குருராயா என்று அழைக்கப்படும் வாழும் துறவி ஸ்ரீ ராகவேந்திர சுவாமியின் கடைசி தங்குமிடமான மந்திராலயத்தை ஸ்ரீ ஹனுமான் பக்தர்கள் நன்கு அறிவார்கள். மந்திராலயம் துங்கபத்ராவின் தெற்கு கரையில் உள்ளது மற்றும் ஆந்திராவில் விழுகிறது. ஆற்றின் வடக்குக் கரையில் பஞ்சமுகி க்ஷேத்ரம் உள்ளது, அங்கு குருராயர் பன்னிரண்டு ஆண்டுகளாக தவம் செய்தார். இது கர்நாடகாவின் ரைச்சூர் மாவட்டத்தின் கீழ் வருகிறது.
தற்போதைய ரைச்சூர் மாவட்டத்தின் பல பகுதிகள் கலாச்சாரம் மிகு சனாதன தர்மத்தின் மீது அதிக பக்தி மற்றும் மரியாதை கொடுப்பதற்கு பெயர் பெற்றவை. இந்த இடங்கள் கிட்டத்தட்ட அனைத்து பிரபலமான ராஜவம்சங்களின் ஆட்சியின் கீழ் இருந்து இருக்கிறது. ரைச்சூர் பகுதி காகத்தியா, கம்மா, முசுனூரி கம்மா,, ராஷ்டிரகூடா, விஜயநகர் பேரரசு, பாமினி மற்றும் நிஜாம் போன்ற பல வம்சங்களால் ஆட்சி செய்யப்பட்டுள்ளது. ரைச்சூர் மௌரிய மன்னர் அசோகரின் (273 - 236 பி.சி.) நாட்களிலிருந்து பொன்னான நாட்களை பார்த்துள்ளது. ரைச்சூர் செழிப்பாகவும் செல்வமிகு பிராந்தியமாக இருந்ததற்கு பல கல்வெட்டுகள், மற்றும் பிற பதிவுகள், கோயில்கள், கோட்டைகள் மற்றும் பல போர்க்களங்கள் சான்றளிக்கின்றன.
ரைச்சூர் இந்த மாவட்டம் அதன் தலைமையகமான இருக்கிறது. கன்னடத்தில் ’ராயச்சூரு’ என்ற பெயரிலிருந்து தோன்றியது ரைச்சூர். பெரும்பாலன மாவட்டங்கள் அதன் தலமை இடத்தின் பெயரினாலேயே அறியபடுகிறது, ரைச்சூரும் அப்படியே. சுற்றியுள்ளவர்கள் பலர் இந்த இடத்தை முந்தைய பெயரான "ராயச்சூரு" என்றே அழைத்தாலும், சமீப காலத்திலும், இது பொதுவாக கன்னடத்தில் ராயச்சூரு என்று எழுதப்பட்டு உச்சரிக்கப்படுகிறது. கணிசமான பழமையான இந்த இடத்தின் பெயர் பன்னிரண்டாம் நூற்றாண்டில் தொடங்கியுள்ளது. ராயா என்றால் ராஜா என்று பொருள். ஊர் என்றால் இடம் அல்லது கிராமம் என்று பொருள். எனவே “ராயச்சூரு” என்றால் “ராஜாவின் இடம்” அல்லது “இடங்களில் ராஜா” என்று பொருள் படும். ராயா + ஊர் இப்போது ஆங்கிலத்தில் ரைச்சூர் ஆகவும், மீதமுள்ளவர்களுக்கு ராயச்சூருவாகவும் மாறிவிட்டது.
ரைச்சூர் நகரம் ரைச்சூர் மாவட்ட தலைமையகம் ஆகும். ரைச்சூர் நகரம் மூன்றாம் நூற்றாண்டு முதல் முக்கியமான நகராமக இருந்திருக்கிறது. இந்த நகரம் ரைச்சூர் கோட்டையுடன் கருவாக கொண்டு உருவாக்கப்பட்டது, ஆனால் இன்று நகரம் பல மடங்கு வளர்ச்சியடைந்து பழைய ரைச்சூர், புதிய ரைச்சூர் என பிரித்து அழைக்கப்படுகிறது.
