home-vayusutha: ஸ்லோகம் கோவில்கள் கட்டுரைகள்
boat

ஶ்ரீஹனுமான்ஸ்வாமி திருக்கோயில், ஓ.டி.சி.பாளயம், திருவனந்தபுரம், கேரளா


ஶ்ரீஹனுமான்ஸ்வாமி திருக்கோயில், ஓ.டி.சி.பாளயம், திருவனந்தபுரம், கேரளா

ஜீ.கே.கௌசிக்


திருவனந்தபுரம்

மார்த்தாண்ட வர்மா (1706–7th Jul 1758) திருவிதாங்கூர் [திருவாங்கூர்] ஸமஸ்தானத்தின் பழைய தலைநகரம் பத்மனாபபுரம் தற்பொழுது தமிழ்நாட்டில் கன்யாகுமாரி மாவட்டத்தில் உள்ளது. திருவிதாங்கூர் ஸமஸ்தானம் இந்தியா சுதந்திரம் அடைந்த பொழுது இந்தியாவுடன் இணைந்துவிட்டது. இன்றைக்கு பத்மனாபபுரத்தை விட திருவனந்தபுரத்தை மக்கள் மிகவும் சுலபமாக அறிவார்கள். ஆங்கிலேயர்கள் காலத்தில் ’டிர்வான்ரம்’ என்று அழைக்கப்பட்ட திருவனந்தபுரம் இன்று கேரளாவின் தலைநகரமாகும். பரந்த பாரததேசத்தில் உள்ள பல நகரங்களுக்கு இருப்பதுப் போல் திருவனந்தபுரத்திற்கும் மிகவும் சுவாரஸ்யமான சரித்திரம் உண்டு.

இந்த க்ஷேத்திரத்தில் உறையும் ஶ்ரீபத்மனாபஸ்வாமியின் பெயரில் இந்நகரம் திருவனந்தபுரம் என்று அழைக்கப்படுகிறது. திருவிதாங்கூர் மன்னர்கள் தாங்கள் ஶ்ரீபத்மனாபஸ்வாமிக்கு சொந்தமான இராஜ்ஜியத்தை பாதுகாவலர்களாக ஆள்வதாகவும், தாங்கள் ஸ்ரீபத்மநாபனின் அடியவனாகக் கருதி நாட்டை ஆண்டுவந்தார்.

மார்த்தாண்ட வர்மா

1706இல் பிறந்த திரு மார்த்தாண்ட வர்மா திருவிதாங்கூர் மன்னராக தனது இருபத்திமூன்றாம் வயதிலிருந்து 1758வரை ஆட்சி புரிந்தார். 1741 ஆம் ஆண்டில் நடந்த குளச்சல் போரில் அவர் டச்சுகாரர்களை வெற்றி கொண்டார். ட்ச்சுகளின் உதவியுடன் தனது போர் யுக்திகளை நவீனப்படுத்தினார். அதனால் அவர் கொச்சி வரை தனது ஆட்சியை விரிவுபடுத்தமுடிந்தது.

திருவனந்தபுரத்தின் வளர்ச்சி மார்த்தாண்ட வர்மாவின் வளர்ச்சியுடன் இணைந்தது. 1745ஆம் ஆண்டு பத்மநாபபுரத்திலிருந்து தனது ஆட்சியின் தலைநகரை திருவிதாங்கூரத்திற்கு மாற்றினார்.

நாயர் பிரிகேட்

நாயர் பிரிகேட்டை பற்றி சொல்லாமல் ராஜா மார்த்தாண்ட வர்மனின் வெற்றிகளை கூறமுடியாது. நாயர்கள் சமூகம் இப்பகுதியின் வீர மிகு போர்வீரர்கள். திருவிதாங்கூரின் படை அலகுகளில் மிகவும் முக்கியமான அலகாக இருந்ததது. மன்னர் மார்த்தாண்ட வர்மனனின் தனி மொய்காப்பாளர்கள் "திருவிதாங்கூர் நாயர் பாட்டாளம்" என்று அழைக்கப்பட்டனர். மார்த்தாண்ட வர்மன் தனது இராஜ்யத்தை நவீனமாகும் பொழுது தனது போர் முறைகளையும் நவீனமாக்கினார். ட்ச்சுகாரர்களை வெற்றிக் கொண்டதும், கைது செய்யப்பட்ட டச்சு தளபதியின் உதவியைக் கொண்டு புதிய போர் கலைகளை தனது படை வீரர்களுக்கு படிப்பித்தார். இவை எல்லாம் அவர் கொச்சி வரை இருந்த சிற்றரசர்களை வெற்றிக் கொண்டு தனது ஆட்சியை விரிவாக்கம் செய்யமுடிந்தது. கொச்சி மன்னரும் இவருடன் ஒப்பந்தம் செய்துக் கொண்டார். நெடும்கோட்டா [நெடும் கோட்டை] போரில் நாயர் பட்டாளம் திப்பு சுல்தானை எதிர்த்து நின்று பெரிய சாகசம் செய்தனர். திருவிதாங்கூர் நாயர் பட்டாளம் நெடும்கோட்டாவின் பள்ளங்களிலிருந்து திப்பு சுல்தானின் வாள், பல்லக்கு, குத்துவாள், மோதிரம் மற்றும் பல பொருள்களை மீட்டு திருவாங்கூர் ராஜாவிற்கு வழங்கினார். அவற்றில் சில திப்புவின் வேண்டுகோளின் பேரில் கர்நாடகத்தின் நவாபிற்கு அனுப்பப்பட்டது. இவர்களின் வீரத்தை மெச்சி நாயர் பிரிகேட் 1818இல் உருவாக்கப்பட்டது. திருவாங்கூர் படை திருவாங்கூர் நாயர் பிரிகேட் என்று அழைக்கப்படலாயிற்று. பல விதங்களில் விரிவடைக்கப்பட்டாலும், பின்பு நாயர் அல்லாதவரும் இதில் சேர்க்கப்பட்டாலும் இது நாயர் பிரிகேட் என்றே அதிகாரபூர்வமாக அழைக்கப்பட்டது.

