home-vayusutha: ஸ்லோகம் கோவில்கள் கட்டுரைகள்
boat

ஶ்ரீஹனுமான் கத்தி, அயோத்தியா, பைஸாபாத், உத்திர பிரதேசம்


ஶ்ரீஹனுமான் கத்தி, அயோத்தியா, பைஸாபாத், உத்திர பிரதேசம்

ஜீ.கே.கௌசிக்


அயோத்தியா

ராம் காட், பழைய பாலம், அயோத்தியா சராயு நதிகரையில் அமைந்திருக்கும் அயோத்தியா, கோசல தேசத்தின் தலைநகரமாக இருந்த மிக பழமையான நகரம். சனாதன தர்மத்தை பின்பற்றும் அனைவருக்கும் இது மிகவும் புனிதமான க்ஷேத்திரமாகும். கருடபுராணத்தில் குறிப்பிட்டுள்ள ஏழு வீடு எய்த வல்ல க்ஷேத்திரங்களில் [ஏழு மோக்ஷபுரிகளில்] அயோத்தியா ஒன்றாகும். அகழிகளாலும், கோட்டை சுவராலும் பாதுகாக்கப்பட்ட நகரம் அயோத்தியா, அங்காங்கு காவல் மாடங்களும் இருந்ததாக இராமாயணம் என்னும் ஆதி காவியம் விவரிக்கிறது. நகரத்தின் வீதிகள் விலாசமாக இருந்தது மட்டுமல்லாமல் தினமும் துப்புரவு செய்யப்பட்டதாகவும் கூறுகிறது. இன்றைய நகர நிர்வாகம் இதனை கவனிக்கவும்!

அயோத்தியா நகரம் இராமாயண காலத்திற்கும் முந்தியது என்பது உருதி. வால்மீகி, தனது இராமாயணத்தில் வர்ணித்திருக்கும் அயோத்தியா நகரம் இப்பொழுதுள்ள அயோத்தியா நகரத்தினும் மிக பெரியது என்பது சரித்திர வல்லுனர்களின் கருத்து. இந்நகரம் பல ஏற்றத்தாழ்வுகளை தனது சரித்திரத்தில் சந்தித்துள்ளது.

சூர்ய வந்சி - சூர்ய குல வழி

நமது புராணங்கள் எடுத்துச் சொல்கிறபடி, பிரம்மனின் புதவன் மரீச்சி. மரீச்சியின் மகன் காச்யபர் ரிஷி. காச்யப ரிஷியின் புதல்வன் சூர்யன். சூர்யனின் புதல்வன் இஷ்வாகுவும் அவரின் குலவழி வந்தவர்களும் பாரத தேசத்தை அயோத்தியாவை தலைநகரமாகக் கொண்டு ஆண்டுவந்தார்கள். அதனால் அயோத்தியா சூர்ய குலத்தின் அல்லது இஷ்வாகு குலத்தின் தலைநகரமானது. இக்குலத்தில் மிகவும் புகழ்பெற்ற அரசர்கள் ஶ்ரீதிலீபன், பகீரதன் [கங்கையை தன் தவத்தினால் பாரதம் கொண்டு வந்தவர்], காகுஸ்தன், ரகு, மற்றும் தசரதன் ஆவர். இக்குலத்தில் மிகசிறந்தவர் தசரதரின் புதல்வன் ஶ்ரீஇராமர் ஆவார். அவர் ஶ்ரீமஹா விஷ்ணுவின் அவதாரம் என்றே போற்றப்படுகிறார்.