கோட்டையை மையமாக கொண்டு இந்நகரம் உருவாக்கப்பட்டுள்ளது. பதாமியின் சாளுக்கியர்களின் காலத்திலிருந்தே இக்கோட்டை உள்ளது பின்னர் கல்யாணியின் சாளுக்கியர்களின் ஆட்சியில் கோட்டை புதுப்பிக்கப்பட்டுள்ளது. கி.பி 1294 இல் வாரங்கலின் காகத்தியர்கள் கோட்டையை பலப்படுத்தினர். காகத்தியா கல்வெட்டின் படி, காகத்தியாவின் இராணுவத் தளபதியான விட்டலநாதர் கோட்டையின் உள் அடுக்குகளைக் கட்டினார். விஜயநகர சாம்ராஜ்யத்தின் ஆட்சியின் போது, கிருஷ்ணதேவராயர் தனது வெற்றிகளைக் கொண்டாடும் விதமாக வடக்கு நுழைவாயிலைக் கட்டினார். கோட்டையின் உள்ளே முங்ளி ஆஞ்சநேய சுவாமி கோயில் உள்ளது.
இந்த காலக்கட்டத்தில் இந்த மன்னர்களின் ஆதரவின் கீழ் ரைச்சூர் நகரம் உருவாக்கப்பட்டது. அவர்களின் ஆதரவின் ஒரு பகுதியாக, இந்த மன்னர்கள் தங்கள் அபிமான தெய்வங்களுக்காக, ரைச்சூர் நகரத்திலும் அதைச் சுற்றியுள்ள இடங்களிலும் பல கோயில்களைக் கட்டியிருந்தனர். அனைத்து தெய்வங்களுக்கும் கோயில்கள் இருந்தாலும், ரைச்சூரில் ஸ்ரீ ஹனுமாருக்காக பல கோயில்கள் உள்ளன. உள்ளூர்வாசிகள் இந்த கோயில்களை “பிரணதேவர் குடி” அல்லது “ஹனுமப்பனா குடி” என்று அழைக்கிறார்கள். ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு பல கோவில்கள் இருப்பதால் ஒவ்வொன்றும் அக்கோயினின் சிறப்பை எடித்துச் சொல்லும் வகையில் ஒரு சிறப்பு பெயர் ஒட்டிக்கொண்டுள்ளது. நகரத்தின் அனைத்து அனுமன் கோயில்களும் பக்தர்களை ஈர்க்கின்றது, அங்கு அவர்கள் ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு பூஜையும் பிரார்த்தனையும் செய்கிறார்கள். அத்தகைய அனுமான் கோயில்களில் ஒரு கோயில் "உசுகினா ஹனுமப்பனா குடி", இது ஒரு ஏரியின் கரையில் அமைந்துள்ளது.
இந்த கோயிலின் ஸ்ரீ ஹனுமாருடன் "உசுகு" என்ற சொல் ஒட்டிக்கொண்டுள்ளது இவரை "உசுகு அனுமன்" என்று அழைக்கிறார்கள். உசுகு என்றால் கன்னடத்தில் மணல் என்று பொருள். இந்த கோயில் ஊரின் புறநகரில் உள்ளது. ஒருவர் பல் மருத்துவக் கல்லூரியை அடைந்து இடதுபுறம் திரும்பி மாணிக் பிரபு குடிக்குச் செல்லும் சாலையில் செல்ல வேண்டும். பாதி வழியில் ஏரியின் வலதுபுறத்தில் கச்சா சாலையில் செல்ல வேண்டும், அது உசுகினா கோயிலுக்கு செல்கிறது. இப்பகுதி உள்ளூர்காரர்களால் கோலகுட்டி என்று அழைக்கிறார்கள்.
முழு பாதையும் மணல் நிறைந்ததாக இருக்கிறது. சமீபத்தில் பலத்த மழை பெய்தபோது அருகிலுள்ள ஏரி வெள்ளத்தில் மூழ்கி ஹனுமான் கோவிலுக்குள் தண்ணீர் நுழைந்துள்ளது. மழைக்காலங்களில் கோயிலை அடைவது கடினம்; இது இப்படி இருந்தபோதிலும், பக்தர்கள் இந்த கோவிலுக்கு அனுமாரின் மீதுள்ள பக்தியால் வருகிறார்கள்.
