home-vayusutha: ஸ்லோகம் கோவில்கள் கட்டுரைகள்
boat

ஹனுமான் கத்தி - பஞ்சபாண்டவ் கிலா, நைமிசாரண்யம், உத்திர பிரதேசம்

பி.சௌமியா

ஹனுமான் கத்தி - பஞ்சபாண்டவ் கிலா, நைமிசாரண்யம், உத்திர பிரதேசம்


நைமிசாரண்யம்

உத்திர பிரதேசம் சீதாபூர் ஜில்லாவில் கோமதி நதிகரையில் நிம்சாரில் நைமிசாரண்யம் என்னும் புனிதமான தலம் உள்ளது. இராமாயணம், மஹாபாரதம் மற்றும் இதர புராணங்களில் இத்தலத்தின் பெருமை பேசப்படுகிறது. இத்தலத்தை பற்றிய பல பூராணக்கதைகள் உள்ளன. அவற்றில் ஒன்றில் முனிவர்கள் பலர் பிரம்மாவிடம் சென்று தவம் செய்வதற்கு சிறந்த தலம் எது என்று கேட்க, பிரம்மன் தர்ப்பையால் ஒரு வளயம் செய்து பூலோகத்தில் உருட்டி விட, அது நிற்க்கும் இடமே தலை சிறந்த தலம் என்று கூறினார். அப்படி அச்சக்கரம் அடர்ந்த காட்டின் மத்தியில் கோமதி நதிக்கரையில் நின்ற இடமே இன்று நைமிசாரண்யம் என்றும் தலமாகும். இங்கு முனிவர்கள் தவம் செய்து மகாவிஷ்ணுவை தரிசனம் செய்து பலன் அடைந்தனர். நைமிசாரண்ய வனத்தில் இன்றும் விஷ்ணு மற்றும் அனைத்து முனிவர்களும் மரங்களாக உருவெடுத்து உள்ளனர். இதனால் சக்கர தீர்த்தத்தை மையமாக கொண்ட நைமிசாரண்யம் புனிதமாக கருதப்படுகிறது.

இராமாயணம், மகாபாரதம், நைமிசாரண்யம்

ஹனுமான் கத்தி - பஞ்சபாண்டவ் கிலா, நைமிசாரண்யம், உத்திர பிரதேசம் ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட திருதலங்களை திவ்யதேசம் என்று அழைப்பார்கள். இப்படி திருமங்கையாழ்வாரால் பாடல் பெற்ற இத்தலம் நைமிசாரணயம் என்னும் திவ்யதேசம். விஷ்ணு சுயம்பூவாக தோன்றிய எட்டு திருதலத்தில் இதுவும் ஒன்று. இராமாயணம் மற்றும் மகாபாரதத்தில் இத்தலத்தினை பற்றி குறிப்புகள் காணப்படுகின்றன.

ஸ்ரீ ஹனுமாரை மூலவராக கொண்ட "ஸ்ரீ ஹனுமான் கத்தி - பஞ்சபாண்டவ் கிலா" என்ற புகழ் பெற்ற திருக்கோயில் தல புராணம் இராமாயணம், மகாபாரதம் இரண்டோடும் கலந்திருப்பதை காணலாம்.

ஹனுமாரும் பஞ்சபாண்டவர்களும்

தங்களது ஒன்றுவிட்ட சகோதர்களை வதை செய்த பாவத்தை போக்கிக் கொள்ள பஞ்ச பாண்டவர்கள் மகாவிஷ்ணுவை குறித்து தவம் செய்யவும், அதற்கான சரியான தலம் நைமிசாரண்யம் என்றும் ரிஷிகள் அவர்களிடம் அறிவுரை வழங்கினர். நீண்ட தவத்திற்கு பிறகும் அவர்களுக்கு விஷ்ணுவின் தரிசனம் கிடைக்கவில்லை. பின், முதியோர்கள் ஹனுமாரை வணங்கி ஆசிகள் வாங்கிக் கொண்டு பின் தவத்தை தொடர சொன்னார்கள். அதன் படி அவர்கள் முதலில் ஹனுமாரை குறித்து தியானித்தார்கள். ராவணனின் ஒன்றுவிட்ட சகோதரன் அஹிராவணனை வதம் செய்து, ஸ்ரீராம லக்ஷ்மணரை மீட்ட தருவாயில் இருக்கும் ஹனுமாராக அவர் பஞ்ச பாண்டவர்களுக்கு காட்சி தந்து ஆசிகள் வழங்கினார். அதன் பின் விஷ்ணுவை குறித்த அவர்களின் தவம் செய்து அதன் பலனைப் பெற்றார்கள் பாண்டவர்கள்.

