பஞ்சாப் என்றாலோ, அம்ருத்ஸர் என்றாலோ நினைவுக்கு வருவது பொற்கோயில் என்று புகழ்பெற்ற ஶ்ரீஹர்மந்திர் ஸாகேப் என்னும் கோயிலே. பொற்கோயிலுக்கு வந்து அனைவரும் வழிபடுவது உண்டு, முக்கியமாக சீக்கியர்கள். அம்ருத்ஸர் என்பது அம்ருத்+ஸரோவர் என்பதால் அருத திருக்குளம் என பொருள் படும். அம்ருத் ஸரோவர் என்னும் மிக பெரிய திருக்குளம் ஹர்மந்திர் ஸாகேப் மந்திரை ஒட்டியுள்ளது. இத்திருக்குளத்தின் பெயராலேயே இந்நகருக்கு "அம்ருத்ஸர்" என்று பெயர் வந்தது. குரு ஶ்ரீ அமர் தாஸ் என்னும் நான்காவது சீக்கிய குருவினால் தோற்றிவைக்கப் பட்டது இந்த திருநகரம்.
பொற்கோயிலை அடுத்து, ஶ்ரீதுர்கா மாதாவிற்கு திருக்கோயில் ஒன்று உள்ளது. அக்கோயிலுக்கும் திருக்குளம் உண்டு. அத்திருக்குளத்தினை துர்கயானா ஸரோவர் என்று அழைப்பர். இத்திருக்குளத்தினை 1921 ஆண்டு ஜனவரி 4ஆம் தேதி தோண்ட ஆரம்பித்தனர். அடுத்து வரும் வசந்த நவராத்திரியில் துர்க்கா மாதாவின் திருக்கோயிலினை கட்ட ஆரம்பித்தனர். ஏப்ரல் மாதம் வரும் புதுவருட பிறப்பின் போழுது துர்க்கை அம்மன் பிரதிஷ்டை செய்யப்பட்டார். அம்ருத்ஸர் துர்க்கை அம்மன் கோயில் பக்தர்களை ஆகர்ஷித்தது.
இத்திருக்கோயிலின் வடமேற்கு பகுதியில் ஶ்ரீஹனுமாருக்காக புராதமான திருக்கோயில் ஒன்று உண்டு. இதனை ஶ்ரீபடா ஹனுமார் மந்திர் என்று அழைப்பர். இக்கோயில் லங்கூர்வாலா மந்திர் என்று மிகவும் பிரபலம்
வங்காளத்தில் துர்க்கா பூஜா விசேடம், குஜராத்தில் கிருஷ்ண் ஜயந்தியும் தாண்டியா என்னும் கோலாட்டமும் விசேடம், அம்ருத்ஸர்ரில் லங்கூர்வாலா மேளா விசேடம். அது என்ன "லங்கூர்வாலா மேளா"?. கல்யாணமான தம்பதிகள் தங்களுக்கு ஆண் மகன் பிறக்க வேண்டும் என்று வேண்டிக்கொள்கிறார்கள். அவர்கள் தனது வேண்டுகோளை இங்கு இருக்கும் படா ஹனுமாரிடம் கூறி, பின் கோயிலில் இருக்கும் மிக பழமையான ஆலமரத்தில் கங்கணம் என்னும் புனித கயிற்றை கட்டுகிறார்கள். அவர்களுக்கு ஆண்மகன் பிறந்த உடன் இங்கு நவராத்திரியில் வந்து நோம்பு நோத்து இறைவன் ஶ்ரீபடா ஹனுமாருக்கு நன்றி தெரிவிக்கிறார்கள்.
தங்கள் கோரிக்கை நிறைவேறியதும், நவராத்திரியில் அவர்கள் தங்கள் ஆண் மகனுடன் கோயிலுக்கு வருகிறார்கள். அந்த ஒன்பது நாட்களும் தம்பதிகள் பாய், மெத்தையில் படுப்பது இல்லை, பழம், பச்சை காய்கறி, பால் இவைகளையே ஆகாரமாக கொள்கிறார்கள். ஒன்பது நாட்களும் துளசிதாஸ் இராமாயணம் அல்லது துளசிதாஸ் சுந்திர காண்டம் திரும்ப திரும்ப படிக்கிறார்கள்.
தங்களது ஆண் வாரிசை, லங்கூர் [கருங்குரங்கு] மாதரி நல்ல சிவப்பு நிறத்தில் உடை அணிவிக்கிறார்கள். முகத்தில் களிமண்ணினால் கருங்குரங்கு மாதரி செய்துவிடுகிறார்கள். செயற்க்கையான வாலும், கதையும் குழந்தைக்கு கொடுக்கப்படுகிறது. இப்படி குழந்தை கருங்குரங்கு மாதரியே இருக்க செய்கிறார்கள்.
நவராத்திரியின் முடிவில் விஜயதசமி அன்று, லங்கூர் வேடமிட்ட எல்லா குழந்தைகளும் ஊர்வலமாக செல்வார்கள். பின் ஊர்வலம் திருக்கோயிலில் உள்ள ஆலமரத்தின் கீழ் முடியும். இப்பொழுது, குழந்தையின் தாயார், விரதம் முடிந்ததின் அறிகுறியாக தான் மரத்தில் கட்டிய கங்கண கயிற்றை அவிழ்த்து விடுவார்கள்.
