home-vayusutha: ஸ்லோகம் கோவில்கள் கட்டுரைகள்
boat

ஸ்ரீ வீர ஆஞ்சநேய சுவாமி கோயில், நகராட்சி அலுவலக வளாகம், வேலூர், தமிழ்நாடு

ஜீகே கௌசிக்


வேலூர்

கோட்டை, வேலூர் வேலூர் மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையகம் வேலூர் ஆகும், இது சென்னை நகரத்திலிருந்து பெங்களூரு செல்லும் வழியில் கிட்டத்தட்ட நூறு நாற்பது கி.மீ தொலைவில் அமைந்துள்ளது மற்றும் பாலாற்றின் கரையில் அமைந்துள்ளது. இந்த நகரத்தின் நிலவமைப்பு , ஒருபுறம் மலைகள் மற்றும் மறுபுறம் நதியும் உள்ளது, இதனால் இந்நகரம் இயற்கையாகவே பாதுகாக்கப்படுகிறது. இந்த இடமும் இராணுவக ரீதியில் முக்கியமாக இடத்தில் அமைந்திருப்பதால், கடந்த காலத்தில் பிராந்தியத்தில் மேலாதிக்கத்திற்காக முயற்சிக்கும் அனைத்து ராஜ்யங்களும் இந்த இடத்தை தங்கள் ஆட்சியின் கீழ் கொண்டுவர விரும்பின. இந்த நகரம் பல்வேறு வம்சங்கள் மற்றும் ஆட்சியாளர்களின் கட்டுப்பாட்டில் இருந்திருக்கிறது, அதாவது பால்லவர்கள், உரையூரின் சோழர்கள், மல்கேட்டின் ராஷ்டிரகுடா வம்சம், சம்புவாராயர், விஜயநகர், மராட்டியர்கள் மற்றும் கர்நாடக நவாப்கள் மற்றும் பிரிட்டிஷ் ஆகியோர்கள். வேலூர் மாவட்டத்தில், ஆம்புர் (கி.பி 1749) ஆர்காடு (கி.பி 1751) மற்றும் வந்தவாசி (கி.பி 1760) ஆகியவற்றில் 18 ஆம் நூற்றாண்டில் நடந்த கடிமையான சில போர்கள் ஆங்கிலத்திற்கும் பிரெஞ்சுக்கும் இடையிலான மேலாதிக்கத்திற்கான நீண்டகால போராட்டத்தின் விளைவாக நடந்தவை.

வேலூர் கோட்டை

மேற்கண்ட ஆட்சியாளர்கள் இந்த இடத்தை பலப்படுத்த விரும்பினர், இதன் விளைவாக ஒரு கோட்டை கட்டப்பட்டது, முதலில் 13ஆம் நூற்றாண்டில் சம்புவாரையர்களால் கட்டப்பட்டது, பின் இது பிற ஆட்சியாளர்களால் மேலும் பலப்படுத்தப்பட்டது. இந்த பழமையான அகழியுடன் கூடிய கோட்டை தென்னிந்தியாவில் ஒரே வாழும் கோட்டையாகும். 13ஆம் நூற்றாண்டுக்கு முந்தைய இப்பழமை வாய்ந்த கோட்டை சுற்றுலாப்பயணிகளின் முக்கிய ஈர்ப்பாகும். வரலாற்று ரீதியாக புகழ்பெற்ற இந்த கோட்டை 136 ஏக்கர் பரப்பளவில் மற்றும் செவ்வக வடிவத்தில் அமைந்துள்ளது. அதன் பாதுகாப்பு அரண்கள், கொத்தளம், சுழற்கூண்டு, கட்டுப்பாடுடன் கூடிய நுழைவாயில்கள், வற்றாத நீர் விநியோகத்துடன் இருக்கும் அகழி என பலவும் பழமை அழியாமல், கடந்த கால மகிமையை தக்க வைத்துக் கொண்டுள்ளதை இன்றும் காணலாம்.

