home-vayusutha: ஸ்லோகம் கோவில்கள் கட்டுரைகள்
boat

ஸ்ரீ முக்யப்ராணா [ஆஞ்சநேய ஸ்வாமி] கோயில், திருவல்லிகேணி, சென்னை, தமிழ்நாடு

ஸ்ரீ பி. நாகராஜன் அவர்கள், சென்னை


முக்யப்ராணா

ஸ்ரீ முக்யப்ராணா, திருவல்லிகேணி, சென்னை திருவல்லிகேணி ஹனுமந்த ராயன் கோயில் வீதியில் முன்பு மாத்வர்கள் வசித்து வந்தார்கள். அப்பொழுது இவ்விடத்தை அக்ரஹாரம் என்று அழைப்பார்கள். உத்திராதி மடத்தின் இருபத்திதைந்தாவது குருவர் ஸ்ரீ ஸ்ரீ சத்திய சந்தாரு (1783-1794) அவர்கள் திருகரங்களால் அக்ரஹாரத்தில் முக்யப்ராணரை ஸ்தாபனம் செய்து வைத்தார். அன்று ஏழு அடி அகலமும் ஒன்பது அடி நீளமும் இருந்த முக்யப்ராணரின் கோயில் அருகிலிருந்தவர்கள் செய்த கொடையால் கோயிலை சுற்றி இரண்டடிக்கு சுற்று பிரகாரம் கட்டப்பட்டது.

அங்க லக்ஷணம்

தேர்ந்தெடுக்கப்பட்ட கல்லினால் சுமார் பத்தொன்பது அங்குலம் உயரமுள்ள முக்யப்ராண சிலையில் ஸ்ரீ ஆஞ்சநேயர் நின்ற நிலையில் உள்ளார். அவரது வலது திருபாதம் இடது திருபாதத்தினை விட சற்றே முன்னுக்கு உள்ளது. கூப்பிய திருகரங்கள் அவரது மார்பினை தழுவியுள்ளது. திருகரத்தினை கங்கணமும் மற்றும் அங்கதம் முதலிய ஆபரணங்கள் அலங்கரிக்கின்றன. மடிந்திருக்கும் இடது திருகரத்தினால் மார்பினை ஒட்டி கதையை பிடித்துள்ளார் கோவணம் கட்டி நிற்கும் ஸ்ரீ ஆஞ்சநேயர். அழகிய காதுகளை குண்டலம் அலங்கரிக்கிறது. திருமுடியில் வீற்றிருக்கும் சிறிய அழகிய மகுடத்துடன் உள்ள அவர் வினையத்தினையையும், தொண்டு செய்யும் மனப்பான்மையும், கண்யத்தையும், பற்றற்ற தன்மையையும், குணங்களின் நேர்த்தியையும் பரைசாற்றும் வடிவமாக உள்ளார். தியானிப்பதற்கு சிறந்த திரு உருவமாக திகழ்கிறார்.

நமது கூப்பிய கரங்கள் வேண்டுமானால் ஆதரவற்ற நிலையை குறிப்பிடலாம். ஆனால் ஸ்ரீ ஆஞ்சநேயரின் கூப்பிய திருகரங்கள் இறைவன் அருளில்லாமல் நம்மால் ஒன்றும் அடைய முடியாது, அவன் ஒருவனே எல்லாவற்றிற்கும் பொறுப்பு, அவனின் அன்பு மட்டுமே நம்மை காக்க முடியும் என்பதனை உணர்த்துவதாக உள்ளது.

கோயில் பராமரிப்பு

ஸ்ரீ முக்யப்ராணா [ஆஞ்சநேய ஸ்வாமி] கோயில், திருவல்லிகேணி, சென்னை 1910 வரை கோயில் எப்படி பராமரிக்கப்பட்டது என்பதற்கு சரியான தகவல்கள் இல்லை. அது வரை கோயிலை ஆதரித்த, ஆராதித்தவர்களின் மௌனம் அவர்களின் பக்திதான். ஸ்ரீ உத்திராதி மடத்தின் முப்பத்திஏழாம் மடாதிபதி ஸ்ரீ ஸ்ரீ ஸத்ய ஞானான தீர்த்தர் இக்கோயிலை புதுப்பிக்க வேண்டி பொறுப்பை ஸ்ரீ சத்யானந்த ராமாசார் அவர்களிடம் ஒப்படைத்தார். புதுப்பிக்கப்பட்ட கோயில் ஸம்ப்ரோக்ஷணம் ஸ்வாமிகளின் திருகரத்தினால் 1910-ம் ஆண்டு இனிதே நடைப்பெற்றது.

