home-vayusutha: ஸ்லோகம் கோவில்கள் கட்டுரைகள்
boat

ஶ்ரீஅனுமான் மந்திர், தபோவனம், ஜார்கண்ட்


ஶ்ரீஅனுமான் மந்திர், தபோவனம், ஜார்கண்ட்

ஶ்ரீ நாகராஜன், நொய்டா


பன்னிரெண்டு ஜோதிர் லிங்கங்கள்

ஶ்ரீஅனுமான் மந்திர், தபோவனம், ஜார்கண்ட் ஜோதிர்லிங்கங்களில் முதலாவதான குஜராத்தில் உள்ள ஶ்ரீசோமநாதர், மற்றும் அங்குள்ள கஷ்ட நிவாரண ஶ்ரீஹனுமார் அவர்களைப் பற்றி பார்த்தோம். ஶ்ரீ வைத்தியநாதர் மற்றுமொரு ஜோதிர் லிங்கம். இவர் ஜார்கண்ட்டிலுள்ள தேவ்கர்-இல் குடிகொண்டுள்ளார்.

"வைத்திநாதம் சிதாபூம்யோ நாகேசம் தாருகாவனே" என்பதிலிருந்து வைத்தியநாதம் எங்கு இருக்கிறது விளங்குகிறது. அதாவது சாம்பல் பீமியில் வனத்தின் நடுவில் நாகேஶர் வாழ்கிறார் என்று பொருள்படுகிறது.

பாஸுகிநாத் சிவஸ்தலம்

வைத்தியநாதர் திருக்கோயிலிலிருந்து சுமார் நாற்பத்திமூன்று கி.மீ. தொலைவில் பாஸுகிநாத் சிவஸ்தலம் உள்ளது. இக்கோயிலில் உள்ள பாஸுகிநாதரை தரிசிக்காமல் வைத்தியநாதர் யாத்திரை நிறைவு பெறுவதில்லை. இத்திருக் கோயிலில் சிவனுக்கும், பார்வதிக்கும் தனி தனி சன்னிதி உள்ளது. பாஸுகி என்னும் வேடுவனுக்கு சிவன் தரிசனம் கொடுத்த இடம் இது. ஸமுத்திர மதனத்திற்கு பிறகு வாஸுகி நாகம் இங்கு தங்கியதாகவும், ஆலகால விஷத்தை விழுங்கியதற்கு நன்றியாக சிவனை வாஸுகி பூசை செய்ததாகவும் புராணம் உண்டு.

வைத்தியநாத் திருக்கோயில்

ஶ்ரீவைத்தியநாத் [ஜோதிர் லிங்கங்க சிவஸ்தலம்], திருக்கோயில், ஜார்கண்ட் கைலாசவாசன் பரமேஸ்வரனை தரிசிக்க கைலாசம் செல்ல வேண்டும், இல்லை எனில் அமிர்த லிங்கம் தன்னிடம் இருக்க வேண்டும் என்பதால் இராவணன் கைலாசம் சென்று தவம் இருந்தான். அவனின் தவத்தில் மகிழ்ச்சியடைந்த ஈஶ்வரன் அமிர்தலிங்கத்தை பூமியில் வைக்கக்கூடாது என்ற நிபந்தனையுடன் அவனிடம் கொடுத்தார். தேவர்களுக்கு இது வருத்தமாக இருந்தது. மகாவிஷ்ணுவிடம் முறையிட்டு ஆவன செய்ய வேண்டினார்கள்.

கைலாயத்திலிருந்து இலங்கை திரும்பும் போது, இராவணன் மாலை வந்தனங்களை செய்ய வேண்டிவந்தது. அமிர்த லிங்கத்தை பூமியில் வைக்காமல் அருகில் இருந்த சிறுவனின் கையில் கொடுத்து பூமியில் வைக்க வேண்டாம் என்று கூறினான். அங்கு நின்றிருந்த சிறுவன் மகாவிஷ்ணு என்பதனை அவன் உணரவில்லை. சற்று நேரம் அமிர்த லிங்கத்தை கையில் வைத்திருந்த அச்சிறுவன் தேவர்களின் வேண்டுகோளுக்கு இணங்கி சிவனிடமிருந்து இராவணன் பெற்ற அமிர்த லிங்கத்தினை பூமியில் வைத்து விட்டான். பிறகு அங்கு வந்த இராவணன் எவ்வளவு முயன்றும் லிங்கத்தை எடுக்க முடியவில்லை. இந்த பூமி ’தேவ்கர்’ [தேவரின் இல்லம்] என்று அழைக்கப்படுகிறது. அமிர்த லிங்கத்தின் மேல் பகுதியில் மிக சிறிய பகுதி மட்டுமே பூமிக்கு மேல் தெரிகிறது. தனது தவறினை உணர்ந்த இராவணன் அதன் பிறகு தினம் கங்கை நீரினால் இந்த லிங்கத்தை பூஜித்து வந்தான்.