கோட்டையின் இரட்டை மதில்கள் இதனை மிகவும் பலமான கோட்டையாக வைத்துள்ளது. மற்றும் பிரதான மதில் சுண்ணாம்பு கலவை உபயோக்கிகாமல் கருங்கற்களால் அமைக்கப்பட்டுள்ளது. தென்னிந்தியாவின் இராணுவ கட்டிடக்கலைக்கு மிகச் சிறந்த உதாரணமாக இந்த கோட்டை உள்ளது என்பதில் எந்த ஐயப்பாடும் இல்லை. இந்த கோட்டையில் ஒரு தேவாலயம், ஜலகண்டேஸ்வரர் கோயில் மற்றும் பல கட்டிடங்கள் உள்ளன. இந்த கட்டிடங்களில் பல அரசு அலுவலகங்கள் அமைந்துள்ளன.

சம்புவராயர் வம்சம்

ஜலகண்டேஸ்வரர் கோயில், வேலூர் கோட்டை சம்புவராயர் என்ற பெயரை சம்பு + அரையார் என்று பிரிக்கலாம். சோழ இராணுவத்தில் உள்ள பிரிவுகளில் அரையர் ஒருவர். அவர்கள் சிவன் அல்லது சம்புவைப் பின்பற்றுபவர்களாக இருந்தனர், அவர்கள் தங்கள் சமூகப் பெயரான அரையருக்கு முன்னொட்டு மற்றும் தங்களை சம்புவராயர்கள் என்று அழைத்தனர். அவர்கள் ஒரு கால கட்டத்தில் முக்கியத்துவம் பெற்றனர். பின் மிகவும் வலிமை மிகுந்தவர்களானார்கள், பின் சுயாதீன தலைவர்களாக செயல்படத் தொடங்கினர். வம்சத்தை ஸ்தாபித்த முதல் மன்னர் ராஜகுலா சம்புவராயர் (1236-1268AD) ஆவார். போலுருக்கு அருகே உள்ள படவேடு என்ற இடத்தை தலைநகரமாக கொண்டு தனது ஆட்சியை துடங்கினார். வேலூர் பகுதி சுமார் இரண்டு நூற்றாண்டு காலம் படவேடுவின் சம்புவராயர்களின் ஆட்சியின் கீழ் இருந்தது, அவர்கள் இப்பகுதியினை ஆண்ட காலத்தில் அவர்கள் பல கோயில்களைக் கட்டியதோடு மட்டுமல்லாமல், வேலூரிலும் அதைச் சுற்றியுள்ள இடங்களிலும் உள்ள கோயில்களுக்கு பல நற்கொடைகள் வழங்கியுள்ளார்கள் என்பது பல கல்வெட்டுகளிலிருந்து நாம் அறிகிறோம். ஜலகண்டேஸ்வரர் கோயில் மற்றும் கோட்டை கட்டுமானத்தின் முதல் கட்டம் அவர்களின் காலத்தில் நடந்துள்ளது.

சம்புவராயர்கள் மற்றும் ஸ்ரீ ஆஞ்சநேய சுவாமி

படவேடுவை அவர்கள் ஏன் தலைமையகமாக கொண்டார்கள், படவேடுவை அனைத்து திசையிலும் காப்பவர் யார், ஶ்ரீ ஆஞ்சநேயருக்கும் படவேடுக்கும் என்ன தொடர்பு, சம்புவராயர்களுக்கு ஏன் ஶ்ரீஆஞ்நேயர் வழிபாட்டில் ஈடுபாடு என்ற பல சுவையான தகவல்கள் நமது இணைய தளத்தில் "ஶ்ரீவீர ஆஞ்சநேயர் திருக்கோயில், படவேடு" பக்கத்தில் தரப்பட்டுள்ளது, படித்து அறிந்துக்கொள்ளவும். ஆகையால், 13 ஆம் நூற்றாண்டிலிருந்து இங்கு வேலூரில் ஸ்ரீ ஆஞ்சநேயர் வழிப்பாடு இருந்திருப்பதில் ஆச்சரியமில்லை. சம்புவராயர்களுக்குப் பிறகு இந்த இடம் 17 ஆம் நூற்றாண்டின் இறுதி வரை ஹொய்சாலர்கள், விஜயநகர் மன்னர்கள் மற்றும் மராட்டியர்களின் ஆட்சியின் கீழ் இருந்து வந்தது, அவர்களும் கூட ஸ்ரீ ஆஞ்சநேய சுவாமியின் வழிபாட்டாளர்கள் தான் என்பதை நினைவில் கொள்வோம்.

