home-vayusutha: ஸ்லோகம் கோவில்கள் கட்டுரைகள் சமீபத்திய சேர்க்கை
boat

ஸ்ரீ ஹனுமான் ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் மற்றும் ஸ்ரீ வரதராஜரை வணங்கும் கோயில்

ஸ்ரீ பிரசன்ன ஆஞ்சநேயர் கோயில், பட்டை கோவில், சேலம், தமிழ்நாடு

ஸ்ரீ ஹரி சுந்தர்

ஸ்ரீவரதராஜ பெருமாள் கோவில் மற்றும் ஸ்ரீபிரசன்ன ஆஞ்சநேயா கோவில், சேலம்:: courtesy - Google Street view

சேலம்

ஸ்ரீ வரதராஜப் பெருமாள் கோயில், சேலம் திருமணிமுத்துாறு ஆற்றின் கரையில் உள்ள சேலம் நகரம், மலைகளினால் சூழப்பட்டுள்ளது - வடக்கில் நாகர்மலை, தெற்கில் ஜருகுமலை, மேற்கில் கஞ்சமலை [காஞ்சனமலை] மற்றும் கிழக்கில் கோடுமலை. 'சேலம்' என்ற பெயர் சசைலா, அதாவது மலைப்பாங்கான இடம் என்பதை குறிக்கும் வடமொழி வார்த்தையிலிருந்து பெறப்பட்டதாகத் தெரிகிறது.

சேலம் கோட்டைப் பகுதி

கலை, கட்டிடக்கலை மற்றும் சமயம் ஆகியவைற்றிருக்கு பங்களிப்புகளுக்குப் பெயர் பெற்ற போசளப் பேரரசு [ஹோய்சாளர்கள்] மற்றும் விஜய நகர ஆளுமையில் சேலம் இருந்திருக்கிறது. போசள மற்றும் விஜயநகர காலத்தில், சேலம் ஒரு கோட்டை நகரமாக இருந்துள்ளது மற்றும் பல கோயில்கள் இக்காலத்தில் கட்டப்பட்டுள்ளன. இதன் விளைவாக, இந்த பகுதி சேலத்தில் மிகப் பழமையானதாகக் கருதப்படுகிறது, இப்போது இது 'கோட்டைப் பகுதி' என்று அழைக்கப்படுகிறது. ஏராளமான பழங்கால கோயில்கள் மற்றும் சமய ஸ்தாபனங்கள் இந்தப் பகுதியில் அமைந்துள்ளன, அவற்றில் பல 'கோட்டை' என்ற முன்னொட்டைக் கொண்டுள்ளன, இது கோட்டைப் பகுதியில் அவற்றின் இருப்பிடத்தைக் குறிக்கிறது.

குறிப்பிடத்தக்க கோயில்களில் கோட்டை மாரியம்மன் கோயில், கோட்டை பெருமாள் கோயில் என்று அழைக்கப்படும் அழகிரிநாதர் கோயில், மற்றும் 'கோட்டை ஈஸ்வரன் கோவில்' என்று பொதுவாகக் குறிப்பிடப்படும் மேட்டு அக்ரஹாரத்தில் அமைந்துள்ள ஸ்ரீ சுகுவனேஸ்வரர் கோயில் ஆகியவை அடங்கும்.