சுமார் ஒரு நூற்று ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு, சலவை தொழிளாளியான ஸ்ரீ ஷேஷயாவும் அவரது மனைவியும் ஏரிகரையில் துணிகளைத் துவைப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார்கள். ஒரு நல்இரவில் தம்பதியர் ஒரு கனவு கண்டனர், அதில் அவர்கள் துவைப்பதற்காக உபயோகிக்கும் கல்லில் தான் இருப்பதாகவும் அவர்கள் துவைப்பதற்கு அக்கல்லைப் பயன்படுத்த வேண்டாம் என்று ஸ்ரீ ஹனுமான் வேண்டுகோள் விடுத்தார். தனக்காக ஒரு ஆலயத்தைக் கட்டும்படியும் இறைவன் அவர்களிடம் கூறினார். அவர்கள் இருவரும் எழுந்து தங்கள் கனவைப் பகிர்ந்து கொண்டார்கள், அவர்கள் இறைவன் ஒரே சமயத்தில் இருவர் கணவிலும் வந்து இப்படி கட்டளை இட்டதை கண்டு ஆச்சரியப்பட்டார்கள்.
அடுத்த நாள் கிராமத்து பெரியவர்களின் கூட்டத்தில் அவர்கள் தங்கள் கண்ட கனவையும் அனுபவத்தையும் இறைவனின் கட்டளையும் பற்றி விவரித்தனர். கிராமத்து பெரியவர்கள் ஏரிகரைக்குச் சென்றனர், அங்கு தம்பதியினர் வழக்கமாக துணிகளைக் துவைக்கும் கல்லைத் திருப்பியபோது, அவர்கள் ஆச்சரியப்பட்டபடி, ஸ்ரீ ஆஞ்சநேயரின் ‘மூர்த்தி’ அப்படியே இருப்பதைக் கண்டார்கள். அங்கு கூடியிருந்த கிராமவாசிகள் ஏரியின் கரையில் உள்ள கிராமத்தில் இறைவனுக்காக ஒரு கோவில் கட்ட ஒருமனதாக முடிவெடுத்தனர்.
ஜோதிடர்கள் அழைக்கப்பட்டனர், மேலும் ‘மூர்த்தி’ ஐநூறு முதல் அறுநூறு வயதுடையதாக இருக்க வேண்டும் (அப்போது) மற்றும் இறைவனின் ‘புனார் பிரதிஷ்டைக்கு ஒரு நல்ல தேதி நிர்ணயிக்கப்பட்டது. கிராமவாசிகள் இறைவனுக்காக ஒரு கர்பகுடி கட்டுகிறார்கள், குறிக்கப்பட்ட தேதியில் இறைவன் மீண்டும் நிறுவப்பட்டார். அப்போதிருந்து வழக்கமான பூஜைகள் நடத்தப்படுகின்றன. காலப்போக்கில் கோயில் வளாகத்தில் பல அபிவிர்த்திகள் செய்ய பக்தர்கள் உதவினார்கள்.
கோவில் முற்றங்கள் நல்ல தளங்களுடன் சரி செய்யப்பட்டு, கர்பகுடி [கர்பகிரஹம்] நன்கு பராமரிக்கப்பட்டு வந்தாலும், கோயிலின் ஆழமான கொடி மரம் [துவஜ ஸ்தம்பம்] மற்றும் பிற பகுதிகள் வர்ணம் பூசப்பட்டு சுத்தமாக வைக்கப்பட்டுள்ளன. கோயிலுக்கு செல்லும் சாலைவழி மோசமான நிலையில் உள்ளது. கோயில் ஏரியைக்கரையில் உள்ளதால், மழைக்காலங்களில் நீர் கோயிலுக்குள் நுழைகிறது, இது மனித முயற்சிகளுக்கு அப்பாற்பட்டது. இந்த க்ஷேத்திரத்தின் இறைவன் இங்கு இருக்க தீர்மானித்திருந்தார், அந்த கடினமான நாட்களில் கூட பக்தர்கள் பூஜையில் கலந்து கொள்கிறார்கள்.