பின் 1971-ம் ஆண்டு கோயில் புதுப்பிக்கப்பட்டது. இம்முறை ஸ்ரீ ராமா அஸோஸியேஷன் (ஸ்தாபனம் 1943) முழுப் பொறுப்பையும் ஏற்றுக் கொண்டு சிறப்பாக செய்தனர். அடிப்படையில் இக்குழுமம் வருடம்தோறும் ஸ்ரீராம நவமி உத்ஸவத்தினை சிறப்பாக கொண்டாடுவார்கள். அந்த ஒன்பது நாட்களும் தமிழ்நாட்டின் மற்ற பகுதியிலிருந்தும், வெளி மானிலங்களிலிருந்தும் சிறந்த பண்டிதர்களும், விற்பன்னர்களும் வரவழிக்கப்பட்டு உபன்யாசங்கள் செய்விப்பார்கள். அது முடிந்ததும் சம்பரதாய முறையில் தாஸரபாடல்கள் பஜனை நடைப்பெறும். ஸ்ரீராம நவமி அன்று ஏழை பிராமண குழந்தைகளுக்கு உபநயனம் செய்து வைக்கப்படும். அன்று மாலை ஸ்ரீ பார்த்த சாரதி கோயிலின் நான்கு மாடவீதியிலும் ஸ்ரீராமரின் படம் ஊர்வலமாக எடுத்து செல்லப்படும். இக்குழுமம் ஸ்ரீராம நவமியை தவிர நவராத்திரி, ஸ்ரீ ஹனுமத் ஜயந்தி, அக்ஷயதிருத்தியை ஆகிய நாட்களிலும் விழா எடுக்கிறார்கள்.

ஆன்மையில் கும்பாபிஷேகம்

கருவறையின் மேல்தளம் பழுது அடைந்திருந்ததால் புதிதாக மேல் தளமும், பதிமூன்று அடி உயரத்திற்கு புதிதாக விமானமும் கட்டப்பட்டது. பல வர்ணங்களால் அலங்கரிக்கப்பட்ட சுதை சிற்பங்கள் விமானத்தை அலங்கரிக்கிறது. பிரகாரமும் புதிதாக மெருகேற்றப்பட்ட கருங்கற்களால் வேய்யப்பட்டது. உத்திராதி மடத்தின் நாற்பத்திரெண்டாம் மடாதிபதி ஸ்ரீ ஸ்ரீ சத்யாத்மா தீர்த்தர் அவர்கள் திருகரங்களால் புதிப்பிக்கப்பட்ட இக்கோயிலுக்கு அஷ்டபந்தன கும்பாபிஷேகம் 23.01.2000 அன்று நடத்தி வைக்கப்பட்டது. பூர்வாங்கம் முதலிய சடங்குகள் ஆகம விதிபடி நடத்தப்பட்டன. சாந்தித்யம் குறையாமல் இருக்க கருவறையை அப்படியே பழைய சுவடுகளோடுடன் உள்ளது. அங்கு வரும் ஒவ்வொரு பக்தர்களுக்கும் முக்யப்ராணர் அருளியிருக்கிறார். அவர்கள் கூறும் அனுபவம் இதை உறுதிபடுத்தும்.

 

திருக்கோயில் இருப்பிடம் :     " "ஸ்ரீ முக்யப்ராணா கோயில், திருவல்லிகேணி, சென்னை"

 

அனுபவம்
முக்ய ப்ராணர் உயிரின் நாடி. இக்கோயிலின் பிரகாரத்தில் உட்கார்ந்து ஜபித்தால் அவரை ஸ்மரித்தால் எல்லா உற்சாகமும் வரும், உன்னத்தியும் அடைவோம்.

தமிழாக்கம் :திருமதி. ஸ்ரீமதி
முதல் பதிப்பு நவம்பர் 2013
திருத்தப்பட்ட பதிப்பு: செப்டம்பர் 2020


 

 

ஆஞ்சநேய ஸ்வாமி புகழ் வாழ்க

காற்று ஈன்ற காவியமே எம்மை காத்தருள்வாய்
நம்பினோம் நாவரசை நாங்களே
+