரகம் உள்ளது. நுழைவாயிலில் இருந்து இறைவனை தரிசனம் செய்யலாம். கர்ப்பகிரகத்தில் ராமர், ஸ்ரீ சீதா மற்றும் லட்சுமணரை சித்தரிக்கும் வெள்ளி ஓவியங்கள் உள்ளன; இந்தக் குழுமத்தின் இருபுறமும் தாஸ மாருதி மற்றும் ஸ்ரீ அங்கதன் உள்ளனர். இந்தப் பின்னணியில் ஸ்ரீ அல்பேலா ஹனுமான் கர்ப்பகிரகத்தில் காட்சியளிக்கிறார். ஹனுமானின் சிலை ஒரு பெரிய அடித்தளத்தைக் கொண்டுள்ளது, மேலும் இறைவனின் தோரணையை அறிந்து கொள்வது மிகவும் கடினம். அவர் அமர்ந்திருக்கும் தோரணையில் இருப்பது போல் தெரிகிறது. சிலை முழுவதுமாக சிந்துரம் பூசி மூடப்பட்டிருப்பதால், இறைவனின் வாய் பகுதி மற்றும் மீசை அழகாக தெரிகிறது.

 

திருக்கோயில் இருப்பிடம் :     "ஸ்ரீ அல்பேலா ஹனுமான் மந்திர், வடலா, மும்பை"

 

அனுபவம்
ஸ்ரீ ராம பக்தர்களின் பாதுகாவலரான இந்த க்ஷேத்திரத்தின் ஸ்ரீ ஹனுமானை தரிசனம் செய்யுங்கள். விபீஷணன் தர்மத்தின் பக்கம் நின்றது போல் நாம் தர்மத்தின் பக்கம் நின்றால், அவர் நம்மையும் பாதுகாப்பார் என்பது உறுதி.       

தமிழாக்கம் : திரு. ஹரி சுந்தர் ::
பதிப்பு:  செப்டம்பர் 2025


 

 

ஆஞ்சநேய ஸ்வாமி புகழ் வாழ்க

காற்று ஈன்ற காவியமே எம்மை காத்தருள்வாய்
நம்பினோம் நாவரசை நாங்களே
+