ஹனுமான் கத்தி - பஞ்சபாண்டவ் கிலா

ஸ்ரீஹனுமார், ஸ்ரீஹனுமான் கத்தி - பஞ்சபாண்டவ் கிலா, நைமிசாரண்யம், உத்திர பிரதேசம் நைமிசாரண்யத்தில் பஞ்சபாண்டவர்கள் ஹனுமாரினின் ஆசிகள் பெற்று மஹாவிஷ்ணுவை குறித்து தவம் செய்து பலன் அடைந்த இடத்தில் இன்று ஹனுமாருக்காக ஒரு திருக்கோயில் இருக்கிறது. இன்று "ஸ்ரீ ஹனுமான் கத்தி-பஞ்சபாண்டவ் கிலா" என்று பிரபலமாக அழைக்கப்படுகிறது. "ஹனுமான் கத்தி" [ஹனுமான் க~த்தி - ஹனுமானின் அரியணை என்று பொருள்] என்ற பெயரில் மூன்று தலங்கள் மிகவும் பிரசுத்தம். பிரயாகையில் யமுனையும், கங்கையும், சரஸ்வதியும் கூடும் இடத்தில் கிடந்த நிலையில் ஹனுமார் இருக்கும் திருக்கோயிலுக்கும் இப்பெயரே. [வாசகர்கள் நமது இணைய தளத்தில் "ஸ்ரீ படே ஹனுமார் திருக்கோயில், ப்ரயாகை, அலகாபாத்" [http://anumar.vayusutha.in/kovil17.html] பார்க்கவும்.]. அயோத்தியாவில் இதே பெயரில் இருக்கும் திருக்கோயிலில் ஹனுமார் அமர்ந்த நிலையில் காணப்படுகிறார். [வாசகர்கள் நமது இணைய தளத்தில் "ஸ்ரீ ஹனுமான் கத்தி, அயோத்தியா, பைஸாபாத்" [http://anumar.vayusutha.in/kovil068.html] பார்க்கவும்.]. இங்கு நைமிசாரண்யத்தில் நின்ற நிலையில் ஹனுமார் காட்சி தருகிறார்.

அஹி இராவணனின் புராணம்

கீர்த்திவாசி இராமாயணத்தில் இராவணனின் ஒன்றுவிட்ட சகோதரனும் பாதாள் உலகில் அரசுனுமான அஹி இராவணனின் காணப்படுகிறது. இலங்கையில் ராம-ராவண யுத்தத்தில் ஒரு கட்டத்தில் இராவணன் தனது முக்கிய வீரர்களை எல்லாம் இழந்து, தோல்வியை தழுவிடோமோ என்ற பீதியில் இருந்தான். அத்தருணத்தில், யுத்தத்தில் வெற்றி அடைய வேண்டி அஹி ராவணனின் உதவியை நாடினான். தயங்கிய அஹிராவணன் பின்பு உதவ முன் வருகிறான். இராவணனின் சதியில் விழுந்த அஹிராவணன் ராமரையும் லக்ஷ்மணரையும் தனது குல தெய்வமான மகாமாயாவிற்கு பலி கொடுக்க சபதம் ஏற்கிறான். அவர்கள் இருவரும் ராமலக்ஷ்மணரை பாதாள உலகத்திற்கு எடுத்து வர சதி திட்டமிட்டு, அதில் வெற்றியும் அடைகின்றனர்கள். விஷயம் அறிந்த விபீஷணன், ஹனுமாரை பாதாள உலத்திற்கு அனுப்புகிறார். ஹனுமார் பாதாளம் சென்று அஹி ராவணனை அழித்து, ராமலக்ஷ்மணர் இருவரையும் மீட்டு திரும்பவும் போர்களத்திற்கே அழைத்து வருகின்றார்.

அஹி இராவணன், ஹனுமான் கத்தி - பஞ்சபாண்டவ் கிலா, நைமிசாரண்யம், உத்திர பிரதேசம் சுருக்கமான இதனை விவரமாக படிக்க நமது இணைய தளத்தில் "தண்டி ஶ்ரீஹனுமார் திருக்கோயில், பேட் துவாரகா, துவாரகா, குஜராத்" பக்கத்தை பார்க்கவும்.

நைமிசாரண்யத்தில் ஸ்ரீஹனுமார்

இத்தலத்தில் ஹனுமார் தெற்கு நோக்கி நின்ற வண்ணம் காட்சி தருகிறார். மிக பிரமாண்டமான ஹனுமாரின் தோற்றம் பக்தர்களை பிரமிக்க வைக்கிறது. அவரது சிலை சுமார் பன்னிரண்டு அடி உயரம் உள்ளது. ஹனுமார் ஸ்ரீராமரையை இடது தோளிலும், லக்ஷ்மணரை வலது தோளிலும் சுமந்த வண்ணம் காணப்படுகிறார். அஹிராவணன் ஹனுமாரின் காலடியில் மிதிக்கப்படுவதைக் காணலாம்.

 

திருக்கோயில் இருப்பிடம் :     "ஹனுமான் கத்தி - பஞ்சபாண்டவ் கிலா, நைமிசாரண்யம், உ.பி."

 

அனுபவம்
நைமிசாரண்யம் க்ஷேத்திரம் என்பது பழங்காலத்திலிருந்தே அனைவரும் தியானம் செய்ய தேர்ந்தெடுக்கும் தலமாகும். இக்கோயிலுக்குச் சென்று இறைவனைத் தியானிப்பது பக்தர்களுக்கு நீதியின் ஆற்றலைத் தரும், பெருக்கும் என்பதில் எந்த ஐயப்பாடும் இல்லை.    

தமிழாக்கம் : திரு. ஹரி சுந்தர் :: பதிப்பு:  நவம்பர் 2022


 

 

ஆஞ்சநேய ஸ்வாமி புகழ் வாழ்க

காற்று ஈன்ற காவியமே எம்மை காத்தருள்வாய்
நம்பினோம் நாவரசை நாங்களே
+