home-vayusutha: ஸ்லோகம் கோவில்கள் கட்டுரைகள்
boat

வட விருட்ச ஶ்ரீமாருதி மந்திர், மேற்கு தாதர், மும்பை, மஹாராஷ்ரா


வட விருட்ச ஶ்ரீமாருதி மந்திர், மேற்கு தாதர், மும்பை, மஹாராஷ்ரா

ஶ்ரீ சுப்ரமணிய ஸ்வாமி


தாதர் வரலாறு

வட விருட்ச ஶ்ரீமாருதி மந்திர், மேற்கு தாதர், மும்பை, மஹாராஷ்ரா போர்சிகீசியர்களின் காலத்தில் ஏழு தீவுகளை அடங்கிய இடமாக பம்பாய் இருந்தது. இந்த ஏழு தீவுகளில் பம்பாய் தீவு முக்கியத்வம் வாய்ந்ததாக இருந்தால் "பம்பாய்" என்னும் பெயர் நிலைத்தது. இன்றைய தாதர் அந்நாட்களில் மாஹீம் தீவினை சார்ந்தது. 19ஆம் நூற்றாண்டில் இந்தியாவின் பொருளாதர வளர்ச்சிக்கு முக்யத்வம் பம்பாயை பெரும் நகரமாக உருவெடுக்க வைத்தது. புறநகர் ரயில்வே எல்லா தீவுகளையும் இணைத்தது, தாதர் இரு புறநகர் ரயில்வே இணையங்களை இணைக்கும் இடமாக அமைந்தது. இதனால் தாதரின் முக்கியத்வம் மேலும் அதிகரித்தது. இங்கு இந்திய சுதந்திர போராட்டத்தில் பங்கு கொண்ட பெரும் நபர்கள் வசிந்து வந்தனர். பி.கே.அத்ரி, சேனாபதி பாபட், எஸ்.ஏ.டாங்கே, பிரபோதன்கார் தாக்ரே என்று பட்டியல் மிக நீளம். திரு பாபா சாகேப் அப்பேத்கரின் இறுதி சடங்குகள் நடத்தப்பட்ட "சைத்தன்ய பீமி" தாதரில் உள்ளது இதன் பெருமைக்கு பெருமை சேர்க்கிறது.

இன்று மிக பெரிய அளவில் விரிவாகியுள்ள மும்பையின் முக்கியமான பகுதி தாதர். மும்பையில் சென்டிரல் இரயில்வே, மற்றும் வெஸ்டிரன் இரயில்வே என்னும் இரு இரயில்வே தடங்களும் இருக்கும் ஒரே இரயில் நிலையம் தாதர் தான். இதனால் நகரின் பல பகுதிகளுக்கு செல்ல தினமும் பல்லாயிரம் பிரயாணிகள் இங்கு இரயில்வே தடம் மாற்ற வேண்டியுள்ளது. தாதர் கிழக்கு மேற்கு என இரண்டாக பிரிகின்றது இந்த இரயில்வே தடங்கள். கிழக்கு தாதரை தாதர் சென்டிரல் என்றோ அல்லது தாதர் டி.டி. என்றோ அழைப்பார்கள். முன்பு டிராம் டிரமினல் இருந்ததால் டி.டி. என அழைக்கப்பட்டது.

பிரபோதன்கர் தாக்ரே

திரு கேசவ் சீதாராம் தாக்ரே சமுக சீர்திருத்தவாதியும், மற்றும் மராட்டியில் மிக சிறந்த எழுத்தாளரும் ஆவார். அவர் ’பிரபோதன்’ பத்திரிகையில் பல கட்டிரைகள் எழுதியதால் அவரை பிரபோதன்கர் தாக்ரே என்றே பலரும் அறிவார்கள். பெண்களுக்கு அதிகாரம், ஜாதி முறைக்கு எதிர்ப்பு ஆகிய கொள்கைகளை பரப்பியவர். திரு பிரபோதன்கர் தாக்ரே என்னும் கேசவ் சீதாராம் தாக்ரே சிவ சேனா அமைப்பின் திரு பால் தாக்ரேயின் தந்தையார் ஆவார்.

