home-vayusutha: ஸ்லோகம் கோவில்கள் கட்டுரைகள்
boat

ஹனுமார் திருக்கோயில், ஹனுமான் தாரா, சித்திரகூடம், உத்திர பிரதேசம்


ஹனுமார் திருக்கோயில், ஹனுமான் தாரா, சித்திரகூடம், உத்திர பிரதேசம்

ஜீகே கௌசிக்


சித்திரகூடம்

அதிகாலையில் சித்திரகூடத்தில் ராம்காட் சித்திரகூடம் மிகவும் புனிதமான தலம், இயற்கை அழகு மற்றும் புராண மகிமை வாய்ந்து விளங்குவதால். வால்மீகி முனிவர் இவ்விடத்தின் இயற்கை அழகு, மனதிற்கு அமைதி கொடுக்கும் தன்மை இவைகளைப் பற்றி மிகவும் உயர்வாக பேசியுள்ளார். இங்கு இருந்த தவமுனிவர்கள், அவர்களது ஆச்சிரமம் அகியவை பற்றி கூறி வர்ணிக்கிறார். இராமர் அவரது வனவாசத்தின் பொழுது இங்கு வந்து தங்கும் முன்பிருந்தே இவ்விடம் புனிதமாக இருந்தது என்பது விளங்குகிறது. பரத்வாஜ முனிவரின் வார்த்தைகளால் வால்மீகி இவ்விடத்தின் பெருமையை விளக்குகிறார்.

ராம்காட்

இந்த பிரதேசம் வரட்சியால் பாதிக்கப்பட்ட பொழுது, மாமுனிவர் அத்ரியின் மனைவியார் அனுசுயா அவர்கள் கடும் தவம் புரிந்து வானத்திலிருந்து மந்தாகினி என்னும் நதியை பெற்று இவ்விடத்தை பசுமையாக்கினார். இராமரும், சீதையும் இங்கு தங்கியிருந்த காலத்தில் அத்ரி மாமுனிவரும், மனைவி தவப்பெறு அனுசுயா அவர்களாலும் உபசரிக்கப்பட்டனர். இவர்கள் இங்கு தங்கியிருந்த காலத்தில் மந்தாகினியில் நீராடிய கரைகள், ராம்காட் என்றும், சீதாகாட் என்றும் அழைக்கப் படுகிறது.

சித்திரகூடத்தில் ராம்காட் இல் துளசிதாஸர் ராம்காட் தீர்த்த கரையில் இராமர் தனது தந்தை தசரதருக்கு ஈமச் சடங்குகள் செய்தார் என்பதால் ராம்காட் மிகவும் புனிதமாக கருதப்படுகிறது. வாரணாசியில், ஹரித்துவாரில் எப்படி கங்கை நதியிற்கு ஆரத்தி எடுகிறார்களோ அப்படி இங்கு ராம்காட் இல் மந்தாகனி நதிக்கு ஆரத்தி எடுக்கிறார்கள். துளசிதாஸர் அவர்களையும் ராம்காட் இல் விசேடமாக கொண்டாடுகிறார்கள்.

துளசிதாஸர், ஹனுமார், சித்திரகூடம்

மந்தாகனி நரிகரையில் ஶ்ரீராமரின் சரிதையை, புகழை பாடி மகிழ்வதில் பலருக்கு ஆனந்தம். அப்படியே தனது வாழ்நாட்களை கழிக்கும் சாதுகள் பலர் சித்திரகூடத்தில் உள்ளனர். இங்கு ராமரின் புகழ் பாடுவதை வாழ்வின் லக்ஷியமாகா கொண்டுள்ளவர்கள் பலரை நீங்கள் இன்றும் மந்தாகினியின் ராம்காட் இல் பார்க்கலாம். சாதாரணமாக பக்தர்கள் பலர் நதியில் நீராடிவிட்டு இப்படிப்பட்ட மகான்களிடம் தங்கள் நெற்றியில் திலகமிட்டுக் கொள்வதை பாக்கியமாக கருதிகின்றனர்.

மகான் கவி துளசிதாஸர் அவர்கள் தனது வாழ்வில் பல ஆண்டிகள் சித்திரகூடத்தில் தங்கியுள்ளார். துளசிதாஸரிடம் ஶ்ரீராமரின் தர்சனம் சித்திரகூடத்தில் கிடைக்கும் என்று ஹனுமார் கூறியுள்ளார். ஹனுமாரின் கட்டளையை ஏற்று துளசிதாஸர் அவர்கள் மந்தாகினி கரையில் ராம்காட் இல் இராமாயணம் படித்துக்கொண்டு இராமரின் தரிசனத்தை எதிர்பார்த்து இருப்பார். பக்தர்கள் இவரிடமும் திலகம் இட்டுக்கொள்ள வருவார்கள்.

