ஆரணிக்கும் வேலூருக்கும் இடையில் இருக்கும் மலைத்தொடர்களிடையே அமைதியாக இருக்கும் கிராமம் படை-வீடு. அழகிய அமைதியான இது சம்புவராயர் அரசின் வம்சாவளியின் தலைநகரமாக இருந்தது. இது மிக பெரிய வணிக தலமாகவும் இருந்திருக்கிறது. பதினோழு கிராமங்களை உள்ளடக்கி சுற்றும் மலைகளால் சூழப்பட்ட தலம் படைவீடு.
தொண்டைமண்டலத்தில் மிக முக்கியமான ’சக்தி தலம்’ இது. ஶ்ரீ ரேணுகாம்பாள் இங்கு சுயம்பூவாக தோன்றி அருளாட்சி செய்கிறாள். பிரம்மா, விஷ்ணு, சிவன் மும்மூர்த்தியையும் இச்சக்தி வடிவில் ஐக்கியமாகியுள்ளதால் ஶ்ரீரேணுகா தேவியை வழிபடுவது மிக சிறப்பாக கருதப்படுகிறது. பல முனிவர்களும் சித்தர்களும் இவ்விடத்தில் தவமெய்தி முக்தியடைந்துள்ளனர்கள். ஆதி சங்கரர் "நானாகர்ஹன" சக்கரம் பிரதிஷ்டை செய்துள்ளது மிக விசேடம்.
லோக மாதாவாகிய உமா தேவி இரைவத என்னும் மன்னனுக்கு மகளாக பிறந்து ரேணுகை என்று பெயரில் அழைக்கப்பட்டாள். திருமண காலம் வந்தவுடன் அக்கால வழக்கப்படி ரேணுகை படையுடனும் தன் தோழிகளுடனும் சேர்ந்து தனக்கு உகந்த கணவனை தேர்ந்தெடுக்க உலகை வலம் வர கிளம்பினாள்.
அப்படி ஊர் வலம் வருகையில், மகாவிஷ்ணுவின் அவதாரமான பரசுரமாவின் பிறந்த இடமான படைவீட்டில், ரேணுகை மாமுனிவர் ஜமாத்தக்னியை பார்த்து தனது கணவராக வரித்தாள். இந்த இடத்தின் வரலாறு இவ்விடம் பல யுகங்களாக இருப்பதாகவும், ஜமதக்னியும் அவரது மனைவி இரைவதனின் மகள் ரேணுகாவும் வாழ்ந்த இடமாகும் என்கிறது. இவ்விடத்தின் வரலாற்றில் ராமனின் கதையும் ரேணுகாம்பாளின் கதையும் பிணையப்பட்டுள்ளது. இந்த பகுதியில் ஆஞ்சநேயர் இருப்பதை இது விளக்குகிறது.
ஶ்ரீராமராக மகாவிஷ்ணு அவதரித்தார். அவர் இராவணனை தோற்கடித்து விட்டு அயோத்திக்கு சீதா தேவியுடன் திரும்பினார். ஒரு தெய்வீக குரல், சதமுக ராவணன் கடலின் அடியில் வாழ்வதாக ராமனிடம் அறிவிக்கிறது. சதமுக ராவணனும் அவனுடன் தொடர்புடைய மற்ற அரக்கர்களுடனும் ராமர் போராடி தோற்கடிக்க வேண்டும் என்ற நிலையில், சீதா தேவி தனது ஞானத்தினால் விஷயங்களைக் கண்டார்.
சீதா தேவி ஹனுமானை அழைத்து, சதமுக ராவணன் ரேணுகா தேவியின் பக்தன் என்பதை தெரிவித்தார். மற்றும் குண்டலி நகரத்தில் உள்ள தாமரைக் குளத்தின் நடுவில் வண்டுகள் பாதுகாக்கப்பட்டுள்ள தாமரை மையத்தில் அவனது வாழ்உயிர் இருக்கிறது என்பதனையும் தெரிவித்தார். எனவே ஹனுமான் குண்டலிபுரம் வந்து, சதமுக ராவணையை அழிக்க முற்ப்பட்டார்.
ஆனால் ரேணுகா தேவி தனது பக்தனாகிய சதமுக ராவணனின் வாழ்வை பாதுகாப்பதால் இது அவ்வளவு எளிதல்ல. இதனால் ஹனுமான், ரேணுகா தேவியுடன் போரில் ஈடுபட வேண்டி வந்தது. குண்டலிபுரத்தின் நிலத்தினை மணலாக ஹனுமான் மாற்றினார். இதை கண்ட ரேணுகா தேவி ஹனுமான் நூறு கற்களாக மாற ரேணுகா தேவியையும் சபித்தார். ஸ்ரீ ராமர் தனது ஞானக் கண்ணோட்டத்தில் நடப்பதை அறிந்து, குண்டலிபுரத்திற்கு வந்து இருவரையும் சமாதானம் செய்தார். ஹனுமான் மற்றும் ராமர் இருவரும் ரேணுகா தேவியிடம் பிரார்த்தனை செய்தனர். தரிசனம் செய்தபோது, ராவணனை அழிப்பதற்கான தெய்வீக ஆணையை நிறைவேற்றும்படி ராம கோரிக்கை விடுத்தார்.