அயோத்தியா - இஷ்வாகு குலத்தின் தலைநகரம்

ஶ்ரீஹனுமான் கத்தி, அயோத்தியா, பைஸாபாத், உத்திர பிரதேசம் மாபெரும் மன்னர்கள் புனிதமான அயோத்தியாவை தலைநகரமாக வைத்து நமது தேசத்தினை ஆண்டனர். இந்நகரம் சொர்க்கத்தை ஒத்ததாக இருந்தது என்கின்றன புராணங்கள். இந்நகரத்தில் தான் ஶ்ரீஇராமர் தசரத சக்ரவர்த்திக்கு மகனாக பிறந்து வளர்ந்தார். ஶ்ரீமத் வால்மீகி இராமாயணம் இந்நகரத்தின் முழு விவரங்களும் விரிவாக தனது இராமாயண மகா காவியத்தில் கொடுத்துள்ளார். புராணமான எல்லா நகரங்களும் இப்பொழுது மாறித்தான் இருக்கிறது. இன்று அயோத்தியாவை மேலெழுந்தவாரியாக பார்த்தால் இதுவும் மாறியதுப் போல் தான் இருக்கும். ஒரிரு நாட்கள் இங்கு பயணத்தில் வந்தால் அப்படிதான் இருக்கும். புனித யாத்திரையாக இங்கு அயோத்தியாவிற்கு வந்து தங்குங்கள். பின், இங்கு பழமை மாறாத கலாசரம் இருப்பதும் வித்யாசமும் புரியும். நகரம் ஶ்ரீஇராமரின் காலத்திலேயே இருப்பது தெரியும். இங்கு இருக்கும் மக்களின் நேர்மையான நோக்கு, எளிமையான வாழ்க்கை, போதும் என்ற மனப்பான்மை இவையெல்லாம் காணும் பொழுது நமக்கு புரியும் நாம் எங்கு இருக்கிறோம் என்று. சில நாட்களே இங்கு இருந்துவிட்டு நாம் வந்தாலும், இந்நகரத்தின் மென்மை நம்மை பல நாட்கள் வரை தொடரும்.

ஶ்ரீஇராமர் வாழ்ந்த இடம்

ஶ்ரீஇராமர் இந்த நகரத்தில் பிறந்தார், வளர்ந்தார், வாழ்ந்தார். ஆனால் இப்பாரத மண்ணில் மிகவும் மதிக்கப்படும் இப்புனிதனின், பிறந்த இடம் பார்க்கச் சென்றால் நமது மனதிற்கு வருத்தமும் சோகமும் தான் மிஞ்சும். அப்படி பாழ்பட்டு கிடக்கிறது அவ்விடம். ஆனால் ஶ்ரீஇராமர் ஶ்ரீசீதா பிராட்டியாருடன் வாழ்ந்த அரண்மனை இன்றும் பார்ப்பதற்கு கொடுத்து வைத்திருக்கிறோம். நாள் முழுவதும் திறந்திருக்கிறது இம்மாளிகை. இதன் பெயர் கனக் பவனம் என்பதாகும். கனகம் என்றால் பொன் என்று பொருள். கனக் பவனம் என்றால் பொன் மாளிகை என்று பொருள்படும்

மிக சுவாரஸ்யமாக் கவனிக்க வேண்டியது, இந்நகரத்தில் ஶ்ரீவிபீஷணனுக்கும், ஶ்ரீசுக்ரீவனுக்கும் தனி தனி மாளிகைகள் உள்ளன. இவர்கள் அயோத்தியா வரும் பொழுது தங்குவதற்காக இப்படி ஏற்பாடு. இதையே உதாரணமாக கொண்டு தான் ஆங்கிலேயர்களும் நம் நாட்டின் பல இராஜாகளுக்கு தில்லியில் மாளிகைகள் கட்டிக்கொள்ள வைத்தனர்.

அயோத்தியாவின் ஶ்ரீஹனுமான்

ஶ்ரீஹனுமான் கத்தி, அயோத்தியா, பைஸாபாத், உத்திர பிரதேசம் இராமாயணத்திற்கு நாம் கொடுத்திருக்கும் புனிததன்மையால் இந்நகரில் இருக்கும் எல்லா மாளிகைகளும் பூஜைக்குரியதாக கருதப்படுகிறது. இந்நகரில் இருக்கும் எல்லா புனிதமான தலங்களையும் [மாளிகைகளையும்] ஶ்ரீஇரமரின் பக்தரான ஶ்ரீஹனுமார் காத்து வருகிறார். அதனால், இங்கு இந்நகரில் எங்கு சென்று வழிபடுவதற்கு முன்பும் ஶ்ரீஹனுமாரை வணங்கி, அவரின் அனுமதியுடன் நாம் யாத்திரையை தொடங்குவது மரபு.