சித்திரகூடத்தில் ஹனுமான் தாரா இப்படி அவர் ராம்காட் இல் இருக்கும் பொழுது ஒரு நாள் இரு இளைஞர்கள் தங்கள் நெற்றியை காண்பித்து துளசிதாஸரை திலகமிட கூறினார்கள். துளஸிதாஸர் வைத்த கண் எடுக்காமல் தன்னையே மறந்து, அவர்களின் முக அழகையே ரசித்துக் கொண்டிருந்தார். அவ்விளைஞர்கள் "மகான் அவர்களே என்ன அப்படி பார்க்கிறீர்கள்? நாங்களே திலகம் இட்டுக்கொள்கிறோம்" என்று கூறியவர்கள் தாங்களே திலகம் இட்டுக்கொண்டு, பின் துளசிதாஸருக்கும் திலகம் இட்டுவிட்டார்கள். இக்காட்சியை ரசித்துக்கொண்டிருந்த ஹனுமார் அவர்கள் மெய்மறந்து பாடினார்:

சித்ரகூட் கே காட் பர் ஸந்தன் கீ பீர்|
துலளஸிதஸ சந்தன் கிஸேங் திலக் தேத ரகுபீர்||

அப்பொழுது புரிந்தது துளசிதாஸருக்கு வந்திருப்பது ராம லக்ஷ்மணர் என்பது. ஹனுமாருக்கு நன்றி கூறினார்

ஹனுமான் தாரா

சித்திர கூடத்தில் ஹனுமான் சம்பந்த பட்ட ராம்காட் தவிர அருகாமையில் உள்ள மற்றும் ஒரு தலம் ஹனுமான் தாரா என்பதாகும்.ராம்காட் இல் இருந்து சுமார் ஐந்து கி.மீ, தொலைவில் மலை உச்சியில் உள்ளது இவ்விடம். அங்கு இயற்கையாக அமைந்துள்ள குகையிலில் இயற்கையாக தோன்றியுள்ள [சுயம்பூஃ] ஹனுமார் சிலையின் வாலிலிருந்து குளுமையான நீர் வருகிறது. இந்நீர் மலைமீதிருந்து வருகிறது. ஆனால் அது ஹனுமாரின் வால்லிருந்து தான் வெளியில் கொட்டுகிறது. ஆச்சரியம் என்ன என்றால், அப்படி வெளியாகும் நீர் கீழே ஒரு சிறிய குழியில் வடிகிறது. பின் அந்நீர் என்ன ஆகிறது என்பது மர்மம். எங்கும் காணபடவில்லை.

எங்கு எங்கெல்லாம் இராம கதை கூறப்படுகிறதோ அங்கு அங்கெல்லாம் அனுமார் கண்களில் ஆனந்த கண்ணீர் மல்க இராம கதையினை அனுபவிப்பவர். தவம்மிகு பெரியவர்களும் பண்டிதர்களும் சித்திரகூடத்தில் இராம கதை கூறுவதை பெரும் பேராக கருதுகின்றனர். அப்படி இராம கதை கூறப்படும் பொழுது அதனை கேட்க அனுமார் வருவதும் வழக்கம். இலங்கையை அவர் சீதையின் துக்கம் என்னும் சோகத்தால் எரியூட்டியதை கட்டத்தை கேட்கும் பொழுது அனுமாருடைய வால் உணர்ச்சியால் துடிக்கும். அவரது உணர்ச்சிமிகு வாலினை குளிர்விப்பதற்காக சித்திரகூடத்தில் ஹனுமாரின் வாலில் நீர் தாரையாக விழுகிறது என்பது தல புராணம்.

 

திருக்கோயில் இருப்பிடம் :     "ஹனுமார் திருக்கோயில், ஹனுமான் தாரா, சித்திரகூடம்"

 

அனுபவம்
“ஸ்ரீ ஹனுமான் தாரா” மலை உச்சியில் இருந்து சித்ரகூடம் முழுவதையும் மெய்மறக்க வைக்கிறது. ஹனுமான் தாராவில் உள்ள ஸ்ரீ ஹனுமனின் குளிமையான தரிசனம் நம் எண்ணங்களையும் நம் நினைவையும் இனிமையாக்கும் என்பதில் ஐயம் வேண்டாம்.

தமிழாக்கம் :திருமதி. ஸ்ரீமதி
முதல் பதிப்பு: ஆகஸ்ட் 2019
திருத்தப்பட்ட பதிப்பு: செப்டம்பர் 2020


 

 

ஆஞ்சநேய ஸ்வாமி புகழ் வாழ்க

காற்று ஈன்ற காவியமே எம்மை காத்தருள்வாய்
நம்பினோம் நாவரசை நாங்களே
+