ஸுந்தர காண்டத்தின் முதல் ஸ்லோகத்திற்கு வியாக்யானம் சொல்லும் போது, அவிவேகமும், அங்காரமும் (இராவணன்) ஜீவனை (ஸீதையை) அபகரிக்கபட்டதால், அதை மீட்க ஞானத்தைக் கொடுக்க கூடிய குரு (ஆஞ்ஜனேயர் ) அவர்கள், பூர்வாசாரியர்கள் காட்டிய வழியிலே ஜீவனைத் தேடி புறப்பட்டதாக விளக்கம் கூறுவார்கள்.
அஞ்ஞானத்தை விரட்டவல்ல, ஞானத்தை அளிக்க வல்ல குருவினை ஒரு ஜீவன் காணுமானல், உணருமானால்; ஜீவனை சுற்றியுள்ள, பற்றியுள்ள இருள் அகல்கிறது. அனுபவம் கூடுகிறது.
ஆதி கவி ஸீதா தேவி ஆஞ்ஜனேயரை முதல் முதல் காணுவதை உதய சூரியன் போன்ற வாயு புத்திரைக் கண்டாள் என வர்ணக்கிறார்.
ददर्श पिङ्गाधिपतेरमात्यं वातात्मजं सूर्यमिवोदयस्थम् (31:21),
இருள் அகல போகிறது என்பதனை இப்படி கூறினாரோ? தனது கஷ்டங்களை போக்க வல்ல ஒரு ஒளியாக ஸீதைக்கு ஆஞ்ஜனேயர் தெரிந்தார் எனவும் பொருள் கொள்ளலாம். சாதாரணமாக,
குரு நாதர் ஆஞ்ஜனேயர் இராவணுக்கு எப்படி தெரிகிறார்? மஹா தேஜஸ்வியாக, விஷ்ணுவின் தேஜஸ்ஸாக,
किं वा परं ब्रह्मा परं त्वसह्यं सर्वस्य बीजं जगतोऽस्य विष्णोः।
यद्देवदेवस्य परंच तेजस्तदेव तेजः कपिरेष वीरः॥ 52.32
நாம் குரு பரம்பரை சொல்லும் போது "நாராயணம், வஷிஷ்டம்.." என்று தானே சொல்கிருறோம்! அதாவது ஆதி குருவாம் நாராயணன் அவராகவே இராவணுக்கு தெரிந்தும், அகக்கண்ணை அகங்காரம் சூழ்ந்து இருப்பதாலும், அஞ்ஞானம் பிடித்திருப்பதாலும்
"वद्याय मे वैष्णव तेज ..... 52.33"
அதாவது தன்னை வதம் செய்ய வந்ததாகவே அவன் கருதினான்.
அடுத்ததாக அவன் செய்தது அஞ்ஞானத்தின் எல்லை என்றே கூறவேண்டும். சூரியனைத் தேஜஸ்வி என்றல் அவனை தண்டிக்க அவனின் கிரணங்களிலே தீயை வைக்க முடியுமா? அகங்காரம் மறைத்ததால், அஞ்ஞானி - சூரியனுக்கு அழகு சேர்க்கும் கிரணங்களுக்கு தீ வைக்க சொல்வதுப் போல் அந்த ஞானியின் அழகிய புச்சத்தில் தீயை வைக்கச் சொன்னான்.
வாலிலே தீயை வைத்து அவரை கட்டிப் போட்டு தெருவெல்லாம் ஊர் வலம் அழைத்துச் செல்ல செய்தான்.
ஞானத்தை அஞ்ஞானம் கட்டிப் போடுவதா? தேஜஸ்வியை அகங்காரம் கட்டுப்போடுவதா? ஞானம் அடக்கத்தைக் குறிக்கும், அடக்கத்தை அளிக்கும். அந்த மகான் விஷ்ணு தேஜஸ்வி, தனது உடலை அடக்கி கட்டுகளிலிருந்து விடுபட்டார்
என்னயும் அஞ்ஞானத்தில் இருந்து விடுவித்து விடப்பா என் குருநாதா வைஷ்ணவ தேஜ:
[பி.கு. ஸ்லோகங்கள் சுந்தர காண்டம் - அண்ணா உரையுடன், ராமகிருஷ்ணா மடம், மைலாப்பூர் பதிப்பு]
ஸ்ரீ ராம ஜெய ராம ஜெய ஜெய ராம