ஶ்ரீஇராமபக்தரான ஶ்ரீஹனுமான் அயோத்தியாவின் காவற்காரன் என்று தொன்று தொட்டு வழக்கத்தில் கூறப்படுகிறது. வெகு நாட்களாக ஶ்ரீஇராம் கோட் [இராமரின் பிறந்த இடம்] அருகில் ஶ்ரீஹனுமாருக்கு கோயில் உண்டு. சக்ரவர்த்தி விக்ரமாதித்யன் சனாதன தர்மத்தை மீண்டும் வலிவும் பொலிவும் பெறச்செய்த சமயம், அயோத்தியாவை புனருத்தாரணம் செய்தார். அப்பொழுது ஶ்ரீஹனுமாருக்கான இக்கோயிலையையும் புதிப்பித்தார்.

அவத் நாவாப் பைஸாபாத்-தை தலைநகரமாக கொண்டு ஆண்ட பொழுது அயோத்தியாவில் ஶ்ரீஹனுமாருக்கான கோயிலை விரிவுபடுத்தினார். நவாப் மன்சூர் அலி தனது நம்பிக்கையான மந்திரி ஶ்ரீடீகட் ராய் என்பவரை நியமித்து, ஹனுமார் கோயிலை சுற்றி கோட்டை எழுப்ப செய்தார்.

ஶ்ரீஹனுமான் கத்தி

ஶ்ரீஹனுமான் கத்தி, அயோத்தியா, பைஸாபாத், உத்திர பிரதேசம் இன்று ஶ்ரீஹனுமாரின் இக்கோயில் ஹனுமான் க[G}த்தி என்று அழைக்கப்படுகிறது. "ராம் கோட்"டின் மேற்கு வாயிலில் அமைந்துள்ளது ஹனுமாருக்கான இக்கோட்டைக் கோயில். பள்ளத்தாக்கில் உள்ளது போல் அமைப்பு இக்கோயிலுக்கு. எழுபத்துஆறு படிகள் ஏறி அங்கு செல்லவேண்டும். இங்கு கோட்டை கோயிலின் அமைப்பு சற்று வித்யாசமாக இருக்கிறது. கர்ப்பகிருஹத்தில் அஞ்சலி மாதாவின் மடியில் இருக்கும் ஹனுமாரையும் தர்சிக்கலாம். முதலில் பார்த்தால் நமக்கு தெரிவதில்லை, சற்று உற்று நோக்கினால் அஞ்சலி மாதாவின் மடியில் இருக்கும் ஹனுமாரை அவர் அரவணைத்துக் கொண்டிருப்பது புரியும்.

ஶ்ரீஹனுமான் கத்தியின் நிர்வாகம்

ஶ்ரீடீகட் ராய் அவர்கள் இக்கோயிலை விரிவுபடுத்திய பின், கோயிலை பராமரிக்க ஹரித்வாரி பந்த், பஸன்தியா பந்த், உஜ்ஜநியா பந்த், சாகாரியா பந்த் என்னும் நான்கு மடங்களிலிருந்து சாதுக்களை அறக்காப்பாளர்களாக நியமித்தார். இந்த நாலு மடங்களும் சுயற்சி முறையில் கோயிலின் காப்பாளர்களாக இருப்பார்கள். அப்படி காப்பாளராக இருப்பவரை கத்தினஷன் என்று அழைப்பார்கள்.

 

திருக்கோயில் இருப்பிடம் :     "ஶ்ரீஹனுமான் கத்தி, அயோத்தியா"

 

அனுபவம்
இங்கு ஹனுமான் கத்தியில் ஶ்ரீஹனுமாருக்கு நாம் செலுத்தும் எல்லா வழிபாடும், ஶ்ரீஇராமருக்கே உரியதாகிறது. "துமாரே பஜன் ராம கோ பாவை; ஜனம ஜனம கே துக பிஸ்ராவே" என்று ஶ்ரீதுளஸிதாஸ் கூறியது போல், நமது இந்த ஜன்மத்து எல்லா துக்கங்களும், இனி வரயிருக்கும் துக்கங்களும் ஒழிந்துபோம்.

தமிழாக்கம் :திருமதி. ஸ்ரீமதி
முதல் பதிப்பு: ஆகஸ்ட் 2018
திருத்தப்பட்ட பதிப்பு: செப்டம்பர் 2020


 

 

ஆஞ்சநேய ஸ்வாமி புகழ் வாழ்க

காற்று ஈன்ற காவியமே எம்மை காத்தருள்வாய்
நம்பினோம் நாவரசை நாங்களே
+