ரேணுகா தேவியின் சக்தி பீடத்தின் அருகாமையில் அமைந்துள்ளது வீர ஆஞ்சனேயர் கோவில் ஆகும். ரேணுகாம்பாள் கோயிலுக்கு பின்னால் அமைந்துள்ள பிரம்மாண்டமான ராமர் கோயிலின் பாதையில் இது உள்ளது.
படைவீடு ஆஞ்சநேய கோயில்களால் எல்லா விதத்திலும் எட்டு திசைகளிலும் பாதுகாக்கப்படுகிறது. இப்பகுதியில் எங்கும் நவக்கிரக கோயில்கள் கிடையாது. வனப்பகுதிகளில் உள்ளவர்களும் அருகிலுள்ள கிராமத்து மக்களும், ஆஞ்சநேயர் கோயில்களில் பிராத்தனை செய்து கோள்களின் உபாதையிலிருந்து விடுவிக்கப்படுகிறார்கள் என்று கூறப்படுகிறது. ரேணுகாம்பாளின் ஆசியால் ஆஞ்சநேயர் நூறு வித்தியாசமான வடிவங்களில் தோன்றி, கோயில் கொண்டு, ரேணுகாம்பாளின் பீடத்திற்கு காவல் இருப்பதாக கருதப்படுகிறது.
சமீபத்தில் (2003 ஆம் ஆண்டு) படைவீட்டில் பிரதான சாலையிலிருந்த வீர ஆஞ்சனேயர் விக்ரகம், தற்போதைய இடத்திற்கு இடம்பெயர்ந்துள்ளார். இந்த ஆஞ்சநேயர் எந்தவித கூரை அல்லது கோவில் இல்லாமல் ஒரு முக்கிய வழிபாட்டு தலமாக இல்லாமல் பிரதான சாலையில் இருந்தார். அவருக்கு அருகாமையிலேயே புதிய கோயில் ஒன்று பக்தர்களால் கட்டப்பட்டது. ஆஞ்சநேயர் சிலை புதிதாக நிர்மாணிக்கப்பட்ட கோயிலுக்கு எடுத்து செல்ல விரும்பியபோது, அவர்களால் முடியவில்லை. பின்பு 40 கிலோகிராம் வெண்ணெய் காப்பு உடுத்தி, ஆலங்கரித்த பின், அவர் நகர்ந்தார். முன்பு திறந்த வெளியில் இருந்தவர் இப்போது அழகிய சன்னிதியில் கோயில் கொண்டுள்ளார். கோவிலை சுற்றி வெளிசுவரும் உள்ளது.
படைவீட்டில் உள்ள மற்ற எண்ணற்ற கோயில்களைப் பார்ப்பதற்கு முன்பாக அஞ்சநேயர் கோவிலில் பக்தர்கள் வழிபாடு செய்கிறார்கள். நாவகிரக தோஷ நிவாரணமாக இவ்வாலயத்தில் அன்ன தானம் வழங்குவது நல்லது என்று கருதப்படுகிறது.
இக்கோயிலின் புனரமைப்புக்கு டி.வி.எஸ் குழுவானது முக்கிய பங்கு வகித்துள்ளது. இக்கோயில் சுத்தமான மற்றும் அமைதியான சூழ்நிலையாக அமைந்துள்ளது.
விக்ரகம் சுமார் எட்டு ஒன்பது அடி உயரமாக உள்ளது. சிறுவனை போன்ற பால்வடியும் ஸ்ரீ ஆஞ்சநேயரின் முகம் பக்தர்களுக்கு பக்தியை பெருக்கும். அவரது வலது கையை அபய அஸ்தமாக உயர்த்திய நிலையில் வைத்திருக்கிறார், மற்றும் இடது கையில் அவரது தலையைச் சுற்றி வரும் வாலின் நுனியை தனது இடது கையால் பிடித்திருக்கிறார். அவரது வாலின் வளைவு ஒரு பக்தரின் சுற்றிவளைக்கும் துன்பத்தைக் குறிக்கும், அவர் வாலினை பிடித்திருப்பது அத்துன்பத்தினை அடக்கும் அவரது கிருபையையும் அவர்களைக் காப்பாற்றுவதையும் பாதுகாப்பதையும் குறிக்கிறது.
அனுபவம்
இந்த ஆஞ்சநேயர் எந்த கூரை அல்லது கோவில் இல்லாமல் நின்று கொண்டிருந்தார்,
பல நூற்றாண்டுகளாக அவரது பக்தர்கள் அனைவருக்கும் ஆசிர்வதித்த ஒரு புராதன கோவில். இத்தகைய தன்னலமற்ற ஸ்ரீ ராம பக்தரால்
ஆசீர்வதிக்கப்படுவது ஒரு மிக பெரிய பேராகும். படைவீட்டு ஆஞ்சநேயரின் அருளை பெற வேண்டும் என்பதற்காகவே இங்கு
வாருங்கள்.
தமிழாக்கம் :திருமதி. ஸ்ரீமதி
முதல் பதிப்பு: செப்டம்பர் 2018 :: திருத்தப்பட்ட பதிப்பு: செப்டம்பர் 2020
* ஆசிரியர் ஒரு ஆடை உற்பத்தி நிபுணர் மற்றும் ஆலோசகர் ஆவார்