அக்ரஹாரங்கள்

அக்ரஹாரங்கள் என்பதை 'பிராமணர்களுக்கு வழங்கப்பட்ட நிலத்தின் கொடைகள் அல்லது பிராமணர்களுக்கு அவர்களின் வாழ்வாதாரத்திற்காக பரிசாக வழங்கப்பட்ட நிலங்கள்' என்று கூறுவர். இன்று, முதல் அக்ரஹாரம், இரண்டாவது அக்ரஹாரம் மற்றும் மேட்டு அக்ரஹாரம் போன்ற பெயர்கள் சேலத்தின் கோட்டைப் பகுதியை அலங்கரிக்கின்றன. இது ஒரு காலத்தில் இந்தப் பகுதி சமய நடவடிக்கைகளால் செழித்து வளர்ந்ததாகவும், சமூக மற்றும் கலாச்சார நலன்களால் துடிப்பாக இருந்ததையும் குறிக்கிறது. இந்தப் பகுதியில் ஏராளமான தெய்வங்களின் சிலைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன, இது காலப்போக்கில் சமய சார்புடனம் இருந்த இப்பகுதி சேதத்தை சந்தித்ததை குறிப்பிடுவதாக இருக்கிறது. இப்பகுதியில் இந்தப் பேரழிவுகளில் இருந்து தப்பிய சமயத்தை சார்ந்த சில மடங்கள் உள்ளன.

தமிழ் சௌராஷ்டிரிய சமூகத்தைச் சேர்ந்தவர்கள் இரண்டாவது அக்ரஹார பகுதியில் ஒரு பெருமாள் கோவிலைக் கட்ட முயன்றனர். ஒரு நல்ல நாளில், நியமிக்கப்பட்ட இடத்தில் கோயிலுக்கான அஸ்திவாரம் போட நிலத்தை தோண்டினார்கள். அப்பொழுது அவ்விடத்தில் ஸ்ரீ லட்சுமி நரசிம்ம சுவாமியின் முழு கல் சிலை கண்டெடுக்கப்பட்டது.

இரண்டாவது அக்ரஹாரம்

ஸ்ரீ பிரசன்ன ஆஞ்சநேயர் கோயில், சேலம் இந்தப் பகுதி நகரத்தின் மக்கள் தொகை அதிகம் கொண்ட, பரபரப்பான பகுதியாக உள்ளது. சுமார் இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு, தமிழ் சௌராஷ்டிரிய சமூகத்தைச் சேர்ந்தவர்கள் இரண்டாவது அக்ரஹார பகுதியில் ஒரு பெருமாள் கோவிலைக் கட்ட முயன்றனர். ஒரு நல்ல நாளில், நியமிக்கப்பட்ட இடத்தில் கோயிலுக்கான அஸ்திவாரம் போட நிலத்தை தோண்டினார்கள். அப்பொழுது அவ்விடத்தில் ஸ்ரீ லட்சுமி நரசிம்ம சுவாமியின் முழு கல் சிலை கண்டெடுக்கப்பட்டது. இது ஒரு நல்ல சகுனமாகக் கருதப்பட்டு அங்கே கோயில் எழுப்பப்பட்டது.

இந்த நிகழ்வு கோட்டைப் பகுதி கடந்த காலத்தில் சமய நடவடிக்கைகளில் செழித்து வளர்ந்ததை உறுதிப்படுத்துகிறது.

ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோயில்

திட்டமிட்டபடி, தமிழ் சௌராஷ்டிரிய சமூகத்தினர் அந்த இடத்தில் ஸ்ரீ வரதராஜ பெருமாளுக்கு ஒரு கோவிலைக் கட்டினார்கள். இன்று, கோயில் அஸ்திவாரத்தின் போது கண்டெடுக்கப்பட்ட ஸ்ரீ லட்சுமி நரசிம்ம விக்ரஹத்தை பக்தர்கள் அங்கு வழிபடுவதைக் காணலாம். இரண்டாவது அக்ரஹாரத்தின் ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோயில் 'பட்டை கோவில்' என்று பிரபலமாக அழைக்கப்படுகிறது. கோயிலின் முக்கிய தெய்வம் ஸ்ரீ பிரசன்ன வரதராஜ பெருமாள்.