தபோவனம்

ஶ்ரீஅனுமான் மந்திர், தபோவனம், ஜார்கண்ட் வைத்தியநாத் க்ஷேத்திரத்திலிருந்து சுமார் பத்து கிலோமீட்டர் தொலைவில் அமைதி மிக்க குன்றுகள் மிகுந்த பகுதி உள்ளது. அவ்விடம் தபோவனம் என்று அழைக்கப்படுகிறது. வைத்தியநாத் க்ஷேதிரம் மாதரி இவ்விடமும் இராமயணத்துடன் தொடர்புடையது. ஆத்மஞானம் வேண்டி பல முனிவர்கள் தபஸ்விகள் தாங்கள் தவம் இருக்க உகந்த இடமாக இவ்விடத்தை தேற்தெடுத்து தவமிருந்திருக்கிறார்கள். குன்றுகளுக்கிடையே பல குகைகள் இருக்கின்றன. சமீபத்தில் ஶ்ரீபாலானந்த பிரம்மசாரி என்னும் மகான் இவ்விடத்தில் முக்தி அடைந்துள்ளார். இங்கு ஒரு குன்றின் மேல் சிவன் கோயில் உள்ளது. ஈஸ்வரனுக்கு "தபோநாத் மகாதேவ்" என்று பெயர்.

தபோவனம் ஶ்ரீ அனுமான்

முன்பு கூறிய மாதரி இங்குள்ள குன்றுகளில் பல குகைகள் உள்ளன, அப்படி ஒரு குகைகளில் ஶ்ரீஹனுமாருக்காக கோயில் உள்ளது. மிகவும் சிரமப்பட்டு தான் இவ்விடத்தை அடைய முடியும்.

ஒரு குறுகிய இடைவெளியுடன் கிடைமட்டமாக இரண்டு பெரிய பாறைகள் உள்ளன, மேலும் ஒரு பாறையில் ஒரு விரிசல் காணப்படுகிறது. அந்த விரிசல் மிகவும் குறுகியதாகவுள்ளது, இந்த விரிசல் அவ்வளவு குருகியதாக இருக்கிறது, அதனிடையே ஒருவர் தனது கையை கூட நுழைக்க முடியாது. விரிசலின் இருபுறமும் ஶ்ரீஹனுமானின் உருவம் செதுக்கப்பட்டுள்ளது. கைகள் கூட நுழைய முடியாத அந்த இடைவெளியில் இப்படி ஒரு புடைப்பு சித்திரம் படைக்கப்பட்டு இருப்பது ஆச்சரியமாக இருக்கிறது. ஒருவர் இதை நேரில் பார்க்காவிட்டால், இதனை நம்புவது மிகவும் கடினமே. இன்னும் சொல்லப்போனால் இப்படி ஒரு சிற்பத்தை கற்பனை செய்து கூட பார்க்க முடியாது.

இந்த ஹனுமார் சிற்பம் புகைபடம் கூட எடுக்க முடியாத மாதரி அமைந்திருப்பது மிகவும் பிரமிப்பாக உள்ளது.

 

திருக்கோயில் இருப்பிடம் :     ஶ்ரீஅனுமான் மந்திர், தபோவனம், ஜார்கண்ட்

 

அனுபவம்
மனிதரால் உருவாக்கப்பட்ட சிலையாக இது இருக்காது, சுயம்பூவாக அவதரித்திருக்கும் தபோவனம் ஶ்ரீஹனுமாரை பிரார்த்தித்தால் நல்லவை எல்லாம் கிட்டும் என்பது திண்ணம்

தமிழாக்கம் :திருமதி. ஸ்ரீமதி :: முதல் பதிப்பு: பிப்ரவரி 2020
திருத்தப்பட்ட பதிப்பு: செப்டம்பர் 2020


 

 

ஆஞ்சநேய ஸ்வாமி புகழ் வாழ்க

காற்று ஈன்ற காவியமே எம்மை காத்தருள்வாய்
நம்பினோம் நாவரசை நாங்களே
+