மத்தியப் பிரதேசத்தின் தலை நகர் போபால் ஆகும். இது ராஜா போக்கின் ஆட்சியில் இருந்தது. தற்போதைய போபால், பதினேழாம் நூற்றாண்டில் ஆப்கன் நாட்டினை சேர்ந்த தோஸ்த் என்பவரால் நிர்மானிக்கப்பட்டது. பின் இந்த பிரதேசம் முகமதியர் ஆட்சிமைக்குக் கீழ் வந்தது. பதினெட்டாம் நூற்றாண்டில் பேகம் ஷாஜகான் என்பவர் அந்த இடத்தில் ஆட்சி செய்து வந்தார்.
பேகம் ஷாஜகான் ஆட்சி காலத்தில், பேகம் அழகான தோட்டம் ஒன்றினை ப்த்து ஏக்கர் பரப்பளவில் பராமரித்து வந்தார். தற்போதிய இரயில் நிலையத்தின் அருகில் உள்ள ஹனுமான் கஞ்ச் போலீஸ் ஸ்டேஷன் உள்ள இடம் அது. அத் தோட்டத்தினல் இருந்த ஒரு ஆல மரத்தடியில் ஒரு முனிவர் வசித்து வந்தார். மக்கள் அவரை கமாலி மகராஜ் என அழைத்தனர். அவரின் நல்லாசி பெற மக்கள் அவரை தர்சிக்க வருவர். மாலை வேளைகளில் அவருடன் சேர்ந்து பஜனை செய்வார்கள். தீவிரமான அனுமான் பக்தரான கமாலி மகராஜ் பஜனை முடிந்ததும் சங்கொலி எழுப்புவார். சில சமயங்களில் பஜனை விடியற் காலை வரை நீடிக்கும். அனுமாருக்கு பள்ளி எழுச்சியும் சங்க நாதத்தால் தான் நடக்கும்.
அந்த இடத்தின் அருகில் தான் பேகம் ஷாஜகானின் இருப்பிடமும் இருந்தது. விடியற்காலையில் எழும்பும் சங்கின் ஒலியை சகித்துக் கொள்ள முடியாமல் பேகம் அதை ஊதுவது யார் எனக் கண்டறியுமாறு தன் மெய்காப்பாளர்களை அனுப்பினாள். திரும்பிய அவர்கள் அவளிடம் வந்து ஒலியை எழுப்பி வரும் முனிவரைப் பற்றிக் கூறினார்கள். சங்கொலி தனக்கு இடைஞ்சலாக இருந்ததினால், பேகம், இனி சங்கொலி எழுப்பக் கூடாது என அரசு உத்தரவு போட்டாள். ஆனால் கமாலி மகராஜ் அவர்களோ எப்பொழுதும் போல் பஜனை முடிந்தவுடனும், விடியற் காலையிலும் சங்கின் ஒலிக்கொண்டு அனுமனை ஆராதித்து வந்தார். அரசு ஆணையும் மீறி சங்கொலி எழுபபுவதை முனிவர் நிறுத்தவில்லை என்பது பேகத்தை கோபமுற செய்தது. அவள் அந்த முனிவரைக் கொன்று விடும்படி ஆணையிட்டாள். அரசு ஆணைப் படி அவரைக் கொல்லச் சென்ற காவலாளிகள் அந்த ஆல மரத்தடியில் உயிர் அற்ற நிலையில் கிடந்த முனிவரைக் கண்டனர். முனிவர் இறந்ததைப் பற்றி அரண்மனைக்குச் சென்று அரசியிடம் கூறினர்.