நாயர் பிரிகேடின் தலைமை - பாளையம்

ஶ்ரீஹனுமான்ஸ்வாமி திருக்கோயில், ஓ.டி.சி.பாளயம், திருவனந்தபுரம், கேரளா பத்மநாபபுரத்திலிருந்து திருவாங்கூருக்கு தலைநகரத்தை மார்த்தாண்ட வர்மன் மாற்றிய சமயத்தில் நாயர் பட்டாளமும் திருவாங்கூருக்கு மாற்றப்பட்டது. முதலில் திருவாங்கூரை தலைமையாகமாக கொண்டு இருந்த நாயர் பட்டாளத்தின் தலைமையகம் கொல்லத்திற்கு மாற்றப்பட்டது. பின் திரும்பவும் திருவாங்கூருக்கே மாற்றப்பட்டது. திருவனந்தபுரத்தில் இவர்களின் தலைமையகம் இருந்த இடம் இன்று பாளையம் என்று அழைக்கப்படுகிறது. பாளையம் என்றால் மளையாளத்தில் பாசறை, இராணுவ முகாம் என்று பொருள்.

நாயர் பிரிகேடின் தலைமையமாக இருந்த கட்டடம் இன்று கேரள சட்டமன்ற அருங்காட்சியகமாக உள்ளது. நாயர் பிரிகேட் பத்மநாபபுரத்திலிருந்து தங்கள் தலைமையகத்தை திருவாங்கூருக்கு மாற்றிய போது அவர்கள் வணங்கி வந்த சில சுவாமி [சிலைகளையும்] எடுத்து வந்தனர். ஶ்ரீஹனுமார் ஸ்வாமியும் அவர்களில் ஒருவர்.

பாளையம் ஶ்ரீஹனுமார்ஸ்வாமி கோயில்

ஶ்ரீஹனுமான்ஸ்வாமி திருக்கோயில், ஓ.டி.சி.பாளயம், திருவனந்தபுரம், கேரளா பழைய இராணுவ முகாம் இருந்த இடம் பாளையம் என்று அழைக்கப்பட்டது, ஆனால் இராணுவ முகாம் இங்கிருந்து வேறு இடத்திற்கு மாற்றிய பிறகும் இவ்விடத்தின் பெயர் மாறவில்லை. நகரத்தின் முக்கிய பகுதியில் இருக்கிறது பாளையம். கேரள சட்டமன்றம், சட்டமன்ற உறுப்பினர் விடுதி, தலமைச் செயலகம் ஆகியவை பாளையம் பகுதியில் இருக்கின்றன. இராணுவ முகாம் இடம் மாறியதும் நாயர் பிரிகேட் தலைமையும் மாறிவிட்டது, ஆனால் மாறாதது அவர்கள் கட்டி வைத்த ஹனுமார்ஸ்வாமி திருக்கோயில் ஆகும்.

மார்த்தாண்ட வர்மன் அவர்கள் காலத்திலிருந்து வழிபாட்டில் இருந்த ஶ்ரீஹனுமார்ஸ்வாமி அவர்கள் பத்மநாபபுரத்திலிருந்து இங்கு வந்ததிலிருந்து இடம் மாறாமல் அங்கேயே உள்ளார். ஆனால் கோயிலில் கட்டடத்தில் நாள்ளடைவில் சில மாற்றங்கள், விரிவாக்கங்கள் ஏற்பட்டுள்ளது அவ்வளவே. திருக்கோயில் கிழக்கு பார்த்து அமைந்துள்ளது. தோரணவாயிலில் ஶ்ரீராமர், சீதா தம்பதிகளின் திருபாதங்களை ஶ்ரீஹனுமார்ஸ்வாமி வணங்குவது போன்று புடைப்பு சித்திரம் இருக்கிறது. சாதாரணமாக கொடிமரம் காணும் இடத்தில் அரசமரம் காணப்படுகிறது. திருவாங்கூர் தேவஸோம் போர்ட் இக்கோயிலை பராமரிப்பதாக அறிவிக்கும் பலகையும் இருக்கிறது. நுழைந்தால் நீண்ட பாதை, இருபுறமும் தேவஸ்தான அலுவலகங்கள். பின்பு ஒரு திறந்தவெளி, புன்னை மரம் செழிப்பாக வளர்ந்துள்ளது. பின் முக்கிய கோயில். இரு நுழைவாயில்கள் உள்ளன. இரு வாயிலுக்கும் எதிரில் உயரமான ஒன்பது அடுக்குகள் உடைய அழகிய வெண்கல விளக்குகள் காணப்படுகிறது.