சுல்தான்கள் மற்றும் பிரிட்டிஷ்களின் ஆட்சி

18 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இந்த நகரம் சுல்தான்களின் ஆட்சியின் கீழும் பின்னர் பிரிட்டிஷ்களின் கீழும் வந்தது. இந்த நேரத்தில் இது ஒரு இராணுவத்தால் பாதிக்கப்பட்ட இராணுவ நகரமாகும். அன்று இருந்த ஆட்சியாளர்களுக்கு மக்களின் நலனுக்காகவும் நகரத்தின் நலனுக்காவும் நேரம் ஒதுக்க முடியவில்லை. ஸ்ரீ ஜலகண்டேஸ்வரர் கோயிலில் கோட்டைக்குள் இருக்கும் மிகப் பெரிய கோவில். இதில் இக்கால கட்டத்தில் வழிபாடு நடத்தப்படவில்லை, எல்லா நல்ல காரணங்களுக்காகவும் ஒரு இடைநிறுத்தம் இருப்பதாகக் கூறுவார்கள், ஒருவேளை அது இந்த நேரத்தில் இருந்திருக்கலாம்.

‘கோட்டை மேடு’ இடத்தில் ஸ்ரீ அஞ்சநேயர் விக்ராஹம்

அன்னியர்கள் சனாதன தர்மத்தை அழிக்க நினைத்து பல அக்கிரமங்கள் செய்தனர். அதில் ஒன்று தான் கோயில்களை நிர்மூலமாக்குவது, விக்ரஹங்களை சேதப்படுத்துவது என்பன. அந்த கால கட்டத்தில், ​​இந்து கடவுள்களின் பல விக்ரஹாக்கள் கோட்டையின் அகழி நீரில் பதுக்கப்பட்டன, சிலவற்றை வேறு இடங்களுக்கு பாதுகாப்பு கருதி மாற்றினார்கள். 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், அமைதி நகரத்திற்குத் திரும்பியபோது, ​​சஞ்சீவி என்பவர் கோட்டையின் அகழியின் நீரில் ஒரு ஸ்ரீ ஆஞ்சநேயரின் விக்ரஹத்தினைக் கண்டெடுத்தார். விக்ராஹம் அகழி நீரிலிருந்து வெளியே கொண்டு வரப்பட்டது, பெரியவர்கள் மற்றும் பண்டிதர்களின் அவர்களின் சரியான வழிகாட்டுதலுடன், ஶ்ரீஆஞ்சநேயரின் விக்ரஹம் கோட்டை மேட்டில் பிரதிஷ்டை செய்யப்பட்டது. ஸ்ரீ ஆஞ்சநேய சுவாமிக்கு ஒரு தற்காலிக கொட்டகை அமைக்கப்பட்டு வழக்கமான வழிபாடுகள் நடத்தப்பட்டன.

ஸ்ரீ ஆஞ்சநேய சுவாமியின் இடமாற்றம்

சில ஆண்டுகளுக்குப் பிறகு, ஸ்ரீ ஆஞ்சநேய சுவாமிகே நன்கு தெரிந்த காரணங்களுக்காக ஒரு சிலர் இது கோயிலுக்கு சரியான இடம் அல்ல என்றும், அந்த இடத்திலிருந்து கோயில் மாற்றப்பட வேண்டும் என்றனர். மாநகராட்சி ஊழியர்கள் சிலர் தினமும் கோயிலுக்கு வருவதும் வழிபடுவதும் வழக்கமாக வைத்திருந்தனர். இவர்களும் ஸ்ரீ ஆஞ்சநேய சுவாமியின் வேறு சில பக்தர்களும் வேறுவிதமாக நினைத்தார்கள். இவர்கள் கூடி ஆலோசித்து ஸ்ரீ ஆஞ்சநேய சுவாமியினை மாநகராட்சி அலுவலக வளாகத்திற்கு மாற்ற முடிவு செய்தனர். ஸ்ரீ சுவாமிநாதன் தலைமையில், ஸ்ரீ ஆஞ்சநேய சுவாமியின் பக்தர்கள் இந்த முயற்சியை மேற்கொண்டனர்.