ஆனால் மறுநாள் விடியற்காலை மீண்டும் சங்கொலி கேட்டது. அதைக் கேட்ட பேகம்ஷாவின் கோபம் அதிகமாகியது. முனிவர் இறப்பை உருதிச் செய்யும் வகையில் அவரின் கைகளையும் தலையையும் வெட்டி வேறு இடத்தில் போட்டு விட்டு வருமாறு ஆணையிடாள். ஆணையை நிறைவேற்ற அங்கு சென்றவர்களுக்கு ஆச்சரியம் காத்திருந்தது. முனிவரின் தலையும் கைகளும் வெட்டப்பட்டுக் கிடந்தன மூலைக்கு ஒன்றாக இருந்தது. ஆனால், மறுநாள் விடியற்காலை மீண்டும் சங்கொலி கேட்டது. அதைக் கேட்ட பேகம்ஷா தானே அவ்விடத்திற்கு சென்றாள். ஆனால் அங்கு எவரும் கண்ணுக்கு தெரியவில்லை, ஆனால் சங்கொலி மட்டும் கேட்டபடி இருந்தது. யாருமில்லாத போது சங்கொலி மட்டும் எப்படி வருகிறது? பேகம்ஷாவுக்கு கமாலி அவர்கள் உண்மையான முனிவர் என்பதும் பயந்து போனவள் தன் செய்கைக்கு அங்கிருந்த ஹனுமான் சிலை முன் மன்னிப்புக் கேட்க அவள் முன் எங்கிருந்தோ வந்து நின்றார் இறந்து விட்டதாகக் கருதப்பட்ட முனிவர். முனிவரின் மகிமையைக் கண்டு பேகம் ஆச்சரியப்பட்டாள். அவரிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டாள். அவருக்கு அவ்விடத்திலேயே இருக்க அனுமதி வழங்கினாள்.
பின், ஆட்சிக்கு வந்த் பேகம் குரீஷ்யா, அவர் பாலிருந்த மரியாதை நிமித்தம் அவரை சென்று சந்தித்தும் வந்தாள். ஒரு முறை, அரண்மனையில் வைத்திருந்த தன்னுடைய நெக்லஸ் தொலைந்து விட அதைப் பற்றி மகராஜிடம் ஆலோசனைக் கேட்க அவ்ரிடம் வந்தாள். பேகம் குரீஷ்யாவை கண்டதுமே, அவர் அவள் வந்த காரணத்தை கூறி நெக்லஸ் இருக்கும் இடத்தைப் பற்றிக் கூறினார். தொலைந்து போன நெக்லஸ் கிடைத்தது. அவருடைய மகிமையைக் கண்டு அவளுக்கு அவர் மீதிருந்த மதிப்பு அதிகமாயிற்று. இச்சம்பவத்துக்கு பிறகு அவருக்கு எட்டு ஏக்கர் நிலம் அளித்தாள். முனிவரின் வேண்டுகோளுக்கு இணங்க அங்கே அனுமாருக்கு கோயில் எழப்பப்பட்டது. கோயில் கட்ட போகம் தன் படையை அனுப்பினாள். கமாலி மகராஜ் எழுப்பிய ஹனுமார் கோயிலின் காரணமாக இவ்விடத்திற்க்கே ஹனுமான் கஞ்ச் என்று அழைக்கப் படுகிறது.
சிறிய ஆலயமானாலும் மகிமை வாய்ந்தது. கமாலி மகராஜ் பூசித்த ஹனுமாருக்கு மகிமையை கேட்க வேண்டுமா? அவ்ர் உபயோகித்து வந்த சங்கும் அந்த ஆலயத்தில் இன்றும் வைக்கப்பட்டு பூஜிக்கப்பட்டு வருகிறது. அடுத்த முறை போபால் சென்றால் கண்டிப்பாக கமாலி ஹனுமாரின் ஆசிப் பெற்று வாருங்கள்.
அனுபவம்
அடுத்த முறை போபாலுக்கு வரும்போது, பழமையான மகிமைமிகு கோவிலுக்குச்
சென்று ஹனுமான் மற்றும் சந்த் ஸ்ரீ கமாலி மகாராஜின் ஆசீகளை பெற்றுச் செல்லவும்.
தமிழாக்கம் :தர்முபுத்திரன்
முதல் பதிப்பு மே 2009
திருத்தப்பட்ட பதிப்பு: செப்டம்பர் 2020
சிவ ஒளி மாதஇதழில் (ஏப்ரல் 2009ல்) வெளிவந்துள்ளது