நவராத்திரியில் ஆரம்பித்து, விஜயதசமியில் முடியும் இந்த மேளாவிற்கு பாரதத்தின் மூலை முடுக்கிலிருந்து, ஏன் அயல்நாட்டிலிருந்தும் பக்தர்கள் வந்து கலந்து கொள்கிறார்கள்.
அஸ்வமேத யாகம் என்பது, ஒரு சக்ரவர்த்தி பூஜை செய்யப்பட்ட குதிரையை அவிழ்த்து விடுவார். குதிரை எங்கு எங்கு எல்லாம் கால் பதிக்கிறதோ, அங்கு எதிர்ப்பு இல்லாமல் போனால், அவை எல்லாம் சக்ரவர்த்தி வென்ற இராஜ்ஜியமாக கருதப்படும். சீதா பிராட்டியார் காட்டில் இருக்கும் போழுது, இராமர் அஸ்வமேத யாகம் செய்கிறார். சீதா பிராட்டியாருக்கு பதில், அவருடைய பிரதிமையை வைத்து வேள்வியை செய்கிறார் இராமர்.
கர்ப்பினியான சீதா பிராட்டியார் அவர்கள் வால்மீகி முனிவரின் ஆச்ரமத்தில் அடைக்கலம் ஆகியிருந்தார். பிராட்டியாருக்கு லவன், குசன் என்று ஆண் மகன்கள் இரட்டையர்களாக பிறந்தனர். அவர்கள் வால்மீகி முனிவரின் சீடர்களாக இருந்து எல்லா வித்தைகளையும் கற்றனர். இச்சிறுவர்கள் அஸ்வமேத யாகத்திற்கு விடப்பட்ட குதிரையை பிடித்து வைத்துக்கொண்டனர். அஸ்வமேத யாகம் தங்கள் தகப்பனாரால் செய்யப்படுகிறது என்பது இச்சிறுவர்களுக்கு தெரியாது. இப்படி எதிர்ப்பு தெரிவித்ததினால் இராமரின் சகோதர்கள் இச்சிறுவர்களுடன் யுத்தம் புரிய வேண்டியதாயிற்று, அவர்களால் இச்சிறுவர்களை வெல்ல முடியவில்லை என்பதால் ஹனுமாருடன் யுத்தம் நடந்தது. யுத்தத்தில், வெற்றி காண முடியாத ஹனுமாரை சிறுவர்கள் பிடித்து ஆலமரத்தில் கட்டி வைத்தனர்.
லவனும் குசனும் ஹனுமாரை கட்டி வைத்த ஆல மரம் அம்ருத்ஸர் படா ஹனுமான் கோயிலில் உள்ள ஆல மாரம் என்று நம்பப்படுகிறது. அதனால் தான் ஆண் மகன் வேண்டி தம்பதிகள் விரதம் இருந்து இவ்வால மரத்தில் ஹனுமாரை நினைத்து கங்கணம் கட்டுகிறார்கள்.
அம்ருத்ஸர் அருகில் வால்மீகி ஆஸ்ரமம் உள்ளது. தற்பொழுது பாக்கிஸ்தானில் உள்ள லாகூர், மற்றும் கஸூர் என்னும் நகரங்களுக்கு அப்பெயர் லவன், குசன் என்னும் இராமனின் புதல்வர்களால் வந்தது.
ஶ்ரீபரா ஹனுமான் மிகவும் கவர்ச்சிகரமாகவும் பெரிய உருவம் கொண்டவராகவும் காணப்படுகிறார். ஹனுமார் உட்கார்ந்த வண்ணம் சற்றே சாய்ந்துஇருப்பது போல் இளைபாருபவராக காணப்படுகிறார். இலங்கையில் ஶ்ரீஇராமரையும் ஶ்ரீசீதா பிராட்டியாரையும் ஒன்று சேர்த்து வைத்தவர் இவர். இங்கு இந்த க்ஷேத்திரத்தில், ஶ்ரீஇராமரையும் அவரது தவ புதல்வர்கள் லவனையும் குசனையும் ஒன்று சேர்த்து வைத்தவர் இவர். இப்பொழுது எல்லோரும் ஒன்று சேர்ந்த பிறகு இவர் இளைபார வேண்டியது தானே, அதானா என்னவோ இங்கு இளைபாரிய வண்ணம் தரிசனம் தருகிறார். நமது வேண்டுகோளை முன் அவர் வைப்போம், நாமும் இளைபாருவோம் வாருங்கள்.
அனுபவம்
வாருங்கள் இந்த க்ஷேத்திரத்தில் வந்து பரா ஹனுமாரை
தரிசிப்போம். அவர் நம் கவலைகளை களைந்து, மனதினை தளர்வுற வைப்பதுடன் சந்தோஷத்தினால் நிறப்புவார்
என்பது தின்னம்.
தமிழாக்கம் :திருமதி. ஸ்ரீமதி
முதல் பதிப்பு: அக்டோபர் 2018 :: திருத்தப்பட்ட பதிப்பு: செப்டம்பர் 2020
* ஆசிரியர் ஒரு குழந்தை மருத்துவர் மற்றும் ஆலோசகர் ஆவார்