மேற்கு தாதர்

இன்று மும்பை, புறநகர் மற்றும் தொலைதூர செயற்கைக்கோள் நகரங்களில் வசிக்கும் மக்களுக்கு ’தாதர் மேற்கு’ சந்தை[market] மிகவும் பிரபலமான ஷாப்பிங் இடமாகும். மற்றும் இங்கு அமைந்துள்ள ’கபுத்தர்கானா’ [புறாக்கள் இருப்பிடம்] மிகவும் பிரபலம். மக்கள் பல்லாயிர கணக்கான புறாக்களுக்கு தீனியிட வருவார்கள். நூறு ஆண்டுகளுக்கும் மேலாக இது பழக்கத்தில் உள்ளது. மற்றொரு பிரபலம் - அருகாமையில் உள்ள ’மாருதி மந்திர்’ [ஶ்ரீ ஹனுமார் திருக்கோயில்].

வரலாறு

வட விருட்ச ஶ்ரீமாருதி, மேற்கு தாதர், மும்பை, மஹாராஷ்ரா சுமார் ஐம்பது ஆண்டுகளுக்கு முன் பவானி சங்கர் வீதியின் இருபுறமும் ’வடவிருக்ஷ்ம்’ [வடவிருட்சம்] என்று அழைக்கப்படும் ஆலமரங்களும் இடையிடையே அரச மரங்களும் அணிவகுத்து வளர்ந்திருந்தது. புறாக்கள் இங்கு அதிக அளவில் காணப்படுவதற்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம். போலே வீதியும் என்.சி.கால்கர் வீதியும் சந்திக்கும் இடத்தில் மிக பெரிய ஆலமரம் ஒன்று இருந்தது. மக்களின் மனதில் ஆலமரத்திற்கும், அரச மரத்திற்கும் தனி இடம் உண்டு. இருப்பினும் இந்த பெரிய ஆலமரத்தின் மீது அங்குள்ள மக்களுக்கு தனிபிரியம் இருந்தது. மாலை வேளையில் இம்மரத்தடியில் கூடும் சமூகத்தின் பெரிய மனிதர்கள் இவ்விடத்தின் புனித தன்மையை உணர்ந்தனர், அது அவர்களை அங்கு ஒரு கோயில் எழுப்ப தூண்டியது. அன்றைய சூழ்நிலையில் மக்களுக்கு தேவையானவை பக்தி, நேர்மை, தைரியம். இவைகளின் அடையாளமாக விளங்கும் ஶ்ரீஅனுமார் தான் முதலில் அவர்களுக்கு நினைவிற்கு வந்தார். அதன்படி, அவர்கள் "ஶ்ரீமாருதி"க்கு அங்கு கோயில் எழுப்ப முடிவெடுத்தனர்.

வட விருட்ச ஶ்ரீமாருதி மந்திர்

அதன்படி, திரு பிரபோதன்கர் தாக்ரேவின் தலைமையில் 1920 ஆம் ஆண்டு ஶ்ரீ அனுமாருக்கு அங்கு திருக்கோயில் கட்டப்பட்டது. சிறிய அளவினாலான ஶ்ரீஅனுமார் விக்கிரகம் ஆலமரத்தடியில் ஸ்தாபிக்கப்பட்டு சிறிய கோயிலும் எழுப்பப்பட்டது. ஶ்ரீமாருதியை கோயிலின் நுழைவாயிலிருந்தே தர்சிக்கலாம். அருகில் செல்லும் பஸ், கார், இரு சக்கர வண்டிகளில் பயணிக்கும் மக்கள் கோயிலில் ஶ்ரீமாருதியை துதிப்பதையும், தொழுவதையும் பார்க்கலாம். செவ்வாய் கிழமை மற்றும் சனிகிழமைகளில் இக்கோயில் ஶ்ரீமாருதியை தர்சிக்க வருபவர்கள் அதிகம். வாழ்க்கையில் பல மட்டங்களில் இருக்கும் பக்தர்கள் மற்றும் தொலைதூர இடங்களிலிருந்தும் மக்கள் இந்த கோயிலுக்கு வருகை தருகின்றனர், ஶ்ரீமாருதி தரிசனத்தை தங்களது வழக்கமாக கொண்டுள்ளனர்.

 

 

திருக்கோயில் இருப்பிடம் :     வட விருட்ச ஶ்ரீமாருதி, மேற்கு தாதர், மும்பை

 

அனுபவம்
தங்களின் கவலைகளை அகற்றும் அவரின் தர்சனத்தை பெறுங்கள், வாழ்வில் நிம்மதி அடையுங்கள்.

தமிழாக்கம் :திருமதி. ஸ்ரீமதி
முதல் பதிப்பு: மே 2017
திருத்தப்பட்ட பதிப்பு: செப்டம்பர் 2020


 

 

ஆஞ்சநேய ஸ்வாமி புகழ் வாழ்க

காற்று ஈன்ற காவியமே எம்மை காத்தருள்வாய்
நம்பினோம் நாவரசை நாங்களே
+