ஸ்ரீ பிரசன்ன ஆஞ்சநேயர் கோயில்

ஸ்ரீ பிரசன்ன வரதராஜர் கோயிலுக்கு எதிரே, சாலையின் எதிர்புறம், பிரதான தெய்வமான ஸ்ரீ பிரசன்ன வரதராஜரை நோக்கி ஸ்ரீ ஆஞ்சநேயர் கோயில் உள்ளது. நுழைவாயிலுக்கு மேலே உள்ள வளைவு ஸ்ரீ ராம பட்டாபிஷேகக் காட்சியால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. உள்ளே பிரமாண்டமான, உயரமான கல் மண்டபத்தின் மையத்தில் ஸ்ரீ ஆஞ்சநேயர் இருக்கிறார். இது ஸ்ரீ ஆஞ்சநேயர் கோயிலாகவும், சன்னிதியாகவும் அமைந்துள்ளது. பக்தர்கள் ஸ்ரீஆஞ்சநேயரை சுற்றி வலம் வர மண்டபத்தைச் சுற்றி ஒரு பாதை உள்ளது.

ஸ்ரீ ஆஞ்சநேயர் கோயிலுக்கு அருகில் வசந்த மண்டபம் உள்ளது.

ஸ்ரீ பிரசன்ன ஆஞ்சநேயர்

ஸ்ரீ பிரசன்ன ஆஞ்சநேயர், சேலம் பிரபுவின் சிலை கடினமான கருப்பு கல்லால் ஆனது, மற்றும் நின்ற நிலையில் சுமார் ஐந்து அடி உயரம் கொண்டது. பிரபு சுமார் இரண்டு அடி உயரமுள்ள தாமரை மேடையில் இருப்பதைக் காணலாம்.

இறைவனின் தாமரைப் பாதங்களில் தண்டை மற்றும் நூபூரம் அணிந்துள்ளர். அவர் கச்சம் வைத்து வேட்டியை அணிந்துள்ளார். அவ்வேட்டியினை அலங்கார இடுப்புப் பட்டை [உதரபந்தம்] இடுப்பில் பிடித்துள்ளது. மேல் கையில், கேயூரம், மணிக்கட்டில் கங்கணம் காணப்படுகிறது. அவரது மடிந்த கைகள், உள்ளங்கைகள் இணைந்து இறைவனுக்கு வந்தனம் செய்தவண்ணம் காணப்படுகின்றன. மார்பில், ஒரு நீண்ட மணி மாலை மற்றும் முப்புரி நூல் காணப்படுகின்றது. அவரது கழுத்தில் ஒரு அலங்கார ஆபரணம் உள்ளது. அவர் காதுகளில் அணிந்திருக்கும் குண்டலம் அவரது தோள்களைத் தொடுவதைக் காணலாம். இறைவனின் வால் தலை வரை உயர்ந்து அவரது இடது பக்கம் முடிவடைகிறது. வாலின் முடிவில் ஒரு சிறிய மணியும் காணப்படுகிறது. அழகாக கட்டப்பட்ட கேசம் 'கேச பந்த்னா'வால் பிடிக்கப்படுகிறது. அவரது கேசத்தின் ஒரு சிறிய பகுதி பக்கவாட்டில் மெதுவாகப் பாய்கிறது. இறைவன் தனது பிரகாசமான கண்களால் நேராகப் பார்க்கிறார், மேலும் இறைவனின் கடாக்ஷம் நேரடியாக பக்தரின் மீது விழுகிறது.

 

திருக்கோயில் இருப்பிடம் :     "ஸ்ரீ பிரசன்ன ஆஞ்சநேயர் கோயில், பட்டை கோவில், சேலம்"

 

அனுபவம்
இந்த க்ஷேத்திரத்தின் இறைவன் வரங்களை அருளும் தனது இறைவன் ஸ்ரீ வரதராஜரைப் பார்த்துக் கொண்டிருக்கிறார். இந்த க்ஷேத்திரத்தின் இறைவனிடம் பிரார்த்தனை செய்வது அவரது பக்தர்களின் நியாயமான வரங்களை நிச்சயம் அருளுவார்.       

தமிழாக்கம் : திரு. ::
பதிப்பு:  ஜூலை 2025


 

 

ஆஞ்சநேய ஸ்வாமி புகழ் வாழ்க

காற்று ஈன்ற காவியமே எம்மை காத்தருள்வாய்
நம்பினோம் நாவரசை நாங்களே
+