ஸ்ரீ ஆஞ்சநேய சுவாமிக்கான கோயில்

ஸ்ரீ வீர அஞ்சநேய சுவாமி கோயில், நகராட்சி அலுவலக வளாகம், வேலூர் ஸ்ரீ ஹனுமான் பக்தர்கள் 1960 ஆம் ஆண்டில் ஒரு குறிப்பிட்ட மங்களகரமான நாளில் நகராட்சி அலுவலகத்தின் தென்கிழக்கு மூலையில் கோட்டை மேட்டில் இருந்து கொண்டுவரப்பட்ட ஸ்ரீ ஆஞ்சநேய சுவாமியின் மூர்த்தியை தற்காலிகமாக நிறுவினர். அந்த இடத்தில் ஒரு கீற்றுக் கொட்டகை அமைக்கப்பட்டது. ஸ்ரீ ஆஞ்சநேயரின் மீதான நம்பிக்கை கோட்டை மேட்டுக்கு வந்துக் கொண்டிருந்த அனைத்து பக்தர்களையும் இங்கு இழுத்து வந்தது. நகராட்சி அலுவலகத்தின் ஊழியர்களின் நற்மதிப்பினாலும் கோயிலின் நிலைமைகளை மெதுவாக மேம்படுத்துவதன் மூலம் அவர்களது தாராள மனப்பான்மையைக் காட்டினர். இந்த கோவிலில் இன்றும் எந்த கோபுரமோ விமானமோ இல்லை. ஆனால் வேலூர் நகரத்திலும் அதைச் சுற்றியுள்ள இடங்களிலும் உள்ள ஸ்ரீ ஆஞ்சநேயரின் பக்தர்களை இந்த கோயில் பெரிய அளவில் ஈர்க்கிறது.

ஸ்ரீ ஆஞ்சநேய சுவாமி

இந்த கோயிலின் விக்ரஹம் மிகவும் பழமையானது, இது ஸ்ரீ வியாசராஜ பிரதிஷ்டை செய்த பெங்களூரு மைசூர் சாலையைச் சேர்ந்த கலி ஸ்ரீ அஞ்சநேய சுவாமியை ஒத்திருப்பதைக் காணலாம். இங்குள்ள மூர்த்தி ஒப்பீட்டளவில் சிறியது. இந்த க்ஷேத்திரத்தின் ஸ்ரீ ஹனுமான் ஒரு யதுர்முகி, அதாவது, அவர் பக்தர்களை இரு கண்களாலும் நேரடியாக எதிர்கொள்கிறார். இறைவனின் வால் மேலே உயர்த்தப்பட்டிருப்பதைக் காணலாம் மற்றும் வால் முடிவில் ஒரு மணி உள்ளது. அவரது இடது கை தாமரை மலரின் தண்டினை பிடித்த வண்ணம் இடுப்பில் ஊன்றியுள்ளது. அவரது வலது கை அபய முத்திரையினால் அவரது பக்தர்கள் அனைவருக்கும் பயத்திலிருந்து விடுதலை அளிக்கிறது. இறைவன் எல்லா ஆபரணங்களுடனும் காணப்படுகையில், இடுப்பு ஆபரணத்தில் வலது இடுப்பு பக்கம் உறையில் உள்ள சிறிய கத்தி ஒரு ஆபரணமாக இருந்து இறைவனின் அழகுக்கு அழகு சேர்க்கிறது.

 

திருக்கோயில் இருப்பிடம் :     "ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் கோயில், நகராட்சி அலுவலக வளாகம், வேலூர்"

 

அனுபவம்
இந்த க்ஷேத்திரத்தின் ஸ்ரீ ஜலகண்டேஸ்வரரைப் போல பல ஆண்டுகளாக ‘ஜல வாசத்தில்’ இருந்த இறைவனுக்கு உங்கள் பிரார்த்தனையை செலுத்துங்கள். அவர் உங்கள் எல்லா கவலைகளையும் நீக்கி, மங்களங்கள் அனைத்தினையும் அருள்வார்.

தமிழாக்கம் :திருமதி. ஸ்ரீமதி
முதல் பதிப்பு: ஆகஸ்ட் 2019
திருத்தப்பட்ட பதிப்பு: செப்டம்பர் 2020


 

 

ஆஞ்சநேய ஸ்வாமி புகழ் வாழ்க

காற்று ஈன்ற காவியமே எம்மை காத்தருள்வாய்
நம்பினோம் நாவரசை நாங்களே
+