வாயிலில் நுழைந்த உடன் இருபுறமும் திண்ணைகளுடன் கூடிய தாழ்வாரம். பக்தர்கள் அங்கு உட்கார்ந்து ஸ்லோகங்கள், இராமாயணம் படித்துக்கொண்டு இருக்கிறார்கள். இடது கோடியில் நிறைய விழுதுகளுடன் கூடிய ஆலமரம் காணப்படுகிறது. சன்னிதிக்கும் திண்ணைக்கும் இடையில் உள்ள திறந்தவெளிக்கு இம்மரம் போதுமான நிழலை கொடுக்கிறது.

ஶ்ரீஹனுமான்ஸ்வாமி திருக்கோயில், ஓ.டி.சி.பாளயம், திருவனந்தபுரம், கேரளா சன்னிதியை ஒட்டி புன்னைமரம் ஒன்றுள்ளது, அதன் கிளைகள் ஶ்ரீஹனுமார்ஸ்வாமி சன்னிதியை வருடிவிடுவது போல் இருக்கின்றன. இப்புன்னை மரத்தின் தண்டில் ஶ்ரீஹனுமாரின் உருவம் தானாகவே உருவெடுத்துள்ளது. இதனை பக்தர்கள் பக்தியுடன் வலம் வந்து வணங்குகிறார்கள்.

இரண்டு சன்னிதிகள் காணப்படுகிறது, இடதுபுறம் ஶ்ரீகணேசருக்கும் வலதுபுறம் ஶ்ரீஹனுமார்ஸ்வாமிக்கும்.

ஶ்ரீஹனுமார்ஸ்வாமி

ஸ்வாமி நின்ற வண்ணமுள்ளார். தனித்தன்மையுடன் உள்ளவர் பக்தரின் முதல் பார்வையிலேயே  ஆகர்ஷித்து விடுகிறார். சுமார் ஐந்தடி உயரம் இருக்கும் ஶ்ரீஹனுமார்ஸ்வாமியின் சிலையின் அழகும் தனித்துவமும் பக்தர்களின் பார்த்தக்கண்ணை எடுக்கவிடாமல் செய்து விடுகிறது. பிரசன்னமான அவரது முகம் சற்றே இடதுபுறம் சாய்ந்து அழகை கூட்டுகிறது. தலையில் கீரிடம் இருக்கிறது. கருணை மிகு கண்களுடன் அவர் பக்தர்களுக்கு தரிசனம் கொடுக்கிறார். குண்டலங்கள் அணிந்த காதுகள். துருத்தியுள்ள பற்கள் மோலும் அழகும் அமைதியும் சேர்க்கிறது. கழுத்தில் சில ஆபரணங்கள் காணப்படுகின்றன. அபய முத்திரை காண்பிக்கும் வலது திருக்கரம், இடது தொடையில் ஓன்றியுள்ள இடது திருக்கரம். அவரது கையருகில் ஒரு ’கதை’ வைத்திருக்கிறார்கள். இடுப்பில் சிறிய பிச்சுவா கத்தி, சிறிய சுழலுடன் முடியும் வால் அவரது திருப்பாதங்களின் அருகில் காணப்படுகிறது.

 

திருக்கோயில் இருப்பிடம் :     ஶ்ரீ ஹனுமான்ஸ்வாமி திருக்கோயில், ஓ.டி.சி.பாளயம், திருவனந்தபுரம்

 

அனுபவம்
முழு படை அலகுக்கும் தைரியம் கொடுத்த இறைவன் இவர். இந்த க்ஷேத்திரத்தின் ஸ்ரீ ஹனுமான் சுவாமி நமது தைரியத்தை விருத்தியாகி வாழ்க்கையில் உள்ள சவால்களை எதிர்கொள்ள போதுமான துணிவையும் அளிப்பார் என்பது உறுதி. 

தமிழாக்கம் :திருமதி. ஸ்ரீமதி
பதிப்பு: நவம்பர் 2020


 

 

ஆஞ்சநேய ஸ்வாமி புகழ் வாழ்க

காற்று ஈன்ற காவியமே எம்மை காத்தருள்வாய்
நம்பினோம் நாவரசை நாங்களே
+