இந்த க்ஷேத்திரத்தின் ஸ்ரீ ஹனுமான் ‘உசுகினா ஹனுமப்பனா’ என்ற பெயரில் அழைக்கப்படுகிறார், முன்பு கூறியது போல உசுகு என்றால் கன்னடத்தில் மணல். இந்த க்ஷேத்திரத்தின் இறைவனை ‘உசுகினா அனுமன்’ என்று அழைப்பதற்கு இரண்டு காரணங்கள் இருக்கலாம். முதலாவதாக, ஏரியைச் சுற்றியுள்ள பகுதி மணல் நிறைந்ததாக இருக்கிறது, மேலும் இறைவன் தானே சுமார் அறுநூற்று ஐம்பது ஆண்டுகளாக மணலில் வசித்து வந்தார். இரண்டாவதாக, மூர்த்தம் [சிலை] மணற்கல்லால் ஆனது. சிலையை தொட்டால் மணலை தொடுவது போல் இருக்கும்.
அனுமார் சிவப்பு, வெள்ளை மற்றும் கருப்பு முதலிய வண்ணக் கலவையில் காணப்படுகிறார். முதல் தோற்றத்தில் பிரபுவின் கன்னங்கள் சிவப்பு நிறத்தால் பளபளப்பதை பார்க்கமுடியும், இது மிகவும் கவர்ச்சிகரமாகவும் மனதை ஈர்ப்பதாகவும் இருக்கிறது. ஸ்ரீ ஹனுமப்பனா பிரபுவின் மூர்த்தம் சுமார் நான்கு அடி உயரம் இருக்கும். சிலை புடைப்பு சிலை [’அர்த சிலை’] வகையாகும். பிரபு நடக்கும் பாவனையில் தொற்றம் அளிக்கிறார். பிரபு தனது இடது தாமரை திருப்பாதத்தினை முன்வைத்துள்ளார், பாதங்களை நூபுரம் மற்றும் தாண்டாயை அலங்கரிக்கிறது. அவரது வலது தாமரை திருப்பாதம் தரையில் இருந்து சற்று உயர்ந்து காணப்படுகிறது. அக்ஷய குமாரனை வதைத்தவராக இவர் இங்கு காணப்படுகிறார். இராவணனின் மகன் அக்ஷய குமாரன் பிரபுவின் காலடியின் கீழே காணப்படுகிறான்.
பிரபுவின் கங்கணம் அணிந்துள்ள இடது திருக்கரம் அவரது இடது இடுப்பில் ஊனியிருப்பதைக் காணலாம் மற்றும் அவரது கையில் அவர் இரண்டு சௌகந்திகா பூக்களின் தண்டு பிடித்திருக்கிறார். மொட்டாக இருக்கும் பூ ஒன்று கீழ்நோக்கி காணப்படுகிறது, மற்றொன்று மலரும் நிலையில் அவரது இடது தோள்பட்டைக்கு மேலே காணப்படுகிறது. அவரது அகண்ட மார்பில் எந்த ஆபரணங்களையும் அணியவில்லை. மணிகள் கொண்ட ஒரு மாலா அவரது கழுத்தில் நெருக்கமாக காணப்படுகிறது. அவரது உயர்த்திய மற்றொரு கையால் அவர் தனது பக்தர்களுக்கு ஆசிகள் வழங்குகிறார். பிரபுவின் வால் அவரது தலைக்கு மேலே உயர்கிறது அழகிய வளைவுடன் முடியும் வாலின் முனையில் ஒரு சிறிய மணி காணப்படுகிறது. இறைவன் தனது தோள்களைத் தொடும் குண்டலத்தை காதில் அணிந்துள்ளார். அவரது கேசம் அழகாக சீவப்பட்டு கட்டப்பட்டுள்ளது. ‘மங்களம்’ பொங்கும் கருணையான ஒளிர்கின்றது அவரது கண்கள், பார்க்கும் பக்தர்கள் மனதை சாந்தப்படுத்திடும்.
அனுபவம்
உசுகினா ஹனுமப்பனாவின் தரிசனம் நமது அகங்காரத்தை அழித்து, நமக்கு
செழிப்பு, ஆரோக்கியம் மற்றும் நீண்ட ஆயுளை அளிக்கும் என்பது உறுதி.
தமிழாக்கம் :திருமதி. ஸ்ரீமதி
முதல் பதிப்பு: ஏப்ரல் 2020
திருத்தப்பட்ட பதிப்பு: செப்டம்பர் 2020